இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு பிரதமரிடம் முறையிட்ட ஆளுநர் போதைப்பொருளை மறந்த மர்மம் என்ன?
வட மாகாண ஆளுநர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது வடகடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் கோரியுள்ளார்.
மேலும் கொரோனா தாக்கத்தின் பின்னர் மீளெழுவது தொடர்பாகவும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆளுநர் பிரதமரிடம் விளக்கியதாக பிரதமரின் செய்திப்பிரிவு தெரிவிக்கின்றது.
வட கடற்பரப்பினூடாக இந்தியா , பாக்கிஸ்தான் , ஆப்பானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இலங்கையினுள் போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. இப்போதைப்பொருட்களானது மாதகல் மற்றும் தலைமன்னார் பிரதேசத்தை வந்தடைவதுடன் அங்கிருந்து நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இவ்வியாபாரத்தின் பின்னணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரபல அரசியல்வாதிகள் இருவர் உள்ளனர்.
இந்நிலையில் மேற்படி நாசகார செயலினை தடுக்குமாறு ஆளுநர் பிரதமரிடம் வேண்டுதல் விடுக்காததன் பின்னணி தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.
0 comments :
Post a Comment