Sunday, June 28, 2020

ஆகஸ்ட் 15 இன் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது விமான நிலையம்! - பிரசன்ன ரணதுங்க

ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்டக் குழுவின் தலைவர் பிரசன்னா ரணதுங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பங்களாதேசிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள 19 இலங்கையர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2033 ஆகஉயர்ந்துள்ளது. அதன்படி, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் 773 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது 38.02 சதவீதமாகும். மொத்தம் 19 பேர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், பாதிக்கப்பட்டோரில் 947 பேர் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகியவர்களாவர்.

உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஏனைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 313 ஆகும். இலங்கையில் இனங்காணப்பட்ட 2033 கொவிட் நோயாளர்களில் 1639 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது இனங்காணப்பட்டோரில் 79.35 சதவீதமாகும். மொத்தம் 383 நோயாளிகள் மேலதிக சிகிச்சையைப் பெற்றுவருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com