Sunday, August 12, 2012

புலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்

ஜனநாயகவிழுமியங்களை பேணி இனவாதம் , மதவாதம் குறுந்தேசியவாதம் துறந்து பல்லினச்சமூகங்கள் எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகின்ற சுவிட்சர்லாந்திலே பச்சிளம் சிறுவன் ஒருவனிடம் இனவாத நஞ்சூட்ட அல்லது சிறுவனை மிரட்டி அடிபணியவைக்க மேற்கொள்ளப்பட்ட நாடுகடந்த பயங்கரவாதம் இக்கட்டுரைக்கு வழிவிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலே வாழுகின்ற 12 வயது சிறுவன் ஒருவனின் அடிப்படை உரிமையை மீறி அவனது மனதில் இனவாத நஞ்சூட்ட முற்பட்டுள்ளதுடன் சிறுவனை சொற்களால் கடுமையாக சித்திரவரை செய்துள்ளார் சுவிட்சர்லாந்தின் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகத்திலுள்ள புலி ஆதரவாளர் ஒருவர். சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளில் பெற்றோர்கூடத் தலையிடமுடியாத உரிமையாக அவர்கள் விரும்பும் ஆடையை தெரிவுசெய்வது கருதப்படுகின்றது. அவ்வாறு அச்சிறுவன் விரும்பி அணிந்த ரீசேர்ட் ஒன்றை அணிவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை புலிகளின் நாடுகடந்த பயங்கரவாதத்தின் உரிமை மீறல்களை அம்பலமாக்குகின்றது.

குறித்த சிறுவன் இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட ரீசேர்ட் ஒன்றை அணிந்திருந்ததை அவதானித்த மேற்படி நபர், சிறுவனை அணுகி ' நீ உன்வீட்டில் சிங்களமா பேசுறநீ' என்று கேட்டுள்ளார். இல்லை எனப்பதிலளித்த சிறுவனிடம் 'உனக்கு தெரியாதா இது சிங்களவனின் கொடி என்பதும் தமிழனின் கொடி புலிக்கொடி என்பதும்' என்று மிரட்டியுள்ளதுடன் 'புலிகள் இலங்கையிலே தமிழீழம் பெறுவதற்காக 60 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை மனதில் நிறுத்திக்கொள்' எனவும் உத்தரவிடப்பட்டதாம்.

புலிகள் வன்னியில் சிறார்கள் மீது புரிந்த வன்முறை, அவர்களது பாடசாலை செல்லும் உரிமையை பறித்து ஆயுதங்களை திணித்த அதே பாணியில் குறிப்பிட்ட நபர் சிறுவன் அணிந்திருந்த ரீசேட்டை 'நீ இனிமேல் இதை அணியக்கூடாது' என எச்சரித்திருக்கின்றார். தமிழர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்துவதானால் இலங்கையின் தேசியச்கொடியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற புலிகளின் காட்டாட்சியை குறிப்பிட்ட நபர் சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளார். தமிழர் எனத் தம்மை கூறிக்கொள்ளும் இவர்கள் முறையாக தமிழ் பேசத் தெரியவாதவர்கள் என்பது வேதனைக்குரிய விடயம். ஆனால் புலம்பெயர்ந்துள்ள இன்றைய தலைமுறையினருக்கு தமது தாய்மொழியினை பேசமுடியாது என்ற அதிபர் மஹிந்த ராஜபக்சவின் கூற்றுக்கு விதிவிலக்காக பாதிக்கப்பட்ட சிறுவன் தமிழில் சரளமாக பேசக்கூடியவனாக உள்ளான். அத்துடன் தாம் தமிழர் எனவும் தமது அடையாளம் தமிழே எனவும் பாசிசப்புலிகளின் கொடியை தாம் என்றும் தமது கொடியாக ஏற்றுக்கொண்டதில்லை எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் அல்பாணியர், ஈரானிர் , ஈராக்கியர், வட அமெரிக்கர், எதியோப்பியர் , நைஜீரியர், சீனர் , ஜப்பானியர் , போத்துக்கீசர் என பல மொழிபேசுகின்ற பல இனங்களைச் சேர்ந்த முழு உலகமே ஒன்றுகூடி கல்வி கற்கின்ற ஒரு சூழலில் வளரும் ஒரு சிறுவனிடம் இனவாதத்தையும் குறுந்தேசியவாதத்தையும் மனதில் பதியவைக்க முனைந்ததின் ஊடாக புலிகள் தொடர்ந்தும் வன்செயல்தேடி அலையும் இனவெறியர்கள் என்பது உறுதியாகின்றது.

அத்துடன் குறித்த வன்முறைப்பிரியனின் செயற்பாடு சிறுவன் தனது ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையைக்கூட கேள்விக்குறியாக்கலாம் என பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர். சிறுவன் தனது வகுப்பறையிலே தாய்நாடு தொடர்பாக படித்தபோது அதற்காக திரட்டிய ஆவனங்களுகாக இலங்கையின் தேசியக்கொடி, (இங்கே இருக்கின்றது) அதன் புராதான நகரங்கள், இலங்கை பாராளுமன்று, அங்குள்ள பௌத்த , இந்து , கிறிஸ்தவ , முஸ்லிம் தேவாலயங்கள் என்பவற்றையே ஒன்றிணைத்துள்ளான். அவ்வாறாயின் மேற்படி வன்முறைப்பிரியன் கூறுவது சரியாக இருந்தால் தனது ஆசிரியர் தனக்கு ஒருவிடயத்தை மறைத்துவிட்டார் என ஆசிரியர்மீது சந்தேகம் எழலாம் அல்லவா?

மேலும் அறுபதுவருடங்களாக புலிகள் போராடுகின்றார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு சிறுவனுக்கு கூறிய மேற்படி வன்முறைப்பிரியருக்கு இலங்கையின் போராட்ட வரலாறு தெரியாது என்பது இன்னொரு கதை. புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்பதே அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளதும் அதன் உண்மை முகம் வெளிப்படையானதுமான கதை. அதன் வரலாற்றுப்பதிவுகளை வாசித்து அறிந்துகொள்ளவோ கேட்டறிந்துகொள்ளவோ இன்று புலம்பெயர் தேசத்திலே புலிக்கொடியுடன் அலைந்து திரியும் தமிழ் இளையோருக்கு தமிழ் தெரியாது என்பது வேதனைக்குரிய கதை.

புலிகள் 60 வருடங்களாக மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது புலம்பெயர் புதிய தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் கதை. உண்மையில் புலிகள் என்ன செய்தார்கள் என்ற சில விடயங்களை சுருக்கமாக கூறிவைக்கவிரும்புகின்றேன். இதை இன்று புலிக்கொடி தூக்கி கொண்டுதிரியும் இளையோருக்கு எவராவது வாசித்துக்காட்டவேண்டும் என்றும் தயவாக வேண்டுகின்றேன்.

இவ்விளைஞர்களுக்கு சிலநேரம் 60க்கும் 30 வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் சுமார் 30 வருடகாலங்கள் பிரபாகரன் தமிழ் மக்களின் போராட்டம் எனும் பெயரால் சுகபோகம் அனுபவித்தார் என்ற கசப்பான உண்மையை தமிழர் யாவரும் ஏற்றுக்கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக தெரிவிப்பதற்காக தயக்கம் அவர்களின் சுயநலச்சிந்தனை ஒருபுறம் மறுபுறம் நாங்கள் இன்னும் இருக்கின்றோம் என்று புலிகள் காட்டுகின்ற மாயை.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் அதன் முன்னோடிகளில் ஒருவரான உமா மகேஸ்வரனுடன் உர்மிலா என்கின்ற தன்னை விரும்பாத ஒரு பெண்ணுக்காக போர் தொடுத்து இந்தியாவிலே துப்பாக்கிச் சமர்புரிந்து தனது ஈழப்பற்றை முதலில் வெளிப்படுத்தி வன்முறையை கையிலெடுத்தார் பிரபாகரன். பின்னர் புலிகளின் ஆராஜகத்திற்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போர்க்கொடி தூக்கினர். புலிகளின் வன்முறைகளை கண்டித்து பல்கலைக்கழக மாணவிகள் சிலர் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்தினர். அவ்வாறு குதித்தவர்களில் ரெலோ அமைப்பைச் சேர்ந்த அரபாத் என்பவரின் காதலியும் குதித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரையும் புலிகள் வான் ஒன்றில் அள்ளிச்சென்றனர் , அள்ளிச்செல்லப்பட்டவர்களில் அரபாத்தின் காதலியை ஆயுதமுனையில் எவ்வித வெட்கமும் இன்றி கரம்பிடித்தார் பிரபாகரன்.

பிரபாகரனின் மணக்கோலப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இப்படம் தொடர்பாக நான் என்னுடைய சொந்த கருத்துக்களை அதிகம் முன்வைக்கவிரும்பவில்லை. ஆனால் இவர்தான் தமிழ் மக்களுக்காக போராடினவர் எனக்கூறப்படுபவர் என்பதை மட்டும் சொல்லிவைக்கின்றேன். தமிழ் மக்களுக்காக போராடுகின்றேன் என்ற மனநோயாளி எவ்வாறு தமிழ் கலாச்சாரத்தை கொன்று திருமணக்கோலத்தில் சுடுகலனை பூமாலையின் மேல்வைத்துள்ளான் என்பதை பார்க்கவும். இப்படத்தைப் பார்த்தபின்புதான் 'ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்' என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாப கூறினாரா என்றும் எண்ணத்தோன்றுகின்றது. இப்படம் பார்த்து கதைசொல்லக்கூடிய உளவியல் நிபுணர்கள் இருந்தால் இது தொடர்பான உங்கள் ஆய்வுகளை பிரசுரிக்க இலங்கைநெற் தயார் என்பதையும் கூறுகின்றேன்.

தலைமைக்குரிய எந்த தகுதியும் அற்ற பிரபாகரனை குடும்பத்துடன் நிலக்கீழ்மாளிகையில் அடைத்து வைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்த புலிகளின் முக்கிய புள்ளிகள் தமிழ் மக்களின் முழுவளத்தையும் சுரண்டினர். சுகபோக வாழ்வினையே விரும்பிய பிரபாகரன் தனக்கென நிலக்கீழ் மாளிகை ஒன்றை அமைத்து பிறிதொருவனுக்கு சொந்தமாக வேண்டிய பெண்ணுடன் ராஜபோக வாழ்வு வாழ்ந்ததுடன் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். ஊரான் வீட்டுப்பிள்ளைகளை பலாத்காரமாக பிடித்து போருக்கு அனுப்பி விட்டு தனது குழந்தைகளுடன் வெளிநாட்டு விளையாட்டு பொருட்களுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். இவரது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் புலம்பெயர் தேசத்திலே வன்னி மக்களின் போராட்டத்திற்கென அறவிடப்பட்ட பணத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. புலிகளுக்கென ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட ஒவ்வொரு கப்பலிலும் பிரபாகரன் பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களையும் அனுப்பி வைத்தாக புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னன் கே.பி பகிரங்கமாகவே ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் மக்களுக்காக போராடுகின்றோம் என்ற போர்வை ஒன்றை போர்த்துகொன்ட புலிகள் ஒட்டுமொத்தத்தில் ஒரு சிறு மாபியாக் கும்பல். இவர்கள் தமிழ் மக்களின் சுதந்திரம் எனும் பெயரால் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளையே மறுத்து அவர்களுக்கு அடிமை விலங்கு பூட்டி குறுகிய ஒரு நிலப்பரப்பினுள் அடைத்து வைத்திருந்தனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் மறுத்தனர் புலிகளின் பிடியில் சிக்குண்ட மக்கள் தமது கருத்துச் சுதந்திரத்தை முற்றாக இழந்தனர். தாம் விரும்பும் பத்திரிகை ஒன்றை வாசிக்கவும், விரும்பிய தொலைக்காட்சி ஒன்றை பார்த்து ரசிக்கவும், உறவினர்களுடன் உரையாடவும் கூட இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது புலம்பெயர் நாடுகளின் புலிக்கொடி தூக்கி அலையும் இளையோருக்கு சொல்லப்படவேண்டும்.

அடையமுடியாத இலக்கொன்றுக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்ததுடன் மூன்று தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழித்தனர். மேலும் புலிகள் பற்றி சொல்வதானால் கடந்த 30 வருடத்தில் அவர்கள் போராட்டம் என்றால் எவ்வாறு அமையவேண்டும் என்பதைக்கூட அறிந்திருக்கவில்லை, அதற்கு முற்படவும் இல்லை. இத்தருணத்தில் இப்போராட்டத்தினை ஆரம்பித்த தலைவர்கள் எவரும் முற்றிலும் பரிசுத்தவான்கள் என்று நான் சொல்லமாட்டேன் ஆனால் அவர்களிடமிருந்த சில நற்பண்புகளை சுட்டிக்காட்டுவதில் சந்தோஷமடைகின்றேன். ஒருமுறை புளொட் இயக்கத்தின் தலைவர் இந்தியாவிலே மிகவும் வரண்ட பிரதேசமொன்றில் அமைந்திருந்த புளொட் இயக்க முகாம் ஒன்றுக்கு சென்றிருந்துள்ளார். அப்போது அங்கு சமையலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. சமையலுக்காக ஆடு ஒன்றை வெட்டுவதற்கு கத்திகள் இருக்கவில்லை. கத்தி தேடிப்புறப்பட்ட இயக்கப்போராளிகள் சிலர் கிராமிய காவல் தெய்வத்திற்கான கோயில் ஒன்றை காண்கின்றனர், தெய்வத்தின் கையிலிருந்த வாளை கையை உடைத்து எடுத்துச்செல்கின்றனர். விடயத்தை அவதானித்த உமாமகேஸ்வரன் ' நீங்கள் இந்த 6 மாதத்தில் கம்யுனீசம் , சோசலிசத்தை கசட கற்றுள்ளீர்கள் என்பதையும் அதன்பால் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்பதை இந்தவிடயம் காட்டுகின்றது, தெய்வ நம்பிக்கையெல்லாம் தூக்கி எறிந்துள்ளீர்கள், மகிழ்சி அடைகின்றேன், ஆனால் நானோ இப்பவும் காலையில் எழும்பும்போது அப்பனே ஆண்டவனே சிவனே முருகனே என உள்ள அத்தனை பேரையும் கூப்பிட்டுக்கொண்டுதான் எழும்புகின்றேன், நானும் உங்களைபோல் வெகு விரைவில் மாறிவிடமுயற்சிக்கின்றேன்.' எனச் சொல்லியிருக்கின்றார்.

ஆனால் இதே சம்பவம் பிரபாகரன் சந்நிதானத்தின் இடம்பெற்றிருந்தால் வாளைத்தூக்கிக்கொண்டு பிரபாகரன் 10 போட்டக்களை பிடித்து 'பிரபாகரனின் உத்தரவின் பேரில் காவல்தெய்வத்தின் வாள் போராளிகளின் சமயலுக்காக கொண்டுவரப்பட்டது' எனக்கதை சொல்லப்பட்டிருக்கும்.

இதற்கும் அப்பால் பிரபாகரன் மூட நம்பிக்கைளை கொண்ட மோடன் என்றால் மிகையாகாது. அவர் சோசலிசத்தின் மீது எந்த நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. தோடர்ந்தும் மூடநம்பிக்கைளுடனேயே வாழ்ந்து மறைந்தார். இதற்கான ஒரேஒரு உதாரணம் சொல்வதானால், பிரபாகரன் தனக்கு அதிஷ்டம் என கணித்திருக்கும் எட்டாம் நம்பரில்தான் தாக்குதல் நடாத்துவார் என அறிந்து வைத்திருந்த இலங்கைப்படையினர் 8, 17 ,26 திகதிகளில் உச்ச உசார் நிலையிலிருந்து 1000 கணக்கான இளைஞர் யுவதிகளை சுட்டுக்கொன்றனர் என்ற கதை சிலருக்கு மாத்திரமே தெரிந்திருக்கும். அதாவது பிரபாகரனின் மோடநம்பிக்கைக்கு விலைகொடுக்கப்பட்ட உயிர்கள் அவை.

இவ்வாறான ஒரு மோடன் இன்று ஒட்டுமொத்த தமிழினத்தை நட்டாற்றில் விட்டுச் சென்றபின்பும் அவரவது அடிவருடிகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தினம் எனும் பெயரால் புலிக்கொடி ஏற்றுகின்றவர்கள் ஒரு சிலரிடம் இதற்கு எதாவது நோக்கங்கள் உண்டா அல்லது இது தமிழ் மக்களுக்கு எதாவது நன்மை தரப்போகிறதா எனக்கேட்டபோது புலிகளின் தலைமை தவறுகள் செய்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் இந்தபோராட்டத்தினை நம்பிச்சென்று தமது உயிரை பலிகொடுத்த ஒருசிலரும் இருக்கத்தானே செய்கின்றார்கள் அவர்களுக்காகவே இவற்றை தொடர்கின்றோம் எனத் தலையைச்சொறிகின்றனர். அதாவது புலிகள் பயங்கரவாதிகள் தமிழ் மக்களை வாட்டி வதைத்தார்கள் என்பதை தற்போதும் புலிக்கொடி ஏந்தி நிற்கின்ற மேதாவிகள் திரைமறைவில் ஏற்றுக்கொண்டு பணத்திற்காக புலிப்புராணம் பாடுகின்றார்கள்.

இவ்வாறான புராணத்தை கேட்ட புலம்பெயர் தமிழ் இளையோரே இன்று அடுத்த தலைமுறையையும் வன்முறையை நோக்கி நகர்த்த முற்படுகின்றனர். இவ்வாறு நகர்த்த முற்பட்டு இருப்பவர் எவரும் அல்ல சுவிட்சர்லாந்திலே பல ஆண்டுகள் கல்வி கற்று அங்குள்ள பாடசாலை ஒன்றில் சமயல்காரனாக வேலைசெய்யும் நபராகும். சிறார்களை மிரட்டுவது பாரிய தண்டனைக்குரிய குற்றம் எனத்தெரிந்திருந்தும் இவர் இச்செயலை செய்திருப்பது எத்தகைய எதிர்விளைவுகளை தரப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

4 comments :

Anonymous ,  August 13, 2012 at 2:56 AM  

சுவிஸை பொறுத்தளவில் படிபறிவில்லாத, பண்பாடில்லாத, காட்டுவாசி தமிழர்களே கூடுதலாக அகதிகளாக குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே புத்தி, விவேகம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுஅறிவு மிகவும் குறைவு அத்துடன் அவர்களின் உழைப்பை பிடுங்கும் நோக்கில் புலிகளும் மூளை சலவை செய்து விட்டார்கள்.
இப்போ முழு உலகமே ஈழத் தமிழினத்தின் அழிவுகளுக்கு முழுக் காரணம் சர்வாதிகார புலிகளே என்று வெளிப்படையாக அறிந்து கொண்டபின்னர் கூட, அந்த மண்டை கழண்ட வெங்காயங்கள் இன்னும் திருந்த வில்லை.
ஏதுவாகும் அடுத்த தலைமுறையும் வெங்காயங்களாக இருக்கப்போவதில்லை.

Anonymous ,  August 13, 2012 at 3:05 AM  

சுவிஸை பொறுத்தளவில் படிபறிவில்லாத, பண்பாடில்லாத, காட்டுவாசி தமிழர்களே கூடுதலாக அகதிகளாக குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே புத்தி, விவேகம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுஅறிவு மிகவும் குறைவு அத்துடன் அவர்களின் உழைப்பை பிடுங்கும் நோக்கில் புலிகளும் அவர்களை ஏற்கனவே மூளை சலவை செய்து விட்டார்கள். புலிகள் அவர்களின் பணத்தில் இராஜ போக வாழ்க்கை வாழ்ந்தது மட்டுமல்ல, ஈழத்தமிழர் களையெல்லாம் சொல்லோனாதுயரத்தில் ஆழ்த்தி, அழித்து மிஞ்சியவர்களை கோவணத்துடன் நடுத்தெருவில் விட்டு கோழைத்தனமாக எதிரியின் காலில் விழுந்து சரணடைந்து, கொத்துவாங்கி இறந்த சரித்திரத்தை எவரும் மறந்து விட முடியாது.
இப்போ முழு உலகமே ஈழத் தமிழினத்தின் அழிவுகளுக்கு முழுக் காரணம் சர்வாதிகார புலிகளே என்று வெளிப்படையாக அறிந்து கொண்டபின்னர் கூட, அந்த மண்டை கழண்ட வெங்காயங்கள் இன்னும் திருந்த வில்லை.
ஏதுவாகும் அடுத்த தலைமுறையும் வெங்காயங்களாக இருக்கப்போவதில்லை.

Anonymous ,  June 13, 2014 at 2:07 PM  

இங்குள்ள (சுவிசில்) குடும்பங்களின் நிலைமை மிக மோசமானதாக உள்ளது. அம்மா-அப்பா இரவு பகலாக வேலை. பிள்ளைகள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் டியூஷன் வகுப்புகள் (தமிழ், நடனம், கம்ப்யூட்டர்...). வீட்டிலே ஒரு நேர உணவையாவது குடும்பமாக ஒன்றாக இருந்து ஆறுதலாக உணவருந்தி பேச்சுத் தொடர்பு கொள்ளாத வாழ்க்கை முறை. தரமில்லாத பொழுதுபோக்குகள் (பெண்கள்: சீரியல் நாடகம்; ஆண்கள்: சீரியல் தண்ணியடி). இப்படியான சிந்திக்கத் தெரியாத அல்லது சிந்திக்க நேரமில்லாத வாழ்க்கைப் பாணியைக் கொண்ட மக்களை புலிப்பினாமிகள் எளிதாக தங்கள் வலைகளில் வீழ்த்தி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இதைசொன்னால் எம்மைத் துரோகிகள் என்கிறார்கள்.

Anonymous ,  March 15, 2016 at 11:19 AM  

சுவிஸை பொறுத்தளவில் படிபறிவில்லாத, பண்பாடில்லாத, காட்டுவாசி தமிழர்களே கூடுதலாக அகதிகளாக குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே புத்தி, விவேகம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுஅறிவு மிகவும் குறைவு அத்துடன் அவர்களின் உழைப்பை பிடுங்கும் நோக்கில் புலிகளும் மூளை சலவை செய்து விட்டார்கள்.
இப்போ முழு உலகமே ஈழத் தமிழினத்தின் அழிவுகளுக்கு முழுக் காரணம் சர்வாதிகார புலிகளே என்று வெளிப்படையாக அறிந்து கொண்டபின்னர் கூட, அந்த மண்டை கழண்ட வெங்காயங்கள் இன்னும் திருந்த வில்லை.
ஏதுவாகும் அடுத்த தலைமுறையும் வெங்காயங்களாக இருக்கப்போவதில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com