Monday, November 11, 2019

பிக்குணிகள் தேர்தலில் வாக்களிப்பதற்கான அடையாள அட்டை இல்லாததேனோ?

2019 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், பிக்குணிகள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அடையாள அட்டையொன்றை தேர்தல்கள் ஆணையகத்தினால் உருவாக்கிக் கொடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைக்கு இலங்கையில் 8000 அளவில் பிக்குணிகள் அடையாள அட்டையின்றி இருப்பதனால், அவர்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் குழுவினருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தினால் 'பிக்குணி' என்று அடையாள அட்டை வழங்கப்படாதிருப்பதும் புத்த சாசன அமைச்சினால் 'பிக்குணி' என அடையாள அட்டை வழங்கப்படாதிருப்பதும் இந்நிலைமைக்குக் காரணமாக உள்ளது.
இந்த பிக்குணிகள் தற்போது பயன்படுத்தி வருகின்ற அறிமுக அட்டையையேனும் பயன்படுத்தி வாக்களிக்க முடியுமாயிருந்தால், அவர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தலாம் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com