நான் ஏன் அரசியலுக்கு வருகின்றேன்? விளக்குகின்றார் டாக்டர் அசோகன் ஜூலியன்.
தமிழ் தேசிய அரசியலின் புதிய முகம்கள் சில மட்டக்களப்பில் நுழைந்துள்ளது. அவர்களில் அனேகமானவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் நீண்ட எதிர்பார்ப்பாக இருந்த புதிய முகம்களின் கோரிக்கை இம்முறை ரிஎம்விபி யினால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற நிலையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான டாக்டர் அசோகன் ஜூலியன் தனது அரசியல் பிரவேசத்தின் நோக்கம் மற்றும் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கீழ்கண்டவாறு விளக்கியுள்ளார்.
ஏன் அரசியலில்
பாராளுமன்ற உறுப்பினர் என்ற பட்டத்தை எனது பெயருக்கு பின்னால் போடுவதற்காகவோ அல்லது பாராளுமன்ற கதிரையை சூடாக்குவதற்காகவோ அல்லது காந்தி பூங்காவின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதற்காகவோ, அல்லது பாடசாலை பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக செல்வதற்காகவோ,அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காகவோ அல்லது நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
30 வருடங்களுக்கு முன் எனது பெயருக்கு பின் பட்டத்தை சுமந்தவன். நடுத்தர ஆசிரிய குடும்பத்தில் பிறந்த நான் இலவச கல்வியால் பட்டத்தையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவன்.
மட்டக்களப்பின் நிலமை
எமது மாவட்டத்திலேயே 35 வயதை தாண்டியும் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பற்று வீட்டில் இருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சிறுவர்கள் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பாடசாலை படிப்பை துறந்து வீதியிலே வியாபாரம் செய்யும் துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டமே வறுமையில் முதலிடத்தில் காணப்படுகின்றது
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே நீர், மலசலகூடம், தரமான வீடுகள் என அடிப்படை வசதிகளற்று ஓலை குடிசைகளில் மக்கள் வாழும் அவலமான நிலைமை காணப்படுகிறது.
பெண்களை தலைமையாக கொண்ட போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளினது வாழ்க்கை போராட்டத்துக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்படாமல் அவலமான நிலைமையில் வாழும் நிலைமை காணப்படுவதுடன் ஒவ்வொரு தேர்தல்களிலும் பேசும் விடயமாக காணப்படுகின்றது.
இனத்தின் மேல் கொண்ட உணர்வுகளால் வலியை சுமந்து தமது கல்வி மற்றும் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஆயிரக்கணக்கான சகல போராட்ட இயக்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான எமது உறவுகள் நிர்க்கதியற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் ஜீவனோபாய போராட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை வாழ்க்கையில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
என்னால் முடியும்
நான் மட்டக்களப்புக்கு சொந்தமானவன். மட்டகளப்பு, நான் பிறந்த மண்; என்னை வாழவைத்த மண். எனது தமிழ் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது. எனது தமிழ் சமூகம் மாற்றானிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும். மாற்று சமூகத்துக்கு நிகராக எமது தமிழ் சமூகமும் வாழவேண்டும்.
அதனை என்னால் செய்யமுடியும். அதற்கான தகுதியும் ஆளுமையும் என்னிடம் உண்டு.
எனவே எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்னால் மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்த முடியும்.
எனவே உங்கள் முதலாவது வாக்கை சரித்திரநாயகன் முன்னால் முதலமைச்சர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தனின் அவர்களின் படகு சின்னத்துக்கு புள்ளடி X இட்டு இலக்கம் 8 X க்கு அளிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்.
என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எற்பட்டால்.......
உங்கள் இரண்டாவது விருப்பு வாக்கை எனது இலக்கம் 4 X க்கும் வழங்குங்கள்.
நான் உங்களை மாற்று சமூகத்துக்கு சமனாக மாற்றானிடம் கையேந்தாமல் நிரந்தர வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி உங்களை வாழ வைப்பேன் என உறுதியளிக்கின்றேன்.
பசிக்கிறது என்று சோறு கேட்பவனுக்கு சாப்பாட்டு பார்சல் கொடுத்து முகநுலில் படம் போடுவது தேச அக்கறையுள்ள ஒருவனுக்கு அழகு அல்ல.
விதை நெல் கொடுத்து ஆயுட்காலம் முழுவதும் கையேந்தாமல் அவன் உண்ண, உணவுக்கு வழி செய்பவனே உண்மையான மக்கள் தொண்டன்; மக்கள் சேவகனாவான்.
உங்கள் அன்பின்
டாக்டர் அசோகன் ஜுலியன் பாலசிங்கம் MBBS
தொடரும்....
0 comments :
Post a Comment