Thursday, December 29, 2011

50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.

வல்லிபுறம் விக்டர் படைத்தளம்-1 -தமிழர்களுக்கும், போர்க்கைதிகளுக்குமான சித்திரவதைக்கூடம் என்ற தலைப்பில் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரால் எழுத்ப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் புலிகள் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மே 8ம் திகதி தமக்காக போராடி விழுப்புண்ணடைந்த பெண்போராளிகள் 50 பேரை பஸ் ஒன்றில் ஏற்றி அவர்களுக்கு தேனீர் வழங்கிவிட்டு பஸ்ஸினை குண்டுவைத்து தகர்த்ததை நேரில் கண்டதாக தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அவர் இதற்காக புலிகள் தமது பெயரில் விடுதலை என்ற சொற்பதத்தையும் செருகியுள்ளமை வியக்கத்தக்க விடயம் என தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கட்டுரை வருமாறு


உலகிலேயே மிகக் கொடூரமான மனித அட்டூழியங்களை புரிந்த அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள்! இதை உலகத்தார் அனைவரும் அறிவர். இவர்கள் 'விடுதலை' இயக்கம் என தம்மை பெயர்சூட்டிக் கொண்ட போதிலும், புரிந்த காரியங்கள் யாவும் விடுதலைக்கு மாறானவையே! போர்க்கைதிகளை தவிர, தமது சொந்த இனத்தை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் சித்திரவதை செய்வதற்கென இப் புலிகள் பிரத்தியோகமாக இரகசிய கொலை முகாமொன்றை நடாத்திவந்துள்ளமை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவ்வாறானதொரு முகாமே வல்லிப்புறத்தில் அமைந்துள்ள 'விக்டர் படைத்தளம்-1'. இம் முகாமானது விடுதலைப்புலிகளின் உயர்மட்டக் குழுவினரால் மட்டும் கையாளப்பட்டதுடன், மிகவும் இரகசியமாகவும் பேணப்பட்டுவந்துள்ளது.

இம் முகாம் புதுக்குடியிருப்பு ஏ34 வீதிக்கு அருகாமையிலும், உடையார்கட்டு வனப்பகுதியில் இருந்து 4 கிலோ மீற்றரிலும் அமையப்பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இச் சித்திரவதைக் கூடமானது, எவரும் தப்பியோட முடியாத அளவு இரும்புக் கம்பிக் கதவுகளுடனான 24 அறைகளாக கட்டப்பட்டுள்ளது. எனவே இதில் வெறுமனே 15 காவலர்களே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலித் தவைலர் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரால் இச் சித்திரவதை அறைகள் கண்ணானிக்கப்பட்டு வந்துள்ளன. மேலும் பொட்டு அம்மானால் சகல சித்திரவதைகளும் வழங்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுவர். இச்சித்திரவதைக்கூடம் ஒவ்வொன்றும் 8 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாகும். கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரின் தகவில்படி ஒவ்வொரு கூடத்திலும் 15 பேரை அடைத்துவந்துள்ளனர். இவற்றைவிட மிகவும் கீழ்த்தரமான விடயம் யாதெனில், இச் சிறிய அறையினுள்ளே அக் கைதிகளுக்கான மசலம் கழிப்பதற்காக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளமையாகும்.


மேலும் கைதிசெய்யப்படும் அதி முக்கிய பிரமுகர்களை சிறைப்படுத்தும் கூடம், வன்னியின் அடர் காட்டுப்பகுதியில் அமைந்திருந்ததாகவும், இதனை ரட்னம் மாஸ்டர் எனும் விடுதலைப்புலி புலனாய்வு உறுப்பினர் நடத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதைத்தவிர போர்க் கைதிகளாக அகப்படும் இராணுவத்தினருக்கு பொறுப்பாக கோபி எனும் விடுதலைப்புலி உறுப்பினர் பொறுப்பாக இருந்துள்ளார். ஆனால் இப் பயங்கரவாதிகள் வெளிநாட்டு தூதுவர்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் கைதிகளின் சிறைக்கூடம் என பொய்யான இடங்களையே காண்பித்து வந்துள்ளனர்.

இப் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் தொடர்பாக மிகவும் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில், இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே!
அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியவர்கள் என்ற சந்தேகத்திலேயே இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை 'நாய்கூடு' எனும் மிகவும் நெருக்கமான கூட்டில்பொட்டு அடைத்து நாட்கணக்கில் வைத்திருப்பார்கள். அக் கூட்டில் அடைக்கப்பட்டவர், அவரது உடம்பை சிறிதளவு கூட அசைக்க முடியாதளவு மிகவும் நெருக்கமாக இருக்கும். இவ்வாறான கொடுமைகள் ஹிட்லரின் காலத்தில் கூட இடம்பெறவில்லை எனக் கூறலாம். இதையா இவர்கள் 'தமிழீழம்' எனக் கூறினார்கள்?

இவ்வாறே இராணுவத்தின் 26 வீரமிகு படைவீர்ர்களையும் இவர்கள் சித்திரவதை செய்து கொலைசெய்துள்ளனர். இதில் கடற்படையைச் சேர்ந்த 18 வீரர்களும், தரைப்படையை சேர்ந்த 8 வீரர்களும் உள்ளடங்குவர். இப் பயங்கரவாதிகளின் படைத்தள வீழ்ச்சி அடையத் தொடங்கியதை அடுத்து, 2009 ஜனவாரி 16 ஆம் திகதி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது கொடூர அட்டூழியங்களுக்கு மிகவும் சிறந்த உதாரணமாக குறிப்பிடக்கூடிய விடயமே 2009 மே 8 ஆம் திகது இடம்பெற்ற மிகக் கொடூர நிகழ்வாகும். தமது இயக்கத்திற்காக போராடி காயப்பட்ட 50 பெண் போராளிகளை ஒரு பஸ்ஸில் ஏற்றி அவர்களுக்கு தேநீர் கொடுத்து பின்னர் அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, குண்டு வைத்து அப் பஸ்ஸை தகர்தனர். அவ் உண்மை சம்பவத்தை பலர் நேரடியாக கண்டு சாட்சியம் அளித்துள்ளனர்.

இப் பயங்கரவாதிகள் தமது இயக்கத்திற்கு பொருத்தமில்லாத 'விடுதலை' என்ற சொல்லை தமது இயக்கத்தின் பெயரில் சூட்டியுள்ளனர்.

உலகிலேயே இவ்வாறானதொரு மனிதக் கொடுமைமைகளை புரிந்த பயங்கரவாதிகள் இவர்களை தவிர வேறு எவரும் இருக்கமாட்டார்கள் எனக் கூறலாம். இவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்க சர்தேசரீதியில் இயங்கும் எந்வொரு இயக்கம்மும் முன்வராதா?

30 வருட காலமாக இப் பயங்கரவாதிகள் புரிந்துவந்த, மிகக் கொடூர மனித அட்டூழியங்கள், சர்வதேச அமைப்புகளுக்கும், அதிகாரசபைகளுக்கும் கொடூர குற்றச் செயல்களாக தெரியவில்லையா?

ஆனால் இப் பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு நலன்புரி சேவைகளைப் புரிவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது, அம் மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இராணுவத்தினரின் செயல்பாடுகளை, இச் சர்வதேச அமைப்புக்களும், அதிகாரசபைகளும் குற்றச்செயல்களாக விளங்கிக்கொள்வது சிரிப்பிற்கும்! கவலைக்குமுரிய விடயமாகும்!.
நன்றி விடிவு.

1 comments :

Anonymous ,  June 29, 2013 at 6:22 PM  

நாங்கள் தமிழர்களாக இருந்து முட்டாள்களாகிவிட்டோம் எனபது இப்போதுதான் தெரிகிறது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com