Sunday, February 16, 2020

கவேந்திர சில்வா விடயம் தொடர்பில் நேரடியாக ஆட்சேபனை தெரிவிக்கப்போகிறது அரசு!

இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் கவேந்திர சில்வாவை அமெரிக்காவுக்குள் உட்பிரவேசிப்பது தொடர்பில் அனுமதி மறுத்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பிலான விடயங்களைத் தெரிந்துகொள்வதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலெய்னா பீ டெப்லிட்ஸ் அவர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது கவேந்திர சில்வா மனித உரிமையை மீறியுள்ளார் எனக் குற்றம் சாட்டி, கவேந்திர சில்வா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குள் உட்பிரவேசிக்க முடியாது என்று சென்ற வெள்ளிக்கிழமை அமெரிக்க அரசாங்கத் திணைக்களம் அறிவித்திருந்தது.

எவ்வித ஆதாரமுமற்ற செய்திகளை வைத்துக்கொண்டு, அமெரிக்கா இராணுவத்தளபதி கவேந்திர சில்வா விடயத்தில் செயற்பட்டுள்ளமையை நேரடியாகத் தெரிவிப்பதற்காக இன்று இலங்கைகக்கான அமெரிக்கத் தூதுவர் வரவழைக்கப்படவுள்ளார் எனத் தெரிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com