Wednesday, June 3, 2020

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பு சுகாதார முறைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை சுகாதார நடவடிக்கை மூலம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மாணவர்களின் பெற்றோர்களை விழிப்பூட்டும் விசேட செயலமர்வுகள் தற்பொழுது நடாத்தப்பட்டுவருகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலைகளின் பெற்றோரை விழிப்பூட்டும் செயலமர்வுகள் நேற்று மட்டக்களப்பு புனி தமிழ் கல்லூரி தேசிய பாடசாலை வின்சென்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலைகளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். அச்சுதனின் வழிகாட்டுலில் புளியந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் மாணவர்கள கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார முறைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் பயஸ்பத்மராஜா, வின்சென்ட் மகளீர் உயர் தரதேசிய பாடசாலை அதிபர் திருமதி தவதிருமகள் சுகுமார் உட்பட பல அதிகாரிகள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com