Tuesday, September 20, 2011

இறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.

தமிழ் மக்களின் பெயரால் காலாகாலமாக பினாமி அமைப்புக்களாவும் பினாமிகளாகவும் புலிகளுடன் இணைந்து வயிறு வழர்த்துவந்தோர் நிலைமையும் அவர்களது வருவாயும் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் தமது வருவாய்க்கு அடுத்த மூலதனமாக இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை என்ற மாயையை கையில் எடுத்துள்ளனர்.

இந்த வரிசையிலே நான் ஒரு பாதிரி சொல்கின்றேன் நீங்கள் நம்புங்கள் என புலிகளின் வன்செயலை மக்களிடம் நியாயப்படுத்தி வந்த இமானுவேல் நிற்கின்றார். உலகத் தமிழர் பேரவை எனும் பெயரில் அமைப்பொன்றினை ஆரம்பித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மக்களை கூட்டி உலகத் தமிழர் பேரவை தொடர்பாக தெரிவிக்கையில் தனது கட்சி சர்வதேசமயமான சுயாதீனமான ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகளை ஏற்றிருந்தாலும் அவ்வமைப்பு சர்வதேசமயப்படுதப்படாமல், சுயாதீனமான ஜனநாயகப்பண்புகளுக்கு இடமளிக்காமல் செயற்பட்ட சர்வாதிகார தனிமனித ஆழுகைக்குட்பட்ட குழு என்பதனை மறைமுகமாக தெரிவித்துள்ளதுடன் பாதிரியின் வெட்டுப்பேச்சு இனிமேல் எடுபடப்போதில்லை என்பதை உணர்ந்து தான் புலிகள் போன்று ஆயுத வன்முறையில் ஈடுபடப்போவதில்லை ஜனநாயக வழியில் போராடப்போகின்றேன் என்று வேறு பல்டி அடித்துள்ளார்.

அத்துடன் உலகத் தமிழர் பேரவையின் உடனடியான இலக்குகள்

1. முகாம்களில் வாடும் எமது உறவுகள் தாயக பூமியில் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திருப்புவதற்கு பாடுபடுவது.

2. இனப்படுகொலையின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு உழைப்பது.

3. ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பன தன் பேரவையின் முதன்மை இலக்குகளாக வரையறுக்கப்பட்டன

என தெரிவித்துள்ளதுடன் கனடாவில் வங்கி கணக்கொன்றையும் ஆரம்பித்து மேற்படி பணிகளுக்காக மக்ளிடம் மாதந்த நிதியுதவியையும் வேண்டி நிற்கின்றார்.

மேற்படி 3 கொள்கைளுமே நீண்டகாலம் நிலைக்ககூடிய அமைப்பொன்றுக்கான கொள்கையில்லை. முகாம்களில் வாழும் மக்களில் 95 விழுக்காடு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஏனையோரும் விரைவில் குடியேற்றப்படுவர் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், இலங்கையிலுள்ள மீள் குடியேற்ற அமைச்சையே கலைக்க முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் இவ்வமைப்பு எந்த மக்களுக்கு உதவி புரியப் போகின்றது.

அடுத்து போர்க்குற்ற விசாரணை என்பது முற்றிலுமான மாயை, இலங்கையிலே உக்கிர யுத்தம் இடம்பெறுகின்றது, அங்கே மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் என மேற்குலக நாடுகள் எங்கும் மக்கள் ஓலமிட்டபோதும் திரும்பிப்பார்காக மேற்குலக அரசுகள் இப்போது போர்குற்ற விசாரணை என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கே ஒழிய நிஜத்தில் எதுவும் நடந்தேறப்போவதில்லை.

மேலும் ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற கொள்கை முற்றிலும் பதவியாசையையும் புலிகளின் ஏகபிரதிநிதித்துவ வெறியையும் பிரதிபலிக்கின்றது.

முற்றிலும் ஐரோப்பாவில் வாழும் மேற்படி அமைப்பை சேர்ந்தோருக்கு இலங்கையிலுள்ள தமிழ் மக்களுடன் எந்த தொடர்பும் கிடையாது. இந்நிலையில் இவர்களால் அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு உதவி புரிய முடியும். ஆக தொடர்ந்தும் அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பெயரால் பணம் வசூலிப்பதே இவர்கள் நோக்கமாகும்.

இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 290000 மக்கள் தங்கியிருந்தபோது அம்மக்களுக்கு எத்தனையோ உதவிகள் தேவைப்பட்டது. ஆனால் பாதிரி போன்றவர்களால் அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அத்துடன்; தற்போது முகாம்களில் சுமார் 7000 மக்களே எஞ்சியுள்ளனர். அவர்களும் மிக விரைவில் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலே மக்கள் அகதிகளாக அவஸ்தைப்பட்டபோது அவர்களை மேலும் அவஸ்தைகளுக்குள்ளாக்கும் நோக்கில் இக்குழுக்கள் செயற்பட்டது. மக்களின் பெயரால் புலிகள் வசூலித்த பணத்தில் ஏகப்பட்ட பாகத்தை சுருட்டியுள்ள இவர்களிடம் இப்பணத்தை அங்கு அகதிகளாக அவஸ்தைப்படும் மக்களுக்கு செலவிடுங்கள் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோது, இலங்கையில் எமக்கு செயற்பட முடியாது, இலங்கை அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தடை செய்துள்ளது என தெரிவித்து மக்களை நடுத்தெருவில் விட்டிருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் மக்களின் நலனை கவனிக்கவென மீண்டும் பண வசூலிப்பிலிறங்கியுள்ளனர்.

அவ்வாறாயின் இலங்கையில் அன்றிருந்த நிலைமை இல்லை என்பதையும், தமக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இலங்கையில் செயற்பட முடியும் என்பதை மக்களுக்கு இவர்களால் தெரிவிக்க முடியுமா? அவ்வாறு இல்லையாயின் எதற்காக பணம் இலங்கை சென்று மக்களின் தேவைகளை கண்டறிய முடியாதவர்களுக்கு தொடர்ந்தும் எதற்கு பணம்?

வன்னியுத்தம் இடம்பெறுகையில் மக்களை புலிகள் பலவந்தமாக தமது பிரதேசங்களுள் நெருக்கியபோது, இதில் நேரடியாக சர்வதேச நாடுகள் தலையிட முனைந்தபோது, பாதிரிபோன்றோர் மக்கள் புலிகளுடன் சுயவிருப்பின்பேரிலேயே செல்கின்றனர் என சர்வதேசத்தை ஏமாற்றினர். இவர்கள் நினைத்திருந்தால் புலிகள் மக்களை விடுவிக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்க முடியும். தமது சுயலாபங்களுக்காக செய்யவில்லை.

இவர்கள் புலிகள் மக்களை பலவந்தமாக தம்முடன் அழைத்துச் செல்கிறார்கள் மக்களை மனித கேடயங்கiளாக பயன்படுத்துகின்றார்கள் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தால் வன்னி மக்கள் இத்தனை துயரங்களை சுமக்க நேரிட்டிருக்காது.

மேலும் வன்னியிலே ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இவ்வீடுகள் எவ்வாறு சேதமடைந்தது. இராணுவம் முன்னேறுகயையில் மக்களை பின்நோக்கி தள்ளிய புலிகள் அம்மக்களின் வீடுகளை தமது அரண்களாக பயன்படுத்தி அவ்விடுகள் மற்றும் அவற்றுக்கு அருகே தற்காலிக பங்கர்கள் மற்றும் உரு மறைப்புக்களை செய்து முன்னேறிவந்த படையினருடன் சண்டையிட்டனர் அச்சண்டையின்போதே வீடுகள் யாவும் சேதமடைந்தன.

ஆனால் இன்று அவ்வீடுகளை அரசாங்கம் திருத்திக்கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலும் இலங்கையிலே சண்டை ஒன்று இடம்பெறுவதற்கு வெளிநாடுகளிலிருந்து தூபமிட்டோரே இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

அவ்வாறாயின் இவ்வீடுகளை இவ்யுத்தத்திற்கு தூபமிட்ட இமானுவேல் போன்றோர் திருத்திக்கொடுக்க முன்வரவேண்டும் அல்லவா.. வன்னியில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதும் , பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவெனவும் இவர்கள் வசூலித்த பணத்தில் இவ்வீடுகளை திருத்திக்கொடுப்பதற்கு இவர்கள் முன்வருவார்களா? VIII

1 comments :

ஈழத்து போராளி ,  September 21, 2011 at 10:32 AM  

நண்பர்களே
இதனை வெளிபடுதியதட்கு முதலில் நன்றி.
இதனை சிறிது சிந்தியுங்கள்.இது சாதாரண விடயமல்ல உங்களை ஏமாற்றி இருப்பது மட்டுமல்ல
புனிதமான ஒரு போராட்டத்தை தமதுசுயலாபத்துக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் .ஈழத்து அப்பாவி மக்களுக்காக ,அவர்களின் உணவுக்காக நீங்கள் வழங்கிய நிதியினை சுரண்டியிருக்கின்றனர் .நீங்கள் விரும்பினால் உண்மையான போராளிகள் இன்னும் இங்கு இருக்கிறார்கள் . அவர்களை ஒன்றினைத்து இவர்களுக்கு மக்களின் சார்பாக தண்டனையும் வழங்க தயாராக உள்ளோம்

உண்மையான ஈழத்து போராளி

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com