Friday, June 19, 2020

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சட்டத்தை நிறைவேற்ற முடியாமைக்கு ராஜித்தவே காரணம்! ஞானசார தேரர்

முன்னாள் அமைச்சர் ராஜிதா சேனாரத்னவின் அசமந்த நடவடிக்கைகளால் அளுத்கமயில் உள்ள தர்கா டவுனில் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசர தேரர் நேற்று உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழு முன் தெரிவித்தார்.

முஸ்லிம் அமைச்சர்களான எம். எச். எம். ஹலீம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோர் சில பௌத்த துறவிகளுக்கு பணம் கொடுத்து அவர்களை ஒரு அரசியல் கேடயமாக்கியுள்ளதாக தேரர் கூறினார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று மூன்றாவது நாளாகவும் கலகொஅத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்தார்.

ஞானசார தேரரின் சாட்சியம் தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com