Wednesday, October 31, 2012

செவ்வாய் கிரகத்தில் கனிம வளங்கள்: கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்த அமெரிக்காவின் 'நாசா' மையம் கியூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது. அங்கு அது போட்டோக்களை எடுத்து அனுப்பியும், பல ஆய்வுகளை மேற்கொண்டும் தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

அங்குள்ள பாறையை வெட்டி எடுத்து போட்டோ எடுத்து அனுப்பியது. தற்போது, அங்கு கனிம வளங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மணலை கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப் மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்தது. அதில், பளிங்கு கற்படி வங்கள் உள்ளன. இது ஹவாயில் எரிமலை பகுதியில் இருப்பது போன்று உள்ளது. அதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் பூமியின் மணல் பரப்பை ஒத்துள்ளது.

எனவே அங்கு பூமியை போன்ற கனிம வளங்கள் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை கியூரியாசிட்டி விண்கல ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட் பிளேக் தெரிவித்துள்ளார். தனது 22 ஆண்டு காலகட்டத்தில் தற்போதுதான் அதுபோன்ற அதிசய நிகழ்வுகளை காணமுடிகிறது என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com