Wednesday, June 3, 2020

தேர்தலுக்காகத் தயாரிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலை நடாத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் தேர்தல் ஆணைக்குழுவூக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் இன்று கையளிக்கப்பட்டதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்பஇ தபால் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டிய முறைபற்றியூம் தபால் வாக்கெடுப்பை நடாத்துவதற்கு எவ்வாறான அரச அதிகாரிகளை நியமிப்பது என்பது பற்றியூம் வீட்டுக்கு வீடு சென்று தேர்தல் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டிய முறைகள் குறித்தும் தேர்தல் நடாத்தப்படும் நாளில் எவ்வாறான முறையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட வேண்டிய முறைகள் குறித்தும் சுகாதாரப் பிரிவினரின் திட்டம் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டது எனவும் பவித்ரா வன்னியாராச்சி தௌிவுபடுத்தினார்.


இந்த வழிகாட்டுதல்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்குக் கிடைத்தவுடனேயே, தேர்தல் நடாத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் மிகவும் அவசரமாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com