பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டாலும், டக்ளசிடமிருந்து ஸ்ரீதரை மீட்க முடியவில்லையாம்.
யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஸ்ரீதர் திரையரங்கு நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக 1983 முதல் 1996 வரை தழிழீழ விடுதலைப் புலிகள் ஆக்கிரமிப்பிலும், 1996 முதல் இன்று வரை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஆக்கிரமிப்பிலும் இருந்து வருவதாக, ஸ்ரீதர் திரையரங்கின் உரிமையாளரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ரட்னசபாபதி மகேந்திரராஜா தெரிவிக்கின்றார்.
யுத்தம் முடிந்த பின்னர் பலமுறை இலங்கை வந்து, தனது தியேட்டரை மீளக்கையளிக்குமாறு பலமுறை டக்ளஸிடம் கேட்டும், அவர் தான் ஆக்கிரமித்திருக்கும் திரையரங்கை விட்டுவிடாமல் நழுவிச் சென்று கொண்டிருக்கின்றார் என்றும், இந்த ஆண்டின் இறுதியில் தந்து விடுகின்றேன் என்று கடந்த மூன்றான்டுகளாகச் சொல்லி வருகிறன்றார் என்றும், அவருக்கு எதிராக வழக்கில் ஆஜராவதற்கு எந்த சட்டத்தரணியும் துணிந்து வருகிறார் இல்லை என்று, ஸ்ரீதர் தியேட்டரின் உரிமையாளர் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
0 comments :
Post a Comment