Friday, July 17, 2009

"கே.பி துரோகி" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.

உண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்பதை மக்கள் அறியும் காலம் கனிந்து கொண்டிருகின்றது.

பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த கெஸ்ரோவினால் இயக்கப்பட்ட புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்தோர் இன்று கே.பி யை துரோகி என அறிவித்துள்ளனர். புலிகளின் பிரச்சார இணையங்கள் இரு பிரிவாக பிரிந்து நிற்கின்ற போது அவ்விணையங்களில் பொது உடன்படிக்கையுடன் அவதூறான செய்திகளை வெளியிடாத இரு தரப்பும் புதிதுபுதிதாக இணையங்களை ஆரம்பித்து அதன் ஊடாக தமது காழ்ப்புணர்ச்சிகளைத் தீர்த்து வருகின்றனர்.

அவ்வாறு நெடியவன் , ரிஆர்ஓ ரெஜி ஆகியோரினால் இயக்கப்படும் இணையம் ஒன்றில் கொழும்பில் 40 சவப்பெட்டிகளை ஓடர் செய்துவிட்டு நோர்வேயில் பதுங்கியுள்ள குதிரைக் கஜேந்திரன் பிரதம ஆசிரியராக செயற்படுகின்றார்.

அவ் இணையத்தில் பரப்புரை பத்திரிகை துரோகிகளால் இயக்கப்படுவதாகவும், அதன் எழுத்தாளர் ரிஷி புலிகளின் பணத்திற்காக கூலிக்கு மாரடித்தாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் புலிகளின் அழிவின் பின்னர் ரிஷி தனது உண்மையான எஜமான்களான இந்திய நாட்டின் மூன்றெழுத்த உளவுப் பிரிவுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அப்பத்திரிகையை வாசிக்க வேண்டாம் எனவும வேண்டப்பட்டுள்ளது.

அத்துடன் கேபி யை துரோகி என அறிவித்துள்ள அறிக்கையின் முழு வடிவம் கீழே.

துரோகிகளுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் "நான்கு சுவருக்குள்" இருந்து அறிக்கை விடும் குமரன் பத்மநாதனின் துரோகச் செயற்பாட்டுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தரும் தேசவிரோதிகளுக்கு ஒர் எச்சரிக்கை!

தொடர்ந்தும் இப்படியான தேசவிரோத செயற்பாட்டில் நீங்கள் ஈடுபடுவீர்களேயானால் உங்கள் செயற்பாடுகள் தனிப்பட்ட தங்களின் தீய நடத்தைகளை வெளியிடுவதுடன் தங்கள் புகைப்படங்களும் வெளியிடப்படும்.

மேலும் "நான்கு சுவருக்குள்" இருந்து அறிக்கை விடும் குமரன் பத்மநாதனின் பழைய கூட்டாளிகள் மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் சாதகமே எங்கள் கைகளில்.

3 comments :

Paarthipan February 17, 2010 at 3:22 PM  

வணக்கம் புலி அன்பர்களுக்கு,
உங்கள் சரித்திரத்தில் யார்தான் துரோகிகளில்லை? நீங்கள் எங்கே பணம் கிடைக்கிறதோ எங்கே அட்டாங்க நமஷ்காரமாக விழுந்து கிடப்பீர்கள். பணம் வருவது நின்று விட்டால் உடனே துரோகிகள் என்பீர்கள். உங்கள் துரோகி பட்டியலுக்கு முடிவே இல்லை. முடிந்தால் நீங்கள் இரானுவத்திடம் மாட்டிப்பாருங்கள்! அதன்பின் யார் துரோகி என்பது உங்களுக்கு மிக இலகுவாகப் புரியும்! வாழ்க தமிழன். வளர்க அவன் பட்டிக்காட்டுத்தனமும் பாமரத்தனமும். திருந்தா யென்மங்கள் இருந்தென்ன லாபம்????!!!

ஜோதி September 4, 2010 at 6:41 AM  

சரியான தகவல் ஆனால் விமர்சனம்தான் சரியில்ல

Menan ,  April 12, 2011 at 12:03 AM  

பிரதீபன் சொன்னது போல் ஓமந்தை சோதனைச் சாவடியிலும், யாழ் குடா நாட்டிலும், இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் இராணுவத்தினரோடு சேர்ந்து இருந்து காட்டிக்கொடுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை வெளிநாட்டு தமிழர்கள் தம் திருக்கண்களால் காணவேண்டும். எதிரியின் கைகளில் ஊஇருடன் சிகாது வீரமரணத்தை தழுவும் போராளிகளின் இலட்சிய உணர்வை பார்தீர்களா? பலே அலிபாபா பிரபாகரனும் அவரது தோழர்களும் இப்போ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com