Saturday, September 1, 2012

திருச்சியில் இலங்கை மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் இயக்கத்தினர் எதிர்ப்பு.

திருச்சி, கலைக் காவிரி நுண் கலைக் கல்லூரியில் 30ம் திகதி பி. ப. 2.00 மணிக்கு இலங்கை மாணவர்களால் நடாத்தப்படவிருந்த கலைநிகழ்ச்சி நாம் தமிழர் இயக்கத்தினரின் மறியல் போராட்டத்தினால் கைவிடப்பட்டு ள்ளது. இலங்கையின் உயர்தர வகுப்பு மாணவர்கள், வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் சென்று திரும்பிய பின்னர் திருச்சியில் இந்த கலை நிகழ்ச்சியை நடாத்தவிருந்தனர்.

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற ஒரு கத்தோலிக்க தமிழ்ப் பெண்ணின் வோண்டுகோளிற்கிணங்க, கல்லுரியில் கலை நிகழ்ச்சி நடாத்துவதற்கு கல்லூரி அதிபர் கலாநிதி மாரட் பஸ்டின் அனுமதி வழங்கியிருந்ததாகவும், இது ஒரு கத்தோலிக்க சமயம்சார் நிறுவனமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மறியல் போராட்டத்தை உதவிப் பொலிஸ் ஆணையர் காந்தியின் தலைமையில் சென்ற குழுவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், 70 இலங்கை மாணவர்கள் என்று ரைம்ஸ் ஒஃப் இந்தியா தெரிவித்திருந்நதாலும், அவர்கள் தமிழரா, சிங்களவரா என்று குறிப்பிடவில்லை. அவர்கள் தமிழராக இருந்திருந்தால் நாம் தமிழர் அமைப்பு அவர்களின கலை நிகழ்ச்சியை எதிர்த்தது அவர்கள் கபடதாரிகள் என்று உலகிற்கு காட்டியிருக்கும். அவர்கள் சிங்களவராக இருந்திருந்தால், அப்பாவி மாணவர்களை அழைத்துச் சென்று அவமரியாதைப்பட வைத்த்து கண்டிக்கத் தக்க செயலாகும்.

எதுவாயினும் இத்தகைய மறியல்களால் தமிழர் மீது கசப்புணர்வை வளர்கத்தான் உதவும்.

1 comments :

Anonymous ,  September 1, 2012 at 7:54 AM  

நாம் தமிழர் என்ற ஏமாற்று, துரோகத் தமிழ் இயக்கம், இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உருப்படியாக செய்தது ஒன்றுமில்லை. ஆனால் இன்றுவரைக்கும் புலிகளின் பணதிக்காக புலிகளை தூக்கி தலையில் வைத்து, தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com