பொன்சேக்கா நாட்டைக் காட்டிக் கொடுத்தார்... அதற்கெதிராகச் செயற்பட்டார் கருணா!
இலங்கையி்ல் இடம்பெற்ற யுத்தத்தை வெற்றி கொள்ளவதற்காக எல்ரீரீஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் படைக்களத் தளபதியுமான கருணா அம்மானின் உதவி எங்களுக்குக் அதிகமதிகமாகக் கிடைத்தது. அதனால்தான் நாங்கள் யுத்தத்தை வெற்றி கொண்டோம் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் இராணுவத்தினர் போர்க்காலச் சூழலில் போர்க்குற்றம் புரிந்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்க குறிப்பிடுகையில், அதற்கு நேர்மாற்றமாக கருணா அம்மான் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை என்று பொதுவௌியில் குறிப்பிடுகின்றார்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் மனுத்தாக்கல் செய்யப்பட்டபோது, இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை என்று கருணா அம்மான் அங்கு சாட்சியமளிக்க முன்வந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கருணா அம்மானினால் முன்வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், அது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சட்டப் பிரிவு மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment