Tuesday, December 30, 2014

அங்கவீனரான முன்னாள் படை வீரனை தாக்கி அவரது பொய்காலை கழற்றிச் சென்ற மஹிந்தவின் அடியாட்கள்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்தோர் நேற்று மகியங்கணை பிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாக்குதலில் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெனரல் பொன்சேகா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அவர் இத்தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், ராஜபச்சவினர் மேற்கொள்ளும் மேற்படி கோழைத்தனமான தாக்குதல்களை தான் மிகவும் கண்டிப்பதாகவும், எதிர்வரும் எட்டாம் திகதியின் பின்னர் மேற்படி வன்செயல் மனோநிலையில் உள்ளவர்களை புனருத்தாருண நிலையங்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள நபர் நாட்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தனது ஒரு காலை இழந்தவர் என்றும் அவரை தாக்கிவிட்டு அவரது போலிக்காலையும் கழற்றிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி மஹிந்த அரசாங்கம் இவ்வாறே இராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்கின்றது என்றும் இதைகாணும் இராணுவ வீரர்கள் தங்களுக்கும் இதே கதிதான் என்பதை மனதில் இருத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் இத்தாக்குதல்கள் நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த நாட்டிலே மிகவும் சமாதானமான முறையிலே அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம். ஆனால் எம்மீது வன்செயல்கள் கட்டவிட்டுவிடப்படுகின்றது. எம்மீது கோழைத்தனமான தாக்குதல்களை தொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் இவற்றை மாபெரும் வீரச்செயலாக கருதுகின்றனர்.

மேலும் தாக்குதலை நாடாத்தியோர் யார் என்பது பொலிஸாருக்கு நன்கு தெரியும். அவர்கள் வந்த வாகனங்களை அடையாளம் கண்டுள்ளனர். காடையர்களது தொலைபேசிகளை அவர்கள் விட்டு விட்டு ஓடியுள்ளனர். அவற்றை கைப்பற்றிய பொலிஸார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் நடவடிக்கை எடுக்கும் காலம் விரைவில் வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Read more...

த.தே.கூ. மைத்திரிக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரிணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்குவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

கொழும்பு ஜானகி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

த.தே.கூ. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் பிரகடனங்களையும்கூர்ந்து கவனித்து வந்ததோடு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ்பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனிதில் கொண்டு வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் ஏனைய பிஜைகளையும் சரியாக வழிநடத்ததும் பொறுப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது

Read more...

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் நாடு கேட்கவில்லை...! – சம்பிக்க

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளருக்கு ஆதரவு தர வந்திருப்பது முஸ்லிம் அலகு கேட்டல்ல என ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.

மைத்திரிபால சிரிசேன, அம்பாறை மாவட்டத்தில் தனியான முஸ்லிம் அலகினைத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. இவ்வாறான பொய்ப் பிரச்சாரம் ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது வெறும் பொய் என சம்பிக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

“மைத்திரிபால சிரிசேனாவின் பொதுக் கொள்கை வெளியீட்டுடன் உடன்படுபவர்கள் மாத்திரமே கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இதுதான் எல்லோரினதும் கொள்கையாகும். அது பொதுக் கொள்கையே தவிர ரவூப் ஹக்கீமினதோ, சம்பிக்க ரணவக்கவினதோ, ரணில் விக்கிரசிங்கமவினதோ கொள்கையல்ல. பொதுக் கொள்கையின் அடிப்படையில் நாம் செயற்படுவதால் எந்தவொரு முறையிலும் முஸ்லிம் அலகு வழங்குவதற்கு வாக்குறுதி வழங்கப்படவில்லை” எனவும் ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

Monday, December 29, 2014

நோயாளி மயங்கி கிடக்க ஆபரேசன் தியேட்டரில் செல்பி எடுத்த தென் கொரிய மருத்துவமனை ஊழியர்கள்

‘கங்னம் ஸ்டைல்’ என்ற பாடல் மூலம் உலகின் கவனத்தைப் பெற்ற தென் கொரியாவின் ‘கங்னம்’ மாவட்டம் தற்போது இன்னொரு சம்பவத்தினாலும் பிரபலமாகியுள்ளது. அம்மாவட்டத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மையத்தில் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் போது மருத்துவமனை ஊழியர்கள் அருகே நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம்அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் புகைப்படங்களைப் பகிரும் அப்ளிகேஷனான இன்ஸ்டாகிராமில், அறுவை சிகிச்சை அரங்கில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது அருகே மெழுகுவர்த்தி ஊதி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் மருத்துவமனை ஊழியர்களின் புகைப்படம் வெளியானது. படுக்கையில் உணர்வற்ற நிலையில் நோயாளி கிடப்பதும் அந்த புகைப்படத்தில் தெளிவாகத் தெரிந்தது.

சம்பவம் நடந்த ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ மையத்தில் மருத்துவ விதிகள் எதுவும் மீறப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருவதாக சியோலின் பொது சுகாதார துறை செய்தித் தொடர்பாளர் இன்று கங்னம் மாவட்டத்தில் தெரிவித்தார். மேலும் இவர்களின் நடத்தை மருத்துவர்கள் மீதான நன்மதிப்பை கெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிகிச்சை மையம் தன்னுடைய கவனக்குறைவான செயல்களுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Read more...

மட்டக்களப்பு மைத்திரி பிரசாரக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்

இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக எதிரணியினர் கூறுகின்றனர். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்பிரசாரத்திற்காக கல்லடி சிவானந்தா தேசியப் பாடசாலை மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

தேர்தல் பிரசார மேடை அமைப்புக்காக சென்றிருந்த எதிரணி ஆதரவாளர்கள் மைதானத்திற்கு முன்பாக நின்று கூட்டம் தொடர்பான பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த வேளை வாகனங்களில் வந்த குழுவொன்றினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர், காயமடைந்த இருவரை தவிர்ந்த மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களில் ஒருவரான த.மாசிலாமணி கூறுகின்றார்.

இரண்டு வாகனங்களில் கத்திகள், தடிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் கூறுகின்றார்.

தாக்குதலை நடத்திய நபர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் அந்த பகுதியில் காணப்பட்டதாகவும், நாளை நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்பவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அவர்கள் நடமாடிதிரிந்ததாகவும் மாசிலாமணி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் வாகனங்களின் இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களுடன் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்றும் என்றும் அவர் கூறுகின்றார். இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை பேச்சாளரின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.

Read more...

எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மீது தாக்குதல்

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனைய, தெனியாய மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார் காரியாலயங்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார். அதிகாலை வாகனங்களில் வந்த சிலர் மஹியங்கனையவில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அங்கிருந்த மூன்று நபர்கள்காயமடைந்ததாக கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர் அவர்கள் தற்பொது மஹியங்கனைய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர்களை போலிசார் அடியாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர், அவர்களை கைதுசெய்வதற்கு விசேட போலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அறிவித்தார்.
இதேவேளை மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரின் வெலிகம மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் அலுவலகங்களும் திங்கள் அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்களை அடியாளம் காண்பதற்கான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூறிய அவர், சந்தேகநபர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்களென்றும் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 80 பேர் போலிசாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன கூறினார் .

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஏழு பிரதேச சபை தலைவர்கலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர், தேர்தல் வன்முறைகள் சம்பந்தமாக போலிசார் காலதாமதமின்றியும் பக்கச்சார்பற்ற முறையிலும் கடமைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

Read more...

அரசுக்கெதிராக பூகம்பம் வெடிக்க யார் காரணம். சஜின் வாஸ் vs கிறிஸ் நோணிஸ் Xரே ரிப்போட்

மகிந்த அரசுக்கெதிராக இவ்வளவு பாரிய எதிர்ப்பலைகள் எழும்புவதற்கு பல காரணிகள் கூறப்படுகின்றது. அதில் மிக மிக முக்கியமாக இந்திய. அமெரிக்க கூட்டுச்சதி பற்றித்தான் ஆய்வாளர்கள் பேசுகின்றார்கள்.

ஆனால் இவைகளை விட. மிக மிக முக்கியமாக முன்னாள் சிறிலங்கா அரசின் இங்கிலாந்து தூதுவர் திரு.கிறிஸ் நோணிஸ்ஸை பற்றி யாருமே. எதுவுமே கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவரது காய்நகர்த்தல்கள்தான் இங்கு பாரிய அளவில் சிறிலங்கா அரசை ஆட்டிப்படைக்கின்றது.

யாரின்த கிறிஸ் நோணிஸ். சிறிலங்காவில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காறர்களில் ஒருவர். சிறிலங்காவின் மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதியாளர். படித்தவர். பண்பாளர். இவையெல்லாம் ஒருவருக்கு இருந்தால் நிச்சயம் அவர் தலைக்கனம் பிடித்தவராக இருப்பார்.

அவ்வகையில் கொஞ்சம் கிறுக்கறும் கூட. ஆனால் புத்திசாலி. டபுள் டொக்டரேட். பிரிட்டிஷ் குடியுரிமையும். பிரிட்டிஷ் அரச குடுபத்தவர்களை சந்தித்து பேசக்கூடிய தகுதியும் உள்ளவர். பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்சுடன் இவருக்கு கூட்டுவியாபாரங்களும் உண்டு.

இங்கிலாந்துக்கான சிறிலங்காவின் தூதுவராக இருந்த ஜஸ்ரிஸ் நிஹால் ஜெயசிங்ஹவின் இடத்துக்கு கிறிஸ் நோணிஸ் நியமிக்கப்பட்டார். அங்கிருந்த உதவி தூதுவர் ஒருவரை அவ்விடத்துக்கு நியமிக்க இருந்த போது.

அவர் முஸ்லீம் என்பதால். அவரை தூக்கி தூர வீசிவிட்டு. அந்த இடத்துக்கு பண முதலையான கிறிஸ் நோணிஸை நமது ஜனாதிபதி அதிவிஷேட உத்தரவு மூலம் நியமித்தார்.

அங்கிருந்துதான் சனியன் தனது ஆட்டத்தை தொடங்கியது. சிறிலங்காவில் இருந்து அரசியல்வாதிகள். அரசின் உறவினர்கள். அடியாட்கள். பந்தாக்கள். வால்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இங்கிருந்து வாய் மொழி அல்லது அரச உத்தரவுகள் அந்தந்த நாட்டு தூதுவர்களுக்கு பறக்கும்.

அந்த உத்தரவுகளை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு. அவ்வவ் நாட்டிலுள்ள துதுவர்கள். இங்கிருந்து செல்பவர்களை தலையில் தூக்கி வைத்து. கூத்தாடி. அவர்களை தலாட்டி. அரசிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள்.

அரச வேலையாக செல்பவர்களுக்கு இப்படி ஒரு சம்பிரதாயம் இருப்பது நியதிதான். ஆனால் அரச கூஜாக்களுக்கும் இப்படித்தான் வளங்கப்பட வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத நியதி இருந்தது.

ஆனால் இந்த பாச்சா கிறிஸ் நோணிஸிடம் பலிக்கவில்லை. இங்கிருந்து போனவர்களுக்கெல்லாம் அளவோடுதான் எல்லாமே நடந்தது. கிறிஸ் நோணிஸின் இந்த நடவடிக்கை மகிந்த பெமிலியையும் கலவரப்படுத்தியது.

அவரை ரிசைன் பண்ணு என்று சொல்லமுடியாத நிலை ஏற்பட்டது. எப்படி இவரை துரத்துவது என மகிந்த பெமிலி திட்டம் தீட்டியது.


அதன் ஒரு பிரதிபலிப்புதான் ஐ.நா.வில் வைத்து சஜின் வாசுடன் சொல்லி அவரை பிரித்து மேய்ந்தது. இது அழகாக திட்டமிடப்பட்டு. மகிந்த ராஜபக்சவின் பூரண ஆசியுடனேயே நடைபெற்றது.


உலகின் முகடு என்று சொல்லப்படுகின்ற. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் போது. மொத்த உலகமே பார்த்திருக்க. ஒரு நாட்டின் தூதுவருக்கு. அதே நாட்டின் மந்திரி ஒருவர் தாறு மாறாக அடித்தது என்பது ஒரு சரித்திரம். கிறிஸ் நோணிஸின் குரல் சிறிலங்காவில் எங்குமே எடுபடவில்லை. ஆனால் அது உலக அரங்கில் நன்கு உணரப்பட்டது.

வடக்கு லண்டனில் குடியிருந்த கிறிஸ்நோணிஸுக்கு தெற்கு லண்டனில் குடியிருந்த சந்திக்கா அம்மையாரை சந்தித்து. தனது ஆதங்கத்தை கொட்ட அவ்வளவுநேரம் எடுக்கவில்லை. காய்கள் வெகு நேர்த்தியாகவும். நாசூக்காகவும் நகர்த்தப்பட்டன.

ஏற்கனவே சிறிலங்காவுக்கு தேன்நிலவுக்கு மற்றும் உல்லாச பிரயாணிகளாகச் சென்ற பலர் அரச கட்சியினரால் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது. நட்சத்திர விடுதிகளில் தாக்கப்பட்டது.

இவை சம்பந்தமாக செய்யப்பட்ட புகார்கள். அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரானது. போன்ற கடுப்பில் இருந்த. இங்கிலாந்து அரசுக்கு கிறிஸ்நோணிஸின் எதிர்ப்பும் ஒரு வரப்பிரசாதமானது.

கிறிஸ்நோணிஸின் பின்னணி. ஒரு அரச கட்சி உறுப்பினரால் சிறிலங்காவின் தெற்கில். உல்லாசவிடுதியில் கொலைசெய்யப்பட்ட இங்கிலாந்து பிரஜையின் உறவினர்களின் பணபலம்.

இங்கிலாந்து அரசின் வழிகாட்டல். சந்திரிக்கா அம்மையாரின் உள்ளக்கிடக்கை என அனைத்தும் ஒன்றாக. தெற்கு லண்டனில் உள்ள ஹொலிடே இன் ஹோட்டலில் ஒரு மாலைப்பொழுதில் கைகுலுக்கி்க் கொண்டன.

அதற்கு முன்னரே இந்தியா மற்றும் அமெரிக்காவின் நெறிப்படுத்தலில் இருந்த அம்மையாருக்கு கிறிஸ்நோணிஸ் மற்றும் இங்கிலாந்து அரசின் வழிகாட்டல் ஒரு தெம்பை கொடுத்தது.

இங்கு மிகமிக அருமையாக அம்மையார் அமெரிக்கா மற்றும் இந்தியாவை முன்னிலைப்படுத்தாமல் ஜேர்மன். இத்தாலி அரசுகளை இவர்களுக்கு கருவியாக பாவித்துக்கொண்டார். குறிப்பாக மகிந்த அரசின் மாவட்ட அமைப்பாளர்களை இந்த தூதுவராலயங்களுக்கூடாக கைக்குள் போட்டுக்கொண்டார்.

அந்த அரச அமைப்பாளர்களை கொண்டே அனைத்து காய்களும் நகர்த்தப்பட்டன.அதிக கல்வி அறிவில்லாத இந்த மாவட்ட அமைப்பாளர்கள் சிங்கப்பூர். பெங்கொக். மலேசியா செல்கின்றோம் எனக் கூறிக்கொண்டு கடந்த ஆறுமாதங்களாக இத்தாலிக்கும். ஜேர்மனிக்கும் பறந்து சந்திகரிக்கா. அமெரிக்கா. இந்தியா. இங்கிலாந்து வேலைத்திட்டங்களுக்கு துணைபோனார்கள். இன்னும் போகின்றார்கள்.

மகிந்த அரசுக்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை. தமிழ்நாட்டில் ஜெயலலிதா அம்மையார் இரவோடிரவாக மந்திரிகளை சுத்திகரிப்பதுபோல். திருவாளர் மகிந்த செயற்படுவாரானால் ஜனவரி 10 அவருக்கு புதுப்பொலிவாக இருக்கும்.


( ஸ்கொட்லாண்டிலிருந்து காத்தான்குடி கச்சிமுகம்மது ).

Read more...

Sunday, December 28, 2014

ஈரான் அரசும் மகிந்த அரசுக்கெதிராக வேலை செய்கின்றதா ? யஹியா வாஸித்-

ஈரான் அரசுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதிப்பதற்கு முன்னால். நமதுசிறிலங்கா அரசு கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்தே பெற்று வந்தது. திடீரென பொருளாதாரதடை வந்ததும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டது. இது உலகறிந்த விடயம்.

ஆனால் நாம் அறியாத விடயம். அந்த எண்ணெய்கள் கடனுக்கே வாங்கப்பட்டது. அந்த எண்ணெய்க்காக நமது நாடு பல றில்லியன் ரூபாக்களை ஈரானுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. அந்த பணத்தை அறவிடுவதற்காக இரானிய தூதுவரும். ஈரானிலிருந்து பல அதிகாரிகளும் மாதத்துக் கொருதடவை. இருதடவை என இங்கு வந்து அரசின் காலில் கிடையாய் கிடந்தார்கள்.

இறுதியில் அந்த முழுப்பணமும் எங்களுக்கு தேவையில்லை. அந்தப் பணத்திற்கு பதிலாக உங்கள் நாட்டில் உற்பத்தியாகும் வாசனைத்திரவியங்களான கிராம்பு. சாதிக்காய். கறுவா. ஏலம் மற்றும் தேயிலை. கைவினைப்பொருட்கள் நாட்டு மருந்துகளை தாருங்கள்.

அப்பொருட்களையும் உலக சந்தை விலைக்கே தாருங்கள் என ரொம்ப கீழே இறங்கிவந்து பெரும்தலைவர்களுடன் பேசி முடிவு கட்டப்பட்டது. அதற்காக பெரும் தொகை கமிஷனும் பேசி முடிக்கப்பட்டது. ஆம் அனைத்து பேச்சும் முடிந்ததும் மத்தியவங்கி ஆளுனரிடம் பணத்தை பெறுவதற்குரிய அனுமதியை பெற சென்றுள்ளனர் ஈரானிய அதிகாரிகள்.

சரி பத்திரங்களில் கையொப்பமிட்டு உங்கள் கணக்கை முடிக்கின்றேன். எனக்கு 25 வீதம் கமிஷன் தருவீர்களா என கேட்டுள்ளார் உரிய நபர். வந்த அதிகாரிகள் அப்படியே வேர்க்க விறுவிறுக்க ஓடிப்போய் ஈரானுக்கு விமானமேறியுள்ளனர். இது நடந்தது கடந்த ஜூன். ஜூலைகளில்.

அன்றிலிருந்து மகிந்த அரசுக்கு ஆப்புவைக்கும் வேலையை இவர்கள் இங்கிலாந்தின் மார்பள் ஆர்ச் பகுதியில் இருந்து ஆரம்பித்ததாக ஒரு செய்தி எமக்கு கசிந்துள்ளது. இந்த நிகழ்வுகளை அவர்கள் றெக்கார்ட் செய்துள்ளதாகவும் இந்த பதிவுகளும் கடைசி ஐந்து நாட்களில் மேடைகளில் ஒலிபரப்பாகும் எனவும் பட்சிகள் பேசுகின்றன.

இங்கிலாந்தின் இந்த மார்பள் ஆர்ச் பகுதியென்பது உலக அரேபியக் கோடீஷ்வரர்கள் குடியிருக்கும் பகுதி. இங்குதான் நமது சந்திரிக்கா அம்மையாருக்கும் சொந்த வீடு உண்டு. இவையெல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த ஒரு சிறிலங்கா நபர் தற்போது இந்தியாவில் இருந்து காய் நகர்த்துவதாக அறிகின்றோம்.

Read more...

Saturday, December 27, 2014

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லையாம்; மைத்திரிபால அறிவிப்பு!

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் உருவாக்கும் புதிய அரசில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப் போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள்வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர். எனது புதிய அரசில் யுத்த வெற்றியை எதிர் கொண்ட தளபதிகளை மீள நாட்டிற்கு அழைத்து தேசிய பாதுகாப்புச் சபையை நான் பலப்படுத்துவேன்.

இந்த நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம். எனக்கு எதிராக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெலிகம பகுதியில் நேற்று இடம் பெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

Read more...

வவுனியா புதுக்குளத்தில் விபச்சாரம். அரசும், சமூகமும் வேடிக்கை.

வவுனியா நகரத்தில் இருந்து சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புதுக்குளம் கிராமம் சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுக்குளம் கிராமத்தில் சில பெண்கள் பல ஆண்களோடு தொடர்புகளை வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட பெண்களின் வீட்டுக்கு பல தரப்பட்ட ஆண்கள் மற்றும் போலீஸ்காரர்,சி.ஐ.டி யினர் வந்து போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இது தொடர்பாக கிராமத்தில் உள்ள சிலர் தரணிக்குளம் போலிஸில் முறையிட்ட போதிலும் அங்கு இந்த பேச்சுக்கள் எதுவும் எடுபடவில்லை. காரணம் அங்கு கடமையில் இருக்கின்ற சிலரும் இங்கு வருவதாக இருக்கின்ற நிலையில், அந்த ஊர் இளைஞர்களும் திசைமாறி போகின்றனர் என்று ஒரு முதியவர் விசனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண்களின் பெயர் விபரங்கள் கிடைத்துள்ள போதிலும் அவர்களது பிள்ளைகளின் எதிர் கால வாழ்க்கை கருதி பெயர்கள் வெளியிடப்படவில்லை.

Read more...

தேர்தல் பிரசாரத்தில் சிறார்கள்; தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும் கொடிகளைஅசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன.

சிறார்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை அரசு, சிறார்களின் உரிமைகளைக் காப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சேனக டி சில்வா தெரிவித்தார்.
இந்த சட்டவிதிமுறைகளுக்கு அமைய சிறார்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பெருமளவிலான சிறார்கள் பயன்படுத்தப்படுவதை ஊடகங்களில் காணமுடிவதாகவும் வழக்கறிஞர் சேனக டி சில்வா தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்களில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறார்கள் தொடர்பான புகார்களை ஆராய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரங்கள் உள்ளனவா என்று கேட்டபோது, 'ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பான சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இவ்வாறான சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ளதாக சேனக டி சில்வா கூறினார்.

Read more...

சந்திரிகா குமாரதுங்க சென்ற இடத்தின் மீது தாக்குதல்

இலங்கையில், பேருவளை பிரதேசத்தில் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னணி அரசியல்வாதியான ஹிருணிகா ஆகியோர் இரவு உணவுக்காக சென்ற இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள்கூறுகின்றன. மேல் மாகாணசபயின் உறுப்பினரான இப்திஹார் ஜாமீல் அவர்களின் வீட்டுக்கு இவர்கள் சென்றிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில்சுமார் 5 பேர் காயமடைந்த போதிலும், சந்திரிகா மற்றும் ஹிருணிகா ஆகியோருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இப்திஹார் ஜாமீல் கூறியுள்ளார்.

தனக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். அதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து குற்றஞ்சாட்டப்படும் தரப்பினர் மற்றும் போலிஸார் ஆகியோரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாக பலன் தரவில்லை

Read more...

ஈராக்கிற்கு திரும்பும் பிரிட்டிஷ் படைகள். By Mark Blackwood

ஒரு தசாப்தத்திற்கும் மேலான போரினைத்தொடர்ந்து, ஈராக்கிலிருந்து முன்பு விலகியதற்கு மாறாக பிரிட்டனின் ஆயுதப்படைகள் மத்திய கிழக்கை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன.

செப்டம்பரில், ஈராக்கில் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக (ISIL அல்லது ISIS) அமெரிக்கா-தலைமையிலான போரில் இணைந்து கொள்வதற்கான அதிக அளவிலான கட்சி கடந்து பாராளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு பின்னர், ரோயல் விமானப்படை (RAF) வான் தாக்குதல்களை நடத்திவருகிறது, மேலும் ஈராக் குர்திஸ்தானை சேர்ந்த பிரிட்டிஷ் படைகள் பெஷ்மெர்கா இராணுவப்படைக்கு பயிற்சியளித்து வருகிறது.

ஞாயிறன்று, ஈராக்கிற்கு நிறைய படைகள் திருப்பி அனுப்பப்படும் என்று கன்சர்வேடிவ் / லிபரல்-ஜனநாயக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. பஹ்ரைனில் புதிய பிரிட்டிஷ் கடற்படை தளம் ஒன்று கட்டப்படும் என்ற இந்த மாதத்தின் ஆரம்ப அறிவிப்பினை இது பின் தொடர்ந்தது.

இந்த இராணுவ கட்டியெழுப்பலை – மத்திய கிழக்கு மற்றும் யூரேசிய பகுதி முழுவதும் உலகின் பிரதான சக்திகள் தங்களது நலன்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக தீவிரமாகிவரும் ஏகாதிபத்திய போட்டிகள் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆதிக்கத்திற்கான நெருக்கடியில் ஈராக் மறுபடியும் மையப்புள்ளியாகிக் கொண்டிருக்கிறது.

நவம்பர் மாதம், ஈராக் மற்றும் சிரிய போரின் விரைவான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க பிரசன்னத்தின் அளவினை இருமடங்காக அதிகரித்து, அமெரிக்கா மேலும் 1,500 பேர் கொண்ட படை ஒன்றை ஈராக்கிற்கு அனுப்பும் என்று ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார், பிரிட்டனின் ஈராக் படைகள் வெளிப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஃப்ராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், பாதுகாப்புத்துறை அதிகாரி ஊர்சுலா வொன் டெர் லையன் மற்றும் உள்துறை அமைச்சர் தோமஸ் டி மைஸியர் ஆகியோர் ஈராக்கில் ஜேர்மன் இராணுவ பயன்பாட்டினை குறிப்பிடும் வகையில் நீட்டிப்பதை அனுமதிக்கும் சட்ட வரைவினை முன்வைப்பதாக ஜேர்மன் பரபரப்பு ஏடான Bild அறிவித்தது. ஈராக்கின் குர்திஷ் பகுதியில் 100-க்கும் அதிகமான ஆயுதமேந்திய ஜேர்மன் படைகளை நிறுவுவதை இச்சட்ட வரைவு அனுமதிப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.

வாஷிங்டனின் உள்ளார்ந்த செயல்பாட்டுத்தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஈராக்கிற்கு எத்தனை பிரிட்டிஷ் படைகள் திருப்பி அனுப்பப்படும் மற்றும் அவை எங்கு நிறுவப்படும் என்பது கேபினெட் அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் உளவுத்துறை தலைவர்கள் ஆகியோரைக்கொண்ட இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் தீர்மானிக்கப்பட இருக்கிறது. நான்கு முகாம்களில் 200 பயிற்சியாளர்கள், ”படை பாதுகாப்பு” பாராசூட் நபர்கள் மற்றும் ரோயல் ஆயுதமேந்திய துணை இராணுவப் பணியாளர்கள் ஆகியோர் இவ்வாண்டின் ISIS தாக்குதல்களில் சேதமடைந்துபோயுள்ள, ஈராக் தேசிய இராணுவத்திற்கு பயிற்சியளிக்கவும், மறுகட்டமைப்பு செய்ய உதவுவதிலும் பணியமர்த்தப்படுவார்கள்.

போரிடுவதற்கு தயார் நிலையிலுள்ள இராணுவ வீரர்களைக்கொண்ட பகுதியும் இப்படையில் உள்ளடங்குமென்றார் பாதுகாப்புச்செயலாளர் மைக்கல் ஃபால்லோன். Telegraph உடன் பேசுகையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாகவும், ஃபிரான்ஸைவிட ஐந்து மடங்கு அளவிற்கும் RAF விமானம் அதிக எண்ணிக்கையிலான பணிகளில் பறந்திருக்கிறது,” என ஃபால்லோன் செருக்குடன் பேசினார்.

”தற்போது வான் தாக்குதல்களைத்தவிர, பயிற்சியிலும் எங்களது பங்களிப்பு அதிகம் இருக்கும்” குறிப்பாக, கார் மற்றும் ட்ரக் குண்டுகள் மற்றும் சாலையோர சாதனங்கள், மற்றும் அடிப்படையான இராணுவ வீரர்களின் திறமைகள் ஆகியவை சம்மந்தப்பட்டது என்பதே இதன் அர்த்தம்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”அந்த உபகரணங்களுடன் அவர்களுக்கு உதவவும், அமெரிக்கர்கள் நிர்மானித்துவருகின்ற நான்கு முக்கிய பயிற்சி மையங்களில் அவர்களுடன் பயிற்சிகளை நடத்தவும் விரும்புகிறோம் ” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட சீர்குலைந்து போயிருக்கும், ”அவர்களை ஜோர்டான் அல்லது சௌதியை நோக்கிய எல்லைப் பகுதியிலிருந்து நீக்கும்” சுதந்திர சிரிய இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதில் தலையிட இங்கிலாந்தும் எதிர்பார்க்கிறது, நாங்கள் அதனையும் தற்சமயம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்றார் ஃபால்லோன்.

ஈராக்கின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தவறான முறையில் நடத்தியது மற்றும் சித்ரவதைகளுக்காக பிரிட்டிஷ் இராணுவத்தினரை குற்றம்சாட்டும் நூற்றுக்கணக்கான புதிய வழக்குகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆலோசித்து வரும் செய்திகளுக்கு மத்தியில் ஈராக்கிற்கான திருப்பம் வருகிறது. மேலும் 2004-ல் பிரிட்டிஷ் இராணுவம் பிடித்த ஈராக்கிய சிறைக்கைதிகளை தவறான முறையில் நடத்தியது மற்றும் இறப்பு குறித்த இந்த வார புதன் கிழமையன்றைய உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றின் பிரசுரங்கள் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.

பாரசீக வளைகுடாவில் பஹ்ரைனின் மின சல்மான் துறைமுகத்தில் 15 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவத்தளம் ஒன்றிற்கான புதிய திட்டங்களை பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டது. 2016 வாக்கில் இத்துறைமுகத்தின் தற்போதைய திறனை இச்செயல்பாடுகள் அதிக அளவில் நீட்டிக்கும், மேலும் ராயல் கடற்படைக்காக முன்னணி செலபாட்டுத்தளம் (FOB) ஒன்றின் நிரந்தர கட்டளைத் தளத்தை பாதுகாத்துக்கொள்ள இங்கிலாந்து அரசை அனுமதிக்கவும் செய்யும்.

மனித உரிமை மீறல்களை மறைத்துவிட்டு, இப்புதிய தளத்தினை பிரிட்டனிற்கான வெகுமதியாக பார்க்கும் பஹ்ரைனின் ஷியா பெரும்பான்மையின எதிர்ப்பாளர்கள் இச்செய்தியை வரவேற்றுள்ளனர். “புண்படுத்தும் ட்வீட்களை” வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வந்திருக்கும் பஹ்ரைன் மனித உரிமைகள் மையத்தின் தலைவரான நபீல் ரஜாப், “நாங்கள் பல வருடங்களாக போராடி வருகிறோம், மேலும் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்பொழுதும் அடக்குமுறை ஆட்சியின் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் அனைத்து சர்வாதிகாரிகளின் கருத்தையும் எடுத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

துறைமுகத் தள விரிவாக்கத்திற்கு பஹ்ரினிய அதிகாரிகள் நிதியுதவியளிப்பார்கள் என்ற போதிலும், இது 1971–ல் அப்பகுதியிலிருந்து இங்கிலாந்து முறைப்படி விலகியதிலிருந்து, மத்திய கிழக்கில் பிரிட்டன் முதல் நிரந்தர இராணுவத் தளத்தை உருவாக்கும். இது 1956 சூயஸ் கால்வாய் நெருக்கடியில் அமெரிக்க அழுத்தங்களால் பிரிட்டன் அவமானகரமாக பின்வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட பின் நீண்டகால விளைவாக உள்ளது.

”சூயஸின் கிழக்கு” (East of Suez) என்ற சொற்றொடர் பிரிட்டிஷ் அரசியல் மற்றும் இராணுவ உரையாடலில் ஐரோப்பிய அரங்கங்களுக்கு அப்பால் ஏகாதிபத்திய நலன்களைக் குறிக்கும் ஒரு வெளிப்பாடாகும். இதேபோல, இப்பகுதிக்கான ஒரு நிரந்தரமான திருப்பம், பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியக் கொள்கையின் மறுமலர்ச்சியை முக்கியத்துவப்படுத்துகிறது. ஃபால்லோன் 1971 விலகலை ”குறுகிய காலத்தியது” என்று விவரித்ததுடன், அமெரிக்காவிற்கு இது மிக முக்கியமான பகுதி. “அதில் நமக்கு வர்த்தக ரீதியான ஆர்வங்கள் மட்டுமல்ல அரசியல் ஆர்வமும் உண்டு” என்றார்.

வெளியுறவு செயலாளர் பிலிப் ஹேமண்ட் ஆசிய-பசிபிக் பகுதி நோக்கிய அமெரிக்க “முன்னெடுப்பின்” காரணமாக, மத்திய கிழக்கு அரசுகளை “ஸ்திரமாக்க” உதவுவதில் பிரிட்டன் ஒரு முக்கிய பங்காற்ற வேண்டி இருக்கும்” என்று அறிவித்தார். பிரதமர் டேவிட் கேமரூன் ”உலகப் பொருளாதாரம் கடினமாவதிலிருந்து வர்த்தகத்தை காப்பாற்றி வைத்திருக்கும் தமனிகள்” என்று ராயல் கடற்படையைக் குறிப்பிட்டார்.

பாரசீக வளைகுடாவில் ராயல் கடற்படை வகை 45 இராணுவக் கப்பல்கள், சிறுகப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிகள் ஆகியவை அடங்கிய புதிய வசதிகள், பிரிட்டிஷ் இராணுவ செயல்பாடுகளை பலப்படுத்தும், அதில் இரு புதிய தலைமை தாங்கிகளான HMS Queen Elizabeth மற்றும் HMS Prince of Wales ஆகியவையும் உள்ளடங்கும். இவை இரண்டும் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளன மேலும் இவை “ராயல் கடற்படைக்காக கட்டப்பட்டவைகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த போர்க்கப்பல்கள்” என வர்ணிக்கப்படுகின்றன.

”போர்க்களத்திற்குள் கொண்டு வருவதற்கான பெரிய அளவிலான விமான ஆதரவும் இதற்கு கிடைக்கும் என்றும் அர்த்தம்”, என்றார் கிழக்கு மற்றும் வளைகுடா இராணுவ பகுப்பாய்வு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான ரியாட் காவ்ஜி. ”பெரும் விமான ஆதரவு” என்று காவ்ஜி விவரிப்பது, துரிதமாக பறக்கும் Lockheed Martin F35 மற்றும் செங்குத்தாக இறங்கும் இரகசிய ஜெட் விமானம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் ஆதரவே. பிரிட்டிஷ் அரசு இதுபோன்று 40 நாசகரமான எந்திரங்களை நிர்மாணித்திருப்பதுடன், ”உலகின் மிகவும் மேம்பட்ட இரகசிய போர்விமான வெடிதாங்கி” என்று அதனை விவரிக்கவும் செய்கிறது.

பிரிட்டிஷ் இராணுவப் படைத்தலைவரான ஜெனரல் சர் நிகோலஸ் ஹஃப்டன், “இதுதான் அதன் மூலோபாய முக்கியத்துவம். இதனை ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு நோக்கத்திற்காக ஒரு பகுதியில் தற்காலிகமான பயன்பாடு என்று மட்டுமே பார்ப்பதை விட, பிரிட்டன் இப்பகுதியின் ஸ்திரத்தன்மை நலன்களை அனுபவிக்கிறது என்ற உண்மையின் பெரும் அடையாளமாகவும் இருக்கிறது” என்றார்.

ராயல் ஐக்கிய சேவைகள் நிறுவனம் (RUSI) 2013-ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பிரிட்டனின் ஏகாதிபத்திய நோக்கங்களின் எதிர்காலப் போக்கினை இராணுவ ஆலோசனைக்குழு கோடிட்டு காட்டியது. ”கிழக்கு சூயிஸுக்கான திருப்பம்? வளைகுடாவில் இங்கிலாந்து இராணுவப்பயன்பாடு” என்று தலைப்பிடப்பட்ட அவ்வறிக்கை, ”பஹ்ரைனில் ராயல் கடற்படையின் பரபரப்பான அக்கறை” பற்றி விவாதிக்கிறது.

துபாயில் Al-Minhad விமானத் தளத்தை, “2014ல் ஆப்கானிஸ்தானில் இராணுவ குறைப்பிற்கான மையமாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் செயல்படுத்த தயாராக இருக்கும் சிலவற்றின் வெளிநாட்டுத் தளமாகவும்” பயன்படுத்த RAF அமைக்கப்பட்டது என்று தொடர்ந்து விவரிக்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது ”போர் நிலைமைகளின் மோசமான” சூழ்நிலைக்காக தங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்வதற்கான பிரிட்டிஷ் படைகளின் திறனை மோசமாக பாதித்திருக்கிறது, இதனை எதிர்கொள்வதற்காக இந்த விமானத்தளம் தொடர்ந்து செயல்பட்டு வரும்.

”சகித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வாஷிங்டனுக்கு வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியும் இதனை, அமெரிக்கா-இங்கிலாந்தின் சிறப்பு உறவின் – ஒருவேளை இதுமாறினால் இங்கிலாந்துடனான சிறப்பு உறவின் ஒரு புதிய புவி-அரசியல் வெளிப்பாடாக பார்க்க முடியும்” என்று வாதிடுவதன் மூலம், பிரிட்டனின் வளைகுடா பகுதி நோக்கிய திரும்பலின் சாத்தியக்கூறுகளை இந்த RUSI ஆவணம் மேற்கோள்காட்டியது.

வளைகுடா நோக்கிய திருப்பம், ”அநேகமாக இந்தியப்பெருங்கடல் மற்றும் துணைக்கண்டத்தை இணைக்கும் பகுதியில் கூடுதல் செயல்பாடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்” என்று அறிவித்து, இது பிரிட்டிஷ் இராணுவத்தின் கூடுதல் விரிவாக்கத்திற்கான முன்னோடியாக இருக்குமென்றும் அது கணிக்கிறது.

Read more...

Friday, December 26, 2014

வவுனியா அருந்ததி மண்டபத்தில் ஜேவிபி!

மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியினர் நாளை வவுனியா அருந்ததி மண்டபத்தில் மக்கள் முன் பேசவுள்ளனர். நாளை காலை (27.12.2014) முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ராமலிங்கம் சந்திரசேகரனும் விசேட உரை ஆற்றவுள்ளனர் என ஜேவிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இவர்கள் நாளை மறுதினம் கிளிநொச்சி நகர மத்தியில் பெரும் மக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் அறியக்கிடைக்கின்றது.

Read more...

போலி ஆவணத்துடன் மஹிந்த பிரச்சாரம்; 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம்: சரத் என் சில்வா

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக போலியான ஆவணமொன்றை அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் தயாரித்து மஹிந்த ராஜபக்ஷ தனது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றமை பாரிய குற்றச்செயலாகும். இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் இதனைக் காரணங்காட்டி அவரை பதவி நீக்கம்செய்யலாம் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்துள்ள சரத் என்.சில்வா, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான போலியான ஆவணமொன்றை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது 20 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்ககூடிய குற்றச்செயல்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரசாரம் செய்துவரும் ஆவணம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் சட்டங்களின் கீழும் இது ஒரு குற்றமாகும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான போலியான ஆவணங்களை ஊடகங்களில் வெளியிடுவது குற்றம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவுசெய்யப்பட்டாலும் உயர் நீதிமன்றம் மூலமாக அவர் மீது இதற்காக குற்றம்சாட்டலாம் என்று சரத் என் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

வவுனியாவில் 20 குளங்கள் உடைப்பு! – 12 ஆயிரம் பேர் பாதிப்பு. மழையின் கோரத்தாண்டவம்

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக 21 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – கடந்த சில நாள்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக மூவாயிரத்து 74 குடும்பங்களைச் சேர்ந்தபன்னிரண்டாயிரத்து 243 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக 21 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – கடந்த சில நாள்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக மூவாயிரத்து 74 குடும்பங்களைச் சேர்ந்த பன்னிரண்டாயிரத்து 243 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இவர்களில் 763 குடும்பங்களைச் சோந்த இரண்டாயிரத்து 892 பேர் 21 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் 14 நலன்புரி நிலையமும் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 6 நலன்புரி நிலையமும் வவுனியா வடக்கில் ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதுவரை 20 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. அவற்றில் ஓமந்தை, நறுவெளிக்குளம், செட்டிகுளம், கந்தக்குளம் என்பன நேற்று உடைப்பெடுத்துள்ளதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த அனர்த்தங்கள் காரணமாக 21 வீடுகள் முழுமையாகவும் 207 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மல்வத்து ஓயா நீர் பெருக்கெடுத்தமையால் மீடியாபாம் கிராமம் நீரில் முழ்கியுள்ளது. இங்கு வசித்து வந்த மக்களின் வீடுகள் முழுமையாக நீரில் அகப்பட்டுக் கொண்டமையால் கொட்டும் மழைக்கு மத்தியில் காட்டுப் பகுதியில் தறப்பால் கொட்டகைக்குள் இவர்கள் அவலநிலையில் வசித்து வருகின்றனர்.

Read more...

மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இராணுவம்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளேஎன்று கூறியுள்ளனர். இது தொடர்பாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் அமைப்பின் சார்பிலான ஷான் வீரதுங்க அவர்களை கேட்டபோது, இப்படியான ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் திணைக்களத்தின் மூலம் அனுப்பப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்.

கடந்த சில வாரங்களாகவே இலங்கை இராணுவத்தினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதை தாங்கள் அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த கடிதங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் படங்களுடன், கடந்த பத்து வருடங்களாக செய்த சாதனைகள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவை தேர்தல் விதிகளுக்கு முரணானவை என்றார் அவர். அவை வெறுமனே வருடாந்தம் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அனுப்பப்படும் சாதாரண வாழ்த்து துண்டுப் பிரசுரங்கள் என்று இராணுவம் கூறுவதையும் அவர் நிராகரித்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் தாங்களும் பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் முறைப்பாடு செய்திருந்ததாகவும், அவரும் இவை வெறுமனே வாழ்த்துச் செய்திகள் அல்ல என்பதை புரிந்துகொண்டார் என்றும் குறிப்பிட்ட ஷான் வீரதுங்க, அந்த கடிதங்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்துமாறு தபால் மா அதிபருக்கு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

Read more...

எஞ்சிய நான்கே நான்கு புலிகளும் ராஜபக்சங்களின் சீலைக்குள்! பிரபாகரன் எஞ்சியிருந்தால் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருப்பார்!

இந்தநாட்டில் பயங்கரவாதம் நந்திக்கடலுடன் முடிவடைந்துள்ளதாகவும் அவற்றை முடிந்துக்கட்டிய நாங்கள் உயிருள்ளவரை அது மீள எழும்ப இடமளியோம் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிலியந்தலவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெவித்துள்ளதுடன் உலகிலே பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிந்த நாடென்ற சாதனையை தாம் நிலைநாட்டியபோதும், நான்கே நான்கு புலிகள் எஞ்சியுள்ளதாகவும் அந்த நால்வரும் ராஜபக்சக்களின் சீலைக்குள் ஒழிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கே.பி, கருணா, பிள்ளையான் மற்றும் எமில்காந்தன் என்கின்ற புலிகள் நால்வருமே அவ்வாறு எஞ்சியுள்ளனர் என்றும் தவறுதலாகவேனும் பிரபாகரன் எஞ்சியிருந்தால் அவர் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் இராணுவத் தளபதி அரசுடன் இணையப்போவதாக அரச சார்பு இணையங்கள் பொய்பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் இவ்வரசாங்கத்தால் வழங்கப்பட்ட அத்தனை சுகபோகங்களையும் துறந்து நாட்டு மக்களுக்காக இவ்வரசாங்கத்திற்கு எதிராக போர்கொடி தூக்கிய தான் அந்தக்காரியத்தை எட்டாமல் உறங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Read more...

இதொகா உறுப்பினர் இருவர் மைத்திரிக்கு ஆதரவு. மகிந்தவின் ராஜ தந்திரம் எங்கே? மார் தட்டும் எதிர்க்கட்சி

இலங்கையில் மலையகத்தின் முக்கிய கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த இரு முக்கிய உறுப்பினர்கள் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரான எம். உதயகுமார் மற்றும் நுவரெலிய பிரதேச சபை உறுப்பினரானநாகராஜா ஆகிய இருவருமே இவ்வாறு எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், இவர்கள் தமது கட்சியின் முடிவுக்கு எதிராக மைத்திர்பால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தூள்ளனர்.

Read more...

இலங்கையில் மழை, வெள்ளத்தால் பாரிய அழிவு: 80 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

இலங்கையில் நிலவும் கடுமையான காற்றுடன் கூடிய மழை மற்றும் வெள்ளம் காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் உள்ளடங்கலாக நாட்டின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடெங்கிலும் சுமார் ஆறரை லட்சம் பேர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. மோசமான காலநிலை காரணமாக பெரும்பாலான பிரதேசங்களில்இயல்புநிலை சீர்கெட்டு, இன்று நத்தார் கொண்டாட்டமும் சோபை இழந்து காணப்பட்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

புத்தளம்- மன்னார் நெடுஞ்சாலை முழுவதும் வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. பல பிரதேசங்களில் வீதிகள் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயுள்ளது. பல நெடுந்தூர ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 'குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், தெற்கில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான மழை பெய்கின்றது. ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் நீர்த்தேக்கங்களின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன' என்றார் பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி.

கண்டி, புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சம்பவம் வீதம் நான்கு பேர் மழைவெள்ளத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, தொடரும் மோசமான காலநிலை காரணமாக பதுளை, குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் பேரிடர் முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

இலங்கைத் தீவைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடல் பரப்பில் அச்சுறுத்தும் அளவுக்கு 80 கிலோமீட்டரையும் தாண்டிய வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சூழ்நிலையில் தொடரும் மழை, வெள்ளத்தால் தேர்தல் பிரச்சாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, December 25, 2014

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கொழும்பு கூட்டத்தில் உரை.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தன, கடந்த வாரம் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில் தேர்தல் வேலைத்திட்டத்தை விளக்கினார். சோசக அரசியல் குழு உறுப்பினரான விஜேசிறிவர்தன, கிட்டத்தட்ட நான்கு தசாப்த காலங்களாக தொழிலாள வர்க்கத்திற்காகப் போராடிய ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். கொழும்பில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் மஹரகமையில் டிசம்பர் 12 நடைபெற்ற கூட்டமானது, ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலுக்காக சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்இ ஏற்பாடு செய்துள்ள தொடர் கூட்டங்களில் முதலாவதாகும்.

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர் சுரங்க சிறிவர்தன, சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

“வளர்ச்சிகண்டு வரும் ஏகாதிபத்திய போர் ஆபத்து மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே” கட்சி இந்த தேர்தலில் தலையீடு செய்கின்றது என விஜேசிரிவர்தன கூட்டத்தில் தெரிவித்தார்.

சிரியா மற்றும் ஈராக்கில் இராணுவரீதியாக தலையிட ஜனாதிபதி பராக் ஒபாமாவைப் பலப்படுத்தும் அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் அண்மைய தீர்மானம் பற்றி பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

"இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்னர், ஒரு நாடு மீது உலகப் போருக்குத் தயாராவதாக வெளிப்படையாக ஒப்புகொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி விளக்கியது போல், இந்த தீர்மானமானது வெளிநாட்டில் போர்களை தொடங்க ஒபாமாவுக்கு கிடைத்துள்ள ஒரு திறந்த உரிமம் ஆகும். எங்கு எப்போது இராணுவ நடவடிக்கை வெடிக்கலாம் அல்லது எந்த வழிமுறை பயன்படுத்த முடியும் என்பது பற்றி எந்த வரம்பும் கிடையாது," என விஜேசிரிவர்தன எச்சரித்தார்.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஜி 20 உச்சிமாநாட்டில் ஒபாமாவின் உரையை பேச்சாளர் சுட்டிக் காட்டினார். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு கொள்கையின் ஒரு பகுதியாக ஐரோப்பாவில் வாஷிங்டனின் கொள்கை ரஷ்யாவை எதிர்கொள்வது, மற்றும் ஆசியாவில் அதன் கொள்கை, சீனாவைத் தனிமைப்படுத்தி சுற்றி வளைப்பதே என்று ஒபாமா தெளிவுபடுத்திவிட்டார்.

பெய்ஜிங்குடனான அதன் நெருக்கமான உறவுகளை முறித்துக்கொண்டு, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் "முன்னிலை" கொள்கையை ஆதரிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கத்தை நெருக்கும் அமெரிக்க முயற்சிகளே, இன்றைய கொழும்பு அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் உள்ள காரணிகளாகும் என்று விஜேசிரிவர்தன கூறினார். பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் இரண்டுடனும் நெருங்கிய உறவுகளை பராமரிக்கும் இராஜபக்ஷவின் முயற்சிகளை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியாது.

"இராஜபக்ஷவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இன்னும் நெருக்கமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தழுவிக்கொள்ளும் பொருட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார்,” என விஜேசிரிவர்தன தெரிவித்தார்.

"கிளின்டன் பூகோள முன்னெடுப்புக்கு ஆலோசகராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே சிறிசேனவை தேர்ந்தெடுக்கப்பட்டு ஊக்கப்படுத்தி வருகின்றார். இந்த அமைப்பானது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பாதையில் அடியெடுத்து வைக்காத நாடுகளில் திரைமறைவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பேர்போன, அமெரிக்காவைத் தளமாக்கக் கொண்ட கிளின்டன் மன்றத்துடன் இணைந்ததாகும்.

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் வெளியுறவு அமைச்சரான மங்கள சமரவீரவும் சிறிசேனவை வேட்பாளராக்குவதில் முக்கிய பங்காற்றினர். விக்கிரமசிங்க அவரது அமெரிக்க-சார்பு நிலைப்பாட்டால் பேர் போனவர் மற்றும் பெய்ஜிங்குடனான நெருக்கமான உறவுகள் குறித்து இராஜபக்ஷ அரசாங்கத்துடன் முரண்பாடுகொண்டு சமரவீர பிளவுபட்டார். "

"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு," சிறிசேன விடுக்கும் அழைப்புக்கள் குறித்து கருத்து தெரிவித்த சோசக வேட்பாளர், இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சி "அவரது சொந்த ஆளுமையின் விளைவு அல்ல, மாறாக, சர்வதேச நிதி மூலதனம் ஆணையிடும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த தேவையானதாகும். சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டால் இதே போன்று செயல்படுவதோடு அதே சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்வார், " என சோசக வேட்பாளர் விளக்கினார்.

"உலகப் போர் அபாயத்தை தடுக்கும் ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி தன் விதியை அதன் கைகளில் எடுக்காவிட்டால், நெருக்கடி நிறைந்த முதலாளித்துவம் இன்னுமொரு உலகப் பேரழிவுக்குள் தள்ள மனித இனத்தை அச்சுறுத்தும்" என்று அவர் எச்சரித்தார்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளர் தீபால் ஜயசேகரவும், இலங்கை தேர்தல் இடம்பெறும் சர்வதேச சூழ்நிலையை ஆய்வு செய்த்ததோடு, சோசக, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை அதன் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வைக்கும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஐவைஎஸ்எஸ்இ உறுப்பினர் சுரங்க சிறிவர்தன, இலங்கையிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆளும் தட்டுக்கள் வளர்ச்சி கண்டுவரும் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்ற நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் கடினமான சமூக நிலைமைகளை விரிவாக விளக்கினார்.

மஹரகம கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய, சோசக பொதுச் செயலாளர் விஜே டயஸ், இலங்கை தேர்தல் ஒரு தீர்க்கமான அரசியல் கட்டத்தில் இடம்பெறுகிறது என தெரிவித்தார்.

"தனது முழு பதவிக் காலமும் முடியும் வரை இருந்தால், அவரது சிக்கன திட்டத்துக்கு எதிரான மக்களின் சீற்றம் ஆழமடைந்து இன்னொரு முறை தேர்வாக மாட்டார் என்ற அஞ்சத்தினாலேயே, ஜனாதிபதி இராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்" என டயஸ் கூறினார்.

"சிறிசேனவை சோசக அம்பலப்படுத்துகின்றமை இராஜபக்ஷவுக்கே உதவும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்று கூட்டத்தில் பேச்சாளர் தெரிவித்தார். இது ஒரு புதிய கூற்று அல்ல, அது சிறிசேனவின் அரசியல் சுற்றுப்பாதையில் சோசகயை தள்ளுவதற்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

"தேசிய முதலாளித்துவத்திற்கு சரணடையாமல் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடுவது எப்படி என்று சோசகவுக்கு நன்கு தெரியும் என்பதை அது அதன் வரலாறு முழுவதும் நிரூபித்துள்ளது. இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து ஒத்துழைப்பவையாகவே உள்ளன. இராஜபக்ஷ கிராமத்தில் இருந்து வந்தாலும் கூட அவர் வேறுபட்டவர் அல்ல. ஒரு வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை வகித்திருந்தாலும் கூட, இந்திய முதலாளித்துவ வர்க்கம், அதன் ஏகாதிபத்திய எஜமானர்களை எதிர்த்துப் போராட இயல்பாகவே இலாயக்கற்றது என்பதை நிரூபித்ததோடு பிரிட்டனின் 1947ல் இனவாத வழியில் இந்தியவை பிளவுபடுத்தியதற்கு சரணடைந்தது."

போர் அச்சுறுத்தல் அதிகரிப்பது பற்றி எச்சரிக்கை விடுக்கும் ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே என்று டயஸ் சுட்டிக்காட்டினார். " உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் மற்றொரு ஏகாதிபத்திய மோதலுக்குள் இழுத்துத் தள்ள முயற்சிக்கும் ஏனைய கட்சிகள் இந்த ஆபத்துக்களை வேண்டுமென்றே மூடி மறைக்கின்றன."

“இலங்கை வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் விடுக்கும் கட்டளையை சிறிசேன எதிர்க்கவே இல்லை. இந்த வெட்டுக்கள் சமூக திட்டங்கள் மற்றும் பொது நல சேவைகளை வெட்டிக் குறைக்க வழிவகுக்கும்” என்று டயஸ் கூறினார். “ஜனவரி 8 எவர் ஜனாதிபதியானாலும், தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் ஆளும் வர்க்கத்தின் மோசமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரும்," என்று பேச்சாளர் எச்சரித்தார்.

சிறிசேன வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு ஒரு புதிய அரசியலமைப்புக்கு வழிவகுக்கும் என்ற எதிர்க் கட்சிகளின் கூற்றுக்கள் போலியானவை என்று டயஸ் விளக்கினார். "இது யுத்தம் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக எதிர்-புரட்சி போன்ற உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்கான முயற்சி ஆகும்" என்று அவர் கூறினார். "சாதாரண மக்களின் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளைக் கூட பறிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது எந்த நம்பிக்கையும் வைக்கக் கூடாது...

"அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் நிர்ணயசபை மூலம் ஒரு புதிய அரசியலமைப்பு வரையப்படவேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. முழு முதலாளித்துவ அமைப்பு முறையையும் தூக்கியெறிவதற்கான ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான கட்சியின் போராட்டத்தின் பாகமாகவே நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்," என டயஸ் தெரிவித்தார்.

Read more...

மைத்ரிபால சிறிசேனாவின் மட்டக்களப்பு அலுவலகம் தீக்கிரை

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகமொன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளியிலுள்ள அலுவலகம் மீதான இந்த தாக்குதலை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களேநடத்தியதாக பொது எதிரணி குற்றம் சாட்டுகின்றது. அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்கள் அலுவலக உடமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதோடு தீ வைத்தும் எரித்துள்ளனர்.

மூன்று வாகனங்கில் வந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தி விட்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அலுவலகத்தில் அவ்வேளை தங்கியிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் வாகனங்களில் வந்தவர்களாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தங்களிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக குறித்த கட்சியுடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தரப்பு கருத்தைப்பெற முயன்றபோதிலும் உடனடியாக தொடர்புகள் கிடைக்கவில்லை. தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்களில் இருவர் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள் என்றும் அவர்களால் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி பிபிசி

Read more...

EPRLF பத்மநாபா அணி மைத்திரிக்கு ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது நிலைப்பாடு.

முதலாவதாக எதிர்வரும்வரும் தேர்தலில் மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பிரயோகிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறோம் .
1995 இல் இந்தநாட்டில் சமஷ்டி முறையிலான தீர்வைப்பற்றி சிங்கள மக்கள் மத்தியில் பேச முடிந்தது. இன்று துரதிஷ்டவசமாக இனப்பிரச்சனை நாட்டின் பிரதான கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களில் இல்லாமல்போய் விட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், சகல இன மத சமூகங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் உருவாக்குதல், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாண சபைகளுக்கு 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது முழுமைப்படுத்தப்படுத்தலுடன், அரசியல் அமைப்பின் 18வது திருத்தம் நீக்கப்பட்டு ரத்துச்செய்யப்பட்ட 17வது திருத்தத்தை மீளக் கொண்டு வருதல் மூலம் சுதந்திரமான பொலிஸ்சேவை, நீதிச்சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என நாம் உணர்கிறோம்.
ஊழலற்ற பாரபட்சமில்லாத மக்களுக்கு நெருக்கமான நிர்வாகம் நாட்டின் எல்லா மட்டங்களிலும் நிலவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

மேற்படி எதிர்பார்ப்புக்களுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதற்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
24-12-2014


Read more...

Wednesday, December 24, 2014

அநுராதபுரத்தில் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட 15 பேர் மைத்திரிக்கு ஆதரவு

வட மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பி.பி.திஸாநாயக்க உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் 13 பேர் இன்று (24) திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் அநுராதபுரம் மாவட்டஜயஅபிமானி அமைப்பின் தலைவர் ஆர்.பி.ஞானதிலக மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் சந்திரசிறி திஸாநாயக்க ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் கல்வி சேவை அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

Read more...

ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல" : ஹிஸ்புல்லா

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அக்கட்சிக்குள் முரண்பாடு தோன்றியுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் எடுத்த முடிவு கட்சியின் ஒட்டுமொத்த முடிவு அல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் துணை அமைச்சருமான எம. எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடன் இடம் பெற்றிருந்த சந்திப்புகளில் கட்சியினால்முன் வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான பதில்கள் கிடைத்துள்ள நிலையில், தான் உட்பட ஒரு பகுதியினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கே ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன் வைத்திருந்த முதலாவது கோரிக்கையின் பேரிலே கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எஸ். எச். அமீர் அலி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சில நாட்களுக்கு முன்னர் நியமனம் பெற்றிருந்தார் என்றும் சுட்டிக்காட்டிய அவர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பது என்ற அவரது நிலைப்பாடு நியாயமானது அல்ல என்றார்.

இத்தகைய தீர்மானத்தை எடுப்பது என்றால் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிய அவர் துறந்திருக்க வேண்டும் என்றும் ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த சந்தர்ப்பத்தில் சமூகம் தொடர்பான பல்வேறு பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அவர் கூறுகிறார். அதில் மிகவும் முக்கியமான கோரிக்கைதான் அமீர் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படப் வேண்டுமென்பதும் அதனடிப்படையில் அது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் திடீரென பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை ரிஷாத் பதியுதீன் அறிவித்தார் என ஹிஸ்புல்லா கூறுகிறார். கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது அவருடன் செயற்படும் எந்த தலைவர்களுடனோ எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றதாக நாங்கள் அறியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

தனது நிலைப்பாட்டுக்கு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களில் ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டர்.

Read more...

புதிய போர்க்குற்ற விசாரணை: தமிழர்களின் ஓட்டுக்களை கவர வாக்குறுதிகளை வாரி வழங்கும் ராஜபக்ச

இலங்கையில் புதிய போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று ஆளும் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி பதவிக்கு வரும் ஜனவரி மாதம் 8-ம்தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொதுவேட்பாளராக போட்டியிடப்போவதாக ராஜபக்ச அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மைத்ரிபாலா சிறீசேனா (63) அறிவித்தார். இது ஆளும் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 4 மந்திரிகளை தனது மந்திரிசபையில் இருந்து மகிந்த ராஜபக்ச நீக்கினார்.

பின்னர், நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக இருந்துவந்த ரிஷத் பதியுதீன், அவர் சார்ந்த அனைத்து இலங்கை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான அமிர் அலி ஆகியோரும் மைத்ரிபாலா சிறீசேனாவை ஆதரித்து பிரசாரம் செய்ய களமிறங்குகின்றனர். சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது.

மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு ஆதரவு அதிகரித்தவண்ணம் உள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ள ராஜபக்ச தமிழர்களின் வாக்குகளைப் பெற புதிய வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்று குவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஒரு புதிய வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்படும் என்று ராஜபக்ச தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது எந்த உரிமைகளாவது மீறப்பட்டிருந்தால் அதுகுறித்த வெளிப்படையான உள்நாட்டு நீதித்துறை அமைப்பு மூலம் விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்ச, இதற்கு முன்பு தான் உத்தரவிட்ட விசாரணையில் இருந்து இது எந்த மாதிரி வேறுபட்டது என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.

Read more...

பகிரங்க விவாதத்திற்கு வேட்பாளர்களான மஹிந்தவும் மைத்திரியும் வரவேண்டும் : சட்டத்தரணிகள் சங்கம்

ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளான மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரை ஜன­வரி 2 ஆம் திக­திக்கும் 5ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட தின­மொன்றில் பகி­ரங்க விவா­தத்தில் பங்­கேற்­கு­மாறு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அழைப்பு விடுத்­துள்­ளது.

சட்­டத்தின் ஆட்சிஇ சுதந்­தி­ர­மான நீதித்­துறை, நல்­லாட்சிஇ சட்டம் ஒழுங்கை உறு­திப்­ப­டுத்தல், ஊழல் ஒழிப்பு ஆகிய ஐந்து பிர­தான விடயங்­களின் கீழ் 33 வினாக்­கொத்­தொன்றும் நேற்று முன்­தினம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள அழைப்­பி­தல்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தாக அச்­சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அச்­சங்­கத்தின் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இவ்­ஊடக­வி­ய­லாளர் சந்­திப்பில் சங்­கத்தின் பிரதித் தலைவர் பிர­சன்ன ஜய­ரத்னஇ செய­லாளர் அஜித்­பத்­தி­ரண ஆகியோர் உட்­பட முக்­கிய உறுப்­பி­னர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இங்கு சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­னதும் ஜன­நா­ய­க­மான­து­மான தேர்­த­லொன்று நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் எமது சங்கம் ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்து அதற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

கடந்த சனிக்­கி­ழமை எமது சங்­கத்தின் கூட்டம் இடம்­பெற்ற போது ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் விவா­த­மொன்றை நடத்­த­வேண்டும் என்ற கோரிக்­கை­யொன்று முன்­வைக்­கப்­பட்டு ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில் நாம் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான வேட்­பா­ளர்­க­ளான மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும்இ மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோருக்கு பகி­ரங்­க­மான விவா­த­மொன்றில் பங்­கேற்கு­மாறு அழைப்பு விடுத்­துள்ளோம்.

அத்­துடன் அவர்கள் இவ்­வ­ழைப்­பி­தலை ஏற்­றுக்­கொண்டு அவ்­வி­வா­தத்தில் பங்­கேற்­பார்கள் என்ற எதிர்­பார்ப்பு எமக்­குள்­ளது. மேலும் சர்­வ­தேச நாடு­களில் இவ்­வா­றான விவா­தங்கள் இடம்­பெ­று­கின்ற போதும் இலங்கை வர­லாற்றில் இடம்­பெறும் முத­லா­வது சந்­தர்ப்­ப­மாக அமையும்.

இந்த விவா­தத்­தினை நெறிப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக கட்­சி­பே­த­மற்றஇ அர­சியல் சார்­பற்ற மூன்று புத்­தி­ஜீ­விகள் இருப்­பார்கள் என்­ப­துடன்இ குறித்த விவாதம் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் கேட்போர் கூடத்தில் நடத்­து­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­டத்தின் ஆட்சிஇ சுதந்­தி­ர­மான நீதித்­துறைஇ நல்­லாட்சிஇ சட்டம் ஒழுங்கை உறு­திப்­ப­டுத்தல்இ ஊழல் ஒழிப்பு ஆகிய ஐந்து பிர­தான விடயங்­களின் கீழ் 33 வினாக்­கொத்­தொன்று அவர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான பதில்­களை வேட்­பா­ளர்கள் இரு­வரும் எமது சங்­கத்­திற்கு வழங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கின்றோம். அப்­ப­தில்கள் அனைத்தும் மக்கள் மயப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

அத்­துடன் ஒவ்­வொரு வேட்­பா­ள­ருக்கும் ஐம்­பது அழைப்­பி­தழ்கள் வழங்கத் தீர்­மா­னித்துள்­ள­துடன் இலத்­தி­ர­னியல் ஊடகங்கள் இந்த விவா­தத்தை நேர­டி­யாக ஒளிப­ரப்புச் செய்­வ­தற்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு ஏனைய ஊட­கங்களும் பதிவு செய்துகொள்ளமுடியும்.

இவ்வாறான விவாதங்கள் எந்த வொரு அரசியல் நோக்கத்தினை கருத்திற்கொண் டும் நாம் மேற்கொள்ளவில்லை. மாறாக வேட்பாளர்கள் தொடர்பான தெளி
வான நிலைப்பாட்டை மக்கள் எடுப் பதற்கு உதவியாக இருக்கும் என்ற அடிப் படையிலேயே இச்செயற்பாட்டை முன் னெடுக்கின்றோம். அதேநேரம் நாட்டின் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்றார்.

Read more...

அமெரிக்க-கியூப நல்லிணக்கம்: வரலாற்று படிப்பினைகள். Bill Van Auken and David North

அமெரிக்க-கியூப உறவுகளை "சீரமைக்க" பராக் ஒபாமா மற்றும் ராவுல் காஸ்டிரோவினால் புதனன்று ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்களாலும், அதைப் போலவே பிரதான பெருநிறுவனங்களாலும் ஒரு திருப்புமுனையாக வரவேற்கப்பட்டுள்ளன.

பிரேசிலிய ஜனாதிபதி தில்மா ரௌசெஃப் அமெரிக்க-கியூப தூதரக உறவுகள் மீண்டும் திறந்துவிடுவதற்கும் மற்றும் அத்தீவில் அமெரிக்க மூலதனம் பெரிதும் ஊடுருவுவதை சுலபமாக்குவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை "நாகரீகத்தின் மாற்றமாக" அறிவித்தார். வெனிசூலா ஜனாதிபதி நிக்கோலா மடூரோ, இவரது அரசாங்கம் வெகு சமீபத்தில்தான் ஒரு புதிய சுற்று அமெரிக்க தடைகளால் காயப்பட்டுள்ள நிலையில், அவர் அறிவித்தார், "நாம் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சைகையை, ஒரு தைரியமான சைகையை, வரலாற்றுரீதியில் அவசியமான சைகையை (gesture) அங்கீகரிக்க வேண்டியவர்களாக உள்ளோம்."

இதற்கிடையே, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் புதனன்று அறிவித்தது, "ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து வேளாண்துறை வியாபார ஜாம்பவான் கார்ஜில் இன்க் வரையில், மரச்சாமான்கள் விற்பனை நிறுவனம் ஈதன் ஆலென் இன்டீரியர்ஸ் இன்க் வரையில் அமெரிக்க நிறுவனங்களும், கியூபாவுடன் தூதரக உறவுகளை மீளமைக்கும் மற்றும் 54 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் தடைகளை தளர்த்தத் தொடங்கும் அதன் நகர்வுகளையும், வெள்ளை மாளிகை புதனன்று அறிவித்திருப்பதை வரவேற்றன."

ஹவானாவும் வாஷிங்டனும் உடன்பட்டுள்ள நடவடிக்கைகள் அமெக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசமான ஒரு புதிய காலகட்டத்தை தொடங்கி வைக்குமென்ற நம்பிக்கையை இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ தலைவர்கள் உறுதியுடன் வெளிப்படுத்திய அதேவேளையில், அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்களோ, ஹவானா அரசாங்கத்தால் மலிவு-கூலி கியூப தொழிலாளர்கள் வழங்கப்பட்டு, காவல் காக்கப்படுவதிலிருந்து பெரும் இலாபங்களை அறுவடை செய்ய இருக்கும் வாய்ப்பின் மீது வாயில் எச்சில் ஊற நின்று கொண்டிருக்கின்றன.

கியூப சந்தையை அணுகுவதற்கு, வர்த்தக சபை மற்றும் அமெரிக்க உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பிலிருந்து வந்த முறையீடுகள், ஒபாமாவின் முடிவில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கியூப புரட்சியால் கொண்டு வரப்பட்ட தீவிர சீர்திருத்தங்களில் எஞ்சியிருப்பதைக் கட்டவிழ்த்துவிட, பொருளாதாரத் தடைகளை விட அமெரிக்க டாலர்களை வெள்ளமென பாரியளவில் உட்புகுத்துவது மிக அதிகமாகவே வேலை செய்யும், அதேவேளையில் 1959க்கு முன்னர் மேலோங்கி இருந்த ஒரு வகைப்பட்ட நவகாலனித்துவ உறவுகளை மீட்டமைத்து, ஹவானாவில் இன்னும் வளைந்து கொடுக்கின்ற ஓர் ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வரவும் உதவும்.

அதன் பங்கிற்கு காஸ்ட்ரோ ஆட்சியோ, கியூப தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து முதலாளித்துவ அபிவிருத்தி மூலமாக ஆளும் அடுக்கின் தனிச்சலுகைகளை பேணிக் கொண்டே, அதன் ஆட்சியை அழியாமல் காப்பாற்றுவதற்கும், சீனாவைப் போன்றவொரு வழியை பின்தொடர்வதற்கும், அதன் நீண்டகால ஏகாதிபத்திய விரோதியை நோக்கி எடுக்கப்பட்ட திருப்பத்தை ஒரு வழிவகையாக பார்க்கிறது.

அமெரிக்க-கியூப நல்லிணக்கத்தின் வரலாற்று குணாம்சம் குறித்த ஊடகங்களின் அனைத்து பரவசங்களுக்கு இடையே, கியூப ஆட்சியின் மற்றும் அதை அதிகாரத்தில் அமர்த்திய புரட்சியின் இயல்பைக் குறித்து இந்த மாற்றம் எதை வெளிப்படுத்துகிறது என்பதன் மீது அங்கே குறிப்பிடத்தக்க எந்த பரிசீலனையும் இருக்கவில்லை. வியாழனன்று அதன் பலமான தலையங்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ் எழுதியதைப் போல, கியூபாவுக்கு ஒரு புதிய "மாற்றம் மிகுந்த சகாப்தம்" தொடங்குகிறது என்பதுடன், தெளிவாக ஒரு இருப்புநிலை அறிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது, உலக தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் அதன் புரட்சிகர தலைமைக்கும் அதி முக்கிய கேள்வியாகும். தொழிலாள வர்க்கம், குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கம், காஸ்ட்ரோயிசத்தின் இயல்பு பற்றிய குழப்பத்தில் ஒரு பெரும் விலை கொடுத்தது, அவற்றில் பெரும்பாலானவை நான்காம் அகிலத்திற்குள் எழுந்த ஒரு திருத்தல்வாத போக்கான பப்லோவாதத்தால் தூண்டிவிடப்பட்டதாகும்.

இந்த பப்லோவாத போக்கு, இலத்தீன் அமெரிக்காவில் இடது தேசியவாதிகளுடனும், ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் ஏனைய குட்டி-முதலாளித்துவ தீவிரப்போக்கினரோடும் சேர்ந்து கொண்டு, ஒரு தேசியவாத கெரில்லா இயக்கத்தின் தலைவராக பிடல் காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்திருப்பது சோசலிசத்திற்கு ஒரு புதிய பாதையை, அதாவது புரட்சிகர மார்க்சிச கட்சிகளைக் கட்டமைக்க வேண்டிய அவசியமில்லை (இங்கே தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான மற்றும் சுயாதீனமான தலையீடு குறித்து கூற வேண்டியதே இல்லை) என்றவொரு பாதையை திறந்து விட்டிருப்பதாக பிரகடனப்படுத்தியது.

ஐரோப்பாவில் ஏர்னெஸ்ட் மண்டேலை மற்றும் அமெரிக்காவில் (சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி தலைவர்) ஜோசப் ஹன்சனைப் பிரதான தத்துவவியலாளர்களாக கொண்ட பப்லோவாத அமைப்புகளின் கருத்துப்படி, காஸ்ட்ரோ தலைமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டதை ஒரு "தொழிலாளர் அரசாக" பிரகடனப்படுத்த, மொத்தத்தில் கியூபாவில் சொத்துக்களை தேசியமயமாக்குவதே தேவைப்பட்டது. ஹவானா ஆட்சி குறித்த இந்த எளிமையான மற்றும் முற்றிலும் மார்க்சிசம்-அற்ற ஆய்வை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு விமர்சித்தபோது, அது வெறுப்புடனும், போலித்தனத்துடனும் கியூப புரட்சியின் ஓர் எதிரியாக குற்றஞ்சாட்டப்பட்டது.

காஸ்ட்ரோயிசத்தைக் குறித்த பப்லோவாத புகழ்ச்சிகளின் அரசியல் தாக்கங்கள், கியூபாவையும் கடந்து விரிவடைவதைக் குறித்து அனைத்துலகக் குழு எச்சரித்தது. அது மார்க்ஸ் வரையில் பின்னோக்கிச் சென்று சோசலிச புரட்சியின் ஒட்டுமொத்த வரலாற்று மற்றும் தத்துவார்த்த கருத்துருக்களுடன் முற்று முழுவதுமாக உடைத்துக் கொள்வதைப் பிரதிநிதித்துவம் செய்தது.

கைதுறக்கப்பட்டிருந்தது என்னவென்றால் மார்க்சின் கீழ் முதலாம் அகிலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படை தத்துவமாகும், அதாவது "தொழிலாளர்களின் விடுதலை தொழிலாளர்களினது பணி ஆகும்." அதற்கு மாறாக, காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்திருப்பது சோசலிச புரட்சியை " முனை மழுங்கிய கருவிகளின்" வழிவகைகளைக் கொண்டும் —அதாவது ஒரு மார்க்சிச புரட்சிகர கட்சியில்லாமலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் செயலூக்கமான மற்றும் நனவுபூர்வமான பங்களிப்பு சுத்தமாக இல்லாமலேயே— எட்ட முடியுமென்பதை நிரூபித்ததாக அந்த திருத்தல்வாத போக்கு வாதிட்டது. அது வாதிட்டது: விவசாயிகளை அடித்தளத்தில் கொண்ட ஆயுதமேந்திய தேசியவாத கொரில்லா படைகளின் தலைவர்கள் அந்த நிகழ்ச்சிப்போக்கில் "இயல்பான மார்க்சிஸ்டுகளாக" எழுச்சி பெறுகையில் அது போதுமானதாக இருக்கும். அதில் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் முனைப்பற்ற பார்வையாளர்களாக புறக்கணிக்கப்படுவார்கள்.

கியூப புரட்சிக்கு நீண்டகாலத்திற்கு முன்னரே ட்ரொட்ஸ்கி, குட்டி-முதலாளித்துவ சக்திகளால் செய்யப்படும் தேசியமயமாக்கல்களை சாதுர்யமாக சோசலிசப் புரட்சியாக அடையாளப்படுத்துவதை விளக்கமாக நிராகரித்திருந்தார். 1939இல் கிரெம்ளின் ஆட்சி (ஹிட்லர் உடனான கூட்டணியுடன்) போலாந்து மீதான அதன் படையெடுப்பின் போக்கில், அது செய்திருந்த சொத்து பறிமுதல்களுக்கு பதிலளித்து ட்ரொட்ஸ்கி எழுதினார்: "நமது பிரதான அரசியல் அளவுகோல் இந்த அல்லது அந்த பகுதியின் சொத்துக்களைக் கைமாற்றுவதல்ல, இவற்றின் முக்கியத்துவம் அவற்றிற்குள்ளேயே எவ்வளவோ தங்கியிருக்கலாம், ஆனால் மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நனவையும், ஒழுங்கமைப்பையும் மாற்றுவதும், முந்தைய வெற்றிகளை பாதுகாப்பதற்கு மற்றும் புதிய வெற்றிகளை சேர்த்துக் கொள்வதற்கு அவர்களின் தகைமையை உயர்த்துவதுமே ஆகும்."

அனைத்துலகக் குழு எச்சரித்தது, பப்லோவாத நிலைப்பாட்டின் சாரம் 1) சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் முன்னணி மற்றும் மைய பாத்திரத்தை நிராகரிப்பதும்; மற்றும் 2) அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தேவைப்படும் நனவை தொழிலாள வர்க்கத்திற்குள் அபிவிருத்தி செய்ய ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டியெழுப்புவதன் தேவையை மறுப்பதும் ஆகும். அனைத்திற்கும் மேலாக, பப்லோவாதிகள் வாதிட்டதைப் போல அதுபோன்றவொரு கட்சி கியூபாவில் தேவையில்லை என்றால், பின் உலகின் வேறெந்த இடத்தில் அது ஏன் அவசியப்படும்?

அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகள் முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டன. காஸ்ட்ரோயிசம் சோசலிசப் புரட்சிக்கு புதிய முன்மாதிரியாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த முன்னோக்கு, பப்லோவாதிகள் கெரில்லாக்களை ஊக்குவித்த இலத்தீன் அமெரிக்காவில் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருந்தது. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைக்காக போராடுவதை கைவிடுமாறும், அதற்கு மாறாக கிராமப்புறங்களில் "ஆயுதமேந்திய போராட்டத்திற்கு" "நுட்பமான தயாரிப்புகளுக்குள்" அவர்களை இறக்கிக் கொள்ளுமாறும் அப்பிராந்தியத்தில் இருந்த அவர்களின் சொந்த ஆதரவாளர்களுக்கே அறிவுறுத்தினார்கள்.

துன்பியலான விளைவுகள் மூன்று மடங்கு இருந்தன. மிகவும் தீவிரமயப்பட்ட இளைஞர் பிரிவுகளும், அத்துடன் இளம் தொழிலாளர்களும், ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத அதிகாரத்துவங்களின் எதிர்புரட்சிகர பிடியில் சிக்குப்பட உதவியாக, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைக்கான போராட்டத்திலிருந்து திருப்பி விடப்பட்டனர். இந்த இளைஞர்களே கூட இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ அரசுகளின் இராணுவ படைகளுடன் சமநிலையற்ற மற்றும் தற்கொலை படைக்குள் வீசப்பட்டனர், அது ஆயிரக் கணக்கானவர்களின் மரணத்திற்கு இட்டுச் சென்றது. மேலும் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் பாசிச-இராணுவ சர்வாதிகாரங்களை திணிப்பதற்கும் மற்றும் உழைக்கும் மக்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதற்கும் சாக்காக, தோல்வியடைந்த கொரில்லா சாகசங்கள் இராணுவத்தால் பற்றிக் கொள்ளப்பட்டன.

இந்த முன்னோக்கிற்கு பலியானவர்களில் காஸ்ட்ரோவின் மிக நெருங்கிய ஆயுதப்படை தோழர் சே குவேராவும் ஒருவராவார். கியூபா ஆட்சியின் துரிதமான அதிகாரத்துவமயமாக்கலால் நம்பிக்கையிழந்து, அவர் பொலிவியாவில் அவரது உயிர்பறிக்கும் சாகசத்தை மேற்கொண்டார். சக்திவாய்ந்த பொலிவிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்திறனைப் புறக்கணித்து, குவேரா அங்கே மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட விவசாயத்துறை பிரிவுகளிடையே ஒரு கெரில்லா இராணுவத்தை உருவாக்க முனைந்தார். தனிமைப்படுத்தப்பட்டும் பட்டினி கிடந்தும், குவேரா பொலிவிய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, அக்டோபர் 1967இல் தூக்கிலிடப்பட்டார். குவேராவின் தலைவிதி காஸ்ட்ரோயிசம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்தின் பேரழிவுகரமான விளைவுகளுக்கு ஒரு துயரகரமான முன்னறிவிப்பாக இருந்தது.

இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் எழுந்த ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர மேலெழுச்சியின் தோல்வியே ஒட்டுமொத்த விளைவாக இருந்தது, 1968இல் இருந்து 1975 வரையில் சர்வதேச அளவில் மேலோங்கியிருந்த தீவிர புரட்சிகர நெருக்கடிகள் மற்றும் வர்க்க போராட்டங்களின் ஒரு காலகட்டத்தில், ஏகாதிபத்தியம் தப்பிப் பிழைப்பதற்கு உதவுவதில் இலத்தீன் அமெரிக்கா அதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த ஒட்டுமொத்த முன்னோக்கிற்கும் எதிராக சமரசமின்றி போராடியது. அது வலியுறுத்துகையில், காஸ்ட்ரோயிசம் சோசலிசத்திற்கு ஏதோவொரு புதிய பாதையைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அது மிகத் தீவிர முதலாளித்துவ தேசியவாதத்தின் மாற்றுருக்களில் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்தது, அவ்வித மாற்றுருக்கள் 1960களில் பல முன்னாள் காலனித்துவ நாடுகளில் அதிகாரத்திற்கு வந்திருந்தன. அத்தகைய பல ஆட்சிகள் பரந்துபட்ட தேசியமயமாக்கல்களை நடத்தி வந்தன என்று விளங்கப்படுத்தியது.

காஸ்ட்ரோவின் கொள்கைகள் கியூப சமூகத்தின் அடிப்படை வரலாற்று பிரச்சினைகளை —அதாவது பின்தங்கிய நிலைமை மற்றும் சார்ந்திருக்கும் நிலையை— தீர்க்கவில்லை, அவை சோவியத் மானியங்கள் மீதும் அதற்கடுத்து வெனிசூலாவிலிருந்து மலிவு எண்ணெய் அளிக்கப்பட்டதன் மீதும் மட்டுமே வரையப்பட்டிருந்தன.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீது தன்னைத்தானே நிலைப்படுத்திக் கொண்டு அனைத்துலகக் குழு வலியுறுத்துகையில், காலனித்துவ மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்க தலைமையின் கீழ் அதிகாரத்தைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் புரட்சியை நீட்டிப்பதன் மூலமாக மட்டுமே வென்றெடுக்க முடியுமென வலியுறுத்தியது. இந்த முன்னோக்கிலிருந்து வரும் பிரதான பணி என்னவென்றால், தொழிலாளர்களை முதலாளித்துவ தேசியவாதத்திற்கு அடிபணிய வைக்க முனையும் அனைத்து போக்குகளின் பிடியிலிருந்தும் உடைத்துக் கொள்ள செய்ய, ஒரு சளைக்காத போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர கட்சிகளைக் கட்டியெழுப்புவதாகும்.

கியூப புரட்சிக்கு பிந்தைய ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளில், காஸ்ட்ரோ ஆட்சியின் போக்கு ICFIஆல் போராடப்பட்ட முன்னோக்கை முற்றிலுமாக நிரூபித்துள்ளது, அது இன்று ஒவ்வொரு துளியிலும் கியூபாவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவிலும் அத்தியாவசியமாக தங்கியுள்ளது.

வாஷிங்டன் மற்றும் ஹவானாவிற்கு இடையிலான நல்லிணக்கம், அத்தீவில் ஏற்கனவே உள்ள சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் வர்க்க பதட்டங்களின் வேகமான அதிகரிப்பையும், அத்துடன் புரட்சியின் வெற்றியில் எஞ்சியிருப்பதை ஒரேசீராக அழிக்கும் பல தொடர்ச்சியான எதிர்-சீர்திருத்தங்களையும் துரிதப்படுத்த மட்டுமே சேவை செய்யும்.

கியூப தொழிலாளர்கள், இலத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள அவர்களின் சமதரப்பினரைப் போலவே, புரட்சிகர போராட்ட பாதைக்குள் தவிர்க்கவியலாது தள்ளப்படுவர். அத்தகைய போராட்டங்களுக்கு முக்கிய தயாரிப்பாக இருக்க வேண்டியது, காஸ்ட்ரோயிசம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் நீண்டகால அனுபவத்திலிருந்து கசப்பான படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் புதிய சுயாதீனமான புரட்சிகர கட்சிகளை, அதாவது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளை கட்டுவதாகும்.

Read more...

சிறுகதைப் போட்டியில் மஸீதா புன்னியாமீன் முதலிடம்!

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் ​இற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் செத்சிறிபாய நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் எச்.டி..எஸ்.மல்காந்தி, அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரபல சிங்கள எழுத்தாளர் மடுலுகினிய விஜேரத்ன, தமிழ், சிங்கள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, பாடல், கவிதை, சிறுவர் கதை, சித்திரம், குறுநாடகப் பிரதியாக்கம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள், சான்றிதழ்கள், புத்தகப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மொழி மூல தமிழ் போட்டியில் உடத்தலவின்னையைச் சேர்ந்த மஸீதா புன்னியாமீன் சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் ஆக்கங்களின் தொகுப்பாக 'பிரகாசம்' என்ற நூலும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Monday, December 22, 2014

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு

இலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் போது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. அமைச்சர் ரிசாத் பதியுதீன், அக்கட்சியின் சார்பில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அமீர் அலி சகிதம்எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன , எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர். தமது கட்சியை சேர்ந்த 7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தமது புதிய அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ரிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான துணையமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றார்.

அரசாங்க தரப்பினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாகவே, இம்மாத முற்பகுதியில் அரசாங்கக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம். அஸ்வர் தனது பதவியை இராஜினமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு எஸ். எச். அமீர் அலி நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிப்பாராம் மகிந்தர்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். எனினும், 'நான் தோல்வியடைப் போவதில்லை' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஷ, 'முதிர்ச்சியடைந்த, துடிப்புள்ள ஜனநாயகமான இலங்கையில் அமைதியான முறையிலேயே ஆட்சி கைமாற்றங்கள் நடந்துள்ளன' என்றும் கூறியுள்ளார். ஆனால், 'மீண்டும் நான்கூறுகின்றேன். நாங்கள் வெற்றியடைவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன்' என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலை மேற்குலகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கூறியுள்ள ஃபைனான்ஸியல் டைம்ஸ் செய்தியாளர், புதிய அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தின்போது நடந்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் என்ற நம்பிக்கை மேற்குலகிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல, இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ள 8 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பினால் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வமடைந்துள்ளதாகவும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளது.

எதிர்வரும் 8-ம் திகதி நடக்கவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் மிகவும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டால், ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் நிலவும் ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்திருக்க வன்முறைகளும் ஸ்திரமற்ற நிலைமைகளும் உருவாகலாம் என்று உள்நாட்டு அவதானிகள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சூடு பிடித்துள்ள வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலய விவகாரம். அசட்டை செய்யும் அரச அதிகாரிகள். குமுறும் பொதுமக்கள்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் சீர் கெட்ட நிலைகள் பற்றி 26.10.2014ம் திகதி எமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் இணைப்பாக இச்செய்தி பிரசுரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஐயனார் ஆலயத்தில் நிர்வாகம் முறைகேடாக நடந்துகொள்கின்றது என்று பொது மக்கள் விசனம் தெரிவிப்பதும், 18 வருடங்களாக பொதுக்கூட்டம் கூடாது சர்வாதிகார போக்கை ஆலய நிர்வாகம்கடைப்பிடிப்பதாகவும் கடந்த செய்தியில் வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் பெரும் மாறறங்கள் நிகழ்ந்தள்ளதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 21.11.2014 வெள்ளிக்கிழமை தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு.கோணேஸ்வரலிங்கம் தலைமையில் பொதுக்கூட்டம் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அந்த கூட்டம் முற்றுக்கு வராமலேயே முடிவடைந்தது. அந்த கூட்டத்தை தொடர்ந்து அவரும் இந்த விடயத்தில் எந்த அக்கறையும் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. அந்தக் கூட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் நிர்வாக உறுப்பினர்களால் அக் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை. குறிப்பாக நிர்வாக சபை சார்பாக தலைவர், செயலாளர், பொருளாளர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். மற்றையோர் நிர்வாகத்திற்கு எதிரக வெளிநடப்புச் செய்துள்ளனர்.

அவசர அவசரமாக தவறான இடத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது ஏன்?
தான்தோன்றித்தனமாக கட்டடங்களை முறையில்லாமல் கட்டுவது ஏன்?
ஐயனாருக்கு என்று அடியவர்கள் கொடுத்த நகைகள் எங்கே?
ஐயனார் ஆலய கணக்குகள் எங்கே?
யாருடைய அனுமதியின் பெயரில் திரு.பகீரதன் தனியாக கோயில் உண்டியல் உடைத்தார்?
அதி;ல் இருந்த கணக்குகள் எஙகே? ஆதை எவ்வாறு நம்புவது?
கோயில் மூலஸ்தானம் தனி நபரால் ஏன் கட்டப்படுகின்றது?
18 வருடமாக ஏன் பொதுக்கூட்டம் கூட்டவில்லை?

போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருந்துள்ளனர். இக்கேள்விகளுக்கு பொது மக்கள் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டபோதும் இதற்கு யாரும் பதில் அளிக்கவில்லை.

தாண்டிக்குளம் கிராம சேவையாளர் கோணேஸ்வரலிங்கம் தொடர்ச்சியாக எந்த முடிவுகளையும் எடுக்காது இவ்விடயங்ளை கவனிக்காது உள்ளார். தோடர்ச்சியாக கலாச்சார உத்தியோகத்தர்களுக்கு இது தொடர்பாக அறிவித்தல் கொடுத்தும் அவர்களும் தங்கள் பொறுப்பற்ற தனமையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

குலாச்சார உத்தியோகத்தரான திரு.நித்தியானந்தன் கலாச்சாரம் பற்றி அறிந்தவரா? அவருக்கு ஆலய நடைமுறைகள் தெரியும்? ஏன்ற சந்தேகம் சமூகத்தில் தோன்றியுள்ளது. அரச அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை சரியாகச் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்க இவர்களே அசட்டையாக இருப்பது, இவர்கள் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளாக இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

ஆலயத்தில் தலைவராக இருப்பவரும் ஒரு கிராம சேவையாளர்தான். அதனால் அவருக்கு சார்பாக அரச அதிகாரிகளான பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோர் செயற்படுகின்றனர். இவற்றை மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சரஸ்வதி மோகனாதன் அவர்களிடமும் மக்கள் முறையிட்ட போதும் அவர் தனது வேலை இது இல்லை என்று கைகழுவிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அரசாங்க அதிபர் திரு.பந்துல ஹரிச்சந்திர அவர்களிடம் பொதுமக்கள் சிலர் சென்ற வேளை அவர்களை உள்ளே செல்ல விடாது காலாச்சார உத்தியோகத்தர் தடுத்துள்ளதாகவும், அது தங்கள் வேலை தாங்கள் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளார். இவற்றை அரசாங்க அதிபர் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஆலய பிரச்சனைகள் சூடு பிடிக்கத் தொடங்கி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. இந் நிலையில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோர் திட்டமிட்டு மக்களுக்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். இவர்கள் பற்றிய ஒலிப்பதிவுகள் மூன்றாம் இணைப்பில் பிரசுரிக்கப்படும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com