Sunday, February 12, 2012

ஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.

எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை மாநாட்டில் இலங்கைக்குழுவுக்கு தலைமை தாங்கவுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை புலிகளின் பல்வேறு பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதாகவும், அவற்றை கடந்த காலத்தில் தவிடு பொடியாக்கியது போல், இம்முறையும் ஜெனிவா மாநாட்டில் தகர்த்தெறியப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டி வருமாறு.

கேள்வி: இம்முறை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக் குழு அமர்வு அங்கு இலங் கைக்கு முகங் கொடுக்க வேண்டியிருக்கும் சவால்கள் பற்றி ஊடக அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின் றன. இம்முறை மாநாட்டு அமர்வு எவ்வாறானதாக அமையும்?

பதில்: “நாங்கள் இம்முறையும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டுக்கு முழுமையான ஆயத்தத்தோடு தான் செல்கிறோம் என்று முதலில் நான் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கையை எப்போதுமே விமர்சனத்துக்குட்படுத்த ஆயத்தமாக இருக்கும் ஒரு குழுவும் இருக்கின்றது.

அவர்கள் இம்முறையும் எவ்வாறான ஒரு செயற்பாட்டை எமது நாட்டுக்கு எதிராக செய்ய இருக்கிறார்கள் என்பது பற்றி நாம் அவதானத்தோடு தான் இருக்கிறோம். எமது கைகள் சுத்தமானவை. நாம் ஆயத்தமாகித் தான் போகிறோம். நாம் எந்த வகையிலும் அவர்களது நிகழ்ச்சி நிரலின் படி வேலை செய்ய ஆயத்தமாக இல்லை.

நாம் வேலை செய்வது ஜனநாயக அரசு என்ற வகையில் இந்நாட்டு மக்களின் தேவைகளுக்கமையவே. கடந்த காலங்களில் அவர்கள் இதுவரை கூறிய அனைத்து விமர்சனங்களையும் நாம் தகர்த்தெறிவதில் வெற்றி கண்டுள்ளோம்.

சிலர் எதிர் கொண்டு வர இருந்த தருஸ் மன் ஆணைக்குழு அறிக்கைக்குப் பதிலாக இப்போது நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் அறிக்கையும் இலங்கை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின் பெருமளவில் சிறப்பானதொரு பயணத்துக்கு இந்நாடு உள்நுழைந்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் நாம் இம்முறை ஜெனீவா மாநாட்டுக்குச் செல்கிறோம். விசேடமாக நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவைப் பற்றி இப்படியாகப் பேசும் நாடுகள் கூட சென்ற செப்டம்பர் மாதத்தில் கூறிய விமர்சனங்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் நான் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக இருந்தால் இம்முறை அந்தப் பக்கத்துக்குக் கூட வர மாட்டேன்.

ஏனென்றால் அவர்கள் கூறிய எல்லா விடயங்களும் முழுமையாகவே மறுபக்கம் புரட்டி இருக்கிறார்கள். நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் அறிக்கையை முன்வைத்த விதத்தினை நாம் பார்த்தால் அவ்வறிக்கை கிடைத்ததன் பின்னர் எமது அரசாங்கம் பெருமளவு பலதரப்பட்ட வகையில் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளதைப் பார்த்தால் புரிகின்றது.”

கேள்வி: அவர்களின் விவாதம் என்னவெனில் நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவானது ஒரு சுயாதீனமான ஒன்று என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதானே?

பதில்: ஆம் இவர்கள் சொன்னது நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிற்கு நியமித்திருப்பது ஜனாதிபதிக்கு மிகக் கிட்டியவர்கள் என்றும் இது ஒரு சுயாதீன ஆணைக்குழுவல்ல என்றும் இதனால் எடுக்கப்படும் எந்த ஒரு செயலையும்எம்மால் நம்ப முடியாது என்றும் சொன்னார்கள். இவ்வாணைக்குழுவை நியமித்திருப்பது பிரச்சினைகளை தீர்க்க அல்ல, காலத்தை அழிக்க. இதை நியமித்தாலும் ஒருநாளும் அறிக்கையொன்றை வெளியிடாது என்று கூறினார்கள். அறிக்கையொன்றைக் கொடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்காது என்றும் கூறினார்கள்.”

அவர்களின் நோக்கமாக இருந்தது என்னவெனில் தருஸ்மன் அறிக்கையை முன்னே கொண்டு வருவதாகும்....?

அவர்களின் திட்டம் அப்படித் தான் இருந்தது. இந்த விமர்சனங்களை ஒவ்வொன்றாக முன்வைத்து அதற்குப் பதிலாக தருஸ்மன் அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக கொண்டு வந்து முன்வைப்பதற்காகத் தான் சென்ற முறை முயற்சித்தார்கள். அவ்வாறு செய்து அதில் அடங்கியுள்ள பரிந்துரைகளை நடை முறைப்படுத்த சர்வதேச ரீதியில் ஆணைக் குழுவொன்றை நியமிக்க திட்டமிட்டிருந்தார்கள்.

ஜெனீவாவுக்குச் சென்ற நான் உள்ளிட்ட அந்த குழு இந்த தருஸ்மன் அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக கொண்டு வருவதை நிறுத்துவதில் வெற்றி கண்டோம். நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் அறிக்கையை வாசிக்கும் எவருக்குமே அவ்வறிக்கையானது அரசாங்கத்தால் எழுதியதொன்றல்ல என்பது நன்கு விளங்கும்.

ஜனாதிபதி நல்லதொரு தீர்மானம் எடுத்தார். அதாவது இவ்வறிக்கையை பாராளுமன்றத்தில் உடனடியாக முன்வைக்க வேண்டுமென்று தீர்மானித்தார். இன்று ஜனாதிபதியின் இணையத்தளத்தைப் பார்க்கும் போது இவ்வறிக்கையை அந்த இணைய தளத்தில் எவரும் பார்க்கக் கூடிய வகையில் உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் எந்த ஒரு சொல்லில் கூட மாற்றத்தை ஏற்படுத்தாது முழுமையாக அறிக்கையை ஒரு சொல்லைக் கூட அகற்றாமல் முன்வைக்கப்பட்டுள்ளமையைக் காணலாம்.

அறிக்கையை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் முழு இலங்கை சார்பில் ஒரு பிரகடனத்தைக் கூட நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவர்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். எடுத்திருக்கும் இந்த படிமுறையைப் பார்க்கும் போது சிறந்த முறைசார் தன்மையும் பொறுப்புடையதும் நியாயமான ஒரு நோக்கோடும் எமது அரசாங்கம் சேவை செய்துள்ளது என்பதை எமக்கு, உலகத்துக்கு எடுத்துக் காட்ட நல்லதோர் சந்தர்ப்பம் இன்று கிடைத்துள்ளது. அதனால் இப்படி எதுவும் நடைபெறாது என்று சொன்னவர்களுக்கு நான் இம்முறை பதில் கொடுக்க நன்கு ஆயத்தமாகிக் கொண்டு தான் போகின்றேன்.

கேள்வி: சிலர் இவ்வாணைக்குழுவின் வழிமுறைகள் போதுமானதல்ல என்றும் எதுவுமே நடக்காது என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?

பதில்: அவ்வாறு சொல்வது எப்படி? நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை அதற்கு மேலும் ஆராய்ந்து பார்க்க இதுவரை பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த வேலைத்திட்டத்தின் பெறுபேறுகளை இது பற்றி ஈடுபாடுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

அடுத்ததாக இவ்விடயத்தில் இருக்கும் விசேட ஒரு தன்மை தான் சுயாதீன நாடொன்றில் உள்நாட்டு வேலைத்திட்டமொன்று ஆரம்பித்து இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அதுபற்றி நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி ஒரு பக்கத்துக்கு எடுத்தெறிந்து அதற்குப் பதிலாக பாரபட்சமான சர்வதேச ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்தி அந்நாட்டை மேலும் சிக்கல்களுக்குட்படுத்தும் முயற்சிக்கு நாம் இடமளிப்பதா அல்லது எமது மக்களுக்குத் தேவையான அவர்கள் எதிர்பார்க்கும்

ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக நாம் மிக கஷ்டத்துடன் பெற்றுக் கொண்ட அரசியல், பொருளாதார, சமூக நிலைப்பாட்டை விருத்தி செய்து நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் ஒரு முறை இத்தகைய விரும்பத்தகாத இருள் சூழ்ந்த துரதிஷ்ட ஒரு யுகத்துக்கு நாட்டை இட்டுச் செல்ல இடமளிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கும் தறுவாயில் நாம் இருக்கிறோம். அத்தகைய ஒரு யுகத்துக்குச் செல்ல எமக்குத் தேவையில்லை. நாம் உலகத்துக்கு ஒரு முன்மாதிரியைக் கொடுத்திருக்கிறோம் . பயங்கரவாதத்தை ஒழித்து தோல்வி காணச் செய்து ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள.”

பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்ததன் மூலம் இலங்கைக்கு எதிராக யுத்த கால கொடுமைகள் தொடர்பான குற்றங்களை சுமத்த மேலைத்தேய நாடுகள் தொடர்ந்தும் முயற்சித்தன. இலங்கைக்கு தன்னாதிக்கமுள்ள சுதந்திர நாடென்ற வகையில் சட்டபூர்வமற்ற இராணுவ அமைப்புக்களை தோல்வி காணச் செய்ய தெளிவான வகையில் உரிமையுண்டு...?

யாருக்கு அதை இல்லையென்று சொல்ல முடியும். இங்கு நான் கூறுவது இது இலங் கைக்கு மட்டும் தாக்கம் விளைவிக்கும் ஒரு பிரச்சினையல்ல. பல நாடுகளில் இன்று இதே வகையான பல நெருக்கடிகள் இரு க்கின்றன. அவ்வாறு நெருக்கடிகள் உள்ள, அந்நெருக்கடிகளைத் தீர்த்துக் கொண்ட நாடுகள் பலவற்றில் இத்தகைய உள்நாட்டு ரீதியிலான வேலைத்திட்டங்களை ஆரம் பித்திருக்கிறார்கள்.

அதனூடாக அவர்களும் சமாதானத்தை பூரணமாக ஸ்தாபித்துக் கொள்ளும் ஒரு நிலைமைக்கு வர அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அத்தருணத்தில் அவ்வ னைத்துக்கும் இடம் கொடுக்காமல் நம்பிக் கையின்மையை ஏற்படுத்திக் கொண்டு அவ் வேலைத்திட்டங்கள் பற்றி இவ்வாறு கூறுகின்ற சர்வதேச தரப்பினருக்கு நாம் இடம் கொடுக்கப் போகின்றோமா? என்ற தீர்மானத்தை அவ்வாணைக்குழுவில் அங்கத்துவம் வகிக் கின்ற அனைத்து நாடுகளும் எடுக்க வேண் டிய ஒரு திர்மானமாகும். இத்தகைய அச் சுறுத்தல்களை விடுப்பது இன்று இலங்கைக்கு, நாளைக்கு வேறொரு நாட்டுக்குமாக இருக்க லாம். எனவே இங்கு நாம் ஒரு பொதுவான கொள்கையைப் பற்றித் தான் பேசுகிறோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com