Thursday, November 21, 2013

தாயகத்தின் புகழை மீண்டும் ஏற்படுத்த எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது! கலங்கம் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகின!

தாயகம் இழந்திருந்த தேசிய புகழை மீண்டும் ஏற்படுத்து வதற்கு பொதுநலவாய மாநாட்டின் ஊடாக எமக்கு சந்த ர்ப்பம் கிடைத்தது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய நாடு ஒன்றில் பொதுநலவாய மாநாடு நடத்தப்பட்டமை குறிப் பிடத்தக்கதாகும். சர்வதேச ரீதியில் தாயகத்திற்குள்ள அங் கீகாரம் இதன் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் முதல் முறையாக நடைபெற்ற 23 வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு முடிவடைந்து ஒரு சில நாட்களில் இம்முறை வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றது. 1976 ஆம் ஆண்டு அணி சேரா நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றதன் பின்னர் நடைபெற்ற முதலாவது சர்வதேச மாநாடு இதுவாகும்.

53 நாடுகளை ஒன்று திரட்டி எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை நேரில் கண்டறிவதற்கு வாய்ப்பு கிடைத்து. இலங்கையின் புகழை உலகிற்கு உணர்த்து வதற்கு இதுவொரு சந்தர்ப்பமாக அமைந்தது. நாட்டின் ஜனநாயகம், பொருளாதார அபிவிருத்தி இவற்றை அவர்கள் நேரில் கண்டறிந்தமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியாகும். இலங்கைளின் நட்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த ஒரு சிலர் மேற் கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகியதையும் அவதானிக்க முடிந்தது.

பொதுநலவாய நாடுகளின் பாரிய சந்தை வாய்ப்புக்களையும், உலக சந்தையில் போதிய சந்தைவாய்ப்பு வசதிகளை பெற்றுக் கொள்வதை இலக்காக கொண்டு நாம் மேற்கொண்ட முயற்சிகள் இம்மாநாட்டின் ஊடாக வெற்றியடைந்தது. 20 ஆண்டு களுக்கு பின்னர் ஆசிய நாடொன்றில் நடத்தப்பட்ட இம்மாநாடு உலகின் கவனத்தை ஈர்க்கச் செய்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். இதன் ஊடாக முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்ய வும் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்க செய்யவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடிந்தமை, அதன் தலைமைத்துவம் எமது நாட்டுக்கு கிடைத்தமை, எமது நாட்டின் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகும்.

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப் பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு போன்ற பாரிய சர்வதெசம மாநாடு ஒன்று முடிவடைந்ததன் பின்னர் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய இலங்கைக்கான மக்களின் ஆணையாக அமைந்த மஹிந்த சிந்தனைக்காக பொதுமக்களுக்காக முழு அளவிலான நிவாரணம் வழங்க முடிந்தது. நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், பாலங்கள் சமூகசேவை போன்ற பலதுறை களில் துரித முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை விளக்கிய ஜனாதிபதி எந்தவொரு அரச நிறுவனமும் தனியார்மயப்படுத்தப்படவில்லையென தெரிவித்தார்.

அத்துடன், வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வ தற்கு இதன் பின்னர் இடமளிக்கப்பட்ட மாட்டாதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட் டினார். நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரது ஆதரவும் இன்றியமையாது தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதே நேரம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பொதுநலவாய அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்தின் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொண்டார்.

பொதுநலவாய நாடுகளின் தலைமை பதவியை ஏற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பிரதி சபாநாயகர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தின் வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com