Wednesday, October 31, 2012

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் எடை குறையுமாம் ஆய்வில் தகவல்

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது.

அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது.

காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது”

Read more...

முல்லைத்தீவின் தாழ்நிலங்களில் வெள்ளம் -படங்கள் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த அடை மழையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் தாழ் நிலப்பரப்புக்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக மக்கள் வசித்து வந்த திருமுறிகண்டி ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில்வெள்ளம் உட்புகுந்ததால் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்தாக அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.Read more...

மாகாண சபை ஒழிக்கப்பட வேண்டும் அஸ்கரிய மல்வத்து மகாநாயக்கர்கள் கோரிக்கை

நாட்டுக்கு கேடு விளைவிக்கும் மாகாண சபை முறை, ஒழிக்கப்பட வேண்டுமென, மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் விமல் வீரவன்ச, மகாநாயக்க தேரர்களை சந்திக்கச்சென்ற போதே, அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, அன்று சர்வதேச அழுத்தங்களுக்கு அடிமைப்பட்டு, தூரநோக்குடன் சிந்திக்காமல் ஏற்படுத்திய மாகாண சபை முறை, இலங்கைக்கு எவ்விதத்திலும் பொருந்துவதில்லை.

இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டுமென, அஸ்கிரிய பீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்த ரக்கித தேரர் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் தொடர்பாக, மகாநாயக்க தேரர்களை அறிவுறுத்துவதற்கும், இது தொடர்பாக மகஜர் ஒன்றை கையளிப்பதற்கும், அமைச்சர் விமல் வீரவன்ச இன்று முற்பகல் அங்கு சென்றார்.

பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயகவும் இதில் கலந்து கொண்டார். மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர், அமைச்சர் விமல் வீரவன்ச, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு எதிராகவும், மாகாண சபை சட்டமூலத்திற்கு எதிராகவும், இன்னும் சில நாட்களில் விசேட சட்டத்தினூடாக உச்சநீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளோம்.

13வது அரசியலமைப்பும், மாகாண சபை முறையும் ரத்து செய்யப்பட வேண்டும். அவற்றை ,ரத்து செய்து, இந்நாட்டின் அபிவிருத்திக்கு பொருந்தக்கூடிய, அரசியலமைப்பில் கை வைக்க முடியாத, பாராளுமன்ற அதிகாரத்தில் கை வைக்காத, புதிய நிர்வாக கட்டமைப்பொன்று, அபிவிருத்திக்கட்டமைபொன்றை ஏற்படுத்துவதில் தவறில்லை.

எனினும் எவராலும் பலாத்காரமாக திணிக்கும் ஒன்றாக அது அமையக்கூடாது. அதனை நாமே தயாரித்துக்கொள்ள வேண்டும். மாகாண சபைகள் பிறரை திருப்திப்படுத்தக்கூடியதாகவே அமைக்கப்பட்டது. தற்போது ,ந்நாட்டு மக்களை திருப்திப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்றார்.

Read more...

புலி உறுப்பினர்கள் மூவர் ஆயுதங்களுடன் தமிழ் நாட்டில் கைது

ஒரு தொகை வெடி பொருட்களுடன் மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நீதிமன்றத்தில் இரண்டு பொலிஸார் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர். .

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து, கண்டறிவதற்கு, நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தலைமை தாங்கும் இந்திய அரசாங்க சட்டத்தரணி வி.கே. ஜேன் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் விடுதலைப்புலிகளின் தொடர்ந்தும் தடை செய்யப்பட வேண்டுமென தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பதற்கு, இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை செயயப்பட்டதை அடுத்து, தழிழீழ விடுதலைப்புலி பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்பு, இந்தியாவிற்கு எதிரான கொள்கையில் செயற்படுவதனால், தொடர்ந்தும் அவ்வமைப்பு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டது.

Read more...

தொடர் மழையால் 50 ஆயிரம் பேர் பாதிப்பு அனர்த முகாமைத்துவ நிலையம்

தொடர் மழை காரணமாக நாடு முழுவதிலும் 49ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்..

இதன் காரணமாக 65 வீடுகள் முற்றாகவும் 488 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவிலான மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Read more...

விவேகானந்தரின் 150 வது ஜனன தினத்தையொட்டி ரதபவனியும் இந்து எழுச்சி ஊர்வலமும்

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தினவிழாவையொட்டி இன்று புதன் கிழமை காரைதீவில் மாபெரும் ரத பவனியும் இந்து எழுச்சி ஊர்வலமும் கோலாகமாக எழுச்சி பூர்வமாக நடைபெற்றது.காரைதீவு பொதுமக்களால் நடாத்தப்பட்ட இவ் ரதபவனி ஸ்ரீ சாரதா சிறுமியரில்லத்தில் ஆரம்பமானது.அங்கு மட்டக்களப்புஇ.கி.மிசன் தலைவர் சுவாமி கபாலீஸானந்தா ஜீ சுவாமி யோகீரானந்தா ஜீ ஆகியோர் ஆன்மீக அதிதகளாககலந்துகொண்டு சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.

சிக்காக்கோ உரையாற்றிவிட்டு இந்தியா வந்த சுவாமிக்கு எவ்வாறு இராமநாதபுர மன்னன் தானே வண்டியிழுத்து வரவேற்பளித்தானோ அவ்வாறு இங்கும் நடாத்தப்பட்டது.

பின்பு ஊர்வலம் இடம்பெற்றது.ஆலயங்கள் பாடசாலைகள் ஊர்ப்பொதுநல அமைப்புகள் அனைத்தும் கலந்து சிறப்பித்தன. அவற்றை இங்கு காண்கிறீர்கள்.

சுவாமி கபாலீஸானந்தா ஜீ ஆசியுரையாற்றுகையில் சுவாமி தேசத்தை தட்டியெழுப்பியதோடு இந்து சமய எழுச்சிக்கும் வித்திட்டவர்.அவரது 150 வது ஜனன தினத்திலே இவ்வாறாள எழுச்சிவழாவைக் கொண்டாடுவது பொருத்தமாகும்.

சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண் புனிதமானது.அப்பவனிக்கு எமது நல்லாசிகள் பல. என்றார்.

படங்கள் வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்.


Read more...

ஜப்பான் விமான நிலையத்தில் பயங்கர வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள செண்டை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அனைத்து 92விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஹிரோஷி ஒüச்சி கூறியது: விமான நிலைய கட்டடத்திலிருந்து 1.2 கி.மீ. தூரத்தில் உள்ள ஓடுபாதை அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை 250 கிலோகிராம் எடை கொண்ட ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

துருப்பிடித்த நிலையில் இருந்த அந்த வெடிகுண்டு, 110 செ.மீ. நீளம் மற்றும் 35 செ.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெடிகுண்டு, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் புறப்பாடு மற்றும் தரை இறங்குவது ரத்து செய்யப்பட்டன. உடனடியாக ராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வெடிகுண்டை அப்புறப்படுத்தி செயலிழக்க வைத்தனர் என்றார்.

ஜப்பானில் இதுபோன்ற வெடிகுண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. துருப்பிடித்த நிலையில் உள்ள இவை, ஓரிடத்திலிருந்து இடம்பெயரும்போது வெடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Read more...

இலங்கையின் வீதி அபிவிருத்திக்கு சவுதி அரசு 60மில்லியன் அ.டொ நிதி உதவி

இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாப் ஜனாதிபதி .மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் இந்த உதவி தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பதந்தம் கைச்சாத்திடப்பட்டது

சவுதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாப் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் இந்த புரிpந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.Read more...

முப்பரிமாணம் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழ கூடிய 3DCone

பிரபல கைப்பேசி வகைகளுள் ஒன்றான ஐபோன்களில் காணப்படும் கேமரா மூலம் இதுவரை காலமும் இருபரிமாணமுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையுமே எடுக்கக்கூடியதாக காணப்பட்டது. எனினும் தற்போது அறிமுகமாக்கப்பட்டுள்ள ஐபோன்களில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய 3DCone எனும் பிரத்தியேக சாதனம் ஒன்றின் மூலம் முப்பரிமாணம் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருவியில் காணப்படும் கண்ணாடி ஒன்றின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வகையான காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் இணைக்கப்படுவதன் மூலம் குறித்த காட்சியானது முப்பரிமாணமுள்ளதாக தோற்றமளிக்கின்றது.

இக்கருவியினை ஐபோன் 4, ஐபோன் 4எஸ் ஆகியவற்றில் இணைத்து பயன்படுத்த முடியும்.

Read more...

புலிகளால் மறைக்கப்பட்ட ஆட்டிலறி குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு,வெள்ளி முள்ளிவாய்க் கால் பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்து ஐந்து ஆட்லறி குண்டுகள் மற்றும் அதி குதிரை வலு கொண்ட இரண்டு படகுகள் ஆகியவற்றை இன்று புதன்கிழமை படையினர் மீட்டுள்ளனர்..படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் புதைத்து வைக்கப்பட்டடிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

Read more...

அப்துல் கலாமை போல் விஞ்ஞானியாக வர ஆசைப்படும் 10 வயது ஏழைச் சிறுவன்

குப்பை கூழங்கள் நிறைந்த புனேவின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஜான்முகமதுவின் இரண்டு மகன்களின் ஒருவன் ரிஷ்வான் சேக். அவன் சிறுவயதிலேயே 1 – 100 வரையுள்ள அனைத்து வாய்ப்பாடுகளையும் சரளமாக கூறியுள்ளான். அவன் 5 வயதாக இருக்கும்போதே சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறான்.

பிறகு பொது அறிவு புத்தகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, அவன் அனைத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.

அவனது திறமையைப் பாராட்டி ஜெர்மன் நிறுவனம் ஒன்று ஒரு பன்னாட்டு கல்வி நிறுவனம் ஒன்றில் 5 வருடத்திற்கு அவனை சேர்த்துவிட்டது. பல்வேறு அவமானங்களுக்கிடையே பள்ளியில் முதலாவது மாணவனாக திகழ்ந்தான்.

பின்னர் உலக பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அந்த நிறுவனம் அவனுக்கு அளித்த உதவியை நிறுத்திவிட்டது. 10 வயதாகும் இந்த இளம் அறிவு ஜீவியான ரிஷ்வான் சேக்குக்கு ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் நன்றாக தெரியும்.

காய்கறிகள் விற்பனை செய்து வந்த அவனது தந்தையின் கால் விபத்தில் முறிந்துவிட்டது. வீட்டு வேலை பார்க்கும் அவனது தாயாரின் சம்பளத்தில் அவன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறான். வாழ்க்கையைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் ரிஷ்வான் சேக், அப்துல் கலாமைப்போல் ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறான்.

Read more...

இலங்கை தமிழருக்கு இறுதிநேரத்தில் வெற்றி

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இன்று நாடு கடத்தப்படவிருந்த தமிழர் இறுதிநேரத்தில் நீதிமன்றத்தில் அவசர மனு மூலம் வெற்றிப்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது

42 வயதான இந்த இலங்கை தமிழர், அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடு கடத்தப்படவிருந்தார்

எனினும் சிட்னியின் பிராந்திய நீதிமன்றம் அவரின் நாடுகடத்தலுக்கு தடையுத்தரவை பிறப்பித்துள்ளது

இந்தநிலையில் குறித்த அகதி இன்று தாக்கல் செய்த அவசரமனு விசாரணை முடியும்வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கமுடியும்

இந்த அகதி கடந்த இரண்டு வருடக்காலமாக மேல்போன் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் சமூகத்துடன் சேர்க்கப்பட்டார்

எனினும் சில தினங்களில் அவரை அழைத்த அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள், நாட்டில் இருந்து அவர் வெளியேற்றப்படவுள்ளதாக அறிவித்தனர்

இந்தநிலையில் இன்று நாடு கடத்தப்படவிருந்த அவர் தற்கொலை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார்

இதனையடுத்து அவரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் மெல்போன் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஒன்றும் இடம்பெற்றது

இதற்கிடையிலேயே சிட்னி நீதிமன்றத்தில் அவரது நாடு கடத்தலுக்கு எதிராக தடையுத்தரவு விதிக்கப்பட்டது

Read more...

முல்லையில் கடும் மழை இடம்பெயர்ந்த மக்களுக்கு இராணுவம் உதவிக்கரம் நீட்டுகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடை மழையினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிக மழையும் ,கடும் காற்றும் வீசியது. இதனால் மீளக்குடியமர்ந்த பொது மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளானார்கள்.

இவர்கள் அங்குள்ள பாடசாலைகள் மற்றும் தேவாலயங்களில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்தனர். இவர்கள் சாப்பாடின்றி மிகவும் கஸ்ரங்களை அனுபவித்தபோது இராணுவத்தினர் பொது மக்களுக்கு தேவையான உணவுகளை மூன்று நேரமும் சமைத்து வழங்கினார்கள்.

அத்தோடு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீட்புப் பணிகளையும் மேற்கொண்டனர். இதேவேளை தற்போது சில மணித்தியாலயங்கள் மழை பெய்யாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதோடு கடும் குளீர் நிலவி வருகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம் மாவட்டச் செயலகம் மற்றும் இராணுவத்தினர் மூலம் மேற்கொண்டு வருகின்றது.

Read more...

கொடைக்கானலில் நகை கடையை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலையை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவில் இவரது கடையை கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கடையில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

இன்று காலை கடையை திறக்க வந்த ராமதாஸ் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ராமதாஸ் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார்.

உடனடியாக கொள்ளை நடந்த கடைக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள்,மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கொடைக்கானல் மெயின் பஜாரில் உள்ள நகை கடையில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

போலி நாணத்தாள்களுடன் ஒரு பெண் அடங்கலாக ஆறுபேர் பொலிஸாரால் கைது

போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் ஆறு சந்தேகநபர்கள் ஹூங்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஐந்தரை இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுள்ள நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ஹொரணையில் குறித்த நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேகநபர்கள் அவற்றை மாற்றுவதற்காக வேறொரு பகுதிக்கு கொண்டு சென்று மாற்றிவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாகவும் ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 550 கைப்பற்றப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு சம்பவம் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Read more...

திருப்பதியில் 2-வது லட்டு வாங்குவோரை கண்டறிய கருவி - புரோக்கர்களை தடுக்க தேவஸ்தானம் திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப் புகழ் பெற்றது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூடுதலாக லட்டு வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு வழங்க வேண்டும் என்பதற்காக தரிசன டோக்கன் ஒன்றுக்கு கூடுதலாக 4 லட்டுகள் மட்டுமே தலா ரூ.25-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் கூடுதல் லட்டு வாங்க விரும்பும் பக்தர்கள் புரோக்கர்களுக்கு அதிக பணம் கொடுத்து லட்டு வாங்கி செல்கிறார்கள். இதனால் அடிக்கடி லட்டு பிரசாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து லட்டு பிரசாதத்தை 2-வது முறையாக வாங்க வரும் பக்தர்கள் கண்டறிய நவீன கருவி பொருத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இக்கருவியில் பொருத்தப்படும் “சாப்ட்வேர்” லட்டு கவுண்டருக்கு 2-வது முறையாக வரும் நபரை கண்டு பிடித்து அலாரம் எழுப்பும். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை எளிதில் பிடித்து விடுவார்கள். இந்த கருவி பொருத்தப்பட்டால் லட்டு கவுண்டருக்கு வரும் புரோக்கர்களை முற்றிலும் ஒழித்து விடலாம் என்று தேவஸ்தான அதிகாரி வெங்கட் ராமரெட்டி கூறினார்.

Read more...

100 பெண்களை கற்பழித்து , வெந்நீரில் வேகவைத்து சாப்பிடனும் :பொலிஸின் திட்டம்

நூறு பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்த பிறகு, வெந்நீரில் அவர்களை வேகவைத்து சித்ரவதை செய்து பின்னர் பெண் கறி தின்ன வேண்டும் என்று கொரூரமாக திட்டம் போட்டதாக நியூயார்க் நகர போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்ப்யூட்டரில் 100 பெண்களின் பெயர்களை அவர் பதிவு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகர போலீஸ் துறை அதிகாரி கில்பர்ட்டோ வல்லே. இவர் 100 பெண்களை கடத்தி பலாத்காரம் செய்ய திட்டமிட்டதாகவும்,

பின்னர் அவர்களை சித்ரவதை செய்து கொலை செய்ய திட்டமிட்டதாகவும் புகார் எழுந்தது. அத்துடன், கொலை செய்யப்படும் பெண்களின் உடல்களை சமைத்து தின்ன கொடூரமாக நினைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

உடனடியாக அவரை கண்காணித்தனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் அவருடைய நடவடிக்கைகள் இருந்தால், எப்.பி.ஐ. புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கில்பர்டோவை கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் கோர்ட்டில் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து நியூயார்க் போலீசார் கூறியதாவது: கில்பர்ட்டோவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த கம்ப்யூட்டரில் 100க்கும் அதிகமான பெண்களின் படங்கள், அவர்களுடைய முகவரி, விவரங்கள் அடங்கிய பைல் இருந்தது.

அத்துடன் பெண்களின் உடல் அமைப்புகளையும் அவர் விரிவாக குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் 100 பெண்களில் சிலருடைய வீட்டையும், அவர்கள் வேலை செய்யும் இடங்களையும் கில்பர்ட்டோ தொடர்ந்து கண்காணித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை வெந்நீரில் போட்டு வேகவைத்து அவர்கள் படும் சித்ரவதையை பார்த்து ரசித்து கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பலருடன் கில்பர்ட்டோ இன்டர்நெட்டில் சாட்டிங் செய்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும். இவ்வாறு போலீசார் கூறினர். இதற்கிடையில், ஜாமீன் கேட்டு மன்ஹாட்டன் கோர்ட்டில் கில்பர்ட்டோ மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹென்றி பிட்மேன், கில்பர்ட்டோ மீதான குற்றச்சாட்டுகள் பயங்கரமாக உள்ளன. நீதிபதியாக எனது 16 ஆண்டு வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை பார்த்ததில்லை என்றார்.

கில்பர்ட்டோ சார்பில் ஆஜரான வக்கீல் ஜூலியா கட்டோ, ஜாமீன் கோரி ஆவேசமாக வாதாடினார். நியூயார்க் போலீஸ் துறையில் கில்பர்ட்டோ 6 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்புள்ள அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

பெண்களை கடத்தவும், பலாத்காரம் செய்யவும், கொலை செய்யவும் பேசினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அது வெறும் பேச்சுதான். நிஜத்தில் அவர் அப்படி செய்ய நினைக்கவில்லை. எனவே, ஜாமீன் வழங்க தகுதியானவர்தான் என்றார்.

எனினும், கில்பர்ட்டோவின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Read more...

ஆசனூர் மலைப்பகுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே உள்ள புளிஞ்சூரை சேர்ந்தவர் சிவம்மா (வயது 45). இவரும் தலமலை கோடிபுரத்தை சேர்ந்த இப்ராஹீம் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இப்ராஹீம் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து சிவம்மா அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அவர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சிவம்மா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே நேற்று அவரது உறவினர்கள் சிவம்மா வீட்டுக்கு வந்தனர். அங்கு அவரை காணாததால் அக்கம்பக்கத்தில் சென்று தேடினர்.

அப்போது அங்குள்ள நாகராஜ் என்பவரின் சோளகாட்டில் சிவம்மா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலையாளிகள் சிவம்மாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி சோளக்காட்டில் வீசி சென்றுள்ளனர்.

நேற்று முன் தினம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. கொலையாளிகள் பற்றி தகவல் கிடைக்கவில்லை.

ஆனால் சிவம்மா கணவரை இழந்த பின்னர் அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவரிடம் தொடர்பை ஏற்படுத்தி இருந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவம்மா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கொலை குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி சம்பவ இடம் விரைந்து சென்றார்.

இதுபற்றி ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Read more...

சீ.. சீ இந்த பழம் புளிக்கும்:ரிச்சா

பிரியாணி படத்தின் கதையை திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு மாற்றியதால் தான் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம் ரிச்சா கங்கோபாத்யாயா.

சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து ஜோடி போட்டு பட்டையைக் கிளப்பியவர் ரிச்சா. ஆனால் அதற்குப் பின்னர் பார்ட்டியை ஆளைக் காணோம். இடையில் திடீரென வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதே வேகத்தில் அப்படத்தில் ஹன்சிகா மோத்வானி புக் ஆனதாகவும் செய்திகள் வந்ததால் ரிச்சா மேட்டர் குழப்பமானது.

ஆனால் தன்னிடம் சொன்ன கதையில் இயக்குநர் மாற்றம் செய்ததால்தான் அதிருப்தியடைந்து அவராகவே வெளியேறி விட்டாராம் ரிச்சா. இதை அவரே தனது ட்விட்டரில் சொல்லியுள்ளார்.

இதுகுறித்து ரிச்சா கூறுகையில், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், எனது கதாப்பாத்திரத்தின் அழுத்தம் குறைந்துவிட்டது.

இதனால்தான் இந்த படத்தில் இருந்து நான் வெளியேறிவிட்டேன். இதனை இயக்குநர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் ரிச்சா..

இருந்தாலும் எதிர்காலத்தில் தன்னை வெங்கட் பிரபு தனது புதிய படத்தில் நடிக்க அழைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் ரிச்சா.

Read more...

செவ்வாய் கிரகத்தில் கனிம வளங்கள்: கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்த அமெரிக்காவின் 'நாசா' மையம் கியூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது. அங்கு அது போட்டோக்களை எடுத்து அனுப்பியும், பல ஆய்வுகளை மேற்கொண்டும் தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

அங்குள்ள பாறையை வெட்டி எடுத்து போட்டோ எடுத்து அனுப்பியது. தற்போது, அங்கு கனிம வளங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மணலை கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப் மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்தது. அதில், பளிங்கு கற்படி வங்கள் உள்ளன. இது ஹவாயில் எரிமலை பகுதியில் இருப்பது போன்று உள்ளது. அதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் பூமியின் மணல் பரப்பை ஒத்துள்ளது.

எனவே அங்கு பூமியை போன்ற கனிம வளங்கள் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை கியூரியாசிட்டி விண்கல ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட் பிளேக் தெரிவித்துள்ளார். தனது 22 ஆண்டு காலகட்டத்தில் தற்போதுதான் அதுபோன்ற அதிசய நிகழ்வுகளை காணமுடிகிறது என தெரிவித்தார்.

Read more...

சாண்டி புயல் தாக்குதலை விண்வெளியில் இருந்து பார்த்த சுனிதா வில்லியம்ஸ்


அமெரிக்காவை சாண்டி புயல் புரட்டி போட்டது. அதன் தாக்குதலை விண்வெளியில் இருந்து அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பார்த்தார்.

இது குறித்து அவர் ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது அமெரிக்காவின் கடற்கரை பகுதியில் சுழல் போல் சுற்றியபடி புயல் மையம் கொண்டிருந்தது. அதையும், அதன் சுழலை நாங்கள் (விண்வெளி வீரர்கள்) பார்த்தோம். மேலும், எங்கள் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஐ.சி.சி.முடிவு செய்த பகல்-இரவு டெஸ்டுக்கு ஜான்ரைட் அதிருப்தி

20 ஓவர் போட்டியின் தாக்கல் காரணமாக டெஸ்ட் போட்டிக்கு மசுவு குறைந்து வருகிறது. 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காலப்போக்கில் டெஸ்ட் போட்டி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியை போலவே டெஸ்ட் போட்டியை பகல் -இரவாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் இதற்கு அனுமதி அளித்தது. டெஸ்ட் போட்டியை பகல்-இரவாக நடத்தும் முடிவுக்கு நியூசிலாந்து முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ஜான் ரைட் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் ஒரு பழமைவாதி. டெஸ்ட் போட்டி எப்போதும் போல் பகலிலேயே தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த ஐ.சி.சி. வேறு முடிவை எடுத்து இருக்க வேண்டும். பகல் - இரவு டெஸ்ட் என்ற முடிவை நான் விரும்பவில்லை. ஐ.சி.சி.யின் இந்த முடிவு தவறானது.

இதனால் டெஸ்ட் போட்டி முன்னேற்றம் அடைவதைவிட டெலிவிசன் சேனல்கள் மேம்படும். இந்திய அணிக்கு 20 ஓவர் போட்டி, ஒருநாள் ஆட்டம், டெஸ்ட் என்று தனித்தனி கேப்டன் தேவையில்லை. தற்போது 3 நிலை சுற்றிலும் கேப்டனாக இருக்கும் டோனி அதற்கு தகுதியானவர்தான். டோனி சிறப்பாக செயல்படுவதால் வெவ்வேறு கேப்டன் தேவையில்லை.

இவ்வாறு ஜான்ரைட் கூறியுள்ளார்.

Read more...

சிகரெட் பிடிப்பவர்களின் பேரக்குழந்தைகளையும் ஆஸ்துமா நோய் தாக்கும் - புதிய ஆய்வில் தகவல்

ஆஸ்துமா என்பது உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய காரணம் 'நிக்கோடின்' பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப்ப காலத்தின்போது அவர்களின் கருவியில் வளரும் குழந்தை நுரையீரலை சிகரெட்டில் பயன்படுத்தும் 'நிகோடின்' பாதிப்பை ஆஸ்துமாவை உருவாக்குகிறது.

மேலும் அது சிகரெட் பிடிப்பவர்களின் 3-வது தலைமுறையையும் பாதிக்கிறது. இதன் மூலம் அவர்களின் பேரக்குழந்தைகளும் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இந்த தகவல் கலிபோர்னியாவில் உள்ள ஹார்பர்-யூசி.எல்.ஏ. மெடிக்கல் சென்டர் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அவர்கள் கர்ப்பமாக இருந்த எலிகளிடம் ஆய்வு நடத்தி இதை கண்டறிந்துள்ளனர்.

சிகரெட் பிடிக்கும் அல்லது சிகரெட் புகையினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டு செயல்பாடு குறைகிறது. இதன் மூலம் ஆஸ்துமா உருவாகிறது.

நிகோடினின் வீரியம் முதல் தலைமுறை குழந்தைகளை தாக்காவிட்டாலும், ரத்தத்தில் தேங்கியிருந்து அது அவர்களின் குழந்தையை பாதிக்கும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எனவே சிகரெட் பிடிப்பது அவர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவித்தாலும், பேரக் குழந்தைகளின் நலனையும் அது பாதிக்கிறது.

Read more...

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போடித் தொடர் ஒன்றை இந்தியாவில் நடத்த, இந்திய மத்திய உள்துறை அமைச்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்கி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரூ, ஆமதாபாத், ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் இடம்பெறும்.

டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகும் இந்த போட்டிகள் ஜனவரி மாதம் வரையில் இடம்பெறும்.

இந்த தொடரில் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் உள்ளடங்குகின்றன.

இதன் பொருட்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்தியா செல்கின்றனர்.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் தடைப்படடிருந்த கிரிக்கெட் போட்டிகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கர்ப்பாசனம்

முதலில் விரிப்பில் கால்களை மடக்கி அமருங்கள். பின்னர் இடது தொடை, வலது தொடை இடைவெளியில் முறையே இடது, வலது முழங்கையை செலுத்துங்கள். அப்படியே கைகளை மடக்கி சற்று குனிந்து காதுகளை தொடுங்கள். இந்த நிலையில் உடல் புட்டபாகத்தின் அடிப்பகுதியை ஃ எழுத்து போல சம நிலையில் நிறுத்த வேண்டும்.

பயன்கள்...

உடம்பின் அத்தனை நாளமில்லா சுரப்பிகளையும் இயக்குகிற ஆற்றல் கர்ப்பாசனத்துக்கு உண்டு. பிட்யூட்டரி சுரப்பி இயங்குவதால் கல்வியறிவு, ஞானத்தை பெறுவீர்கள். சகல நோய்களும் நீங்கும். தீய எண்ணங்கள், கோபம், அதிக காமம் கட்டுப்படுவதோடு மனசும் பக்குவப்படும்.

Read more...

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட கந்தளாய்க் குளம்!

இலங்கையில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான கந்தளாய் குளத்தில் இரத்தினக்கல் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கந்தளாய் குளத்தில் பலர் தற்போதும் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் பண்டார தெரிவித்தார்.

அதனால் குறித்த பகுதிக்கு அதிக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read more...

சென்னையை புயல் தாக்கும் அபாயம்: அலுவலகம் சென்றோர் விரைவில் வீடு திரும்பவும்

தென்கிழக்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள நீலம் புயல் கடந்த 3 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. வங்க கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உருவான இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.

காலை நிலவரப்படி நீலம் புயல் 300 கி.மீ. தொலைவில் கரையை நெருங்கி வருகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எனவே, தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் அலுவலகம் சென்றோர் விரைவில் வீடு திரும்புமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறினார்.

Read more...

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் கலைக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானில் தற்போது கூட்டணி ஆட்சி இடம்பெறுகின்றது.

ஜனாதிபதியினாக ஆசிப் அலி சர்தாரியும், பிரதமராக ராஜா பர்வஷ_ம் உள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் 2013 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதனடிப்படையில், அந்த நாட்டு தேசிய சபை மற்றும் மேல்சபை ஆகியவற்றினை எதிர்வரும் ஜனவரி 16 அல்லது 17 ஆம் திகதிகளில் கலைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களது பதவி காலம் நிறைவடைய இன்னும் 60 நாட்களே உள்ளன.

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை தருகிறார் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சத்தீஸ்குhர்.

Read more...

பாகிஸ்தானில் வருகிற ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல்

பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. அக் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தார் அதிபராகவும், ராஜா பர்வேஸ் அஷரப் பிரதமராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் வருகிற மார்ச் 16-ந்தேதி வரை உள்ளது.

இருந்தாலும் அரசியல் சூழ்நிலை காரணமாக பாராளுமன்றத்தை முன் கூட்டியே கலைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் தேர்தல் எனவே தற்போதைய பாராளுமன்றத்தை வருகிற ஜனவரி 16 அல்லது 17-ந்தேதி கலைக்க அதிபர் சர்தாரியும், பிரதமர் அஷரப்பும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையும் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே வருகிற ஏப்ரல் மாதம் 26-ந்தேதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது

Read more...

சென்னையை நெருங்குகிறது நீலம் புயல்!

வங்கக் கடலில் உருவான நீலம் புயலானது சென்னையை நோக்கி நெருங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 270 கிலோமீற்றர் தூரத்தில் நீலம் புயல் நிலை கொண்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு நூறு கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலோரத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more...

சென்னையில் புயலை சமாளிக்க தயார் நிலையில் 1,300 வீரர்கள்

நீலம் புயல் தாக்கினால் அதனை சமாளித்து எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து விதமான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தீயணைப்பு வீரர்கள், போலீசார் அடங்கிய மீட்பு படையினர் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவில் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது சென்னையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் தாக்கினால் அதனை எதிர்கொள்வதற்காக சென்னையில் தீயணைப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

33 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 1,300 வீரர்களும் பணயில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

புயலால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய சென்னை மாநகர போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், அனைத்து உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீஸ்காரர் வரை அனைவரும் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் பைபர் படகுகளுடன் மீட்பு பணியில் ஈடுபட காத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் எந்த பகுதியில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் பொது மக்கள் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையான 100-க்கு போன் செய்யலாம். போலீசார் மீட்பு படையினருடன் உடனடியாக அங்கு விரைந்து சென்று உதவி செய்வார்கள்.

மேலும் முறிந்து விழும் நிலையில் இருக்கும் மரங்கள், மின் கம்பங்கள் பற்றியும், பொதுமக்கள் தகவல் அளிக்கவேண்டும். அப்போதுதான் உயிர் சேதங்கள் போன்ற பாதிப்புகளை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்படி அனைத்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும். புயலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என குடிசைகளில் வசிக்கும் மக்கள் இப்போதே ஏங்கத் தொடங்கியுள்ளனர்.

Read more...

மெதுவாக உயர்ந்து வருகிறது: மேட்டூர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்வரத்தை விட அதிகளவில் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. அவ்வப்போது பெய்த மழையின் காரணமாகவும், கடந்த வாரம் கொட்டிய பருவமழையின் காரணமாகவும் டெல்டா பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து விட்டது.

இடையில் கடந்த 3 நாட்களாக மழை இல்லாததால் அணையில் இருந்து பாசனத்துக்கு வெறும் 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

தற்போது புயல் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தற்போதும் டெல்டா பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து விட்டது. தற்போதும் 1000 கனஅடி தண்ணீரே திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 66 அடியானது. அணைக்கு 2 ஆயிரத்து 343 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

Read more...

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு 2-ம் இடம்: சோனியா வெள்ளிக்கிழமை அறிவிக்கிறார்

மத்திய மந்திரி சபையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியான போதே, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்திக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று நம்பப்பட்டது. ஏற்கனவே இரண்டுக்கு மேற்பட்ட தடவை மந்திரி பதவி தன்னை தேடி வந்த போதும், அதை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார்.

தற்போது காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி தவித்து வரும் நிலையில், ராகு காந்தி முக்கிய மந்திரியானால், கட்சியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றி விடலாம் என்று மூத்த தலைவர்கள் கணக்குப் போட்டனர். ஆனால், இந்த முறையும் மந்திரி பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுத்து விட்டார்.

இதையடுத்து, கட்சியில் முக்கிய இடம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக நம்பர்-1 இடத்தில் சோனியா காந்தி உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் யாரை அமர்த்துவது என்ற கேள்விக்கு, மூத்த தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்துள்ளனர்.

அவருக்கு கட்சியில் பொதுச் செயலாளர் அல்லது செயல் தலைவர் பதவி அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சோனியா காந்தி வெளியிடுகிறார். ராகுல் காந்தி தற்போது இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ளார்.

கட்சியில் பொதுச் செயலாளர் அல்லது செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்ட உடன், காங்கிரஸ் கட்சியின் அன்றாட நிர்வாகத்தை ராகுல் காந்தி கையாளுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியில் ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பது பற்றி, மூத்த தலைவர் ஜனார்தன் திவேதி கூறியதாவது:-

கட்சியில் ராகுல் காந்தி 2-வது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவருக்கு அடுத்த நிலையில் இவர் இருக்கிறார். இது மறைக்கப்பட்ட உண்மை அல்ல. எதிர்கால தலைவர் ராகுல் காந்தி என்று பிரதமரே பாராட்டி உள்ளார். ராகுலுக்காக சில பொறுப்புகள் காத்திருக்கின்றன. அவை என்ன என்பது விரைவில் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com