Saturday, September 1, 2012

தூக்கு மரமும் ரெடி, கைதிகளும் ரெடி, தூக்கு தினம்தான் இனி!

367 பேர் தூக்கில் இடப்பட வேண்டிய மரண தண்டனைக் கைதிகளாக இருக்கின்றார்கள் என்றும், 450 க்கு மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் மேன்முறையீடு செய்திருக்கின்றார்கள் என்றும், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான சகல சட்ட பூர்வமான ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் என்றும், பெரும்பாலும் அடுத்த மாதமளவில் மரண தணடனை நிறைவேற்றுவதை ஆரம்பித்து விடுவோம் என்று சிறைச்சாலை ஆணையாளர் பி. டப். கொடிப்பிலி த ஐலண்டுக்குத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரண தண்டனை நிறைவேற்றும் இரண்டு அலுவலர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு முடிந்து விட்டது என்றும், அவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது உண்ணாட்டமைச்சராக இருந்த ஜோண் அமரதுங்க பயங்கரக் குற்றங்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனை அவசியம் என்று வலியுறுத்தினார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவும் அதற்கு ஆதரவாக இருந்தார். 1994-2000 சந்திரிகா அம்மையார் காலத்திலும் பி.ஏ.வின் நிறைவேற்றுக்குழு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை. அதனால் அதை நிறைவேற்றுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com