Tuesday, June 30, 2020

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு பிரதமரிடம் முறையிட்ட ஆளுநர் போதைப்பொருளை மறந்த மர்மம் என்ன?

வட மாகாண ஆளுநர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது வடகடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் கோரியுள்ளார்.

மேலும் கொரோனா தாக்கத்தின் பின்னர் மீளெழுவது தொடர்பாகவும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆளுநர் பிரதமரிடம் விளக்கியதாக பிரதமரின் செய்திப்பிரிவு

Read more...

ஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது. By Will Morrow

வியாழக்கிழமை, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி குளூக் கோப்பன்ஹேகனில் ஒரு செய்தியாளர் மாநாட்டை கூட்டி, கண்டம் முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா வைரஸின் "மிக முக்கியமான" மீள் எழுச்சி குறித்து எச்சரித்தார். கடந்த வாரம், மாதங்களில் முதன்முறையாக ஐரோப்பா மொத்த வாராந்திர தொற்றுக்களில் அதிகரிப்பை கண்டுள்ளது.

"நாடுகள் புதிய நடவடிக்கைகளை ஒழுங்குசெய்வதால், மீண்டும்

Read more...

Monday, June 29, 2020

பேராயர் தொடர்பில் தான் இன்னும் அதேநிலையில்தான்.. என்றாலும் இனி எதுவும் பேசமாட்டேன்! ஹரின்

பேராயர் மால்கம் ரஞ்சித் தொடர்பாக தான் இன்னும் அதே நிலையில் இருப்பதாக முன்னாள பாராளுமன்ற உறுப்பினரும் ஜன பலவேகய கட்சியின் வேட்பாளருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இருப்பினும், பேராயர் குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

சஜித் பிரேமதாச மற்றும் பேராயரின் சந்திப்புக் குறித்து அவரிடம் விசாரித்தபோது அவர் இதனை கூறினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேராயர் மல்கம் ரஞ்சித் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு

Read more...

பாதாள உலகத்தினரிடமிருந்து அதிகளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது ! அதிரடிப்படையினர்

இலங்கையின் பாதாள உலகக் கோஷ்டியினர் வசமிருந்து அதிகளவில் முதன்முறையாக அதிகளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவிக்கின்றது.

ஹோமாகம பிட்டிப்பன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின்போது, சிறைச்சாலையில் உள்ள பிரபல போதைப்பொருள் விற்பனையாளருடன் தொடர்புடையோர் வசமிருந்தே இந்த ஆயுதத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் சிறைவாசம் அனுபவிக்கின்ற 'ககன' என்ற பிரபல போதைப்பொருள்

Read more...

நீண்ட இடைவௌிக்குப் பின்னர் இன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்!

மூன்று மாதங்களுக்குப் பின்னர் பாடசாலை இன்று திறக்கப்படுகின்றது. இன்று ஆசிரியர்களும் கல்வி சாரா ஊழியர்களும் மட்டுமே பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு, அவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வண்ணம் நேரசூசியை தயாரித்து ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என, அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த அனைத்து மாகாணங்களினதும் செயலாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும்

Read more...

Sunday, June 28, 2020

ஆகஸ்ட் 15 இன் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது விமான நிலையம்! - பிரசன்ன ரணதுங்க

ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்டக் குழுவின் தலைவர் பிரசன்னா ரணதுங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பங்களாதேசிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள 19 இலங்கையர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2033 ஆக

Read more...

GMOA தலைவராக மீண்டும் பாதெனிய

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக, வைத்தியர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று, தலைவர் தெரிவு செய்வதற்கான கூட்டத்தில் அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் செயலாளர் பதவியிலிருந்த வைத்தியர் ஹரித்த அழுத்கே ஒருங்கிணைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் ஏனைய துறைசார் பதவிகளிலும் எந்தவொரு

Read more...

இலங்கையை கூட்டாட்சியாக மாற்றுவதற்கு இடமளியேன்! - கலாநிதி சரத் வீரசேக்கர

இலங்கையைக் கூட்டாட்சி அரசாங்கமாக மாற்றுவதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்க மாட்டோம் என ரியர் அத்மிரால் கலாநிதி சரத் வீரசேக்கர குற்பிபிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே கலாநிதி சரத் வீரசேக்கர இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,

யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு கருணா அம்மான் ஒத்தாசை

Read more...

முகமூடி அணியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டத் தயாராகின்றது பொலிஸ் தலைமையகம்

சுகாதரப் பணிப்பாளர் நாயகத்தின் தனிமைப்படுத்தல் நோய் தவிர்த்தல் சட்டத்தின்கீழ், பொது இடங்களில் முகமூடி அணியாத தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் தகவல்களைச் சேகரிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் தயாராகி வருகின்றது.

மேற்குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சென்ற 25 ஆம் திகதி பொலிஸ் நிலையங்களுக்கு பொது இடங்களில் முகமூடி அணியாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தல் என்ற தலைப்பின் கீழ் கட்டளை பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக முகமூடி அணியாமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே

Read more...

ஆயுத வன்முறையில் ஈடுபட்டோர் பாராளுமன்று செல்லமுடியாது. ஜேவிபி க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சேனாதிபதி.

இலங்கையில் ஆயுதவன்முறையில் ஈடுபட்டோர் பாராளுமன்று செல்வது தடுக்கப்படவேண்டும் என்றும் அதன்பொருட்டு ஜேவிபி என்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியினர் பாராளுமன்று செல்வதை தடுக்கும் பொருட்டு தனது சொந்தப்பணத்தில் 50 மில்லியன் ரூபாவினை செலவு செய்யவுள்ளதாக அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையணியின் அதிகாரியாகவிருந்து படையை விட்டு விலகியவர் மேஜர் சேனாதிபதி. இலங்கையில் தற்போது அவன்காட் என்ற கடற்கொள்ளையர்களை தடுக்கும் மற்றும்

Read more...

Saturday, June 27, 2020

காத்தான்குடியில் அரபு எழுத்துக்களால் என்ன எழுதியிருக்கின்றார்கள் என கருணாவுக்கு விளங்கவில்லையாம்.

தமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் என்ன கேட்கிறார்கள் என்றும் தனக்கு விளங்கவில்லை என்று தெரிவித்துள்ளார் கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.

அததெரண என்ற ஊடகத்தின் „என்ன நடந்தது" என்ற நிகழ்சிக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்:

Read more...

முகமூடி விடயத்தில் அசிரத்தை காட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! - அஜித் ரோஹண

கொவிட் 19 தொற்று நோய் இலங்கையிலிருந்து முழுமையாக ஒழியும்வரை சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறு, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அதற்கேற்ப முகமூடியைத் தொடர்ந்து பயன்படுத்துமாறும், அதில் கூடிய கவனம் செலுத்துமாறு அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார். சுகாதாரப் பிரிவினரரின் அறிவுறுத்தல்களைக் கருத்திற் கொள்ளாமல் செயற்படுவோருக்கு எதிராக சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பான விசேட சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அரச நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில்

Read more...

டெங்கு நோய் பரவும் அபாயம் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!

சமூகத்தில் கட்டுமாணப் பணிகள் இடம்பெறும் இடங்களில் டெங்கு நோய் தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கட்டுமாணப் பணிகள் இடம்பெறும் இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து இந்த பகுதியில் டெங்கு

Read more...

இளம் சந்ததியினரை போதைப்பொருளுக்கு அடிமைப்- படுத்துபவர்குளுக்கு எதிராக கடுஞ்சட்டம் - கமல் குணரத்ன

இலங்கையின் இளம் சந்ததியினரை போதைப் பொருளுக்கு அடிமைப்படுத்துகின்ற தனிநபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாகப் பிரயோகிக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.

சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் இன்று பெரும்பாலான இளம் சந்ததியினர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டியது தலையாய கடமையாகும். எனவே, இது தொடர்பில் அரசாங்கம்

Read more...

4000 இற்கும் அதிகமான காணிகள் போலி ஆவணங்கள் தயார்செய்து விற்பனை!

கொழும்பு பாதாள உலக கும்பல்கள் 4,000 அதிகமான பல கோடிகள் பெறுமதியான காணிகளை போலி ஆவணங்களைச் செய்து விற்றுள்ளதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன.

பாதாள உலக கும்பல்களை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. கொழும்பு 7 இல் இரண்டு பில்லியன் ரூபாய் மதிப்புள்ள காணியொன்று பாதாள உலக கும்பலால் போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Read more...

Friday, June 26, 2020

180 கோடி ரூபாவுக்கும் என்னதான் நடந்தது? ஐதேக தலைவர்கள் தௌிவுறுத்த ​வேண்டும்! கிரியெல்ல

MCC ஒப்பந்தங்கள் இரண்டில் கைச்சாத்திட்டு, பெற்றுக்கொண்ட 180 கோடி ரூபாவுக்கும் என்னதான் நடநதது? என்பதை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் தௌிவுறுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத்திற்கான வேட்பாளர் பேராசிரியர் வன்ன ஜயசுமன குறிப்பிடுகின்றார்.

அநுராதபுர இப்பலோகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்பதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

MCC ஒப்பந்தம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Read more...

பொதுத் தேர்தலின் பின்னர் ரணில் பொஐஐமு வுடன் கோக்கவுள்ளார் என்கிறார் டில்வின்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் என்று தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் டில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.

அளுத்கமயில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கப் பிரிவினரும் சஜித் பிரேமதாசவும் பிரிந்து நிற்பதற்கான முக்கிய காரணம் தலைமைத்துவ பிரச்சினையே எனவும், ரணில் விக்கிரமசிங்கவின்

Read more...

Thursday, June 25, 2020

நான் ஏன் அரசியலுக்கு வருகின்றேன்? விளக்குகின்றார் டாக்டர் அசோகன் ஜூலியன்.

தமிழ் தேசிய அரசியலின் புதிய முகம்கள் சில மட்டக்களப்பில் நுழைந்துள்ளது. அவர்களில் அனேகமானவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் நீண்ட எதிர்பார்ப்பாக இருந்த புதிய முகம்களின் கோரிக்கை இம்முறை ரிஎம்விபி யினால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற நிலையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான டாக்டர் அசோகன் ஜூலியன் தனது அரசியல் பிரவேசத்தின் நோக்கம்

Read more...

இலங்கை இராணுவத்தினரை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன்... ! வாய்கூசாமல் சொல்கிறார் கருணா

கருணா அம்மான், ஆனையிறவில் இராணுவ வீரர்களைக் கொன்றமை தொடர்பில் அண்மையில் மேடை போட்டு முழங்கியமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா 7 மணித்தியாலங்கள் கருத்துரைத்துள்ளார். பின்னர் ஊடகங்களிடம், எந்தவொரு நிலையிலும் தான் இலங்கை இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் கிழக்கிற்கான ஆயுதப் பிரிவில் தலைமைத்துவம் வகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இராணுவம் தொடர்பில் வாய்வீச்சில் வீரராக மாறியதால் குற்றப்புலனாய்வு்த் திணைக்களம்

Read more...

கொரோனா தொற்றாளர்களில் 80 வீதமானோர் பூரண சுகம்... இன்று 40 பேர் வீடுகளுக்குப் பயணம்!

இன்று முற்பகல் 10.00 யுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தினுள் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்த 40 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 10 பேர் நோய்த்தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 388 ஆகும். இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளோரின்

Read more...

MCC கைச்சாத்திட்டால் அந்த நிமிடமேஅரசாங்கத்திலிருந்து வௌியேறுவேன்! விமலார்

மிலேனியம் செலேன்ஞ் கோபரேசன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அரசாங்கத்தில் தான் ஒரு நிமிடம் கூட இருக்கப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.

தனது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கருத்துரைக்கும்போது, எம்.சீ.சீ அல்ல வேறு எந்தவொரு பெயரில் வந்தாலும் தான் அதற்கு எதிராகவே நிற்பதாகவும் இந்நாட்டு அரசியல் யாப்பிற்கும் மேலால் செல்கின்ற, நீதிமன்றிற்குக் .

Read more...

இந்தியாவிலிருந்து வன்னிக்கு வந்தோர் ஆர்ப்பாட்டத்தில்!

1980 ஆம் 1990 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் இந்தியாவுக்குச் சென்றுவிட்டு தற்போது நாடு திரும்பி மீள்குடியமர்ந்துள்ள பல குடும்பங்கள் தங்களுக்குரிய ஆரம்பக் காணிகளைப் பெற்றுத்தருமாறு கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா வடக்குப் பிரதேச செயலக்திற்குச் சொந்தமான கான்வூர்மொட்டைக் கிராமத்தில் மீள்குடியேறியுள்ளவர்களே இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களாவர். தாங்கள் மீள்குடியேறியதிலிருந்து இதுவரை தாங்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

7 மணித்தியாலங்களின் பின்னர் சிஐடி யிலிருந்து வெளியேறினார் கருணா. நீதிமன்று அதிரடி உத்தரவு.

ஆனையிறவுத்தாக்குதலின் போது 2000-3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றொழித்ததாக புலிகளின் முன்னாள் தாக்குதல் தளபதிகளின் முக்கியஸ்தரான கருணா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவரிடம் இன்று 7 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

இன்றுகாலை 10 மணிக்கு சிஐடி யில் தனது வக்கீல் சகிதம் ஆஜரான கருணாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விடுதலை

Read more...

Wednesday, June 24, 2020

கொலைகாரர்கள் பாராளுமன்று வரும் கலாச்சாரத்தை நிறுத்துங்கள்! தேசிய அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை.

கருணாவின் அண்மைய கருத்தினால் சிங்கள மக்கள் மிகவும் கொதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கருத்து தொடர்பில் மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருணாவை நியாயப்படுத்த முனையும் மறுபுறத்தில் எதிர்கட்சிகள் யாவும் இவ்விடயத்தை வன்மையாக கண்டிப்பதுடன் மஹிந்த மீது சேறை வாரி இறைத்து வருகின்றது.

தமிழர்களை கொன்ற எங்களுக்கு வாக்கு போடுங்கள் என மஹிந்த சிங்கள மக்களிடம் வாக்குகளை கோருகின்ற அதே தருணத்தில் தனது உள்வீட்டுப்பிள்ளையான கருணாவை கிழக்கில் சிங்களவர்களை கொன்றேன்

Read more...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி பெற்றோலின் விலையைக் குறைப்பேன் என்கிறார் சஜித்தார்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி, அரசாங்கத்தை அமைத்து 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் பெற்றோலின் விலையைக் குறைப்பதாக சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.

கொழும்பு - மோதரயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், உலக சந்தையில் எண்ணெய்யின் விலை குறைந்துள்ள ​போதும், இலங்கை எண்ணெய்யின் விலையைக் குறைக்காமலிருப்பது அரசாங்கத்தின் கபடத்தனமாகும்.

Read more...

ரணிலும் சஜித்தும் விமலுக்கு பேரிடியாம்... பொதுமக்களே என் தலைவலியை நீக்குங்கள்! - அழுகின்றார் விமல் வீரவங்ச

தனக்கு அரசியல் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாக குறைபட்டுக்கொள்கிறார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச.

பொதுத் தேர்தலுக்கான கூட்டமொன்றின்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் போட்டியிடவுள்ளதாகவும். அவர்கள் அவர்கள் இருவரைவிடவும்

Read more...

பொன்சேக்கா நாட்டைக் காட்டிக் கொடுத்தார்... அதற்கெதிராகச் செயற்பட்டார் கருணா!

இலங்கையி்ல் இடம்பெற்ற யுத்தத்தை வெற்றி கொள்ளவதற்காக எல்ரீரீஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் படைக்களத் தளபதியுமான கருணா அம்மானின் உதவி எங்களுக்குக் அதிகமதிகமாகக் கிடைத்தது. அதனால்தான் நாங்கள் யுத்தத்தை வெற்றி கொண்டோம் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் இராணுவத்தினர் போர்க்காலச்

Read more...

Tuesday, June 23, 2020

குணா கவியழகனின் கஞ்சிக்குள் மண்ணை தூவுகின்றனர்!

பாசிஸ பாசறையில் வளர்ந்தவர் குணா கவியழகன். இவர் தனது கற்பனை திறனினால் பன்னெடுங்காலமாக புனை கதை கூறி தமிழ் மக்களை பாசிஸத்தை ஏற்கப்பண்ணி வருகின்றார். கடந்த சில காலமாக அவர் புலிகள் அமைப்பு உலக நாடுகளால் அழிக்கப்பட்டதாகவும் அதற்கான காரணம் யாதெனின் புலிகளின் வளர்ச்சி உலக போராட்ட உதாரணங்களுக்கு சவாலாக அமையும் என்ற பயத்தினாலாகும் என்றும் சோதிடம் கூறியுள்ளார்.

புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களதும் பணத்தை இலக்குவைத்து ,

Read more...

உலக சந்தையில் அதிகவிலை கொண்ட பண்டம்தான் „ஜனநாயகம்" ! மஹிந்த தேசப்பிரிய

ஜனநாயகத்தை மிக எளிதில் பெற்றுக்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணையாள் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடம்பெறவுள்ள தேர்தலுக்கான செலவுகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றில் விளக்கும்போதே அவர் இதை கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் :

தேர்தலை நாம் சுமார் 650 கோடி ரூபா செலவினுள் நடாத்தி முடிக்க முயற்சித்தோம். தற்போது காணப்படுகின்ற கொரோணா தாக்கம் காரணமாக சுகாதார விதிமுறைகளை

Read more...

நாடாளுமன்ற தேர்தலுக்காக 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை 11 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம்

Read more...

நடுநிலையாக செயற்படுங்கள் - ஊடக நிறுவனங்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கோரிக்கை!

செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் போது நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாண தேர்தல் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சுவரொட்டிகள்,

Read more...

Monday, June 22, 2020

கணபதி ஆலயம் இனந்தெரியாதோர் தகர்ப்பு!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் தள்ளடி பிரதேசத்தில் அமைந்துள்ள கணபதி இந்து ஆலயம் நேற்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது என மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றுப் பின்னேரம் இனந்தெரியாதோர் கோவிலுனுள் புகுந்து அங்கிருந்த கணபதிச் சிலை மற்றும் கோவில் மண்டபத்தில் அமைந்திருந்த பொருட்கள் பலவற்றையும் சிதைத்துச் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இதே கணபதி ஆலயத்திலுள்ள சிலைகள் மற்றும் பொருட்கள் இனந்தெரியாதோர் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் இதுவரை

Read more...

யானையின் துதிக்கையில் மொட்டு.. தேர்தலின் பின்னர் பாய்ந்துவிடும் பாரு...

யானையின் தும்பிக்கையில் தாமரை மொட்டை ஏந்தியுள்ள கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும் என தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமிர பெரேரா குறிப்பிட்டார்.

ஹட்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுகின்ற அந்தக் கட்சியின் பலர் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டினால், அவர் பொது பெரமுனவுடன் சேர்ந்துகொள்வதற்கான

Read more...

ஹிஸ்புல்லா பிறமதங்களை வெறுக்க கற்பித்தார். மத்ராஸாவில் நடந்தவற்றை மாணவர்கள் சாட்சியம். சிஐடி மன்றில் அறிக்கை.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள வக்கீல் ஹிஸ்புல்லாஹ், சஹ்ரானால் இயக்கப்பட்டுவந்த மத்ராசா பாடசாலை ஒன்றில் மாவணர்களுக்கு ஏனைய மதங்களை வெறுக்கக்கற்பித்ததாகவும், அப்பாடசாலையில் கற்றுவந்த மாணவர்கள் 24 பேரில் 10 பேர் அவரை அடையாளம் காட்டியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுதுறை (சிஐடி) கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையை கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) சமர்ப்பித்தபோதே

Read more...

நான் கொரோனாவை விட ஆபத்தானவன்தான். வாக்குமூலத்தில் மாற்றம் இல்லை. அடம்பிடிக்கிறார் கருணா

தமிழ் மகா சபைக் கட்சியிலிருந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற கருணா அம்மான், தான் எல் ரீ ரீ ஈ அமைப்பில் உறுப்பினராக இருந்தபோது நூற்றுக் கணக்கான இராணுவத்தினரைக் கொன்றொழித்ததாகவும் அது பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும் எனவும், அதனால் தன்னை கைதுசெய்ய இயலாது எனவும் கூறியுள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற தான், கொரோனாவை விட ஆபத்தானவன் என்றும் ஒரே நாளில் சுமார் 2,000 இராணுவ வீரர்களைக் கொன்றேன் என்றும் அவர் தனது அறிக்கைக்கு பதிலளிக்கும்

Read more...

Sunday, June 21, 2020

சிறைக்கைதிகளுக்கு கைத்தொலைபேசி வழங்கிய சிறைக்காவலர்களுக்கு ஆப்பு!

சிறைவாசம் அனுபவித்து வருகின்ற போதைப்பொருள் விற்பானையாளர்களுக்கு கைத்தொலைபேசிகளை வழங்கியமை தொடர்பில் சிறைக்காவலர்கள் இருவரின் தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதுதொடர்பில் குறிப்பிடுகையில், மாத்தறை சிறைக்காவலர் ஒருவரும் மஹர சிறைக்காவலர் ஒருவருமே இவ்வாறு தொழில் நீக்கம் செய்யப்பட்டவர்களாவர் எனக் குறிப்பிட்டார். போதைப்பொருள் விநியோகித்தமை தொடர்பில் சிறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு

Read more...

கொரோனா குறைந்து கொண்டே செல்கின்றது....! சுகாதார அறிக்கை

சென்ற 15 நாட்களுக்குள் கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 149 ஆக இருந்த போதும், குறித்த காலப்பகுதியில் 633 நோயாளர்கள் பூரண சுகமடைந்து, தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என சுகாதார அறிக்கை தௌிவுபடுத்துகின்றது.

அதற்கேற்ப, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட கொவிட் - 19 தொற்றாளர்கள் துரிதகதியில் குறைந்து வருவதைக் காட்டுவதோடு, நேற்றைய தினம் எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என இன்று பிற்பகல் வௌியான அறிக்கையின் மூலம் தெரியவருகின்றது.

இங்குள்ள படமானது சென்ற மாதம் பூரண சுகமடைந்து

Read more...

நாங்கள் சஹ்ரானை கைது செய்யாததால்தான் இத்தனை உயிர்களும் போனது! காத்தான்குடி OIC குற்ற ஒப்புதல்.

சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்யபோதிய ஆதாரங்கள் இருந்தபோதும் தாம் கடமையை செய்ய தவறியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒத்துக்கொண்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நேற்றுமுன்தினம் (19) ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய

Read more...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பொதுஜன பெரமுன பெற்றுக்கொள்ளும்! -எஸ்.பி

இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு 153 ஆசனங்கள் கிடைக்கும் என, நுவரெலியா மாவட்ட பெரமுனவின் வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்குமான ஆசிர்வாத பூஜை இன்று மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே எஸ்.பீ. திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read more...

மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆவணி மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் முக்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் மாவட்டத்தில்

Read more...
Page 1 of 127712345678910111277Next
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com