Wednesday, October 31, 2012

மாகாண சபை ஒழிக்கப்பட வேண்டும் அஸ்கரிய மல்வத்து மகாநாயக்கர்கள் கோரிக்கை

நாட்டுக்கு கேடு விளைவிக்கும் மாகாண சபை முறை, ஒழிக்கப்பட வேண்டுமென, மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் விமல் வீரவன்ச, மகாநாயக்க தேரர்களை சந்திக்கச்சென்ற போதே, அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, அன்று சர்வதேச அழுத்தங்களுக்கு அடிமைப்பட்டு, தூரநோக்குடன் சிந்திக்காமல் ஏற்படுத்திய மாகாண சபை முறை, இலங்கைக்கு எவ்விதத்திலும் பொருந்துவதில்லை.

இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டுமென, அஸ்கிரிய பீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்த ரக்கித தேரர் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் தொடர்பாக, மகாநாயக்க தேரர்களை அறிவுறுத்துவதற்கும், இது தொடர்பாக மகஜர் ஒன்றை கையளிப்பதற்கும், அமைச்சர் விமல் வீரவன்ச இன்று முற்பகல் அங்கு சென்றார்.

பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயகவும் இதில் கலந்து கொண்டார். மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர், அமைச்சர் விமல் வீரவன்ச, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு எதிராகவும், மாகாண சபை சட்டமூலத்திற்கு எதிராகவும், இன்னும் சில நாட்களில் விசேட சட்டத்தினூடாக உச்சநீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளோம்.

13வது அரசியலமைப்பும், மாகாண சபை முறையும் ரத்து செய்யப்பட வேண்டும். அவற்றை ,ரத்து செய்து, இந்நாட்டின் அபிவிருத்திக்கு பொருந்தக்கூடிய, அரசியலமைப்பில் கை வைக்க முடியாத, பாராளுமன்ற அதிகாரத்தில் கை வைக்காத, புதிய நிர்வாக கட்டமைப்பொன்று, அபிவிருத்திக்கட்டமைபொன்றை ஏற்படுத்துவதில் தவறில்லை.

எனினும் எவராலும் பலாத்காரமாக திணிக்கும் ஒன்றாக அது அமையக்கூடாது. அதனை நாமே தயாரித்துக்கொள்ள வேண்டும். மாகாண சபைகள் பிறரை திருப்திப்படுத்தக்கூடியதாகவே அமைக்கப்பட்டது. தற்போது ,ந்நாட்டு மக்களை திருப்திப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com