இலங்கைக்கு உதவ இந்தியப்படை வரும் என்பதை மறுக்கிறது இந்தியா!
இந்திய ஊடகமான பீரீஐ செய்திச் சேவையானது நேற்றைய தினம் வெளியிட்டிருந்த செய்தியை, இந்தியா மறுத்துள்ளது. அவ்வூடகமானது நேற்றைய தினச் செய்தியில் கொரேனா வைரசுக்கு எதிராகச் செயற்படுவதற்காக உதவும் வகையில் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு இந்திய அனுப்பவுள்ளது என்று செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளுக்கு வெவ்வேறான இந்திய இராணுவத்தை வெவ்வேறாக இந்தியா அனுப்பவுள்ளதாகவே அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றுக்கு எதிராக செயற்பட்டு நட்பு நாடுகளுக்கு உதவுவதற்கு இந்தியா தயராக இருக்கின்றது எனவும் பீரீஐ செய்திச் சேவை மேலும் தெரிவித்திருந்தது. என்றாலும், இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment