Saturday, August 31, 2019

கோத்தாவின் ஊடகப் பேச்சாளர்களாக டலஸ், ரம்புக்வெல

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு இரண்டு ஊடகப் பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல ஆகியோரே, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என, பொதுஜன பெரமுன

Read more...

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என்பது உறுதி...! சஜித் சுயேட்சை வேட்பாளர்....

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பொது ஜன ஐக்கிய முன்னணியினதும் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டு வெற்றிபெற்றால், அடுத்துவரும் அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷவும், பிரதமராக மகிந்த ராஜபக்ஷவும், சபாநாயகராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்படவுள்ளார்கள் என நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

சென்ற ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன

Read more...

கைது செய்யப்பட்ட வைத்தியர் கொம்மாதுறையில் வைத்து கருணாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியமை வெளிச்சத்திற்கு!

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாக செயற்பட்டுக்கொண்டிருந்த சிவரூபன் என்பவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவனிடமிருந்து ஆயுதங்கள் பல மீட்டக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்தது.

சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவன் கருணாவை கொல்ல முயற்சித்துள்ளமையும் குறிப்பாக கருணாவின் கொம்மாந்துறையிலுள்ள தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்ய

Read more...

உடையுமா கிழக்கு உதயம்? துணைபோகின்றதா கிழக்குக்கான அரசியல் கட்சி ?

கிழக்கு உதயம் என்கின்ற அமைப்பு 2004ம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுனாமி பேரலை தாக்கியபோது, கிழக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கென சுவிட்சர்லாந்தில் உருவானது. கிழக்கு என்ற தமது அடையாளத்தை வெளிப்படுத்தினால் துரோகிகள் அல்லது பிரதேசவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றதோர் அபாயமான காலகட்டத்தில்தான் உதயம் உருவானது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்ற அவசர அழைப்புடன் அந்த அமைப்பு ஆரம்பமாகியிருந்தாலும், கிழக்குக்கென்று தனித்துவமான சுயாதீனமான தலைமைத்துவம் ஒன்று வேண்டும், எம்மால்

Read more...

ஹக்கீம், ரிஷாத், பாட்டாலி, மனோ ஒத்துழைப்பு சஜித்துக்கே...!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரை நியமிப்பதற்கு, ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது என அமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகின்றார்.

அதற்கேற்ப, ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், பாட்டாலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேஷன் உள்ளிட்ட தலைவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு தங்களது ஆதரவு கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Read more...

ரணில் இருந்தது போதும் - உபுல் ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் கட்டாயம் இரண்டாம் தரப்பினருக்கு அவகாசம் வழங்க வேண்டும் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் மூலம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத்

Read more...

Friday, August 30, 2019

ரணிலின் ஆட்டம் ஆரம்பமானது! மைத்திரியுடன் இணைந்து நிறைவேற்று ஜனாதிபதிமுறைக்கு ஆப்புக்கு திட்டம்.

அரசியல் சூத்திரத்தில் ரணில் ஜாம்பவான். அவர் அரசியலில் நகர்த்துகின்ற காய்களை தடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே தடுக்கமுடியும் என்றால் அது மிகையாகது. அந்த அளவுக்கு அரசியல் சூழ்சியில் மன்னன்.

இலங்கையின் 7 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மக்கள் காத்திருக்கின்ற அதேநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தடுமாடுகின்றது. கட்சியின் தலைவராக இதுவரை

Read more...

தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். த.தே.கூ ஐ.தே.கட்சியை கைவிட்டு எம்முடன் இணையவேண்டும். கோருகின்றார் கோத்தா

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் சலுகை அரசியலுக்கு அடிபணியாமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எம்முடன் கைகோர்க்கவேண்டும். தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். எனவே, எம்முடன் கைகோர்க்குமாறு கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான

Read more...

காணாமல் ஆக்கப்பட்ட செல்வியின் 28 ஆண்டுகள் … நினைவுகளோடு பயணம்...

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார்.

செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப்

Read more...

வேட்பாளர் யாரென்று அறிவிக்க வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கால அவகாசம் கோருகின்றார் ரணில்!

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இராப்போசன விருந்துடன் சந்தித்துப்

Read more...

Thursday, August 29, 2019

வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக செயற்பட்ட ஊடகங்கள் பற்றி ஐ.நாவில் முறைப்பாடு!

குருணாகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட பிரதிநிதி அஹ்மத் ஷஹீதிடம் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினை கையளித்தவர்கள் பற்றி அவர் வெளியிடவில்லை. ஆயிரக்கணக்கான பெளத்தப் பெண்மணிகள் முஸ்லிம் வைத்தியர்களால் கருத்தடை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பொய்யாக பிரச்சாரம் செய்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

பொதுஜன பெரமுனவின் அங்கத்துவம் பெற்ற எஸ்.பீ - டிலான் இருவருக்கும் வந்த வினை.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திசாநாயக்க, டிலான் பெரேரா இருவருக்கும் அவ்வாறு அங்கத்துவம் பெறும்போது சமுகமளித்திருந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் அங்கத்துவத்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவுசெய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற

Read more...

'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரணிலால் ஒழிக்க முடியாது' என்கின்றனர் மைத்திரியும் மகிந்தவும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பிரேரணையை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இருவரும் முடிவு செய்துள்ளனர். ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் நேற்று முன் தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இரவு சந்தித்து ஒரு மணி நேரம் அளவில் இதுபற்றிக் கலந்தாலோசி்த்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது

Read more...

மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரி - மகிந்த சந்திப்பு


இறுதித் தீர்மானத்திற்காக அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பு


ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இருவரும் நேற்று முன்தினம் இரவுவேளை மஹகமசேக்கர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

Read more...

ஐதேகவின் சஜித் குழுவினர் மங்களவின் வீட்டில் ஒன்றுகூடுகின்றனர்...

முதலமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று இரவு விஷேட இராப்போசன விருந்துபசாரம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் கொழும்பு இல்லத்திலேயே அந்த விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

அங்கு ஜனாதிபதி வேட்பாளர்

Read more...

இலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்! ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் நோர்வேயில் வசிக்கும் நடராஜா சேதுறூபன் என்பவன் இணையவழியாக கப்பம் பெற்றான் என குற்றஞ்சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு (வழக்கிலக்கம் 30600) தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கிற்கு ஊத்தை சேது மன்றில் ஆஜராகாததைத் தொடர்ந்து அவனுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றினால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 02.08.2019 ம் திகதி நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்ற

Read more...

Wednesday, August 28, 2019

நாட்டுக்காக தீர்மானம் எடுக்க வேண்டிய கடைசித் தருணமே ஜனாதிபதித் தேர்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்காக இந்நாட்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய கடைசித் தருணமாகும் என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.

நாட்டைக் காப்போம் - நாட்டை உருவாக்குவோம் - நாட்டு மக்களே ஒன்றுபடுவோம் என்ற தொனிப்பொருளினாலான 'உரையாடல் வட்டம்' ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்குகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read more...

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆப்பு வைக்க தயாராகும் மைதிரி பிணைமுறி விசாரணை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்தல்!

ஜக்கிய தேசிய கட்சியை இலக்கு வைத்து பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, இவ்விசாரணைகள் தாமதமடைதல் நீதி நிலைநாட்டப்படுவதற்கு

Read more...

மட்டகளப்பில் தீவிரவாதியின் உடலை தமிழரின் மயானத்தில் புதைத்ததால் பதற்றம்

தமிழ் மக்களது மயான பூமியில் தீவிரவாதி அமைப்பை சேர்ந்த தற்கொலை தீவிரவாதி ஒருவரை புதைப்பதை மட்டகளப்பு பிரதேசத்தில் வாழும் தமிழர் மாத்திரமின்றி இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களினாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொரு சம்பவமாகும்.

கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற சம்பவமானது அனைவரது மத்தியல் பாரிய மனத்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதி அமைப்பை சேர்ந்த தீவிரவாதியான முகமது அசாத்தின் தலை உள்ளிட்ட

Read more...

வறிய கிளிநொச்சி மக்களிடம் அதிக வரியை அறவிடுகின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிர்வாகத்தினர்

வறிய கிளிநொச்சி மக்களிடம் அதிக வரியை அறவிடுகின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிர்வாகத்தினர்.ஆதாவது இலங்கையில் வறுமையில் முதலிடத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த ஆதன வரியை அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

Read more...

Tuesday, August 27, 2019

சபாநாயகர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! - கரு

சபாநாயகர் தனது பதவியிலிருந்து பதவி விலகப் போகின்றார் என்ற செய்தி மிகப் பொய்யான செய்தி என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள செய்தியாவது:

‘2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி புதிய பிரதமர் பதவிப்பிரமாணம் செய்த சட்ட விரோத செயல், ஜனநாயகத்திற்கெதிராக செயற்படுதல் போன்றன

Read more...

நிரந்தர விடிவு தரப்படும் என எழுத்து மூலம் தந்தால் ஆதரவு தருவோம் சாந்தி எம்பி சொல்கிறார்

தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதொரு விடிவைத் தருவதாக, எழுத்து மூலம் எந்தக் கட்சி ஆதரவு தெரிவிக்கின்றதோ, அதற்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் . சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

Read more...

நாட்டிலுள்ள ஒரு இராணுவ முகாமைக்கூட அகற்ற மாட்டேன். சவேந்திர சில்வா!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத் தகவல்களின்

Read more...

கைது செய்யப்பட்ட வைத்தியரின் தகவலுக்கு அமைய ஆயுதங்கள் மீட்பு!

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் (TID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

AK 47 துப்பாக்கி, 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள், PE10 என சந்தேகிக்கப்படும் 10 கிலோ வெடிமருந்து, தொலைபேசி

Read more...

ஜனாதிபதிக்கு பதக்கம் வழங்கி பாராட்டிய இன்டர்போல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் உள்ளிட்ட அந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இன்டர்போலின் பொதுச் செயலாளர் ஜேர்கன் ஸ்டொக் (Jurgen Stock) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்ததோடு விசேட பதக்கம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

Read more...

Monday, August 26, 2019

நாட்டு மக்கள் கேட்கும் ஒரே தலைவர் „சஜித்" என்கிறார் கபீர் ஹஷீம். ஐ.தே.க அனாதைகளாகியுள்ளனராம். ரோஹித்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சாராத வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது மேற்கண்ட தகவலை வெளியிட்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :

Read more...

இலங்கை இராணுவத்தினர் யார் என்பது பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிவர். வெளியாரின் நற்சான்றிதழ் தேவையில்லை. சவேந்திர

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு நடத்து கொண்டார்கள் என்பதை சம்பந்தப்பட்ட மக்கள் நன்கு அறிவர் என்றும் அந்த மக்களை எவ்வாறு இராணுத்தினர் தமது குடிக்கும் தண்ணீரையும் உண்ணும் உணவையும் கொடுத்து காப்பாற்றினர் என்பது குறித்தும் வன்னியிலிருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு ஞாபகம் உண்டு என்றும் புதிய இராணுத் தளபதியாக கடமை ஏற்றுள்ள லெப் ஜெனரல் சவேந்திர சில்வா

Read more...

Saturday, August 24, 2019

முப்படையினருக்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடப்பட்டுள்ளது.

முப்படையினருக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அமைதியைப் பேணும் பொருட்டு முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான இந்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்டுள்ளது.

Read more...

புதிய அரசாங்கத்தை உருவாக்க அனைவரையும் ஒத்துழைக்குமாறு ரணில் அழைப்பு

அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, இன, மத பேதமற்ற தேசிய சமூகம் ஒன்றை உருவாக்கி, இந்த நாட்டை சுவிசேஷம், சுபிட்சம் உள்ள தேசியமாக அனைவரும் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

Read more...

பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை அவசரகால சட்ட நீக்கத்தால் பாதிக்காது

அவசரகால சட்டத்தை நீக்குவதன் ஊடாக பயங்கரவாத அமைப்புகளின் தடைக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது என தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சில இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன.

அந்த வகையில் குறித்து அமைப்புக்கள் மீதான் தடையில் எவ்வித மாற்றமும் அவசரகால தடைச் சட்டத்தை நீக்கியதால் ஏற்ப்படாது என தேசிய ஊடக மையம் குறிப்பிட்டுள்ளது.

Read more...

இலங்கையிலிருந்து சென்ற பயங்கரவாதிகளுக்கு வலைவீசும் தமிழக காவல்துறை

இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுறுவியுள்ளதாக கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல்களையடுத்து திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த ஆறு பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

சிறிதரனின் சகோதரனின் இணையத்தளங்களை முடக்குவதற்கு குற்றபுலனாய்வுத்திணைக்களத்திடம் செல்வம் எம்பி முறைப்பாடு

பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை பகிர்ந்தமை தொடர்பில் சில இணையத்தளங்களுக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (24) முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Read more...

றிசார்ட் பதியுதீன் ச.தொ.ச வில் மேற்கொண்டுள்ள மேலுமொரு களவை கோப் கமிட்டி அம்பலப்படுத்தியது.

மக்களின் சொத்தை களவெடுக்கும் தேசத்துரோகிகளின் முன்வரிசையில் நிற்பவன் றிசார்ட் பதுயுதீன். மன்னாரிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டப்பட்டபோது பொலித்தீன் பையுடன் புத்தளம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்த அவன் இன்று இலங்கையிலுள்ள முன்னணி தனவந்தர்களின் ஒருவனாக காணப்படுகின்றான்.

ச.தொ.ச நிறுவனத்தின் தலைவராக செயற்படும் றிசார்ட் பதுயுதீன் பலநூறு பில்லியன் நஷ்டத்தை சதோச நிறுவனத்திற்கு ஏற்படுத்தியுள்ளமை கோப் கமிட்டி அம்பலப்படுத்தியுள்ளது. நேற்று பாராளுமன்றக்

Read more...

ஆஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்.

ஆஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், சோமாலியா, மியான்மர், இலங்கை உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 14,000 அகதிகள் இந்தோனேசிய முகாம்களிலும் வீதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்

Read more...

முஸ்லிம் எம்பிக்கள் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர். முஸ்லிம்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதாம்!

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரைஸச் சேர்ந்த பைஸல் காஸிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா இருவரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேற்படி இருவரும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர்.

பதவி பிரமானம் செய்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த

Read more...

'நான் ஜனாதிபதி வேட்பாளராவதை யாராலும் தடுக்க முடியாது' - கோத்தபாய

தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்துள்ளதனால், ஜனாதிபதி வேட்பாளராவதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சென்ற ஏப்ரல் 17 ஆம் திகதியிலிருந்து அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொண்டதாகவும், தற்போதைக்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்குத் தெளிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அதற்கமைய இரட்டைப் பிரசாவுரிமையாகக் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்த கடவுச்சீட்டுக்குப் பதிலாக புதியதொரு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும்

Read more...

கஞ்சிப்பானை இம்ரானுக்கு சிறைத்தண்டனை....

பிரபல பாேதைப் பொருள் வியாபாரிகளுள் ஒருவனான கஞ்சிப்பானை இம்ரானுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவன் கொழும்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அங்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் அரசாங்கத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தியதன் பின்னர் இரகசிய

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com