Monday, December 2, 2019

சுவிஸ் தூதரகஊழியர் விடயம் முற்றுகின்றது. மேஜர் அஜித் பிரசன்ன தூதரக வாயலில் உண்ணாவிரதம்.. வீடியோ

கடந்த 25ம் திகதி இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டதாகவும் , வீதியில் 2 மணிநேரம் அவரது விருப்புக்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் முறையிட்டிருந்தது.

இம்முறைப்பாட்டினை தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையில் பரஸ்பர கருத்துப்பரிமாறல்கள் முரண்பாடான அறிக்கைகள் வெளிவந்திருந்தது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் இன்று சுவிட்சர்லாந்தின் தூதரக அதிகாரிகளை சந்தித்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உயரதாகாரிகள் தாங்கள் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் அவ்வாறானதோர் சம்பவம் இடம்பெறவில்லை என்பதை தொழில்நுட்;ப ரீதியாக எடுத்துரைத்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்;டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம், இடம், சம்பந்தப்பட்ட வீதிகள், மற்றும் கடந்தப்பட்டதாக கூறப்படும் ஊழியரின் தொலைபேசி என்பவற்றை கொண்டு சீசீரிவி காட்சிகள், தொலைபேசி , ஜீபிஸ் ஆய்வுகளை மேற்கொண்டபோது முரண்பாடான மற்றும் ஒவ்வாத பெறுபெறுகள் கிடைக்கப்பெறுவதாக அரசதரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டுனெ பொலிஸார் வேண்டுதல் விடுத்துள்ளனர். ஆனால் குறித்த ஊழியர் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைக்கு முகம்கொடுக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை என்றும் தூதரகம் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த ஊழியரை பொலிஸாரின் விசாரணைக்கு பாரப்படுத்துமாறு கோரி இன்று தூதரகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன. இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த அவரது போராட்டம் நள்ளிரவு 11 மணியையும் தாண்டி தொடர்ந்து செல்கின்றது.

அவர் பதாதை ஒன்றை தாங்கியுள்ளார். அப்பதாதையில், „தூதுவரே, எம் தாய்நாட்டின் நற்பெயருக்கு தீங்கு செய்யாதீகள். பெண்மணியை பொலிஸாருக்கு வாய்முறப்பாடு வழங்க விடுங்கள்.' ‘the Ambassador of Switzerland, don’t tarnish the good name of my motherland. Let the lady give a statement to police,’ ' என எழுதப்பட்டுள்ளது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com