Monday, January 30, 2012

கள்ளக்காதலியின் கரம்பிடிக்க வெள்ளைவேன் கடத்தல் நாடகமாடியவர் அச்சுவேலியில் கைது.

இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் என்ற நபரை கடந்த 23ஆம் திகதி இரவு அச்சுவேலிப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றும் இவர், விடுமுறையை கழிப்பதற்காக திருகோணமலைக்கு சென்றபோது இனந்தெரியாதோர் சிலரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி திருகோணமலை, துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, திருகோணமலை பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார மற்றும் திருகோணமலை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்தன ஆகியோரின் பணிப்புரைக்கமைய குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுர பிரேமசந்த மேற்கொண்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, காணாமல் போனதாக கூறப்பட்ட சத்தியசீலன் பாக்கியராஜ்pன் தொலைபேசியை கொண்டு நவீன சாதனங்களின் உதவியுடன் அவர் இருக்குமிடத்தை கண்டடிந்த பொலிஸார் அவரை செய்து செய்துள்ளனர்.

தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளிடம் காணாமல் போனது போன்று நடித்த பின்னர் அச்சுவேலி பிரதேச பெண்ணொருவரை திருமணம் செய்ய அவர் தயாராகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சத்தியசீலன் பாக்கியரா திருமணம் செய்யவிருந்த பெண்மனியின் தயாரே, இது தொடர்பான வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபாலி பி.நவரம்பாவனவின் அறிவுறுத்தலுக்கிணங்க பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.எம்.நந்தல மற்றும் ஐ.சுரேஷ் குமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாக்கியராஜ் இலங்கையில் கைது செய்யப்பட்டமையினால், உண்மை வெளிவந்துள்ளது. ஆன்றில் அவர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச்சென்றிருந்தால் , நிலைமைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பது யாரும் அறிந்ததே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com