Wednesday, April 22, 2020

தேர்தலைப் பிற்போடுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை அவசரமாகப் பிற்போடுமாறு கோரி 'ஜனபலவேக' கட்சியின் வேட்பாளர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜனபலவேக கட்சியின் மொனராகல மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடவுள்ள இந்திக்க விஜயபண்டார அத்தநாயக்க என்பவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மொனராகல மணிக்கூட்டு கோபுரத்தின் அருகிலேய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் குறித்த நபர் நடாத்திவருகின்றார்.

கொரோனா தொற்றின் காரணமாக இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் மாதாந்தம் ரூபா 20000 பெற்றுக்கொடுத்தல், சுகாதாரப் பிரிவினர் கொரோனாத் தொற்று முடிவுக்கு வந்துள்ளது என்று எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கும் வரை பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் திறக்காதிருத்தல், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரம், கிருமிநாசினிகள் பாேன்ற அனைத்தையும் இலவசமாக வழங்குதல் போன்றன அவரது உண்ணாவிரதத்திற்கு காரணங்களாகும். இந்த வேண்டுகோள்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்கும் வரை தான் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com