Saturday, February 15, 2020

அஷ்ரப் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் நோயாளிகள்! அத்தியட்சகரை விரட்டக்கோரி துண்டுபிரசுரம்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகள் பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிவருவதாக குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள தாதியர்களுக்கெதிராக வைத்திய அத்தியட்சகர் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவரது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு துணைபோகும் செயற்பாட்டினை கண்டித்து கல்முனை பிரதேசம் எங்கும் எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டுப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுங்கள் சனிக்கிழமை(15) பிரதான வீதிகள் கடைகள் சந்தைகள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டுள்ளன.

இத்துண்டுப்பிரசுரத்தில் வெளியேறு..! வெளியேறு ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று என குறிப்பிடப்பட்டு எமது பிரதேசத்தில் அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற பாலியல் ரீதியான செயற்பாடுகளை கண்டும் காணாமல் செயற்பட்டு வருகின்ற வைத்திய அத்தியட்சகர் ரஹ்மானை வெளியேற்றி புதிய நிர்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டு கல்முனை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

மேற்குறித்த வைத்தியசாலையில் விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த துண்டுப்பிரசுரம் வெளியாகியுள்ளது.

இவ்விடயத்தை வெளியிட்ட விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவியின் உயிருக்கு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

புhலியல் துஷ்பிரயோகம் மற்றும் வைத்திய அத்தியட்சகரின் அசமந்தபோக்கு என்பவற்றை கண்டித்து பெண்கள் அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெத்து வருகின்றனர். இது தொடர்பாகஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் மகஜர் ஒன்று வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com