Wednesday, May 31, 2017

ஜீஎஸ்பி + கிடைத்தது இதற்காகத்தானாம்

நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜீஎஸ்பி + வரிச் சலுகை இந்த மாதம் 19ஆம் திகதி இலங்கைக்குக் கிடைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 27 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகின்றது. ஆனால், அரசியல் காரணங்களின் பின்னணியில்தான் இது வழங்கப்பட்டது என்பதுதான் உண்மை.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கடற்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு பிணையைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அந்த அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் சிலர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு முக்கிய அமைச்சரைச் சந்தித்து உரையாடினர்.

அந்த அமைச்சரோ பிணை சாத்தியமற்றது என்று கூறினார்.அவர் அதற்குக் கூறிய காரணம் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம். எமக்கு இப்போது ஜீஎஸ்பி + வரிச் சலுகை கிடைத்திருப்பதே அந்த அதிகாரியை உள்ளே போட்டதால்தான் என்று அமைச்சர் கூறினாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பிரதிநிதிகள் ''அப்போ எங்களைக் கா [கூ] ட்டிக் கொத்துத்தான் இந்தச் சலுகையைப் பெற்றீர்கள்போல''என்று ஆத்திரம் பொங்க நாகரீகமான வசனங்களால் கூறிவிட்டு வெளியேறினார்களாம். அமைச்சரோ எதுவும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தாராம்.

[எம்.ஐ.முபாறக் -

Read more...

மாணவிகள் மீதான பலாத்காரம் மூலமாக கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் தூண்டப்படுகின்றதா?

கடந்த 28.05.2017 ஞாயிறு பிற்பகல் மூதூர், பெரியவெளி கிராமத்தை சேர்ந்த ஆரம்ப பள்ளி மாணவிகள் மூன்று பேர்களை தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர்கள் வண்புணர்வுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் குற்றவாளிகள் யார் என்பதனை கண்டுபிடித்து அவர்கள் மீது பழிசுமத்தாமல், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரமானது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

குற்றவாளிகள் அனைத்து தரப்பிலும் இருக்கின்றார்கள். அதில் இனம், மதம், மொழி, ஜாதி, நிறம், பிரதேசம் என்ற எந்த வேறுபாடுகளும் கிடையாது. அத்துடன் உலகில் எந்தவொரு சமூகத்தையோ குறிப்பிட்டு, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள் என்று யாராலும் உத்தரவாதம் வழங்கவும் முடியாது.

அப்படித்தான் உத்தரவாதம் வளங்க முடியுமென்றால் நீதி மன்றங்களோ, பொலிஸ் நிலையங்களோ அவசியமில்லை. குற்றச் செயல்களை தடுத்து சட்டத்தினை நிலை நாட்டுவதற்கே பொலிஸ், நீதிமன்றங்கள் உலகின் அனைத்து பிரதேசங்களிலும் நிறுவப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால் அனைத்து இடங்களிலும் குற்றம் செய்யக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்!

மூதூரின் பெரியவெளி கிராமத்து தமிழ் மாணவிகள் விடயத்தில், உண்மை நிலையினை கண்டறிந்து குற்றவாளிகள் மீது விரலை நீட்டாமல், எடுத்த எடுப்பிலேயே “முஸ்லிம் காடையர்கள் தமிழ் மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார்கள்” என்ற பொறுப்பற்ற முறையிலான பிரச்சாரமானது அரசியல் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகின்றது.

அதாவது அமைதியான முறையில் ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களை பகமையாக்கி மீண்டும் கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தினை தூண்டுவதன் மூலம், அதில் அரசியல் குளிர் காய்வதற்கு சில தீய சக்திகள் முயற்சிக்கின்றதா?

அத்துடன் தமிழ் மாணவிகள் முஸ்லிம் காடையர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று குற்றம் சுமத்தியதுடன், கிழக்கில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரித்துள்ளார்கள் என்ற பிரச்சாரத்தினையும் இதனுடன் சேர்த்துள்ளார்கள்.

தமிழ் மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகளை இனம்கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது பற்றி சிந்திக்காமல், காணி விவகாரத்தினை இதனுடன் முடிச்சுப்போட்டது ஏன்?
கிழக்கில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதனை இவ்வளவு காலமும் ஏன் கூறவில்லை? கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருவதுடன், இரு கட்சிகளும் சேர்ந்தே கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்கின்றது.

தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றவர்கள் இந்த இரண்டு அரசியல் கட்சிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் பிரச்சினைக்கு ஏன் தீர்வுக்கான முன்வரவில்லை?

எனவேதான் 1990 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தினை தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்த சில தீயசக்திகள் மீண்டும் அதே நிலைமையினை தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.

இந்த விடயத்தில் தமிழ் பேசும் இரண்டு சிறுபான்மை சமூகத்தினர்களும் அவதானமாக இருப்பதுடன், மாணவிகள் மீது பலாத்காரம் மேற்கொண்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இதேநேரம் சந்தேகநபர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை முஸ்லிம் சமூகம் எந்த அடிப்படையிலும் பாதுகாக்க முயல்வது தவறானதாகும். அவர்களுக்கு சட்ட உதவிகளையோ அன்றில் உளவியல் உதவிகளையோ வழங்குவது குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக அமையும். கடந்தகாலங்களில் இவ்வாறான குற்றவாளிகள் முஸ்லிம் என்ற இனப்போர்வையினுள் ஒழிந்துகொண்டதன் விளைவுகளே இன்று ஒரு முஸ்லிம் தவறு செய்கின்றபோது, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் குற்றவாளிகளாகவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

Read more...

பணம் பத்தும் செய்யும்

ஜி.ஜி. பொன்னம்பலம் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்.ஒரே ஒரு வட இலங்கைத் தமிழர்களின் தலைவராக இருந்தவர்.ஒரு அரசியல் தலைவர் என்பவர் சமூக அக்கறை உள்ளவராக நல்வழுப்படுத்துபவராக இருக்கவேண்டும்.சமூக நலன்களுக்காக தியாகங்கள் செய்யக்கூடியவரே நல்ல தலைவர்.

ஜி.ஜி. பொன்னம்பலம் ஒரு சிறந்த குற்றவியல் வழக்கறிஞர் .இவரின் மெய் பாதுகாவலராக ஓ.சி.கொரியா எனபவர் இருந்தார். இவர் ஒரு பிரபலமான குற்றவாளி என அறியப்பட்டவர். 1958 பாராளுமன்றம் முன்பாக நடந்த தமிழரசுக்கட்சி நடாத்திய சத்தியாக்கிரகத்தை ஒரு கிண்டலுக்காக பார்வையிட ஓ.சி.கொரியாவையும் அழைத்துக் கொண்டு வந்ததாக படித்தேன்.

இந்த தமிழர் தலைவர் பொன்னம்பலம் பல குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்றியவர்.தமிழ் நாட்டில் கருணாநிதிக்கு எதிரான ஊழல் வழக்கிலும் ஆஜரானார். கற்பழிப்பு, பெண் கடத்தல், கொலை, களவு என பல விவகாரங்களில் சிக்கிய தமிழ்,சிங்கள இஸ்லாமிய குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்றிய கதைகள் பலர் பலவிதமாக கூறக் கேட்டிருக்கிறேன்.

கோகிலாம்பாள் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் அமிர்தலிங்கம் வாதாடியதாக சொன்னார்கள்.ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை காப்பாற்ற ராம் ஜெத்மலானி,நாரிமன் போன்ற புகழ் பெற்ற வக்கீல்கள் உதவினார்கள்.

இப்படியாக குற்றவாளிகளை காக்க என்று பலர் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கிறார்கள்.

வித்தியா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு இன்னமும் இழுபறி நிலையில் உள்ளது. இது முடியுமுன்பாக மூதூரில் ஒரு சம்பவம் அரங்கேறிவிட்டது.

இந்த சம்பவத்தை ஒரு குற்ற சம்பவமாக பார்க்காமல் இனரீதியான வன்மம் என்றே பலர்( தமிழர்கள்) பதிவு செய்கிறார்கள். அந்த இடத்தில் அந்த நேரத்தில் ஒரு இஸ்லாமிய பெண்ணோ அல்லது பௌத்த பெண்ணோ போயிருந்தாலும் அவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதுதான் நடந்திருக்கும்.இதை இனரீதியாக பார்பதால் சம்பந்தப்பட்ட மதத்தை சேர்ந்தவர்களால் எந்த கருத்தையும் கூறமுடியாமல் தவிக்கிறார்கள் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

சில மாதங்கள் முன்பாக மட்டகளப்பில் ஒரு பெண் தற்கொலை செய்தார்.அவரின் தற்கொலைக்கு காரணமானவனை இனரீதியாக ஏன் அடையாளப்படுத்தவில்லை. ஆனால் இந்த கற்பழிப்பு சம்பவம் மட்டும் இரு ----- இளைஞர்கள். என ஏன் அடையாளப்படுத்த வேண்டும். இது வக்கிரமானது.

செல்வச் சந்நிதி,நல்லூர் போன்ற கோவில் திருவிழாக்களில் எவ்வளவு அசிங்கமாக நமது இளைஞர்கள் நடந்துகொள்கிறார்கள்.இதை என் இளம் வயதில் அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறேன். எத்தனை கற்பழிப்பு சம்பவங்கள் தமிழர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.பொலி கண்டி கமலம் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு பிரபலமானது.

அந்த கமலம் கொலை வழக்கில் பல பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளியை பாதுகாக்க கமலம் தன்னுடைய காதலி என வாய் கூசாமல் பொய்ச் சாட்சி சொன்னார்கள். இறந்த பின்னும் அந்த கமலம் சட்டத்தின் முன்பாக கேவலப்படுத்தப்பட்டாள்.இதை எந்த ஊடகமும் இன முலாம் பூசவில்லை.இந்த வழக்கின் தீர்ப்பு ஜூரிகளின் கைகளில் திணிக்கப்பட்டது.குற்றவாளி ஏகமனதாக ஜூரிகளின் சிபாரசில் விடுதலையானான்.

அந்த நாட்களில் வடக்கில் ஒரு அரசியல்வாதியின் சகோதரியையே ஒருவர் கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்தார்.1976 இல் ஒரு நீதிபதி இளம் பெண் சட்டத்தரணியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரவலாக பேசப்பட்டது. இதுவும் குடாநாட்டில்தான்.

எனது கிராமத்தில் 1975 இல் நடுத்தர வயது குடும்பப் பெண்ணும் ஒரு ஏழு வயது சிறுமியும் கற்பழிக்கப்பட்டனர்.மேல சொல்லப்பட்ட சம்பவங்களுக்கு தமிழர்கள் என ஏன் வசை பாடமுடியவில்லை.

இவ்வாறான குற்ற சம்பவங்கள் எங்கும் பொதுவானவை. கண்டிக்கப்பட வேண்டியவை.தடுக்கப்பட வேண்டியவை. வேறு மதம் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்காக மத முலாம் பூசுவது நல்லதல்ல. இந்த சம்பவத்துக்காக அந்த மதம் சார்ந்த எத்தனைபேர் அவிமானத்துடன் தலை குனிந்து நிற்கிறார்கள். காரணம் அவரகளின் மதத்தவன் என்ற ஒரே காரணம்.

குற்றவாளிகளை குற்றவாளிகளாக பாருங்கள்.தமிழ,சிங்களம்,இஸ்லாம் என இனமத அடையாளம் போடவேண்டாம்.

இந்த குற்றவாளிகளை காக்க ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற சிலர் வரலாம்.அதற்கும் மத முலாம் பூசவேண்டாம்.ஏனென்றால் பணம் பத்தும் செய்யும்.

இந்த சட்டம் சம்பந்தப்பட்டவர்கள் பணத்துக்காக எதையும் செய்பவர்கள்.நீதியைக் காப்பவர்கள் மிக குறைவானவர்களே.கேட்டால் தொழில் தர்மம் என்பார்கள்.

Vijaya Baskaran

Read more...

Tuesday, May 30, 2017

அமைச்சுப் பதவி + இரண்டு கோடி

மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

தம்புள்ளை தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனக பண்டாரவின் மகன் மத்திய மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தார்.

மைத்திரி அணியினர் முயற்சி செய்து ஜனக பண்டாரவின் சகோதரரின் மகனையே வெற்றிடமான அந்த அமைச்சுப் பதவிக்கு நியமித்துவிட்டனர்.இதனைத் தொடர்ந்து வட மத்திய மாகாண சபையிலும் குழப்பம்.

மே தின நிகழ்வை அடுத்து வட மத்திய மாகாண சுகாதார அமைச்சராக இருந்த மஹிந்தவின் விசுவாசியான கே.எச்.நந்தசேனவை மைத்திரி அப்பதவியில் இருந்து நீக்கினார்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எஸ்.எம்.சந்திரசேன அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து எஸ்.எம்.சந்திரசேனவை முதலமைச்சராக நியமிக்குமாறு கோரி மஹிந்த உறுப்பினர்கள் 17பேர் கையெழுத்திட்டு ஆளுநரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

அந்த மகஜர் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த 17பேரில் ஒருவரான சுசில் குணரட்ன மறுநாள் மைத்திரி பக்கம் பல்டி அடித்துவிட்டார்.பல்டியடித்த அவருக்கு எஸ்.எம்.சந்திரசேன வகித்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

மேலும் அடுத்தடுத்து இரண்டு பேர் மைத்திரி பக்கம் தாவி அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டனர்.இவர்களை வளைத்துப் போடுவதற்கு மைத்திரி தரப்பு எவ்வாறான பேரம் பேச்சுக்களை நடத்தியது என்று பாருங்கள்.
முதலைமைச்சர் பதவியைக் கைப்பற்றுதல் என்ற முடிவை அந்த 17பேரும் எடுத்ததும் அவர்கள் மஹிந்தவைச் சந்தித்து அவர்களின் நிலைப்பாட்டைக் கூறினர்.அந்தச் சந்திப்பில் 16 பேரே கலந்துகொண்டனர். மைத்திரியிடம் மத்திய அரசின் அதிகாரம் இருக்கும்போது இது சாத்தியமற்றது என்று மஹிந்த அவர்களிடம் விளக்கிக் கூறினார்.

அப்போது அவர்களுள் இருவர் ''சேர் மைத்திரி பக்கம் மாறினால் அமைச்சுப் பதவியும் இரண்டு கோடி ரூபா பணமும் தருவதாக மைத்திரி தரப்பு எங்களிடம் கூறியுள்ளது.நாங்கள் போகமாட்டோம்''என்றனர்.

அப்போது 17ஆவது நபர் உள்ளே நுழைந்தார்.ஏன் தாமதம் என்று வினவப்பட்டது.மைத்திரி பக்கம் பல்டியடித்தால் இரண்டு கோடி ரூபா பணமும் அமைச்சுப் பதவியும் தருவதாக மைத்திரியின் ஆட்கள் அவரைக் கூப்பிட்டுப் பேசியதாகவும் அதனால்தான் தாமதம் என்றும் கூறினார்.

''நான் பல்டியடிக்கமாட்டேன்.ஆனால்,யாராவது அவ்வாறு செய்வதற்கு நினைத்திருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தை எனக்குத் தாருங்கள்.எனக்கு பணப் பிரச்சினை அதிகம் உண்டு''என்று அந்த நபர் மஹிந்தவிடம் கூறினார்.
இதைக் கேட்டு மஹிந்த சற்று ஆடியே போனார்.இருந்தும்,மறுநாள் அவர் உட்பட மூவர் மைத்திரி பக்கம் தாவி அமைச்சுப் பதவியைப் பெற்றுவிட்டனர்.

அமைச்சுப் பதவி மாத்திரமன்றி அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறு என்னவெல்லாம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

எம்.ஐ.முபாறக்

Read more...

Monday, May 29, 2017

பெண்கள் எப்படி ரஷ்சியப் புரட்சியைத் தொடக்கினார்கள். வ.அழகலிங்கம்

ஒவ்வொரு மொழியிலும் உள்ள மிகவும் வீரமான வீறாய்ந்த சொல் புரட்சி என்ற சொல்தான். இந்தச் சொல்லாக் கேட்டால் மெய்தான் அரும்பி விதிர் விதிர்க்கும். இது சிலிர்ப்பிக்கும் மற்றும் அதிரவைக்கும், மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும். கொடுங்கோலர்களும் மற்றும் காலத்திற்கேற்ப தகவமைப்பவர்களும் கொள்கைமாறிகளும் அதற்கு அஞ்சுவர்.

ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டு ஆனந்தமடைந்து அதைப் பாராட்டுவர். ரஷ்சிய வரலாற்றின் பிப்ரவரி 1917 ன் பெரிய நிகழ்வுகள் செத்த வரலாறல்ல. இந்தப் பெரும் சமூகமாற்றத்தைச் செய்த தைரியமான ரஷ்சியப் பெண்களுக்கு, அந்தப் பாடங்களைக் கற்று அவைகளை இன்றைக்கு பிரயோகிப்பதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும். இன்றுவரையுள்ள மனித வரலாற்றில் அது மிகப்பெரிய ஒற்றை நிகழ்வு ஆகும். மற்றும் அந்தப் பெண்கள் வரலாற்றின் வீரங்கனைகள்.

'பெண்களின் கிளர்ச்சி எழுச்சிகள் இன்றி பெண்களின் ஊக்கமான உற்சாகமான பங்களித்தல் இன்றி பெரிய சமூகப் புரட்சிகள் சாத்தியமற்றது என்பதை வரலாற்றைப் பற்றி ஏதாவது தெரிந்த எல்லா மனிதர்களும் அறிவார்கள்.,,

லுட்விக் குகெல்மனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம், டிசம்பர் 12, 1868.


ரஷ்யாவில் பெண்தொழிலாளர்களால் எவ்வாறு ஒக்டோபர் புரட்சி தூண்டிவிடப்பட்டது? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1917 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினத்தில் ரஷ்ய புரட்சி தூண்டிவிடப்பட்டது. மார்ச் 8, 1917 இல் பெட்ரோகிராட்டில் ரஷ்ய புரட்சி பெண்களால் தூண்டிவிடப்பட்டதானது உலகத்திற்கு ஒரு பெரிய படிப்பனையாகும். அதன் பின்பு உலக அரசுகள் பெண்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை. ஒரு பெண் அரசியற்போராட்டத்தில் கலந்து கொள்ளுவதென்றால் அது ஒரு குடும்பம் கலந்துகொள்வதாகிவிடும். அதன் தாக்கத்தால் ஒருசமுதாயம் அரசியற் போராட்டத்தில் கலந்துகொள்வதாகி விடும். சர்வதேச மகளிர் தினமான அந்த துரதிர்ஷ்டமான காலையில், பெண் தொழிலாளர்கள் தங்கள் கருவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறித் தெருக்களில் சென்றனர். அன்று அவர்கள் ஆயிரக்கணக்கான பெண்களை வீதிகளிலே சந்தித்தனர். அவர்களில் பலர் இராணுவ வீரர்களின் தாய்களும் தாய்மைப் பேறுபெற்ற மனைவிமார்களும். 1914 யுத்தம் தொடங்கிய நாளிலிருந்து மெல்ல மெல்ல அவர்களின் குழந்தைகள் பசியால் வாடுவதையும் பட்டினியாற்சாவதையும் அலறல்களையும் இனிமேற் சகிக்கமுடியாத நிலையை அடைந்தனர். சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. சுடலைகள் நிரம்பி வழிந்தன. சாவுமணிகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இந்த நிலைமைகள் மக்களை மனச்சோர்வடையவைத்தது.

1914 ல் முதலாம் ஏகாதிபத்திய யுத்தம் தொடங்கியதிலிருந்து இந்த முடிவில்லாத யுத்தம் நகரத்தை நரகமாக்கியது. நகரத்திலே நீண்ட கியூ வரிசைகளிலே பாணுக்காக காத்திருக்க வைத்தது. பாணுக்கு வரிசைகளிலே கால்கடுக்க நிற்பது நகரத்தின் நித்திய நிரந்தர நிகழ்சியாகியதை மூன்று வருடங்களாகப் பொறுத்தனர். இது தாய்மார்களால் விடுக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பொருளாதார மற்றும் அரசியல் அறிக்கையாகும். அந்தக் காலத்தில் பெட்ரோகிராட் தொழிலாளர்களில் 47 சதவிகிதம் பெண்களாகும். பெண்களின் இந்தப் போராட்டம் மற்றும் ஆண் தொழிலாளர்களையும் வேலையை விட்டு வீதியிலே இறங்கும்படி தூண்டியது. இது நகரின் பொருளாதார வாழ்வைத் திறம்பட மூடியது. பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் ரஸ்சியாவுக்கு ஓர் அடிப்படை மாற்றம் தேவை என்று ஜார் நிக்கோலஸ் அரசாங்கத்திற்கு அறிவித்தனர்.

1917 மார்ச் 8 ம் திகதி பெண்களின் இந்த நடவடிக்கைகள் தன்னிச்சையானது போலப் பலருக்குத் தோற்றமளித்தது. இது உண்மையில் பெட்ரோகிராட்டின் ஆடைத் தொழில்களில் ஈடுபடும் பெண்களின் தொழிலாளவர்க்க போராட்டப் பாரம்பரியத்தின் மகத்தான பகுதியாகும். அவர்கள் வெகுசன வேலை நிறுத்தத்தின் சக்திபற்றி உணர்மையடைந்தே இருந்தார்கள். இந்த உணர்மையை உயர்த்தியதே லெனினது போல்சவிக் கட்சியின் மாபெரும் சமூகப் பங்களிப்பாகும். பெண்கள் இந்தப் போராட்டத்தின் மத்தியிலே சம உரிமைகள் வேண்டும், சமுதாய நலன்புரி சேவைகள் வேண்டும் என்ற சமூகநல அரசியற்கோரிக்கைகளையும் அதனோடு இணைத்தே கோரிப் போராடினர். மாக்ஸ்சியம் எப்பொழுதும் பொருளாதார, சமூகநல, அரசியற் கோரிக்கைகள் என்ற மூன்றையும் இணைத்தே தமது கோரிக்கைகளாக வைத்துப் போராடும். இது ஒன்றே தொழிற்சங்க வாதத்திலிருந்தும் தேசியவிடுதலை வாதத்திலிருந்தும் மாக்ஸ்சியத்தை வேறுபடுத்திக் காட்டும். தொழிற்சங்க வாதம் தனித்துப் பொருளாதாரக் கோரிக்கையை மாத்திரம் முன் வைக்கும். தேசியவிடுதலை வாதம் வெறுமனே அரசியற் கோரிக்கையை மாத்திரம் முன்வைக்கும். இந்த மூன்றையும் ஒன்றிணைக்காமையே வரலாற்றில் ஆயிரக்கணக்கான வெகுஜனப் பேரெழுச்சிகளை எதிர்ப்புரட்சிகள் நசுக்கியது.

ரஷ்யாவில் ஏற்பட்ட சர்வதேச மகளிர் தின எதிர்ப்பு இதுதான் முதற்தடவை அல்ல. 1913 லேயே பெண்களுக்கு வாக்களிக்கும் சமஉரிமையைக் கோரி நாட்டிலுள்ள அனேக நகரங்களில் ஆர்ப்பாட்ட அணிவகுப்புகளை ரஸ்சியப்பெண்கள் நடாத்தினார்கள். 1800 களின் பிற்பகுதியில் தொடங்கி, பெண்களுக்கு வாக்குப்பதிவு செய்வதற்கு மட்டுமல்லாமல், கல்விக்கான உரிமையையும் கோரி எத்தனையோ போராட்டங்களை நடாத்தியிருக்கிறார்கள். பாஸ்போர்ட் அடக்குமுறை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அதாவது அந்தக் காலத்தில் பெண்கள் எப்போதும் ஓர் ஆண் உறவினருடன் சேர்ந்தே பயணம் செய்யவேண்டும். அல்லது வேலைகள் மாறும்போது ஏற்படும் ஒப்பந்தங்களின் போது எப்பொழுதும் ஓர் ஆண் துணை சமூகமளிக்க வேண்டும். இவைகளையெல்லாம் ரஸ்சியப் பெண்கள் போராடி மாற்றினார்கள். வேலைத்தலங்களிலே பெண்தொழிலாளர்கள், அடிக்கடி செய்த கலகங்களை அலெக்ஸாண்ட்ரா கொல்லொண்டாய் பதிவுசெய்திருக்கிறார். 1890 களின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முக்கியமாக பெண்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் பல தொந்தரவுகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் இருந்தன: ஷாங்காயில் இருந்த புகையிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகளில், பெட்ரோகிராடில் இருந்த மேக்ஸ்வெல்,, நூற்பு மற்றும் நெசவு ஆலைகள் போன்றவற்றில் இப்படியான போராட்டங்கள் நடைபெற்றன. இப்படித்தான் ரஷ்யாவில் தொழிலாள வர்க்க இயக்கம் மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து வலிமை பெற்று, தன்னைத்தானே கட்டமைத்து, உருக்கு உறுதிவாய்ந்த நிறுவனமாகி புரட்சி செய்யும் வலிமையைப் பெற்றது. சமுதாய ஒட்டுண்ணிகளான போகவதிகளுக்கும் சமுதாயக் கடமையுணர்வோடு சமுதாய உணர்மையடைந்த ரஸ்சியப் பெண் பாட்டாளி வர்க்கத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ரஸ்சியாவிலே உலகின் முதலாவது சோஷலிச புரட்சி நிதர்சனமானது ஏதும் தற்செயல் அல்ல. ஒட்டுமொத்த வெகுசனங்களின் சிந்தனைகளின் கூட்டுத்தொகையின் சராராசரிப் போக்கு புரட்சிப் புள்ளியை நோக்கிய திசையில் பரிணமித்ததின் விளைவே ரஸ்சியப் புரட்சியாகும்.

ஏழைகளுக்கு கிடைக்கும் உணவுகளின் கடுமையான பற்றாக்குறையே 1917 மார்ச் 8 இன் வெகுஜனஎழுச்சியைக் கூடுதலாக ஊக்குவித்த காரணியாகும். முதலாம் உலகயுத்தத்தின் போது ஏற்பட்ட சமூக நெருக்கடி ஆழமடைந்ததால், உணவு பற்றாக்குறைக் கலகங்களுக்கு வழிவகுத்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில், பெண்கள் பேக்கரி ஜன்னல்களை உடைத்து, உள்ளே இருந்த பாண்களை எடுத்து வீதிகளில் குவிந்த பட்டினிப் பட்டாளங்களுக்கு வழங்கினர். போர்க் காலத்தில், பெட்ரோகிராடில் உள்ள பெண்கள் இரண்டொரு நாளைக்கு ஒருக்காவாவது குழந்தைகளுக்கு பட்டினியாற் கிடக்கும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உணவு கொடுக்கப் பத்து மணிநேரத்திற்கு மேலாகப் பட்டினத்திலே அலைந்து திரிய வேண்டியிருந்தது. இந்தச் சனக் கூட்டங்களைப் பார்த்த ஜாரின் இரகசிய போலீஸார் இது ஒரு நாளைக்கு ஒரு வெகுஜன எழுச்சியாக வெடிக்கக் கூடும் என்று முன் அனுமானித்திருந்தனர். இது பெண்களும் குடும்பங்களின் தாய்மார்களும் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து காத்திருந்து, காலமெல்லாம் காத்திருந்து அலுத்துப்போய், அவர்களின் கண்களுக்கு முன்னாலேயே பட்டினியாலும் அதன்காரணமாய் நோய்வாய்ப் பட்டும் இருக்கும் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்துப் பரதவித்து இந்த ஆட்சியின் கீழ் வாழ்வதிலும் ஒரேயடியாய்ச் சாவது மேலென்று மாறி மாறி ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளுவது ஒவ்வொரு கணநேரக் காட்சியாகவும் இருந்தது.

1917 மார்ச் 8 ம் திகதி பெண்களின் நடவடிக்கைகள் முற்றிலும் எதிர்பாராதவை அல்ல. ஆச்சரியம் என்னவென்றால் அவர்களின் போராட்ட வடிவம் பிரமிப்பானதாக இருந்தது. பாண் கலவரங்கள் மற்றும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெட்ரோகிராட் முழுவதும் எந்த முன் திட்டமும் இல்லாமல் ஓர் ஒருங்கிணைந்த வெகுஜன வேலைநிறுத்த ரூபத்தில் வெடித்தது. அது பல நாட்கள் நீடித்தது. அடுத்த நாள் ஒரு பொது வேலைநிறுத்த வடிவத்தை எடுத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சார்பாக இராணுவமும் பொலீசும் மாறியது. பல இடங்களில் சிப்பாய்க் கலகங்கள் ஏற்பட்டன. பெப்ரவரி 10 ல் ஒரு பொதுவேலை நிறுத்தம் ஏற்பட்டது. பெப்ரவரி 13இல் சார் மன்னனின் மந்திரிகள் கைது செய்யப் பட்டனர். இந்தப் புரட்சி எந்த உண்மையான தலைமை அல்லது முறையான திட்டமிடல் இன்றி, எந்தக் கட்சியின் வழிநடத்தலுமின்றி அனாமதேயமாகவும் தன்னிச்சையாகவுமே தோன்றி வளர்ந்தது. நகரம் குழப்பங்களால் நிரம்பி வழிந்தது. அனேகமான துருப்புக்கள் அரசுக்கு விசுவாசமின்றி விட்டோடியதோடு எழுச்சிகொண்ட மக்களோடு இணைந்து கொண்டனர். 1905 புரட்சியில் உருவாகிய சோவியத் என்ற தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகள் அமைப்பு மீண்டும் புதிதாக உருவாகியது. ரஷ்சியாவின் நிக்கொலஸ் சார் மார்ச் 15இல் தனது ஆட்சியைவிட்டு ஒடி ஒழித்துக் கொண்டார். 300 வருடங்களுக்குப் பிறகு கொடுங்கோன்மை சார் ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. ரஷ்சியப் பேரரசு வீழ்ந்தது. முதலாவது உலக யுத்தம் ஜேர்மானிய, ஆஸ்திரிய, ரஸ்சிய மூன்று பேரரசுகளையும் வீழ்த்தியது. மூன்று நாடுகளிலும் சோஷலிசப் புரட்சிக்கான கிளர்ச்சி எழுச்சிகளும் வெடித்தன.

இந்தப் புரட்சியின்போது லெனின் சுவிற்சலாந்திலுள்ள சூறிச்மாநகரில் அரசியற் தஞ்சம் கோரியிருந்தர். முதலில் புரட்சி நடந்த செய்தி கிடைத்தவுடன் லெனின் அதை நம்பவே இல்லை.

குறுப்ஸ்கயாவின் நினைவூட்டல்:


'ஒரு நாள், லெனின் மதியபோஷனத்திற்குப் பின்னர் நூலகத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது நான் உணவுப் பாத்திரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் கணத்தில் அவசர அவசரமாக பொறொன்ஸ்கி ஒரு செய்தியோடு ஓடிவந்தார். நீங்கள் செய்தியை அறிந்தீர்களா? ரஷ்யாவில், புரட்சி வெடித்துள்ளது. தான் அதைச் சிறப்புப் பதிப்புகளில் படித்ததாகக் கூறினார். பொறொன்ஸ்கி
வீட்டைவிட்டுப் போனபின்னர் சூரிச் ஏரிக்கரையில் எல்லாப் பத்திரிகைகளும் விற்பனைக்காகத் தூங்கவிடப்படும் இடத்திற்குப் போய்ப் பார்த்தோம். நாம் அந்தச் செய்திகளை மீண்டும் மீண்டும் படித்தோம். ரஷ்யாவில், உண்மையிலேயே புரட்சி வெடித்துவிட்டது. லெனினின் மூளை மிகவும் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

சினோவேவ்வும் றடக்கும் சுவிற்சலாந்திலேயே இருந்தனர். லியொன் ரொக்ஸ்சி நியூ யோர்க்கில் இருந்தார். ஸ்டாலின் கமனேவ் மற்றும் மற்றய போல்சவிக் தலைவர்கள் எல்லாம் சார் மன்னன் விட்டோடிய பின்னரே பீற்றஸ்பேர்க்குக்கு வந்தனர்.

பிப்ரவரி புரட்சி ஜார்ச ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவியது.

இந்தப் பிப்ரவரி 1917 புரட்சியானது, ரஷ்சியாவின் போருக்கு முந்திய அரசியல் மற்றும் பொருளாதார உறுதியற்ற நிலமைகளால், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலையில் இருந்ததால், மற்றும் அடிப்படை சமூகப் பிளவுகள் ஆகியவற்றால், யுத்த முயற்சிகளின் ஒட்டுமொத்த தவறான வழிகாட்டுதலால், இராணுவத் தோல்விகளால், உள்நாட்டு பொருளாதார முரண்பாடுகளால், மற்றும் மன்னரைச் சுற்றியுள்ளவர்களின் கொடூரமான ஊழல்களால் ஏற்பட்டது.

அதன் பழமையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதில் தோல்வி கண்டதால் ஏற்பட்டது. சுதந்தர வர்த்தக முதலாளித்தவத்திற்கும் வரம்பற்ற அதிகாரமுடைய தனிமனித சார் சர்வாதிகார ஆட்சிக்குமிடையே இசைந்துபோக முடியாமையால் ஏற்பட்டது. விவசாயிகளைக் பண்ணையார்கள் கொடூரமாக நடாத்தியது, நகர தொழிலாளர்களின் மோசமான வேலை நிலைமைகள், வளர்ந்து வந்த தொழில்துறைப் பொருளாதாரம், மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மேற்கு நாடுகளில் இருந்து ஜனநாயக கருத்துக்களை பரப்பி, குறைந்த வகுப்புகளின் வளர்ந்துவரும் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது.
ஏன் இப்படியான வெகுஜனப் புரட்சிகள் ஏற்படுகின்றன. இதை மார்க்ஸ் சமூக உருமாற்றமும் சமுதாயச் சிந்தனைமாற்றத்தல் (பதார்த்மாற்றத்தால); ஏற்படுபவை என்கிறார். social metamorphosis and social metabolism என்று தனது மூலதனம் முதலாம் பாகத்தில் குறிப்பிடுகிறார். பக்கம் 198. Marx introduces for the first time the concept of Metabolism. The chemical processes that occur within a living organism in order to maintain life. This bilogical analogy plays a cosiderable part in his analysis.

மார்க்ஸ் முதல் முறையாக(ஜீவத்துவ பரிணாமம); வளர்சிதை மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறார். உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரு உயிரினத்துக்குள் ஏற்படும் இரசாயன செயல்முறைகள் அதாவது பதார்த்த மாற்றங்கள்;. உண்ணும் உணவுகள் உயிர்வாழ்வனவின் உடலப்பகுதிகாளாக மாறும் இரசாயனம். இந்த உயிரியல் ஒப்புமை மாக்ஸ்சினது பகுப்பாய்வில் கணிசமான பங்கை வகிக்கிறன.

மாக்ஸ்சியம் என்பது ஒரு வெகுசன எழுச்சிமூலம் பழைய சமுதாயத்தைப் புதியசமுதாயத்தால் இடம்பெயர்க்கும் நிகழ்வுப் போக்காகும். குட்டிமுதலாளித்துவக் குறுங்குழுக் கொரில்லா வாதத்தை மாக்ஸ் அறவே வெறுக்கிறார். ஒரு சமுதாயத்தின் வெகுசனக் கடமையை எந்தக் குறுங்குழுவாலும் பிரதியீடு செய்ய முடியாது என்பதுவே மாக்சியமாகும். குறுங்குழுச் சதியால் வரலாற்றை மாற்ற முனைவதை மாக்ஸ்சியம் பிளாங்கிசம் என்று சொல்லும்.

முதலில் உயிரியல் உருமாற்றத்தில் லாவா அதாவது மயிர்கொட்டி கூட்டுப்புழுவாக(பியூப்பா) மாறிப் பின் வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கிறது. மயிர்கொட்டி வேண்டிய அளவுக்கு ஊட்டப்பெருட்களை உண்டு பெருத்தபின்தான் அதன் உறங்குநிலைக்குப் போகும். லாவா போதிய அளவு ஊட்டப் பொருட்களை உண்ணாது விட்டால் அதன் உறங்குநிலைக்காலத்தில் செத்துவிடும். கூட்டுப்புழுப் பருவத்தில் எந்த இயக்கமும் இன்றி அதன் உடல் மூலக்கூறுகள் கரிமப்பொருள்களாக மாறும் வேதியல் மாற்றத்திற்கு உட்பட்டு வேறுபதார்த்தங்களாக மாறுகின்றன. இந்த வேதியல் தாக்கங்கள் அதாவது (மெட்டாபோலிசிம்) நிகழாவிடில் உருமாற்றம் ஏற்படாது. கூட்டுப் புழுக்காலத்தில் ஏதாவது சிறு அசைவு ஏற்பட்டாலும் இந்த நிகழ்வு ஏற்படாது. கூட்டுப் புழுச் செத்துவிடும். வண்ணத்துப் பூச்சியும் உருவாகாது.

இந்த இயற்கை விஞ்ஞானத்தை மாக்ஸ் சமூகவிஞ்ஞானத்துக்குப் புகுத்துகிறார். அதை அவர் சமூக உருமாற்றமும் சமுதாய வளர்சிதைவும என்கிறார். (சோஷிசியல் மெட்டாபோலிசும்). அதாவது 300 வருடங்களுக்கு மேலாக இருந்த தனிமனித சர்வாதிகார சார் ஆட்சிமுறை சமுதாய ஆட்சிமுறையாக மாறிய நிகழ்வுப் போக்கு. முடிமன்னர் ஆட்சிமுறை சோஷலிசமாகிய நிகழ்வுப் போக்கு.

சமூக வளர்சிதை மாற்றம்(Social metabolism)


முரண்பாடான மற்றும் பரஸ்பர பிரத்தியேக சூழ்நிலைகளால் சமூகம் மாறுகிறது. சமூகத்தின் மேலதிக வளர்ச்சியானது இந்த உள் முரண்பாடுகளை அகற்றுவதில்லை, மாறாக சமூகம் செல்ல வேண்டிய இடத்திற்கு ஏற்ப உள்நிலமைகளை வழங்குகிறது. இது பொதுவாக, உண்மையான சமூக உள்முரண்பாடுகள் தீர்க்கப்படும் வழியாகும். இந்தச் சமூகமுரண்பாடு தொடர்ந்து வேறொரு சமூகமாக மாற்றிக்கொண்டே இருக்கும். அது மாறின அந்தக் கணத்திலேயே வேறொன்றாக மாறிவிடும். இது தொடர்ந்து நடைபெறும். இப்படியான இயக்கங்களினால் சமுதாய முரண்பாடுகள் தோன்றித் தோன்றி மறையும். இந்த நிகழ்முறையானது சமூக வளர்சிதை மாற்றத்தின் ஒரு செயல்முறையாகும். இங்கே மார்க்ஸ் முதன்முறையாக சமூக'வளர்சிதை மாற்றம்' பற்றி அறிமுகப் படுத்துகின்றார். அதாவது புறநிலை மாற்றங்களின் தாக்கங்களினால் அகவய மாற்றங்கள் ஏற்படுவதைக் காட்டுகின்றார். இதுவரை மனிதவாழ்வக்கு அனுகூலமாக இருந்த ஒரு வகையான மனித சமுதாயமானது புதிதாகப் பொருத்தமான வேறொரு சமுதாயத்தால் மாற்றப்படுது. ஒரு சமுதாயம் வரலாற்றுரீதியாக மானிடம் இணக்கமாக இசைந்து வாழ்வதற்குப் பொருத்தமில்லாததாக ஆகிவிட்டதால் புதிதாக மானிடவாழ்வுக்கு ஏற்றதாக அந்த சமுதாயம் மாற்றப்படுகிறது. முன்னாள் சமுதாயம் மட்டுமே இங்கே எங்களுக்கு ஆர்வமாக உள்ளது.

முழு செயல்முறையையும் அதன் வழக்க விதிமுறைகளின் அம்சமாக நாங்கள் சிந்தித்துப்பார்த்தால் அதாவது, சமூகத்தின் வடிவமாற்றம் அல்லது சமூகத்தின் உருமாற்றம் ஆகியவைகள் சமூக வளர்சிதைமாற்றத்தினால் (சமூக சிந்தனை மாற்றம்) உண்டாக்கப்படுகிறது என்பது தெரியவரும்.

வடிவத்தின் இந்த மாற்றம் மிகவும் அபூர்வமானதாக இருப்பதால், சூழ்நிலைகள் காரணமாக, மதிப்புமிக்க சமுதாய வாழ்வின் கருத்திலிருந்த தெளிவற்ற பற்றாக்குறையை தவிர்த்துப் பார்ப்போமானால், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாய வடிவத்திலும், பொருளாதார நிலைமைகளின் விளைவாக, இரண்டு சமுதாயங்களை உருவாக்குகிறது. அதாவது பழைய சாதாரண சமுதாயம் மற்றும் புதிய மேம்பட்ட குணம் கொண்ட சமுதாயம்.

சிறந்த சமூக வாழ்வுபற்றிய கருத்திற் கூடத் தெளிவான தன்மை இல்லாததால் சூழ்நிலைகள் காரணமாக இந்த வடிவமாற்றம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியாது போகிறது. சமுதாயத்தின் ஒரு வடிவமாற்றமானது சடத்துவ நிலைமைகளிலிருந்து விளைகிறது. இது பழைய காலவாதியாகிப்போன சமுதாயத்தோடு கூடவே புதிய மேம்பட்ட சமுதாயமொன்றயும் படைத்து இந்த இருசமூகங்களை ஒரே நேரத்தில் வைக்கிறது.

இந்த சமூகங்கள் ஒன்றையொன்று பரஸ்பரம் மாற்ற முற்படுகின்றன. இதை மாக்ஸ்சியம் முன்னது பின்னதான உறவு என்கிறார் (ஆங்கிலத்தில் Reciprocal relation). முன்னது பின்னதையும், பின்னது முன்னதையும் மாறி மாறி இடைவிடாது தாக்கும் நிகழ்வுப்போக்கு. ஒன்று முலாம் பூசப்படாத தேன் பூசப்படாத பழையது. மற்றது பொலிவான இனிப்பான புதியது. இரண்டுமே அவைகளின் சொந்த வீட்டில் வளர்ந்து வடிவம்பெற்றவை. தொடர்ச்சியான மாற்றங்களினால் இரண்டு சமூகங்களிலும் வேறுபாடுகள் உருவாகின்றன. வெளிப்புற எதிர்ப்புகள் பழையதற்கும் மற்றும் புதியதற்றிற்குமிடையே முட்டிமோதல்களை உருவாக்குகின்றன. மறுபுறம் இந்தப் பரஸ்பர முட்டிமோதல்களை ஏற்படுத்தும் இரண்டுமே சமூகங்கள். எனவே பழைய சமூகமும் புதிய சமூகமும் எதிரிடைகளின் சேர்க்கையாகும். ஆனால் இந்த ஐக்கியத்தில் உள்ள வேறுபாடுகள் இரு துருவங்களாகி விடுகின்றன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு வழியில் போகின்றது. துருவங்களாக இருப்பதால் அவைகள் இணைக்கப் பட்டிருப்பதைப் போலவே ஒன்றை ஒன்று எதிர்மறுக்கின்றன. சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் 300 வருடங்கள் நீடித்த ஒரு தனிமனித சர்வாதிகார சார் ஆட்சி உள்ளது. மறு புறத்தில் கிளர்ச்சி செய்யும் வெகுசனங்கள் தமக்குப் பட்டினிச்சாவு இல்லாத நலமான வாழ்வு வேணும் என்கின்ற ஒன்று உள்ளது. சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் சாதாரண வெகுசனங்களைக் காண்கின்றோம். ஒரு மாறி மாறி நடைபெறும் செயல் முறையையும் இந்த எதிர்மின் இயக்கத்தில் வெகுசனங்கள் என்ற இலத்திரன்கள் செயற்படுவதையும் காண்கிறோம். இதுவே இந்த இரு துருவங்களுக்குமிடையேயுள்ள மாற்று உறவு. இந்த இரு பரஸ்பர விரோத சக்திகள் சமுதாய மாற்றங்களின் போது செயற்படும் இயல்பான வடிவங்குளாகும். வெளியிலே இவைகளுக்கு ஏற்படும் எதிர்ப்புக்கள் உள்ளார்ந்த எதிர்ப்புக்களை உருவாக்குகின்றன. இந்த மாற்றமானது எதிரெதிராகச் செயற்படும் இரண்டு உருமாற்றங்களால் ஏற்படுகின்றன. பழைய நிலப்பிரபுத்துவ சமுதாயம் சோவியற் சமுதாயமாக மாற்றமடைகிறது. புதிய தற்காலிக சோவியற் சமுதாயம் மேலும் சோஷலிச சமுதாயமாக மாற்றமடைந்தது. என்ன மாதிரி பண்டம் என்ற லாவா பணம் என்ற பீயூப்பாவாக மாறி மீண்டும் பியூப்பா பண்டமாக மாறுவது போல, லாவா பியூப்பாவாக மாறி மீண்டும் பியூப்பா வண்ணத்துப் பூச்சியாக மாறுவதுபோல. இந்த உருமாற்றங்களின் இரண்டு கட்டங்களும் இரண்டு திட்டவட்டமான தனித்தனி மாற்றங்களாகும். மாற்றங்கள் அநித்தயமாகவோ நித்தியமாகவோ அன்றேல் இடைப்பட்ட கால எல்லையையோ வைத்திருக்கும். முழுச் செயல்முறைச் செயல்பாடுகளும் இயற்கை அல்லது சமூக விதிகாளால் ஏற்படுகின்றன.

பெப்ருவரிப் புரட்சியிலே லெனின் பங்கெடுக்காதது மாத்திரமல்ல அதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை.


லெனின் சூரிச்சிலுள்ள மக்கள் கோட்டை (Volkshaus schlos) என்ற பெப்ரவரிப் புரட்சிக்கு இரண்டுநாளைக்கு முன்னர் அதாவது 6.3.1917 இல் 1905 ஆம் புரட்சியின் நினைவாக சுவிற்சலாந்து சோஷலிசவாதிகளுக்கு முன் உரையாற்றும் பொழுது: 'புரட்சி நெருங்கி வருகின்றது. ஐரோப்பா முழுவதும் உள்ள தற்போதைய இடுகாட்டின் கல்லறை ஓய்வையிட்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது. ஐரோப்பா இப்பொழுது புரட்சிக் கர்ப்பத்தைச் சுமக்கிறது. அடுத்த ஆண்டுகளில் இந்த சூறையாடும் போர் உறவுகளால் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் பெரிய எழுச்சிகள் வர உள்ளன. அந்த எழுச்சியானது நிதிமூலதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக, பெரிய வங்கிகளுக்கு எதிராக, முதலாளிததுவத்திற்கு எதிராகவே வரும். இந்த அதிர்ச்சிகள் முதாளித்துவத்தின் உடைமைகளை அபகரித்து சோஷலிசத்தின் வெற்றியைச் சாதிக்கும். லெனின் இந்த முன் நோக்கைக் காட்டினார். ஆனால் அதன் தேதியைக் குறிப்பிடவில்லை. தனது சொற்பொழிவின் முடிவில்:'எங்களுக்கு வயது வந்துவிட்டதால் வரும் இந்தப் புரட்சியின் தீர்மானகரமான போர்கள்வரை உயிர்வாழ்வோமோ தெரியாது என்று மொதுவாகத் துக்கம் தோய்ந்த அடிக்குரலில் கூறினார்.,,,,

புரட்சிகள் வரும் விஞ்ஞான விளக்கத்தை மார்க்ஸ் பின்வருமாறு எடுத்தியம்புகின்றார்:

'மனிதர்கள் தங்களது வாழ்க்கைக்கான சமூக உற்பத்தியில் ஈடுபடும்பொழுது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ சில நிச்சயமான உறவுகளுள் நுளைவார்கள். இந்த உற்பத்தி உறவுகள் அவர்களின் பொருள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான நிலைக்கு ஒத்திருக்கும். இது உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்த சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பு ஆகும். இந்த உண்மையான அஸ்திவாரத்தில்தான், எந்த ஒரு சட்டமும் மற்றும் அரசியல் கட்டமைப்பைப்பும் எழுகிறது. இதற்கு ஏற்றாற்போலவே எந்தவொரு சமூக உணர்மையின் திட்டவட்டமான வடிவங்கள் அமையும். அவர்களது பொருள்சார் வாழ்வின் உற்பத்தி முறையானது சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்க்கை முறைகளை பொதுவாக நிர்ணயிக்கிறது. அவர்களது இருப்பை அவர்களது உணர்மை தீர்மானிக்காது மாறாக அவர்களது சமூக நலம் அவர்களின் உணர்மையை நிர்ணயிக்கும்.(மனிதர்களின் உணர்மையல்ல அவர்களின் இருப்பை நிர்ணயிப்பது மாறாக அவர்களின் சமூக வாழ்க்கையே அவர்களின் உணர்மையை நிர்ணயிக்கும்.) அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு சில காலகட்டத்தில், சமுதாயத்தில் பொருள் உற்பத்தி சக்திகளுக்கிடையே நிலவும் உற்பத்தி உறவுகள் முரண்பாட்டுக்கு வந்துவிடுகிறது, அல்லது – அவை ஒரு சட்டவெளிப்பாடு ஆகிவிடுகின்றன. அங்கே நிலவும் சொத்துடமை உறுவுகளுக்குள்ளே அவை செயற்படுகின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி வடிவங்களுக்கு இந்த உறவுகள் விலங்குகளாக மாறிவிடுகின்றன. பின்னர் சமூகப் புரட்சியின் ஒரு சகாப்தம் தொடங்குகிறது. பொருளாதார அஸ்திவாரத்தின் மாற்றத்தால், முழு மேற்கட்டுமான நிர்மாணமும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வேகமாக மாறுகின்றன. இத்தகைய மாற்றங்களைக் கருத்தில் கொண்டோமானால் அதாவது இயற்கை விஞ்ஞானத்தை, சட்டத்தை, அரசியலை, சமயத்தை, அழகியலை மற்றும் சுருங்கச் சொல்வதென்றால் தத்துவத்தில் ஏற்படும் மாற்றங்களின் சரித்தன்மைகளைக் கருத்தில் கொண்டோமானால் பொருள் உற்பத்தி நிலைமைகளே இவைகளைத் தீர்மானிக்கும். இந்தப் பொருள் உற்பத்தி நிலைமைகளின் மாற்றங்களுக்கு இடையில், முரண்பாடுகளும் முட்டிமோதல்களும் எப்போதும் செயற்படும். இந்த முட்டிமோதல்களைப் பற்றி மனிதர்கள் உணர்மையடைந்து அதற்கெதிராகப் போராடுவார்கள். ஒரு நபர் என்ன நினைக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரைப் பற்றிய கருத்தை நாங்கள் எப்படிச் சொல்ல முடியாதோ அதே போலவே நமது யதார்த்த வாழ்வில் சமூக உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதலின் பலனாய் எந்தக் காலத்தில் நம்முடைய சொந்த நனவில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை நாம்
ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.

மாறாக, இந்த உணர்மை சடத்துவ வாழ்க்கையின் முரண்பாடுகளிலிருந்து விளக்கப்பட வேண்டும். சமூக உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதலில் இருந்து விளக்கப்படவேண்டும். எந்தவொரு சமூக ஒழுங்கும் அதன் உற்பத்திச் சக்திகள் மேலும் அபிவிருத்தியடைய வாய்ப்புகள் இருக்குமட்டும் அழிந்துபோகாது. பழைய சமுதாயத்தின் கருப்பையில் புதிய உற்பத்தி உறவுகள் கருக்கொண்டு வளர்ந்து முதிர்ச்சியடைந்து மேலும் தப்பிப் பிழைப்பதற்குரிய சடத்துவ நிலைமைகள் தோன்றுவதற்கு முன்னர் ஒரு பொழுதும் புதிய உயர்ந்த உற்பத்தி உறவுகள் தோன்றாது. ஆகையால் மனிதகுலம் எப்பொழுதும் தன்னால் தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை மட்டுமே தீர்க்க முற்படும். இந்த விஷயத்தை இன்னும் நெருக்கமாக பார்த்தோமானால், நாம் எப்பொழுதும் அதன் தீர்வுக்குத் ;தேவையான சடத்துவ நிலைமைகள் ஏற்கனவே எம்கண்முன்பே எழுந்த பின்பே அல்லது அது குறைந்த பட்சம் அந்த நிகழ்வுப் போக்கு உருவாகத் தொடங்கினால் மட்டுமே அந்தப் பணி எமக்காக உள்ளன என்பதைக் கண்டு பிடிப்போம். சமூகத்தின் பொருளாதார உருவாக்கத்தில் பல முற்போக்கான சகாப்தங்களான ஆசிய பொருளாதார உற்பத்திமுறை, பண்டைய பொருளாதார உற்பத்திமுறை, நிலப்பிரபுத்துவ பொருளாதார உற்பத்திமுறை மற்றும் நவீன முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை போன்றவைகளை நாம் பரந்த வெளிப்பாடுகளாகக் குறிப்பிடலாம்.

உற்பத்தியின் முதலாளித்துவ உறவுகள், உற்பத்திமுறையின் சமூக செயல்முறையின் கடைசி விரோத வடிவமாகும். விரோத என்று சொல்லும் பொழுது தனிப்பட்ட விரேதத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக இந்த விரோதம் தனிநபர்களின் சமூக நிலைமைகளிலிருந்து எழும் ஒன்று. அதே நேரத்தில் முதலாளித்துவ சமுதாயத்தின் கருப்பையில் வளரும் உற்பத்தி சக்திகள் அந்த விரோதத்தின் தீர்வுக்கான பொருளாதா நிலைமைகளை உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக உருவாக்கமானது, மனித சமுதாயத்தின் வரலாற்றுக்கு முந்தைய நிலையின் இறுதி அத்தியாயமாகும்.

---அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கான பங்களிப்புக்கு முன்னுரை (1859)--

Read more...

Sunday, May 28, 2017

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால்.

ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் ஆஃப் 9/11 மாஸ்டர்மைண்ட்ஸ் லைஃப் புத்தகத்திற்காக, அமால் அவர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார். "சண்டே டைம்ஸ் யூ.கே" -இல் இந்த புத்தகத்தின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது.

2011, மே முதல் தேதியன்று இரவு உணவு முடிந்து, பாத்திரங்களும் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு நேர தொழுகைக்கு பின் ஒசாமா பின்லேடனும், அமாலும் மேல் மாடியில் இருந்த படுக்கையறைக்கு சென்றுவிட்டனர். இரவு 11 மணி இருக்கும், ஒசாமா ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

பாகிஸ்தானின் அபோட்டாபாதில் ஒசாமா பின்லேடன் ரகசியமாக மறைந்து வாழ்ந்த வீட்டில் திடீரென்று மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. பாகிஸ்தானில் மின்சாரத் தடை ஏற்படுவது வழக்கமானது என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நள்ளிரவு நேரம், அமாலின் மனதில் காரணமே இல்லாமல் ஏதோ கலக்கம் ஏற்பட்டு தூக்கம் கலைந்தது. ஏதோ சப்தம் கேட்டதாக தோன்றினாலும், அது பிரம்மையாக இருக்கும் என்று நினைத்தார், ஆனால் சிறிது நேரத்திலேயே மாடியில் யாரோ ஏறுவது போல தோன்றியதால் அமாலுக்கு கவலை ஏற்பட்டது. உன்னிப்பாக கவனித்தார்.

மின்சாரம் இல்லாமல், இருள் சூழ்ந்த நள்ளிரவாக இருந்தாலும், யாரோ கடந்து போனது நிழல் போல தெரிந்தது. சப்தங்கள் அதிகமானது, ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்தபோது, அன்னியர்கள் நுழைந்துவிட்டார்களோ என்ற அமாலின் சந்தேகம் உறுதியானது.இதற்கிடையில் படுக்கையில் படுத்திருந்த ஒசாமா பின்லேடனும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். அவர் முகத்தில் அச்சம் நிலவியது அப்பட்டமாக தெரிந்தது. கணவர் தன்னை பிடித்துக் கொண்டதாக கூறும் அமால், "எங்களை யாரோ உற்றுப்பார்ப்பது போலவும், மேலே ஆட்கள் ஓடுவது போலும் உணர்ந்தேன். சட்டென்று நாங்கள் இருவரும் அங்கிருந்து எகிறி குதித்து ஓடினோம். எங்கள் வீட்டின் சுவர்கள் அதிர்ந்தன.

''பால்கனியை ஒட்டியிருந்த கதவின் வழியாக பார்த்தோம், அவர்கள் உள்ளே வந்துக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் வீட்டின் அருகே இருந்ததை பார்த்துவிட்டோம். சில நிமிடங்களில் மற்றொரு ஹெலிகாப்டரும் வந்துவிட்டது. அத்துடன், அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு குழுவும் அவர்களுடன் இணைந்து கொண்டது'', என்று மறக்கமுடியாத அந்த இரவை பற்றி அமால் வர்ணிக்கிறார்.

யாரோ தங்களை ஏமாற்றிவிட்டதை அவர்கள் உணர்ந்ததாக தோன்றியதாக, ஒசாமாவின் கடைசி நிமிடங்கள் பற்றிய புத்தகத்திற்காக கொடுத்த பேட்டியில் அமால் சொல்கிறார். பல ஆண்டுகளாக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்த அந்த வீடே தங்களுக்கு மரணப்பொறியாக மாறிவிட்டது என்கிறார் அமால்.

ஒசாமா பின்லேடனின் நான்கு மனைவிகளில் மூன்று பேரும், குழந்தைகளும் இரண்டாவது மாடியில் இருந்த படுக்கையறைக்குள் வந்துவிட்டார்கள், என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை, அனைவரும் தொழுகை செய்தார்கள். வழக்கமான தொழுகைக்கும், அன்றைய கனத்த இரவின் தொழுகைக்கும் இருந்த ஒரே வித்தியாசம், அது ஒசாமாவின் கடைசித் தொழுகையாக இருந்தது என்பது தான்.பிறகு குடும்பத்தினரிடம் பேசிய ஒசாமா, ''அவர்கள் கொல்ல விரும்புவது என்னைத்தான் உங்களை அல்ல'' என்று சொன்னதுடன், மனைவிகளையும், குழந்தைகளையும் வீட்டின் கீழ்தளத்திற்கு செல்லுமாறு கூறினார். இருந்தபோதிலும், தனது மகன் ஹுசைனுடன் ஒசாமாவின் அருகிலேயே இருக்க அமால் முடிவு செய்தார்.

''ஹெலிகாப்டரின் ஓசையால் அவருடைய உறக்கம் கலைந்துவிட்டது. அமெரிக்கா தன்னை சுற்றிவளைத்துவிட்ட்து என்பதை அவர் உணர்ந்துவிட்டார். வீட்டைச் சுற்றி வளைத்தவர்கள் பால்கனிக்குள் வந்துவிட்டார்கள். சப்தங்கள் அதிகமாயின, ஒரு கட்டத்தில் வீடே அதிர தொடங்கியது, அதோடு எங்களது மன அதிர்வும் அதற்கு குறைந்ததாக இல்லை'' என்கிறார் அமால்.

வானில் நிலவில்லாத அந்த இரவில், மின்சாரமும் இல்லை. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டோம். ஹெலிகாப்டர்கள் வருகை, ஆட்கள் நடக்கும் சப்தம், வீடு அதிர்வது, எல்லாம் நிலைமையின் விபரீதத்தை உணர்த்தியது. அமெரிக்க ராணுவத்தினர் எங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டார்கள். செஹம் மற்றும் காலித் இருவரும் அமெரிக்கர்களை நெருக்கத்தில் பார்த்துவிட்டார்கள்''. தங்கள் இருப்பிடத்தைப் பற்றிய முழுத் தகவல்களையும் யாரோ அமெரிக்காவிற்கு தெரிவித்துவிட்டார்கள், இல்லையென்றால் இது என்றுமே சாத்தியமாகியிருக்காது என்று கூறுகிறார் அமால்.

''யாரோ எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்துவிட்டது. இப்படி சுற்றிவளைக்கப்படுவோம் என்று எங்களில் யாருமே எதிர்பார்க்கவில்லை''.

ஒசாமா பின்லேடன் காலிதை அழைத்தார். அவன் ஏ.கே-47 துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டான். 13 வயதே நிரம்பிய காலிதுக்கு துப்பாக்கியை இயக்கத் தெரியாது என்பது அமாலுக்கு தெரியும். குழந்தைகள் அழுதன. அமால் அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அமெரிக்கா ராணுவத்தினர் மேல் மாடிக்கு வந்துவிட்டனர். அதன்பிறகு அனைத்தும் சில நிமிடங்களில் முடிந்துவிட்டது.


Read more...

Friday, May 19, 2017

யூலியான் அசெங்கே விடுதலை. வ.அழகலிங்கம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓர் ஒப்புவமையற்ற வெற்றி. உலக ஏகாதிபத்தியத்தையும் உலக முதலாளித்தவத்தையும் எதிர்த்துப் போராடிய மார்க்ஸ், ஏங்கல்ஸ் லெனின், ரொக்ஸ்சி .. போன்றோரின் வரிசையில் ஒப்பாரும் மிக்காருமில்லாமல் ஒளிருகிறார் யூலியான் அசெங்கே. உலகத்தில் நீதி கோலோச்ச வேண்டுமென்பதற்காகத் தமது உல்லாச வாழ்க்கையைத் துறந்தவர்களின் அமைப்புத்தான் விக்கி லீக்.

மேற்குலக ஜனநாயகத்தின் கீதம் இதுதான்.

கொல்லும் தொழிலே தெய்வம்
பொய்மைதான் நமது செல்வம்
குண்டும் சூடும்தான் எமக்கு உதவி
ஏழை கண்ணீர்தான் எமது குளியல்

இன்று 19.05.2017 ஜூலியன் அசாங்கேயின் பாலியற் பலாத்கார விசாரணை கைவிடப்பட்டது. அசாஞ்சிற்கு எதிரான பாலியற்பலாத்காரக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை வேகமாக முன்னோக்கி நகர்த்த முடியவில்லை என்ற காரணத்தைக் காட்டிக் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடாத்தினால குற்றஞ்சாட்டிய சுவீடனின் வழக்குத்தொடுனருக்கு ஒரு கூடாத பேரை உருவாக்கும் என்ற காரணத்தால் சுவீடிஷ் நீதித்ததுறையே இவ்வழக்கை விடச் செய்தது.

ஆலைப் பலாவாக்கலாமோ -அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாமோ
நீலநிறக் காக்கை தனைப் பேசுவிக்கலாமோ
கருணையில்லா மூர்க்கரைச் சீராக்கலாமோ

இரும்பை பொன்னாக மாற்ற முனைந்த ரசவாதம் தோற்றது.
இரும்பைத் தின்ற எலியின் கதை ஏளனப்படுத்தப் பட்டது.
பிள்ளையைப் பருந்து தூக்கிக்கொண்டு போன பாலபாடம் முடிவுற்றது.
ஈற்றில் செத்தவர்களைச் செத்தவர்களே புதைக்கும்படி விடப்பட்டது.
அமெரிக்க ஏகாதிபத்தியச் செத்தபிணத்தருகே இனிச் சாம்பிணங்களான ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் மொய்துக்கிடந்த நாட்கள் மலையேறி விட்டன.

அசங்கே விசாரணை சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு விசாரணையைக் கையாண்டதால் சுவீடனின் சட்ட முறைக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லையென்று சுவீடிஸ் அரசு முடிவுக்கு வந்தது.

பிரித்தானிய இன்றய தேர்தலிலே இது ஒரு பேசுபொருளாகியது. இது முதலாளித்துவ நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைச் சேவையானது பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்மையே திரண்டதென்ற எதிர்மறைப் படத்தை உருவாக்கியது.

அசாங்கே 2012 ல் எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலம் அடைந்ததில் இருந்து இன்றுவரை அங்கு வாழ்கின்றார். ஐரோப்பிய ஒன்றியமே யூலியான் அசெங்கேயின் கைது ஆணையைப் பிறப்பித்தது. ஐரோப்பிய ஆநாகரீகத்தை அதன் மூலம் அம்பலப் படுத்தியது.

ஐரோப்பியரின் முதலைக் கண்ணீரையும் தொழிலாளர் பிரபுத்துவப் பிரதிநிதிகளின் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தையும் நாளாந்தம் மத்தித்தரைக் கடலில் மிதக்கும் சிரிய, ஈறாக்கிய, லிபிய ஆபுகானிஸ்தான் குழந்தைகளின் சடலங்கள் சாட்சி கூறுகின்றன.

அவர் எந்தவொரு பாலியல் குற்றத்தையும்; ஒருபோதும் செய்யவில்லை என்பது எல்லோரும் அறிவர்.

அசாஞ்ச் ஏற்படுத்திய அமைப்பான விக்கிலீக்ஸ் 'போர், வேவுபார்த்தல் மற்றும் ஊழல் சம்பந்தப்பட்ட தணிக்கை அல்லது தடைசெய்யப்பட்ட உத்தியோகபூர்வ பெரிய தரவுகளை ஆய்வு செய்து வெளியிட்டது. 2016 அமெரிக்கத் தேர்தலின்போது ஜனநாகக் கட்சி பேர்ணி சண்டரைத் தோற்கடிப்பதற்காக நாற்பதினாயிரம் கணணி ஆவணங்களை ஜனநாயக் கட்சியின் காரியலயத்திலிருந்து வெளியிட்ட ,,சேத் றிச்' என்பவர் மறுநாள் அதிகாலை கொலைசெய்யப் பட்ட மர்மத்தை வெளியிட்டது. அசெங்கே இந்த யுகத்தின் மாவீரன். விக்கிலீக் தொடர்ந்து வாழ்ந்தால் உலகத்திற்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

உண்மையிலே இப்பொழுது ஓர் உலகப் புரட்சிக்கு முந்திய சர்வதேச நிலமைகள் நிலவுகின்றன.

2008 வங்கி நெரக்கடியிலிருந்து முதலாளித்துவ உலகம் இன்னும் மீண்டதற்கான எந்த அறிகுறியும் தெரியவிலலை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளுங் கட்சிகளான ஜனநாக்கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையேயுள்ள குடம்பிச் சண்டை தீர்ந்த பாடில்லை. ஆளும் வர்க்கங்கள் சமரசமற்று முரண் பட்டு விட்டன. அமெரிக்க அரசு பழைய வழிகளில் தொழிலாளாகளை ஆளமுடியாத நிலையில் உள்ளது. தொழிலாளர்களும் பழைய வழியிலான ஆளுகையை ஏற்கவில்லை. உலகமயமான பொருளாதார அமைப்பு முறையை ஒழுங்கமைப்பதற்கேற்ற ஓர் உலகப் பேரரசர் உருவாகவில்லை. ரம்பின் அமெரிக்கா முதலும் முன்னியும் பிரித்தானிய ஐரோப்பியர்களோடேயே சேர்ந்து வாழ லாயக் கற்றதாகி விட்டது. தமிழ் நாட்டில் அரசியல் நாறிமணக்கிறது. வெட்கப்படத்தெரியாத மக்கள் வாழும் தொழுவமாகிவிட்டது. இலங்கையில் இம்முறை மே தினம் ஒரு ஹர்தாலிலிலும் பெரியதாகவும் ஒரு புரட்சியிலும் சிறியதாகவும் அமைந்தது. இவை என்னத்தைக் கட்டியம் கூறுகின்றன?

Read more...

அல்லாஹ்வின் பாதை என கூறி முஸ்லிம்களால் காணிகள் அபகரிப்பு. ஞான­சார தேரர்

அல்­லாஹ்வின் பாதை என்று கூறிக் கொண்டு முஸ்­லிம்கள் எமது காணி­களை ஆக்­கி­ர­மிக்­கி­றார்கள். தொல்­பொ­ருட்­களை அழிக்­கி­றார்கள். வனங்­களை அழிக்­கி­றார்கள். அர­சாங்கம் முஸ்­லிம்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லையேல் அவர்­களை சவூ­திக்கு ஏற்றி அனுப்­பி­விட வேண்டும் என பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

நேற்று மதியம் கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் பயங்­க­ரத்தை நாம் கடந்த அர­சுக்கும் கூறினோம். இந்த அர­சுக்கும் கூறினோம். ஆனால் முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளுக்கு ஏமாந்து அவர்­க­ளுக்கு எதிராக நட­வ­டிக்­கை­களை எடுக்­காதிருக்­கி­றார்கள். இது மீதொட்­ட­முல்லை குப்பை மேடு போன்ற பிரச்­சி­னை­யாகும். பந்­தினை கைமாற்றிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். சிறி­ய­தாக உரு­வான மீதொட்­ட­முல்லை குப்பை மேடு பூதா­க­ர­மா­கி­யதை நாம் கண்டோம்.

நாடு சுதந்­திரம் பெற்று 69 வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் சிங்­க­ள­வர்கள் நாட்டில் போர்­டிங்­கா­ரர்­க­ளாக, விடு­தி­களில் தங்­கி­யி­ருப்­ப­வர்கள் போலாகி விட்­டார்கள். நாட்டின் சொந்­தக்­கா­ரர்­க­ளாக முஸ்­லிம்கள் மாறி வரு­கி­றார்கள். எனவே பௌத்­தர்கள் நாம் நாட்டைப் பாது­காக்க முன்­வர வேண்டும்.

இந்­நாட்­டி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களும் சவூ­தி­யி­லி­ருந்து கிடைக்கும் நிதி உத­வி­க­ளுக்கு ஆசைப்­பட்டு வஹா­பி­ஸத்­துக்கு அடி­மை­யாகி வரு­கி­றார்கள். ஐ.ஐ.ஆர்.ஓ, ஐ.ஆர்.ஓ, அல் ஷபாப், முஸ்­லிமாத், ஹிரா, நிதா, செரண்டிப் போன்ற 10 அமைப்­புகள் இலங்­கையில் தீவி­ர­வா­தத்தைப் பரப்பி வரு­கின்­றன. ஹிரா அமைப்பின் தலை­மை­யகம் தெஹி­வ­ளையில் இருக்­கி­றது. இங்கு ஜமா­அத்தே இஸ்­லாமி மதம் மாற்றும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளது.

மலிக் அப்­துல்லா பல்­க­லைக்­க­ழகம்

ஹிரா பவுண்­டே­சனின் உத­வியில் 1500 கோடி ரூபா செலவில் கிழக்கில் ஓர் இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழகம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. சமூ­கத்­துக்கு வழி­காட்ட வேண்டும் என்று முஸ்­லிம்கள் இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைக்­கி­றார்கள். இங்கு அரபு மொழி போதிக்­கப்­ப­ட­வுள்­ளது. இஸ்­லா­மிய கலா­சாரம் போதிக்­கப்­ப­ட­வுள்­ளது. இப்­பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­காக முன்னாள் ஜனா­தி­பதி 500 ஏக்கர் காணி வழங்­கி­யுள்ளார். இங்கு இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களே உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளனர். இந்­நி­லையில் நாட்டில் நல்­லி­ணக்கம் ஒன்­றினை எதிர்­பார்க்க முடி­யுமா?

சைட்டம் தனியார் மருத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து போராட்டம் நடத்­து­ப­வர்கள் ஏன் இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தை எதிர்க்­க­வில்லை.

அமைச்சர் மனோ கணேசன்

அமைச்சர் மனோ கணேசன் நல்­லி­ணக்கம் பற்றி பேசு­கிறார். அவர் இந்த நல்­லி­ணக்கம் பற்றி அடிப்­ப­டை­வா­தி­க­ளுடன், பிரி­வி­னை­வா­தி­க­ளு­டனே பேசு­கிறார். ஏன் எங்­க­ளுடன் பேசு­வ­தில்லை? இவர் இந்தப் பத­விக்குப் பொருத்­த­மில்லை. நாட்டில் உண்­மை­யாக நல்­லி­ணக்­கமும் இன நல்­லு­றவும் ஏற்­பட வேண்­டு­மென்றால் சிங்­க­ளவர் ஒரு­வ­ருக்கே இந்த அமைச்சுப் பத­வியை வழங்க வேண்டும். அவ்­வா­றில்­லா­விட்டால் இந்த அமைச்­சினால் எந்தப் பயனும் ஏற்­படப் போவ­தில்லை.

மாணிக்­க­மடு விவ­காரம்

மாணிக்­க­ம­டுவில் முஸ்­லிம்கள் 2 ½ ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளார்கள். இது விகா­ரைக்குச் சொந்­த­மான காணி­யாகும். அவர்கள் அல்லாஹ் கூறி­யுள்­ளதைப் போன்று மாற்று மதத்­த­வர்­களின் காணி­களை அபக­ரித்­துள்­ளார்கள். இப்­போது எமக்கு மாற்றுக் காணி தாருங்கள் நாம் போகிறோம் என்­கி­றார்கள்.

முகுது விகாரை, ஏறாவூர் பகு­தி­க­ளிலும் இவ்­வாறே காணிகள் ஆக்­கி­ர­மிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளன. சிங்­க­ள­வர்­களும் வனப் பிர­தே­சங்­க­ளையும் ஏனை­ய­வர்­களின் காணி­க­ளையும் ஆக்­கி­ர­மித்துக் கொள்ள வேண்டும். பின்பு எமக்கு மாற்றுக் காணி தாருங்கள் போகிறோம் என்று சொல்ல வேண்டும் என்று சிங்கள மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மஹாநாயக்க தேரரரை மாற்ற வேண்டும்

மஹாநாயக்க தேரர்கள் இறுதிக்காலம் வரை பதவியில் இருக்கக் கூடாது. மகாநாயக்க தேரர்கள் மத விடயங்களில் உறுதியாக இல்லாமையினாலேயே இன்று பௌத்தம் சவாலுக்குட்படுத்தப் பட்டுள்ளது.

எனவே மகாநாயக்க தேரர் பதவிக்காலம் 5 வருடங்களாக அமைய வேண்டும் என புத்தசாசன அமைச்சரைக் கோருகிறோம் என்றார்.


Read more...

யாரிடம் இருந்து, எவ்வாறு புரட்சியை பாதுகாப்பது By Leon Trotsky March 21, 1917

இக்கட்டுரை நியூ யோர்க் ரஷ்ய மொழி செய்தித்தாளான நோவி மிர் (புதிய உலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 21, 1917ல் வெளியிடப்பட்டது. இது இது ரஷ்ய மொழியில் ட்ரொட்ஸ்கியின் 1923 Voina i Revoliutsiia (போரும் புரட்சியும்), தொகுதி 2, பக்கம் 440-443ல் வெளியிடப்பட்டிருந்தது. இது ஆங்கிலத்தில் ட்ரொட்ஸ்கி பேசுவதில் இடம்பெறுகிறது. இது இங்கே முதல் முறையாக மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. (மொழிபெயர்ப்பாளர்: ஃபிரெட் வில்லியம்ஸ், பதிப்புரிமை: WSWS).

வேறெங்கும் போலவே நமது நாட்டிலும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவ உற்பத்தியின் அதே அடித்தளத்தில்தான் தோற்றமூலத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி ரஷ்யாவில் மாபெரும் வேகத்தைப் பெற்றது மற்றும் எதிர்ப்புரட்சியின் செல்வாக்கின் கீழ் மிகக் கூர்மை அடைந்தது. இதைப் பற்றி நாம் கடந்த முறை பேசினோம். முதலாளித்துவ வர்க்கமானது புரட்சியால் அஞ்சும்பொழுது, நிலச்சுவான்தார்களின் நிலங்களை விவசாயிக்கு ஒப்படைப்பதன் மூலம், உள்ளூர்ச் சந்தையை விரிவுபடுத்தும் அதன் வேலைத்திட்டத்திலிருந்து விலகிப் பினவாங்கும், அது அதன் கவனத்தை உலக அரசியலை நோக்கி திருப்பும். எமது ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சிகர பண்பானது இவ்வாறு மிகத் தெளிவாகவே தன்னையே காட்டிக்கொள்ளும். பெற்ற வெற்றிகளின் அடித்தளத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கம் ரஷ்ய தொழிலாளர்களுக்கு நல்ல கூலிகள் தருவதாக வாக்குறுதி அளித்தது, மற்றும் போர்த் தொழிற்துறையிலும் அதைச் சுற்றிலும் உள்ள சலுகை மிக்க அந்தஸ்தை அளிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மேல்தட்டினரை வாங்க முயற்சித்தது. அது விவசாயிகளுக்கு புதுநிலங்களை வாக்களித்தது. “நமக்குப் புதிதாக நிலம் கிடைக்கிறதோ இல்லையோ” எப்படியோ மக்களின் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டு வருவதால் நிலம் தொடர்பான விடயம் எளிதாகப்போனதாக muzhik நடுத்தர விவசாயிகள் நியாயப்படுத்திக்கொண்டனர்...

அதன் விளைவாக, போர் என்பது வார்த்தையின் மிக நேரடி அர்த்தத்தில், மிகக் கூர்மையான உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து, விவசாயப் பிரச்சினை எல்லாவற்றிலிருந்தும் வெகுஜனங்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு வழிமுறையாகும். ஏகாதிபத்திய முதலாளித்துவ போர் முயற்சிகளுக்கு ‘மிதவாத’ மற்றும் மிதவாதமற்ற பிரபுத்துவம் அந்த அளவு அழுத்தம் திருத்தமாய் ஏன் ஆதரவு தருகிறது என்பதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.

“தேசத்தைப் பாதுகாத்தல்” என்ற பதாகையின் கீழ் மிதவாத முதலாளித்துவ வர்க்கங்கள், புரட்சிகர மக்கள் மீது கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்க வைக்க முயல்கின்றன, மற்றும் இந்த நோக்குடன், தேசபக்த ட்ருடோவிக் (Trudovik) கன்னையின் கெரென்ஸ்கியை மட்டும் கட்டி இழுக்காமல், மாறாக, வெளிப்படையாகவே, சமூக ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாத கூறுகளின் பிரதிநிதியான Chkheidze போன்றோரையும் கட்டி இழுக்கின்றன.

போரை நிறுத்துதல் மற்றும் அமைதிக்கான போராட்டமே கூட அனைத்து உள்நாட்டுப் பிரச்சினைகளையும் பெரும்பாலும் நிலப்பிரச்சினையை முன்னணிக்குக் கொண்டு வருகின்றன, விவசாயப் பிரச்சினையானது, நிலப்பிரபு, முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சமூகதேசபக்தர்களின் தற்போதைய கூட்டில் ஆழமான ஆப்பை வைக்கிறது. கெரென்ஸ்கி, முழுப்புரட்சியையும் முதலாளித்துவ நோக்கங்களுக்காக திசை திருப்பும் “மிதவாத” ஜூன் மூன்று கூறுகளுக்கும் ஒரு பரந்த அளவிலான விவசாயப் புரட்சிகர வேலைத்திட்டத்தை-சார், நிலச்சுவான்தார்கள், அரச குடும்பங்கள், அரச பரம்பரை மற்றும் தேவாலயங்களுக்கு சொந்தமான நிலங்களைப் பறிமுதல் செய்தல் என மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தற்கும் இடையில் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். கெரென்ஸ்கியின் தனிப்பட்ட தேர்வு எதுவெனிலும் குறைந்த முக்கியத்துவம் உடையதே: Saratov பல்கலைக்கழகத்திலிருந்து வரும் இந்த இளம் வழக்கறிஞர், நடைபெற்ற கூட்டத்தில் படைவீரர்களை அவர்கள் தன்னை நம்பவில்லை எனில் சுட்டுக் கொல்லட்டும் என்று அவர்களிடம் கெஞ்சும் அதேவேளை, தொழிலாளர் சர்வதேசியவாதிகள் மேல் தேள்களை விடுவதாக அச்சுறுத்துவதும் புரட்சியின் அளவில் முக்கியத்துவம் இல்லாததே. கிராமப் புறத்தில் உள்ள மிகக் கீழ்நிலையிலுள்ள தட்டுக்களான விவசாய மக்கள் ஒரு வேறுபட்ட அம்சம் ஆவர். பாட்டாளி வர்க்கத்தின் பக்கத்தில் அவர்களை ஈர்த்தல் என்பது மிகவும் தள்ளிப்போடக்கூடாத மற்றும் அவசரமான பணியாகும்.

எமது கொள்கைகளை நாட்டுப்புறத்தின் தேசிய – தேசபக்த குறுகிய எண்ணம் கொண்ட கொள்கைகளுக்கு தகவமைப்பதன் மூலம் இந்தப் பணியைத் தீர்க்க முயற்சிப்பது ஒரு குற்றமாக இருக்கும்: ரஷ்ய தொழிலாளி ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்துடன் உறவுகளை துண்டித்துக்கொள்வதன் மூலம் விவசாயியுடனான கூட்டுக்கு அவன் விலைகொடுக்க வேண்டி வந்தால் அவன் தற்கொலை செய்து கொள்வான். ஆனால், பின்னர், அவ்வாறு செய்வதற்கான அரசியல் தேவை இராது. எமது கரங்களில் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் உள்ளது: தற்போதைய இடைக்கால அரசாங்கமும் Lvov-Guchkov-Miliukov-Kerensky அமைச்சரவைகளும் —தங்களது ஐக்கியத்தை பாதுகாத்தல் என்ற பேரில்— விவசாயப் பிரச்சினையை தட்டிக்கழிக்க நிர்பந்திக்கப்படும் நேரத்தில், நாம் ரஷ்ய விவசாய மக்களின் முன்னே அப்பிரச்சினையை அதன் எல்லா பரிமாணங்களிலும் அதனைக் கட்டாயம் எழுப்ப வேண்டும்.

“விவசாய சீர்திருத்தம் சாத்தியமில்லாததன் காரணமாக, பின்னர் நாம் ஏகாதிபத்திய போருக்கு ஆதரவாக நிற்போம்” என்றே 1905-1907 அனுபவத்திற்குப் பின்னர் ரஷ்ய முதலாளி வர்க்கம் கூறியது.

“ஏகாதிபத்தியப் போருக்கு முதுகைக் காட்டு, பதிலாக விவசாய புரட்சியின் பால் திரும்பு!” இதுவே 1914-1917 அனுபவம் தொடர்பாக விவசாய வெகுஜனங்களுக்கு நாம் கூறப்போவது.

இந்தப் பிரச்சினையில், விவசாயப் பிரச்சினை, இராணுவத்தின் பாட்டாளி வர்க்க காரியாளர்களை அதன் விவசாய தட்டினருடன் ஐக்கியப்படுத்துவதில் பெரும் பங்கை ஆற்றும். “நிலப்பிரபுவின் நிலங்கள், கான்ஸ்டான்டிநோப்பிள் அல்ல” – என பாட்டாளி வர்க்கப் படைவீரர் விவசாயி வர்க்கப் படை வீரரிடம் கூறுவார், ஏகாதிபத்தியப் போரால் பயன்படுத்தப்படுபவருக்கு விளக்குவார் மற்றும் அதன் நோக்கங்கள் என்னவென்றும் விளக்குவார். போருக்கு எதிரான எமது கிளர்ச்சி மற்றும் போராட்டத்தின் வெற்றியானது முதன்மையாய்த் தொழிலாள வர்க்கத்திடம் இருப்பதும், இரண்டாம் நிலையாய் விவசாயி மற்றும் படைவீரர் மக்களில் இருப்பதும் – எவ்வளவு விரைவில் மிதவாத முதலாளித்துவ அரசாங்கம் புரட்சிகரத் தொழிலாளர் அரசாங்கத்தால் பதிலீடு செய்யப்படும் என்பதைத் தீர்மானிக்கும். இது உடனடியாக பாட்டாளி வர்க்கம் மற்றும் பாட்டாளி வர்க்கத்திடம் சேர்ந்துகொண்ட கிராமப்புறத்தின் மிகக் கீழ்நிலை தட்டுக்கள் மீது தங்கி இருக்கும்.

வெகுஜனங்களின் எதிர்ப்பை எதிர்க்காத ஒரே ஆட்சி, ஆனால், அதற்கு மாறாக, அவர்களை தலைமைதாங்கி முன்னோக்கி இட்டுச்செல்லும், தொழிலாள வர்க்கத்தின் மற்றும் புரட்சியின் தலைவிதியை உத்தரவாதம் செய்யக்கூடியதும் அதுவே. அத்தகைய ஆட்சியை உருவாக்குவதே புரட்சியின் தற்போதைய அடிப்படை அரசியல் பணியாகும்.

அதுவரைக்கும், அரசியலமைப்பு சட்டசபை ஒரு புரட்சிகர திரைச்சீலையாகவே இருக்கும். அதன் பின்னே மறைந்து இருப்பது என்ன? இந்த அரசியலமைப்பு சட்டசபையை என்ன உறவுகள் ஏற்படுத்தும்? இது அதன் உட்சேர்க்கையைப் பொறுத்தது. மற்றும் அதன் உட்சேர்க்கை யார் அரசியலமைப்பு சட்டசபையைக் கூட்டுகிறார்கள், என்ன நிலைகளின் கீழ் என்பதைப் பொறுத்தது.

Rodziankos, Guchkovs மற்றும் Miliukovs தங்களின் சொந்த உருவில் அரசியலமைப்பு சட்டசபையை உருவாக்க ஒவ்வொரு முயற்சியிலும் ஈடுபடுவர். அவர்கள் கரங்களில் உள்ள பலம் வாய்ந்த துருப்புச்சீட்டாக அந்நியப் பகைவனுக்கு எதிராக முழு தேசத்தினதும் போர் என்ற முழக்கம் இருக்கும். இப்போது அவர்கள் பேசுவார்கள்தான், ஜேர்மன் முடியாட்சியினரான (ஹோகன்ஷோலர்ன்) Hohenzollern சார்பாக “புரட்சியின் வெற்றிகளை அழிவிலிருந்து” காப்பாற்றுவதற்கான தேவை பற்றி. சமூக–தேசபக்தர்கள் அவர்களுடன் சேர்ந்து இசைக்கத் தொடங்கிவிடுவர்.

நாம் கூறுவோம்: “அங்கு பாதுகாக்கப்பட வேண்டியவை சில மட்டும் இருக்கும் என்றால்!” அனைத்திற்கும் முதலாக, நாம் புரட்சியை உள்நாட்டு எதிரிகளிடமிருந்து கட்டாயம் பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டசபைக்காகக் காத்துக் கொண்டிராமல், முடியாட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ குப்பை கூளங்களை எல்லாம் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் நாம் கட்டாயம் துடைத்துக்கட்ட வேண்டும். Rodzianko வின் வாக்குறுதிகளையும் Miliukov வின் தேசபக்த பொய்களையும் நம்ப வேண்டாமென்று நாம் ரஷ்ய விவசாயிக்கு கற்பிக்க வேண்டும். விவசாயப் புரட்சி மற்றும் குடியரசு என்ற பதாகையின் கீழ் பத்துலட்சக்கணக்கான விவசாயிகளை மிதவாத ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஐக்கியப்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் மீது தங்கி இருக்கும் ஒரு புரட்சிகர அரசாங்கம் மட்டுமே இந்தப் பணியை Guchkovs மற்றும் Miliukovs களை அதிகாரத்திலிருந்து துரத்துவதன் மூலம் முழுமையாய் மேற்கொள்ள முடியும். புரட்சிகர அரசாங்கம் நாட்டுப் புறத்திலும் நகர்ப்புறத்திலும் உள்ள உழைக்கும் மக்களின் மிகவும் பின்தங்கிய மற்றும் புரிந்துகொள்ளமுடியாத தட்டினரை தம் சொந்தக் காலில் நிற்கச்செய்ய, கல்வியூட்ட மற்றும் ஐக்கியப்படுத்துவதை செய்யும்பொருட்டு அரசு அதிகாரத்தின் அனைத்து வளங்களையும் இயங்கச்செய்யும். அத்தகைய அரசாங்கமும் அத்தகைய தயாரிப்பு வேலையும் மட்டும்தான் அரசியலமைப்பு சட்டசபையை நிலம்படைத்த, முதலாளித்துவ நலன்களுக்கான திரையாக அல்லாமல், மாறாக புரட்சிக்கும் மக்களுக்குமான ஒரு உண்மையான அமைப்பாக்கும்.

நல்லது, வெற்றிகரமான ரஷ்யப் புரட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாகத் தோற்றமளிக்கும் துருப்புக்களை உடைய, ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern ஐ என்ன செய்வது?

நாம் ஏற்கனவே இதுபற்றி எழுதி இருக்கிறோம். ரஷ்ய புரட்சியானது ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern ஐ பொறுத்தவரை, ஏகாதிபத்திய ரஷ்யாவின் திட்டங்கள் மற்றும் வேட்கையைவிட அளவிடமுடியாத வகையில் அதற்கு பேராபத்து. புரட்சியானது அதன் Guchkov-Miliukov பேரினவாத முகமூடியை அகற்றிய உடனேயே, அதன் பாட்டாளி வர்க்க முகத்தைக் காட்டிய உடனேயே, மிக சக்திமிக்க பிரதிபலிப்பை அது ஜேர்மனியில் சந்திக்கும்; ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern ரஷ்ய புரட்சியின் குரல்வளையை நெரிப்பதற்கு குறைந்த ஆவலையும், சாத்தியத்தையும் கொண்டிருப்பார். அவருக்கு உள்நாட்டில் போதுமான அளவு கவலைகள் இருக்கும்.

“ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் எழுச்சிகொள்ளவில்லை எனில் என்ன? பின்னர் நாம் என்ன செய்வது?”

“அதாவது, புரட்சியானது இங்கே தொழிலாளர் அரசாங்கத்தை அதிகாரத்தில் இருத்தினால் கூட ரஷ்ய புரட்சியானது ஜேர்மனியில் அதன் தடத்தை விட்டுச்செல்லாமல் நிகழும்? என்று நீங்கள் அனுமானம் கொள்கிறீர்கள். ஆனால் அது முற்றிலும் நடைபெறமுடியாதது.”

“ஆனால், இருப்பினும்…?

“அடிப்படையிலேயே, அத்தகைய ஒரு தவறான கருத்து மீதாக எமது மூளையை போட்டுக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை. போரானது ஐரோப்பா அனைத்திலும் சமூகப் புரட்சியின் வெடிமருந்தால் நிரம்பிய கிட்டங்கிகளுக்குள் திரும்பி விட்டது. இப்பொழுது ரஷ்ய பாட்டாளி வர்க்கமானது இந்த வெடிமருந்துக் கிடங்கில் சுடர்விடும் தீப்பந்தத்தால் பற்றவைக்கிறது. ஒருவேளை இந்த தீப்பந்தம் வெடிப்பை நிகழ்த்தவில்லை எனக் கொள்வோம், வரலாற்று தர்க்க விதிகளை மற்றும் உளவியலை மறுத்தலை சிந்திப்பதாய் இருக்கும். ஆனால் சாத்தியமற்றது என்பது நிகழ்வதாக இருந்தால், உடனடியான சகாப்தத்தில் பழமைவாத தேசபக்த இயக்கங்கள் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தை அவற்றின் ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிராகக் கிளந்து எழவிடாமல் தடுப்பதாக இருந்தால் – அப்போது ஒருவேளை ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஆயுதங்களைக் கையிலேந்தி புரட்சியைக் காக்கும். புரட்சிகரத் தொழிலாளர் அரசாங்கம் சகோதர ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தை பொது எதிரிக்கெதிராகக் கிளர்ந்து எழுமாறு அழைப்புவிடுத்து, ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern மீது போர் தொடுக்கும். துல்லியமாக, அதேவழியில், உடனடியான சகாப்தத்தில் அது அதிகாரத்தை கையிலெடுத்தால், ஜேர்மன் பாட்டாளி வர்க்கமானது, ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் ஏகாதிபத்திய எதிரியை எதிர்கொள்வதில் அவர்களுக்கு உதவும் பொருட்டு உரிமை கொண்டது என்று மட்டுமல்லாமல், Guchkov-Miliukov களுக்கு எதிராக போரைத் தொடுப்பதற்கு கடமைப்பாட்டைக் கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு வகைகளிலும், பாட்டாளி வர்க்க அரசாங்கத்தால் நடத்தப்படும் போரானது ஆயுதம் ஏந்திய புரட்சியாக மட்டுமே இருக்கும். இதன் பொருள் ’தாய்நாட்டைக் காப்பாற்று’ என்பதாக இருக்காது, மாறாக ‘புரட்சியைக் காப்பாற்று’ என்பதாகவும் மற்றும் பிற தேசங்களுக்கு அதனைக் கொண்டுசெல்வதாகவும் இருக்கும்.

நோவி மிர், 21 மாரச்,1917.

Read more...

Wednesday, May 17, 2017

இன்று மே 17. நா ங்கள் யார் தெரியுமா?

நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம்.

அரச ஆதரவாளர்கள், இலங்கை இராணுவம் இந்திய இராணுவம், பொலிசாருடன் உறவுகளைப் பேணியவர்களைக் கொன்றோம். அயல்நாட்டில் தலைவரைக் கொன்றோம், அவருடன் அப்பாவிகளைக் கொன்றோம்.

சரணடைந்த படையினர் பொலிசாரைக் கொன்றோம். அரசியல்வாதிகள், மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் கொன்றோம்.

எங்களால் சிறைப்பிடிக்கப்பட்டு எங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் நாம் கொன்றோம். எங்களைக் கேள்வி கேட்டவர்களையும் கொன்றோம். வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொன்றோம்.

எங்களுடமிருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொன்றோம். சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொன்றோம்.

எங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொன்றோம்.

விமான நிலையம், வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள், பஸ்கள், மதவழிபாட்டு ஸ்தலங்கள், சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளைக் கொன்றோம்.

குழந்தைகளைக் கொன்றோம், பெண்களைக் கொன்றோம், கர்ப்பிணிகளையும் கொன்றோம், முதியவர்களைக் கொன்றோம்.

எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொன்றோம்.

மகிந்தாவுக்கு மாலை போட்ட குருக்களையும் கொன்றோம்.

காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் போராட்டம்.

ஆனால் நாங்கள் தோல்வியடையும்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைவோம். எங்களை யாரும் கொன்றால் அது போர்க்குற்றம், மனித உரிமை மீறல்.

ஐ நாவில் எழிலனின் மனைவி கதறுகிறார், புலித்தேவனின் மனைவி கதறுகிறார், மலரவனின் மனைவி கதறுகிறார். நடேசனின் மகன் கண் கலங்குகிறார்.

இவர்கள் கதறுவதைப் பார்த்து ஐ நாவே கலங்குகிறதாம். யார் இவர்கள்? தமிழ் மக்களின் பேரழிவிற்குப் பொறுப்பானவர்களின் மனைவி மார்களும் பிள்ளையும்.

வன்னிக்குள் வரும் இராணுவத்தைக் கரும்புலிகள் கவனித்துக் கொள்வார்கள். இதைச் சொன்னவர் நடேசன். கரும்புலிகள் நடேசனின் பிள்ளைகள் அல்ல. அது யாரோ ஏழை எளியதுகளின் பிள்ளைகள். நடேசனின் மகன் இங்கிலாந்தில் வாழுகிறார். நடேசனுக்குப் பிள்ளைப் பாசம் இருக்கிறது. எழிலன், புலித்தேவன், நடேசன், மலரவன் ஆகியோரின் மனைவிமார்களுக்கு கணவன்கள் மேல் பாசம் இருக்கிறது. ஆனால் இவர்களால் எத்தனை பெண்கள் விதவையானார்கள்? எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்தார்கள்? எத்தனை பிள்ளைகள் அனாதைகள் ஆனார்கள்? இறுதி யுத்தத்தின்போது பிள்ளைகளைக் கடத்தியதில் புலித்தேவனுக்கு முக்கிய பங்கு உண்டு.

தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியாத இவர்கள் எதற்கு யுத்தம் புரிந்தார்கள்? எதிரி பொல்லாதவன் எதிரியிடம் உயிருடன் சரணடையக்கூடாது என்று இயக்க உறுப்பினர்களுக்கு கட்டளையிட்ட இந்தத் தலைமைகள் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க எதிரியிடம் சரணடைந்தார்கள்.

புலிகளால் கடத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளையும் அழைத்து வந்து ஐ நாவில் அழவிடுங்கள். அப்படிச் செய்வதாயின் ஐ நாவின் உள்ளேயும் வெளியேயும் இடம் போதாது.

அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம் வரை புலிகள் கொன்றவர்களின் குடும்பங்களை ஜெனீவா அழைத்து வாருங்கள்..

இலங்கை இராணுவம் எறிகணைகளை வீசியது, குண்டுகளை வீசியது. புலிகள் பதிலுக்கு மலர்களையா தூவினார்கள். புலிகள் தாக்குதல் நடத்தாமல் இராணுவம் மட்டும் தாக்கியதா? இராணுவத் தரப்பில் அழிவுகள் இருக்கவில்லலயா? தங்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய புலித் தலைமைகள் தங்களிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடையும்போது அவர்களை மன்னித்து கடவுச்சீட்டு, விசா எல்லாம் பெற்றுக்கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் என்று புலித்தலைமைகள் எதிர்பார்த்ததா? புலிகள் தங்களால் இயலாத கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடையும் போது இலங்கை அரசோ , இராணுவமோ புலிகள் கடந்த காலங்களில் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை மறந்துவிடுவார்களா?

புலிகள் இந்தியாவுக்குச் செய்த துரோகத்தைவிட இந்தியா ஒன்றும் புலிகளுக்குத் துரோகம் இழைக்கவில்ல. இந்திய இலங்கை ஒப்பந்தம் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை. விளைவு நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுக்கு உயிரழிவையும் பொருளழிவையும், தமிழ்ப்பெண்கள் மானமிழக்கவும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.

பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தையும் திருப்தி அழிக்கவில்லை. மீண்டும் யுத்தம் ஆரம்பித்து வலிகாமம் வடக்கு மக்களை அவர்களின் பூர்வீக வசிப்பிடங்களிலிருந்து துரத்த வைத்தது சந்திரிகாவின் தீர்வுத் திட்டமும் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை! விளைவு குடாநாட்டிலிருந்து தமிழ் மக்களை விரட்டி வன்னிக் காடுமேடெல்லாம் அலைய வைத்தது.

ரணில் காலத்தில் சமாதன ஒப்பந்தமும் புலிகளுக்குத் திருப்தி அழிக்கவில்லை. ஒரு புறம் சமாதானம் பேசிக்கொண்டு ஆயுதங்களைக் கடத்திக் கொண்டும் நூற்றுக்கணக்கான நூற்றுக்கணக்கான அரசியல் படுகொலைகளைப் புலிகள் நாடு பூராவும் செய்தார்கள்.

மகிந்த அரசிடம் புலிகளின் நாடகம் எடுபடவில்லை. விளைவு சிங்களம் எதிரியென்று சொன்ன புலித்தலைமைகள் ஒரு வலிந்த யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டு தங்கள் உயிர்களை மட்டும் பாதுகாக்க சிங்களத்தின் காலில் வெள்ளைக் கொடியுடன் வீழ்ந்தது.

தீர்வுத் திட்ட வரைபை செய்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தையே புலிகள் தற்கொலைத் தாக்குதல்மூலம் கொலை செய்தவர்கள். இப்போது சுயநலம் கொண்ட புலித் தலைமகளின் மனைவி மார்கள் ஐ நா வரை சென்று புலம்பினாலும் புலிகள் செய்த மனித குல விரோதச் செயல்களை உலகம் அறிந்துள்ளவரை இவர்கள் மேல் எந்தவித அனுதாபத்தையும் பெற்றுக் கொடுக்காது. நவநீதம்பிள்ளையே புலிகளின் பயங்கரவாதத்தை தெளிவாக அறிந்தவர்.

Illankumar Thuraisingham

Read more...

Tuesday, May 9, 2017

ராணுவ வீரர்களுக்காக உடல் உறுப்புகளை தானம் செய்த கூலி தொழிலாளி!

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் ராமநாதபுரம் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘’ கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சிறு வயது முதலே இந்திய நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. ஆனால் இந்திய ராணுவத்திற்காக நமது பங்களிப்பை ஏதாவது வகையில் வழங்க வேண்டும் என்ற ஆவல் ஆரம்பம் முதல் இருந்தது. இந்திய திருநாட்டிற்காக தனது குடும்பத்தையும் மறந்து நமக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு பயன்பெறும் வகையில் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

எனக்கு இதுவரை எந்த உடல்நலக்குறைவும் ஏற்பட்டதில்லை. மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டதில்லை. நல்ல நிலையில் உடலை பராமரித்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த உடலை பயன்பெறும் வகையில் ராணுவத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளேன். நான் இறந்த பின்பு, எனது உடல் உறுப்புகளை இந்திய ராணுவத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்’’என்று கூறியிருந்தார்.

வயதான காலத்தில் தனது உடல் உறுப்புகளை இந்திய ராணுவத்திற்காக ஒப்படைக்க முன்வந்தவரின் செயல் அனைவரையும் நெகிழச்செய்தது.

நக்கீரனுக்காக பாலாஜி.

Read more...

Monday, May 8, 2017

சிறிசபாரட்ணத்திற்கு அஞ்சலி செலுத்த கோண்டாவில்லுக்குச் சென்ற ஜனா கொக்கட்டிச்சோலையிலும் செய்வாரா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதை மயானத்தை நோக்கி திரும்பிய முக்கியமான சந்தி புலிகள் ரெலோ இயக்கத்தினரை தடை செய்து அவ்வியக்கத்தினரை அழிக்க முடிவு செய்ததாகும். புலிகளியக்கத்தின் ஏகபிரதிநிதித்துவ மோகத்தால் ரெலோவின் தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இம்மாதத்துடன் 31 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ரெலோவின் தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் அவர்கள் கோண்டாவில் மற்றும் வவுனியாவில் இவ்வருடமும் நினைவு கூறப்பட்டிருக்கின்றார்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பிலிருந்து கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவ்வியக்கத்தின் மூத்த உறுப்பினருமாகிய ஜனா எனப்படுகின்ற கோவிந்தன் கருணாகரனும் கலந்து கொண்டுள்ளார்.

செட்டிபாளையத்திலிருந்து கோண்டாவிலுக்கு ஸ்ரீ சபாரட்ணத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற ஜனா, 1986ம் ஆண்டு மே மாதத்தில் கொக்கட்டிச்சோலை ரெலோ முகாமொன்றில் அம்மன் நோயினால் பீடிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாது படுத்திருந்தபோது புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ரெலோ உறுப்பினர்களை நினைவுகூற இதுவரை மறுத்துவருவது முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளை எழுப்பியுள்ளது.

ரெலோ இயக்கத்தினரை தடைசெய்து, யாழ்பாணமெங்கும் அவர்களை கொன்று குவித்து, உயிருடன் ரயர் போட்டெரித்து புலிகள் கோரத்தாண்டவமாடினர் என்பது வரலாறு. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அநேகர் மட்டு அம்பாறையை சேர்ந்த உறுப்பினர்கள்.

மேற்படி போராளிகள் சிந்திய இரத்தம் இன்று ஜனா போன்றவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் செங்கம்பளமாக மாறியுள்ளது. இவர்களின் தியாகங்களை தங்களுக்கு மேற்குலகில் தஞ்சம் கோரும் துருப்பாகவும், இலங்கையிலே வாக்குவங்கிக்கான மூலதனமாகவும் பயன்படுத்தும் ஜனா மட்டக்களப்பு போராளிகளுக்காக அந்த மண்ணிலே ஓர் நினைவுகூறலை ஏற்பாடு செய்ய மறுப்பதன் குறுகிய அரசியல் லாபம் பற்றி பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது.

புலி ஆதரவாளர்களின் வாக்குகளுக்காக சகதோழர்களை கொச்சைப்படுத்தி மட்டக்களப்பில் நிகழ்தப்படும் புலிகளின் நினைவுகூறல்களுக்கு ஜனா அழையா விருந்தாளியாக நுழைவதாக ஏளனஞ்செய்யப்படுகின்றார்.

இந்நிலைமைகளை கருத்திலெடுத்து புலிகளுக்கு மட்டக்களப்பில் விழாவெடுக்கும் ஜனா முன்னாள் ரெலோ உறுப்பினர்களை நினைவுகூறவும், அவ்வியக்கதிலிருந்து உயிரிழந்தவர்களின் விபரங்களை ஆவனப்படுத்தவும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுப்பாரா?

இதேநேரம் ஸ்ரீ சபாரட்ணம் அவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான அவ்வியகத்தின் உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் இப்படுகொலைகளை வருடாந்தம் நினைவுகூர்ந்து அரசியல்லாபம் தேடிக்கொள்ளும் ரெலோவின் தலைமை இக்கொலைகள் புலிகளால் நடத்தப்பட்ட கொலைகள் என்பதை சூட்சுமமாக மறைக்க முனைந்து வருகின்றது. இது தொடர்பில் லண்டனில் தற்போது தலைமையுடன் முரண்பட்டு வருகின்ற அவ்வியக்கத்தின் முன்னாள் உறுப்பினரான சோதிலிங்கம் தனது தலைமை பாசிஸ்டுக்களான புலிப்பயங்கரவாதிகளால் காவு கொள்ளப்பட்டது என்பது தெட்டத்தெளிவாக கூறப்படவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

Sunday, May 7, 2017

ஆரிய திராவிட மோதல்கள் : சில கேள்விகள் ; வரலாற்றுக் குறிப்புகள்! -தமிழரசன் (பேர்லின் )

தமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித்தனரோ அப்படியே திராவிடர்களை ஆரியக் கருத்தாளர்களும் திராவிடச்சிந்தனையாளர்கள் ஆரியரையும் நடத்த விரும்பினர். தென்னிந்திய திராவிடவாதிகள் வாய்ப்புக் கிடைத்தால் ஜெர்மனிய நாசிகளைப் போல் ஆரியர்கட்கும் பிராமணர்கட்கும் வதைமுகாம்களை அமைக்குமளவு தயாராக இருந்தனர் ."

திராவிட மொழிகள் பற்றி ரெபெர்ட் கால்டுவெல் 1856-1875 காலத்தில் ஆய்வுகளை நடத்தி திராவிட மொழிகள் பற்றிய நூல் வெளியிட்டார் என்பதுடன் குண்டர்ட் ஆகியோரும் திராவிடர் கருத்தியலை வளர்த்தனர். மக்ஸ்முல்லர் ஆரிய மொழிகள் பற்றிய ஆய்வு வெளியிட்ட (1853) காலப்பகுதியிலேயே இவையும் இடம் பெற்றமையும், இணைத்துப் பார்க்கவேண்டும். ஆரிய, திராவிட மொழியாய்வுகளாகத் தொடங்கிய இவைகள் விரைவில் ஆரிய, திராவிட மக்களினம்கள் என்ற கருத்துக்களாக வளர்க்கப்பட்டதை அன்றைய கொலனிக்கால மேற்குலக அரசியலின் தயாரிப்பாகவே விளங்கவேண்டும்.

இந்திய சிப்பாய் கலகம் பிரிட்டிஸ் அரசைப் பயமுறுத்தியிருந்தது; ஒன்றிணைந்த இந்திய தேசிய எழுச்சிக்கான தொடக்கமாக அது இருந்தது. எனவே, மக்களிடையே பிளவுகள், துண்டாடல்கள் தனியடையாளத் தேடல்கள் ஊக்குவிக்கப்பட்டன. இப்போக்குகள் தொடர்ந்து வளர்ந்து ஆரியர்- திராவிடர் உயர்வுச் சண்டைகளும் "யார் இந்திய மூத்தகுடி - வந்தேறுகுடி " என்ற வாதிடல்களும் தோன்றின.

கண்முன்னேயுள்ள அந்நிய பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்களை விட்டு விட்டு ‘கைபர்கணவாய்’ ஊடாக மந்தைகளை ஓட்டிக் கொண்டு வந்தவன் ஆரியன் ; திராவிடன்தான் மூத்தகுடி என்ற வாதம்கள் தோன்றின. புராண இதிகாசம்களில் ஆரியர்- திராவிடர் தேடப்பட்டனர். இராமர் ஆரியன்; இராவணன் திராவிடன்; வசிட்டர் பிராமணன்; விஸ்வாமித்திரன் சூத்திரன்; சமஸ்கிருதம் தேவபாசை , அதல்லாதவை நீசபாசை என்ற சச்சரவுகள் முன்வந்தன.

ஆரியர்- திராவிடர் சச்சரவுகள் சாதாரண இந்திய மக்களை நெருங்கவில்லை. மாறாக, ஐரோப்பிய சார்பான ஆங்கிலக்கல்வி பெற்றவர்களும் நகர்ப்புறம்சார்ந்த நடுத்தரவர்க்கமுமே இக்கருத்தியல்களின் பின்பு அலைந்தனர். பிரச்சாரப்படுத்தினர். தாம் சொந்தமாக மேற்குலக மொழி , நாகரீகம், கருத்துக்களில் பறிபோயிருப்பதை இவர்கள் உணராமல் ஆரிய திராவிடக்கற்பனை எதிரிகளையும் தீரர்களையும் தேடி பழைய வரலாற்றின் இருட்டுள் நுழைந்தனர். புராண, இதிகாசக் கருத்துக்களை சரித்திர உண்மைகட்குச் சமமாய் நிறுத்தனர். திராவிடநாடு, ஆரிய தேசம், இந்துஸ்தான் கேட்கும் இயக்கங்கள் தொடங்கின. இவை இந்திய சுதந்திரத்தின் பின்பு ஏகாதிபத்தியங்களின் சொற்கேட்கும் பரிவினைச் சக்திகளாகின.

இவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தின் பிம்பங்களாகவுமிருந்தனர். திராவிடப் பெருமை பேசியவர்கள் ஆரியர்களை தமது எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். அதாவது வட இந்திய ஆரியரையே அவ்வாறு கருதினார். ஆனால், மேற்குலக வெள்ளை ஆரியரை தம்மை வென்று அடிமை கொண்டவர்களை எதிர்க்கவில்லை. அல்லது, குறைந்தது வட இந்திய ஆரியராகக் கருதப்பட்டவர்களை எதிர்த்ததுபோல் இது நடைபெறவில்லை. ஏன் இவர்கள் இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்த்துவிட்டு ,ஐரோப்பிய வெள்ளைத் தோல் ஆரியரை விட்டு வைத்தனர்? ; ஏன் ,மேற்கத்தைய வெள்ளை ஆரிய நாகரீகத்தைப் பின்பற்றினர். அவர்களின்மொழி. பகுத்தறிவு, விஞ்ஞானம், அறிவியல், அரசியல், தத்துவம் இவைகளை ஏற்று ஒழுகினர். இது எப்படி நடைபெற்றது? ;மேற்குலக, வெள்ளை ஆரியரின் மருத்துவம் இல்லாமல் இந்தியாவின் கொலரா, அம்மை, தொழுநோய், இளம்பிள்ளைவாதம், கசம், மலேரியா இல் இருந்து இந்திய ஆரியர் மட்டுமல்ல திராவிடரும் தப்பிப்பிழைத்து இருக்க முடியுமா? மேற்கத்தைய ஆரியராககருதப்பட்டவர்களின் ஜனநாயகம், அரசமைப்பு முறைகளை திராவிடர் தழுவவில்லையா? இங்கு கற்பனையான திராவிடர் ஆரியர்களை நிறுவும் சண்டைகள் மனித விரோதமானவையே.

திராவிடர், ஆரியர் என்ற இரு பிரிவினரிடமும் ஒருவரிடம் இல்லாத சிறப்பு உயர்வுகள் மற்றவர்களிடம் இருப்பதான கருத்துக் கட்டல்கள் மானுடவியல் ரீதியில் ஆதாரமற்றவை. மக்களின் பண்புகள் அவர்களின் வாழ்நிலையில் கட்டமைப்படுபவையே தவிர பிறப்பிலேயே உயிரியல் ரீதியில் முன்பே நிர்ணயிக்கப்பட்டவையல்ல .

வரலாற்றில் முன் எப்போதோ நிகழ்ந்த அநீதிகட்கு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து பழியெடுக்க வேண்டுமெனச் சபதம் செய்வது அக்காலத்தின் வரலாற்றுப் போக்கை மறுத்து, திருத்தம் செய்ய முயல்வதாகும். ஒரு காலகட்ட தனியுடமை அமைப்பின் மனித இழிவுகட்கு இன்றைய மனிதர்களின் ஒரு பிரிவைப் பொறுப்பாக்குவது ஒட்டு மொத்த சமுதாயச் செயற்பாட்டின் இயக்கத்திலிருந்து அவர்களை தனியே பிரித்துக் காண்பது தவறாகும். குற்றம் நிறைந்த தனிச் சொத்துடமை அமைப்பை எதிர்ப்பின்றி விட்டு வைத்துக் கொண்டு ,அதனால் இயக்கப்படும் மனிதப்பிரிவுகளையோ தனிமனிதர்களையோ விசாரணை செய்யமுயல்வது சமூக இயக்கப் போக்கை மதிப்பிடாதவர்கட்கு மட்டுமே முடிந்த காரியமாகும்.

சாபம் தருவதோ, சபிப்பதோதீர்வு அல்ல உயர்வு, தாழ்வு பற்றிய கருத்துக்கள் நல்லன கெட்டவை பற்றிய பகுப்புக்கள் யாவும் சமூகத்தின் பொருளாதார உற்பத்திப் போக்கின் நலன்களில் இருந்தே வருகின்றது. குற்றம்கள் ஏனைய மனிதர்களை இழிவு செய்தல் அடிமைப்படுத்தல் என்பன ஏதோ தனிமனித மனம்களில் இருந்து உதித்து வருவதில்லை. சாணக்கியர் முதல் மனு வரை அக்காலகட்ட அரசியல்,சமூக பொருளியல் கட்டளைகளையே நிறைவேற்றினர்.கடந்த காலத்தை நாம் செப்பனிடமுடியாது. மாறாக ,கடந்தகாலப் போக்குகளை ஆய்ந்து எதிர்கால, நிகழ்கால,சமூக மாற்றங்கட்கு கீழ்ப்படுத்த வேண்டும். மனிதர்களின் அக அம்சங்கள் உள்மன உலாவல்கள் புறநிலையாக நிலவும் சமூகவாதிகளின் கருத்துக்கட்டளையிடலாகும். அநீதிகளை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை இயங்கவிட்டுக் கொண்டு அந்த இயக்கத்துக்கு உட்படும் மனிதர்களை மட்டும் குற்றம் குறை காண முடியாது.

ஒரு மக்கள் பிரிவுக்கு எதிராக பகைமையுணர்வுகள், பழியெடுக்கும் சபதம்கள் இந்தியாவின் தேசம் தழுவிய ஒன்றிணைதல் தொடங்க பிரதான தடையாக இருந்தது. திராவிட நாகரீகம் ஆரியத்தை விட உயர்ந்தது. அங்கு கடவுள் இல்லை , சாதி கிடையாது, பிராமணியம் நிலவவில்லை என்ற வரலாற்று ஆய்வுக்குட்படாத செய்திகள் சரித்திரத் தகுதி பெற்று உலாவின. புராண, இதிகாசப் பாத்திரம்கட்கு உயிர் தரப்பட்டு அவர்கள் திராவிட மற்றும் ஆரியக் கருத்துக்களுக்கான போராளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர். திராவிட நாகரீகத்தில் செல்வந்தர்கள், ஏழைகள், மதகுருக்கள், உலோகத் தொழிலாளர்கள், சுதந்திரமற்ற அடிமைகள் இருந்ததை மறைத்தனர். அவ்வாறே ஆரியரும் தம் வளர்ச்சியல் கடந்து வந்த மானுடவியல் உண்மைகள் நிலவவில்லை என்று மறுத்தனர். திராவிட கருத்தியலானது ‘லெமூரியா’,குமரிக்கண்டம், குமரிநாடு, ஏழ்கடல்நாடு, ‘தென்குமரி முதல் வடவேங்கடம் வரை’ பரவிய தமிழ்நாடு என்ற தமிழ்த்தேசியவாதக் கனவுகளை பின் தொடர வைத்தது.

தமிழ் நாட்டுத் தேசியமானது திராவிடத்தின் குழந்தையாகும். இந்தியா என்பது பலவித சாதி,சமய, இனக்குழு, சமூகப் பிரிவுகள், மொழிகளின் நாடாகும். இவைகளிலே பிளவும் முரண்களும் சச்சரவுகளும் நிலவவே செய்யும் என்பதன் பொருள் அவர்களிடையே பொதுவான வர்க்க ரீதியிலான அம்சம்களும் உடன்பாடான சமூகப் போராட்டத் தேவைகளும் நிலவாது என்பதல்ல. அந்நிய பிரிட்டிஸ் ஆட்சியை எதிரிடத்தக்க பலத்தை தம்மிடையே திரட்ட கடமைப்பட்ட இந்தியர்களாக உருவாகி வந்த மக்களை பிரிட்டிஸ் அரசு ஆரியர், திராவிடர், தலித்தாக மட்டுமல்ல, இந்துவாக, சீக்கியர், முஸ்லிம், பௌத்தர்களாக கூறு போட்டுக் கையாண்டது. அந்தப் பிரிவுகளிடையே தனித்தனி தலைமைகளை உருவாக்கி தன் கீழ் கையாண்டது.

திராவிடத் தமிழ்ப் பெருமைகளைத் தேடி தமிழ்தேசியவாதிகள் எகிப்து, பாபிலோனியா, பேர்சியா, கிறீஸ், மத்தியதரைக் கடற்பிரதேசம் எங்கும் பயணித்தார்கள். இலங்கையில் பண்டிதர் கணபதிப்பிள்ளை அலெக்சாண்டர் ஒரு தமிழன் என்று கண்டு பிடிக்க தமிழ்நாட்டில் பெருஞ்சித்திரனார், ம.பொ.சி, ஆதித்தனார் போன்றவர்கள் இதையொத்த கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தினர். இவர்கள் ஏகாதிபத்திய பிரிவினை அரசியலுக்கான சிறந்த இரைகளாக இருந்தனர். சுமேரிய, எகிப்து நாகரீகம்கள் திராவிட நாகரீகம் எனவும் இந்த நாகரீகம்களின் மூலம் தமிழர் நாகரீகமே என்ற விளக்கம்களும் உலாவின. இவைகளின் வரலாற்றுப் பெறுமதிகள் பற்றி தமிழ்தேசியவாதிகள் கவலையுறவில்லை.

தமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித்தனரோ அப்படியே திராவிடர்களை ஆரியக் கருத்தாளர்களும் திராவிடச்சிந்தனையாளர்கள் ஆரியரையும் நடத்த விரும்பினர். தென்னிந்திய திராவிடவாதிகள் வாய்ப்புக் கிடைத்தால் ஜெர்மனிய நாசிகளைப் போல் ஆரியர்கட்கும் பிராமணர்கட்கும் வதைமுகாம்களை அமைக்குமளவு தயாராக இருந்தனர். திராவிடப் பெருமை, திராவிட தேசம் பேசிய பெரியார் கூட ஆரியரை பிராமணர்களை எதிர்த்தாரே தவிர வெள்ளை ஆரியரான பிரிட்டிஸ்காறரை எதிர்க்கவில்லை. மாறாக ,அவர்களின் நாகரீகம், பகுத்தறிவு, விஞ்ஞானம் இவைகளைப் புகழ்ந்து இந்திய விவசாய சமூகத்தின் பின் தங்கிய நிலைமைகளை நையாண்டி செய்தார். மேற்கு நாகரீகம் தொழிற்துறை வளர்ச்சியின் விளைவு, தொழிற் புரட்சியின் முன்பு ,பிரிட்டன் கூட இந்திய நிலைமைகளையொத்த சமூக நிலைமையையே கொண்டு இருந்தது என்று இவர்கள் கண்டாரில்லை .

இந்தியப் பிராமண மதகுருக்களை போல் ஜரோப்பாவில் பாப்பரசர் கிறிஸ்தவமதக் குருக்களை நியமிப்பது போல் மன்னர்களையும் நியமித்தனர். பல சமயங்களில் வரி செலுத்தாத மன்னர்களின் நாட்டை அடமானமாகப் பெற்றார். மன்னார்கள் இல்லாத போதும் மன்னராக இளவயது சிறுவர்கள் இருந்தபோதும் பாப்பரசரே நாட்டை நிர்வகித்தார். தன்னை எதிர்த்த மன்னர்களை விலக்கினார். அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு மக்களை கிறீஸ்துவின் பெயரால் தூண்டினார். தனது சார்பான புதிய மன்னர்களை நியமித்தார். நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றார். பகை நாடுகள் மீது படையெடுத்தனர். ஏனைய நாடுகளை அந்த நாடுகள் மேல் படையெடுக்கும்படி தூண்டிவிட்டார். புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாறிய நாடுகளையும் தமது பகை நாட்டிலும் ஞானஸ்நானம், திருமணம், சாவு, அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான கிரிகைளை அவர்மறுத்தார். திருச்சபை உத்தியோகம்கள், பதவிகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன.

மதகுருக்கள், நிலபுல சொத்துக்களை வைத்து இருந்தார்கள். அந்த நிலம்களில் ஏழைகளும் அடிமைகளும் உழைத்தார்கள். சந்தைகளில் அக்காலத்தில் மனிதர்கள் ஆடு, மாடுகள் போல் விற்று வாங்கப்பட்டனர். அடிமைகள், தியோர்கள் (Theows)என்று அழைக்கப்பட்டனர். ஏழைகள் கடனைத் திருப்பித் தர முடியாத விவசாயிகள் தம்மைத் தாமே நிலப்பிரபுக்களிடம் விற்றுக் கொண்டனர். பிரிட்டனில் கி.பி.1000 இல் அடிமையகளே சந்தைகளில் முக்கிய விற்பனைப் பண்டமாக இருந்தனர். தப்பியோடும் அடிமைகள் திருடும் அடிமைகள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். அடிமைகளைக் கொல்ல உரிமை இருந்தது. குற்றம் செய்தவர்களை தீயை ஏந்தச் செய்தல் நீரில் மூழ்கச் செய்தல் ஆகியவை ஊடாக குற்றமற்றவர்கள் என நிரூபிக்கக் கோரும் நீதிசார் நடைமுறைகள் ஐரோப்பாவில் இருந்தன. மதகுருக்கள், படைத்தலைவர்கள், அரசுப் பிரதிநிதிகள், செல்வந்தர்கட்கு அரசன் மானியமாக வழங்கிய நிலம் Bochland என்று அழைக்கப்பட்டது. இந்த நிலம்களில் விவசாயிகள் குத்தகைக்கு உழைத்தார்கள். குத்தகையாக விளைபொருள் தராத விவசாயிகளைக் கொல்லும் உரிமை நிலவுடமையாளனுக்கு இருந்தது.

கிறீஸ்த திருச்சபைகள் தமது சொந்த நீதிமன்றம்களைக் கொண்டிருந்தன. இங்கு கிறீஸ்தவ திருச்சபை சார்ந்த குற்றவாளிகளை இவை விசாரித்து அரச நீதிமன்றம்களை விட மிகவும் குறைவான தண்டனையே வழங்கின. உதாரணமாக அரச நீதிமன்றம் கொலைக்கு மரணதண்டனை வழங்கியபோது திருச்சபை நீதிமன்றம் கொலைக்கு தமது திருச்சபை ஆட்களை கிறீஸ்தவ மதச் சின்னம்கள் மத ஆடைகளை களைந்து விடும்படி மட்டுமே தீர்ப்பளித்து. பாவம்களைச் செய்த பாவிகளிடம் இருந்து கிறிஸ்தவ மதகுருக்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பாவம்களை போக்கும் பொருட்டு ‘பாவமன்னிப்பு சீட்டுக்களை’ வழங்கினர். இப்படியாக செய்த பாவம் போக்கப்பட்டுப் புண்ணியம் விலைக்க வாங்கப்பட்டது. பாவமன்னிப்புச் சீட்டுக்களை விற்பதற்காக ஐரோப்பா எங்கும் பாப்பரசரின் கிறீஸ்த பாவம் போக்கிகள் அலைந்த திரிந்தார்கள்.

கி.பி. 1539 இல் பிரிட்டனில் கத்தோலிக்க மதத்தைக் காக்க ஆறுவிதிகட்கான சட்டம் (The statute of six Articles) கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கத்தோலிக்க கொள்கைகளை நம்பாதவர்களை உயிரோடு எரியூட்டும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கிறிஸ்தவ வழிபாட்டின்போது படைக்கப்படும் ரொட்டியும் வைனும் கிறீஸ்துவின் தசையும் இரத்தமுமாகும் என்பதை நம்ப மறுப்பது தெய்வ நிந்தனையானது. கத்தோலிக்க எதிர்ப்பாக்கப்பட்டு மரணத்துக்குரிய தண்டனையாகியது!

14 ஆம் நூற்றாண்டில் வெடிமருந்து கண்டு பிடிப்புக்குப் பின்பு பீரங்கிப்படைகள் உருவாகின. சண்டையிட்டன. கி.பி. 1600 இன் பின்பே பிரிட்டனில் வெளிநாட்ட உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்தது. நகரம்கள் எழுந்தன. துறைமுகங்கள் கப்பல்கட்டும் தொழில்கள் வந்தன. 1525 இல் வில்லியம் டிண்டேல்; (William Tyndale) பைபிளை லத்தீனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார். அதன் பின்பே ஆங்கிலமொழி வளர்ந்தது. கலைகள், இலக்கியம், அறிவுத்துறைகள் வளரத் தொடங்கின. இங்கு தொழில் மயமாதலின் விளைவாகவே வர்த்தக வளர்ச்சி காரணமாகவே இவை நிகழ்ந்தன. அடிப்படையில் இந்திய பிரிட்டிஸ் சமூகங்கள் அக்காலத்தே கிட்டத்தட்ட ஒரே மட்டத்திலேயே இருந்தன.

ஐரோப்பிய முதலாளிய வளர்ச்சி தான் மேற்குலகை மாற்றியது. இந்தியாவின் உடன் கட்டை ஏறும் முறைபோல ஐரோப்பிய ‘விக்கிங்கர்’ மக்கள் பிரிவிடம் ஆண் இறக்கும்போது பெண்ணையும் அவனுடன் சேர்த்து எரிக்கும் பழக்கம் நிலவியது. எனவே இந்து சமயத்தையோ பிராமணியத்தையோ இதுவரை மனிதவரலாற்றில் இல்லாத கொடுமைகளைக் கொண்டிருப்பதாகக் கற்பிக்க முடியாது. பல ஆயிரம் வருடம் மாறாத சமூகமாக இந்தியா இருப்பதே இதற்குக் காரணம் . மறுவகையில் இந்தியாவானது பேர்சியா, பபிலோனியா, எகிப்திய நாகரீக மிச்சம்களையும் நினைவுகளையும் கொண்டுள்ள ஒரு சமூகமாகும். இந்திய சமூக இருப்பை வரலாற்று மற்றும் மானுடவியல் ரீதியில் அணுகாமல் அதன் மிகப் பின் தங்கிய பொருளாதார உற்பத்திமுறைகளோடு இணைத்து ஆராயாமல் வெறும் ஆரிய,பிராமண வெறுப்புக்களால் எதிர்கொள்வது காலம் கடந்த பெரியாரிய, அம்பேத்காரிய அரசியல் சரக்குகளாகும். இந்திய முழுச்சமூக அமைப்பும் சோசலிசத்துக்குள் வரும்வரை இந்திய சமூகக் கொடுமைகளை ஒரு போதும் முழுமையாக ஒழிக்கமுடியாது என்பதே இந்திய அரசியல் சமூகப் போக்குகள் திரும்பத்திரும்ப நிரூபிக்கும் விடயமாகும்.

இந்தியாவின் சகோதர மக்கள் பிரிவுகளிடையேயுள்ள அநீதிகள் முரண்பாடுகள் என்பன வர்க்க சமூக ஒழுங்குகட்குட்பட்டவை ; சாதிகள் என்பன வர்க்க சமூகத்தின் வெளித்தோற்றமாகும். பல்வகையான தொழிற் பிரிவினைக்குட்பட்ட உழைப்பாளர்களின் பிரிவாகும். சாதிகளை வர்க்க சமூகத்தின் அம்சமாகப் பார்க்க மறுத்தவர்களது மதிப்பீடுகள் இன்று பொய்த்துப் போய்விட்டன.

பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனையன்றி உள்ளுரில் சொந்த தேச மக்களை ஆரியர்- திராவிடர் என்ற வரலாற்றுக் கற்பிதங்களுடன் இப்போக்குகள் இந்திய சுதந்திரத்தின் பின்பு நாட்டுப் பிரிவினை வடக்கு, தெற்கு பேதம் வடவர்- தென்னவர் சார்ந்த தீராத சச்சரவுகட்கு இட்டுச் சென்றது. இவர்கள் ஏதோ ஒரு வகையில் மேற்குலக சக்திகளின் அரசியல் நிதிக்கட்டளைகட்கு உட்பட்டே செயற்பட்டனர். இந்தியாவின் முன்னேற்றமற்ற பழைய விவசாய சமூக அமைப்பில் உள்ளுரின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியவில்லை. பலவிதமான சமூகப் பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலகம் செய்ய வாய்ப்புகள் நிலவியது என்றபோதும் மறுபுறம் , இந்திய மக்களின் பல வண்ணப் பண்புடைய போக்குகள் பகை மட்டுமே நிரம்பியவையாகக் காண்பிப்பது திராவிட – ஆரிய பிரிவினைவாத சக்திகட்கு அவசியமாக இருந்தது. இவை ஒரு தேசமாக பொதுப்பண்புகளை நோக்கி வளரத்தக்க வரலாற்றுக்கட்டத்தில் இருந்தன.

இன்று வளர்ச்சியடைந்த எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் இத்தகைய பல இனக்குழுத்தன்மை வாய்ந்த வித்தியாசமான ஏற்றத்தாழ்வான போக்குகளிலிருந்து முன்னேறி வந்தமையே. ஆரியர் – திராவிடர் பல ஆயிரம் வருடங்களாக ஓயாது ஒழியாது போரிட்டனர் என்ற வரலாற்றுப் புனைவுகள் தான் ஒருவரையொருவர் பழியெடுக்க முயலும் இந்த இரண்டு பிரிவுகட்கும் ஆதாரமாகும் .இந்தியாவின் சகல துன்புறும் மக்கள் பிரிவுகளும் ஒன்று சேராமல் இந்தச் சிந்தனைகள் பார்த்துக் கொண்டன என்ற அளவில் இவர்கள் முதலாளித்துவ அமைப்புக்கு சிறப்பான சேவை புரிந்தார்கள்.

இந்திய ஆரியக்கருத்துக் காவிகள் இந்தியாவுக்கு முதலாளிய வழியில் கூட ஒரு போதும் தேவைப்பட்டிராத யூத எதிர்ப்பைக் கொண்டிருந்ததுடன் கிட்லரையும் ஜெர்மனியப் பாசிசத்தையும் வெளிப்படையாகவே ஆதரித்தனர். தாம் ஐரோப்பிய ஆரியருடன் சேரும் ஒரே இனம் என்று நம்ப இவர்கள் கற்பிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் திராவிட மற்றும் தலித்திய வெறுப்புக்களைக் கொண்டிருந்ததுடன் ஆரியரின் மதம் என்று தாம் கருதிய இந்துமதம் ஊடாக சகலரையும் அதனுள் உள்ளடக்கி விட முயன்றனர். இவர்களின் பொது அம்சமாக சோசலிச எதிர்ப்பு இருந்தது. இவர்கட்கு எதிர்நிலையில் செயற்பட்ட பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் தாம் சார்ந்த மக்களை சோசலிசத்தின் பக்கம் போகாமலும் பிரிட்டிஸ் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரை முன்னேறாமலும் பார்த்துக் கொண்டார்கள். இதற்கு இவர்கள் ஆரிய எதிர்ப்பை இடதுசாரிச் சாயலுடன் வெளிப்படுத்தினர். இந்த இரு பிரிவும் பல நூறு மில்லியன் கணக்கான ஏழைகளாலும் உழைப்பாளர்களாலும் நிரம்பிய இந்திய மக்களை இணையவிடாமல் செய்தனர்.

மனிதப்பண்பாட்டு அம்சங்களை உயர்வு தாழ்வு முறைகளை தீவிரமாய் பேசியதின் ஊடாக மக்களின் பொருளாதார அம்சங்களை அதை வெல்வதற்கான வழிவகைகளை புறம் தள்ளிவிட்டனர். இன்று தமிழ்நாட்டில் பெரியாரியம், தலித்தியம், பின் நவீனத்துவம், காந்தீயம், திராவிடம், இந்துமதம் பேசிய எல்லோருமே சுற்றிச் சுற்றி மேற்குலக அரசியல், கருத்தியல், பொருளாதார ஆர்வம்கட்கு உட்பட்டவர்களே. பல தொகை மேற்குலக NGO க்கள் இவர்களுடன் உறவு கொண்டுள்ளமை இதற்கு வெளிப்படையான சான்று 1990 இன் தொடக்கத்தில் பெரியார், அம்பேத்கார், காந்தியம், பின் நவீனத்துவம், தலித்தியம் பற்றி பெரும் தொகை ஆய்வுகள், நூல்கள் வெளிவந்தமையும் இதற்கான அமைப்புக்கள் புத்தமைக்கப்பட்டமையும் இடதுசாரி அமைப்புக்களின் இடத்துக்கு இவை பதிலாக நிறுவ முயற்சிக்கப்பட்டமையும் ஏதோ நினையாயப் பிரகாரமாக நடந்தேறவில்லை. உலகம் முழுவதும் மேற்குலகு சார்பான கருத்துக்கள் முன்னேறிக் கொண்டிருந்தபோதே இவை நடந்தன.

ஸ்டாலினிசக் கட்சிகளில் இருந்து வெளியேறிய அரசியல் உதிரிகள் இப்போக்குகளில் முன்னணியில் இருந்தனர். NGO நபர்களாக மாறுவதற்கான கல்வித்தகைமை, ஆங்கில மொழியறிவு நடுத்தரவர்க்க சமூகப் பின்புலம் என்பன அவர்கட்கு தோதாக இருந்தது. இவர்கள் கலகக்காறர்களாகவும் கட்டுடைப்பாளர்களாகவும் புத்தமைப்பாளர்களாகவும் தோன்ற முயன்றனர். இவர்கள் உலக மயமாதலுள் நுழைந்த இந்திய முதலாளித்துவத்துக்கு ஏற்ற கருத்தியல் தயாரிப்பை வழங்க முயன்றனர். உலக மயமாதலில் நேரடியாகப் பயன் பெறத் தொடங்கிய புதிய சமூகப் பிரிவுகளின் பேச்சாளர்களாக மாறினர். இவர்கள் பெரியார், அம்பேத்கார், காந்தி போன்றவர்களை புனரமைத்தனர். புதிய வாதம்களால் நிரப்பினர் என்பது மறுபுறம் இந்தியா தழுவிய ஒரு புதிய முதலாளிய வளர்ச்சிக்கு எதிரான மேற்குலக நாடுகளின் விருப்பார்வமாகவும் இது இருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல பெருமளவு 3ஆம் உலக நாடுகளில் பலவித சமூகக்குழுக்களை மேற்குலக நாடுகள் அரசியல் வாழ்வுக்கு கொண்டு வந்த சமயமாக அது இருந்தது. NGO க்களின் சகாப்தம் தொடங்கிய தருணம் அது தான். இவை இடதுசாரிகள், சமூக விடுதலை அமைப்புக்கள், கொரில்லா இயக்கம்களின் பலம்களையும் குறைக்க முயன்றன. அவர்களின் இடம்களைக் கைப்பற்றின. தமிழ்நாட்டில் தியாகு, திருமாவளவன், அ.மாக்ஸ், ராமதாஸ், ரவிக்குமார் போன்ற ஸ்டாலினிசக் கட்சி மற்றும் மாவோயிச ஆயுதக்குழுக்களின் நபர்கள், சாதிய அமைப்புக்களை உருவாக்கியதுடன் இடதுசாரிச் சிந்தனைகளை ஆய்வதாய்த் தொடங்கி கடைசியாக மாக்சிய விரோதத்துக்கு வந்து சேர்ந்தனர். 1990 களில் மேற்குலக நாடுகளில் தோல்வியடைந்த சீர்திருத்தவாத சோசலிச அரசியல் கருத்துக்களின் உதவியுடன் மாக்சியத்தை ஆராய முயன்ற இவர்கள் இறுதியாக நம்பிக்கையழிவுக்கும் இவர்களது குழுக்கள் பிரிந்து உடைந்து சிதறி தனிமனிதர்களாக காணாமல் போவதற்கும் வழியானது.

1990 தொடங்கி அதன் பத்தாண்டு முடிவு வரை புதிய எழுத்தியக்கம் படைத்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் இன்று எந்தப் பயன்பாடுமற்றவர்களாக அரசியல் தனியன்களாக மாறிவிட்டனர். புகலிடங்களில் அரசியல் , இலக்கிய கலகங்களை மூட்டியவர்களாக தம்மை உரிமை கோரிக் கொண்ட இவர்கள் இன்று அம்பலமாகிவிட்டனர் . இவர்கள் மார்ட்டின் கைடேக்கர் ,நீட்சேயை மட்டுமல்ல மேற்குலக பாசிசத்தின் நவீன செமிட்டிக் எதிர்ப்பு வடிவம்களையும் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து இருந்தனர்.

மாக்சியம் செமிட்டிக் பாதிப்புடைய சிந்தனை என்று குற்றம்சாட்டப்பட்டதுடன் நீட்சேயின் பாசிசத் தோற்றக் காரணிகளை மறைத்து அவனைப் போற்றினர். பாசிச சிந்தனாவாதி மாட்டின் கை டேக்கர் கொண்டாடப்பட்டார். மாற்றாக ஜெயமோகன் போன்ற இந்துமதவாதிகள் இவர்களின் உதிரித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு செமிட்டிக் மற்றும் மாக்சிய எதிர்ப்பும் பேசத் தொடங்கினர். தழிழ்நாட்டில் பெரியாரியம் மற்றும் தலித்தியம் பேசியவர்கள் திராவிடர் சிந்தனைக்கு நெருக்கமானவர்களாக இருந்த போதும் மறுபுறம் மேற்கத்தைய ஆரிய மற்றும் பாசிச செமிட்டிக் எதிர்ப்புக் கருத்துக்களையும் பிற்காலத்தில் கொள்முதல் செய்து இருந்தனர் என்பது பெரும் முரண்பாடாகும்.

இன்று திராவிடம் ஆரியம் காந்தியம் என்பன இந்திய பொது முதலாளிய வளர்ச்சியுள் நவீன மயமாகும் தொழிற்துறையுள் கலந்து உருகத் தொடங்கிவிட்டன. இவைக்கு எதிர்காலமில்லை. திராவிடம் என்பது தென்னிந்திய திராவிட மக்களை ஒன்றிணைப்பது என்று தொடங்கி பின்பு தமிழ்நாட்டில் திராவிட இயக்கமாக பெரியாரியமாகக் குறுகி இன்று இவை பாராளுமன்ற வாதக் கட்சி அரசியலில் கூட வழக்கொழிந்து வருகின்றன.

திராவிட இயக்கம்கள் இன்று இந்திய தேசியப் போக்குள் ஈர்க்கப்பட்டு கலந்துவிட்டன. தமிழ்நாட்டு திராவிட இயக்கவாதிகட்கு வெள்ளை மற்றும் கறுப்புத் திராவிடர்கள் இருப்பது தெரியாது. இவர்கள் இந்தியாவுக்கு வெளியல் உள்ள திராவிடராகக் கருதப்படுபவர்களை எண்ணுவதில்லை. செமிட்டிக் மற்றும் மங்கோலிய மக்கள் பிரிவுகளுடன் கூட திராவிடமொழிபேசும் மக்கள் பிரிவுகட்கு தொடர்புள்ளது என்பதால் ‘உலகத்திராவிடர்களே ஒன்றிணையுங்கள்’ என்றா இவர்கள் கேட்கமுடியும். திராவிடப் பெருமை என்பது ஆரியப் பாசிசச் சிந்தனா முறைக்குச் சமமானதே. திராவிடர்கள் ஆரியரால் ஒடுக்கப்படுகின்றனர் என்ற கருத்து வரலாற்றின் அறியாக்காலத்துக்கு உரியதான சான்று தர முடியாத கருத்துக்களைப் பின் தொடர்வதாகும்.

‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற ஏகாதிபத்திய கருத்தியல் அப்படியே தமிழ்ச் சூழலுட் எடுத்துக் கையாளப்படுகின்றது. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மேற்குலக யுத்தத்திற்கு ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தனிமைப்படுத்தும் அரசியல் சித்தாந்தம் பாவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கட்கு இப் பெயர் தரப்படுகின்றது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் மேற்குலக அரசை எதிர்த்து போராடும் சக்திகட்கு இப்பெயர் இடப்படுகின்றது. ஒரு அரசியல் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடைய இயக்கம் இப்படியாக மதவாத விளக்கம்களால் மட்டும் நிரப்பப்பட்டது. இஸ்லாம் எதிர்ப்பு இயக்கம் என்பது அரபு மக்கள் எதிர்ப்பு இயக்கம்களாகவும் இனவாத ஐரோப்பிய மேன்மை பேசும் அமைப்புக்களாகவும் அன்று இருந்தன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புதிய நாசி இயக்கம்கள் இப்போ யூதர்களை விட இஸ்லாமையும் முழு முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களாக மாறியுள்ளனர். ஆபிரிக்க, ஆசிய முஸ்லிம்கள் மதவெறி கொண்ட கீழ்நிலை மனிதர்களாக அழித்தொழிக்கப்பட வேண்டிய மக்கள் பிரிவாக மாற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் அரசு மட்டுமல்ல புதியநாசி அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய "PROD" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அன்றைய யூத எதிர்ப்பு இன்று இஸ்லாம் எதிர்ப்பாக மாறியுள்ளது. ஊடகம்களில் பெரும் தொகையான இஸ்லாம் எதிர்ப்புச் சொற்கள் புழக்கத்துக்கு வந்துள்ள தினசரி புதிய ‘இஸ்லாம் மேலான விமர்சகர்கள்’ (Islamkritiker) தோன்றுகின்றார்கள். இணையத்தளம் முதல் பத்திரிகைகள் வரை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுதாரிகள், குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமண வழக்கம்களை உடையவர்கள் என்று உருவகிக்கின்றன. புதிய நாசி இணையத் தளம்களில் அரபுக்கள் பன்றிகளையொத்தவர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கு இடப்பட்ட பெயராகும்.

இதனுள் உலகின் பலநூறு மில்லியன் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள். உலகில் நடைபெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்களை எல்லாம் மதத்தின் பெயரால் அடையாளப்படுத்த முடியுமா? யோர்ச்சு புஸ் ஒரு கிறீஸ்தவ அடிப்படைவாதி என்று ஏன் கொள்ளப்படுவதில்லை? ஐரோப்பியக் கூட்டமைப்பை ஒரு கிறீஸ்தவக் கூட்டமைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாதா? பிரிட்டனின் அயர்லாந்து மேலான ஒடுக்குமுறையை புரட்டஸ்தாந்து, கத்தோலிக்கப் போராட்டமாக நாம் விளக்கமுடியாதா? தலாய் லாமாவின் சிந்தனைகள் ஏன் பௌத்த மத அடிப்படைவாதமாய்க் கொள்ளப்படுவதில்லை? தமிழ், சிங்கள பிரச்னையை ஏன் பௌத்த, இந்துமத அடிப்படைவாதம்கட்கு இடையேயான போராட்டமாய் விளக்கப்படுவதில்லை? ஒரு அரசியல் போராட்டத்தின் விளைவுகளே இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று மேற்கு நாடுகளால் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது.

மதம் என்ற அளவில் கிறீஸ்தவம் இஸ்லாம், யூத நம்பிக்கை யாவுமே கிட்டத்தட்ட ஒரே மூலத்தில் பிறந்த ஒரே சாயல்படைத்த மதம்களாகும். மதம்கட்கு உள்ள பிற்போக்குத்தன்மை, மனித விரோதப் பண்புகள் எல்லா மதம்கட்கும் பொதுவானவை. பைபிள் புனிதமானது அதன் தழுவலாகப் பிறந்த ‘குர்ரான்’ கொடியது என்ற வகுத்தல்கள் மேற்குலக அரசியலின் படையலாகும். இஸ்லாமிய இயக்கம் வரலாற்றில் தீவிரத்தன்மை பெற்ற காலம்களை நாம் பார்த்தால் அது மேற்கு நாடுகளின் அரசியல், இராணுவச் சதிகளின் விளைவாகவே இருந்தது. முதலாம் உலக யுத்த சமயத்தில் ஜெர்மனி, அரபு முஸ்லிம்கள் மத்தியில் பிரிட்டன் பிரான்சுக்கு எதிராக ‘புனித யுத்தம்’ எனப்படும் இஸ்லாமிய மதவாத அமைப்புக்களை உருவாக்கியது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக பிரான்சும் மேற்குநாடுகளும் அங்கு இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கினர்.
ஆப்கானில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் PLO வுக்கு எதிராக இஸ்ரேல்’ஹமாஸ்’ இயக்கத்தை தொடங்கியது. பாகிஸ்தான், காஸ்மீர், சீனா, லிபியா. முன்னாள் யூகோஸ்லாவியா எங்கும் மேற்குலக உளவுத்துறைகள் இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கின. இவர்களே குரான் போதிக்கும் இஸ்லாமியப் பள்ளிகளையும் உருவாக்கினர். அப்படி எதிர்ப்புரட்சி சக்திகளான இஸ்லாமிய இயக்கம்கள் உலக மயமான பின்னர் மத்திய கிழக்கு எண்ணெய் வளம்கள் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தோடு பிணைந்த பின்பே ஏகாதிபத்திய எதிர்ப்பு குணத்தைப் பெறுகின்றன.

இஸ்லாமிய இயக்கம்கள் என்பது ஆசிய, ஆபிரிக்க மக்களின் ஒரு பிரிவின் மேற்குலக எதிர்ப்பு இயக்கமாகும். 1990 முன்பு இந்த முஸ்லிம்அமைப்புக்ககள் அமெரிக்கக் கட்டுப்பாட்டுள் இருந்தன. கொம்யூனிச எதிர்ப்பும் உள்நாட்டில் ஜனநாயக எதிர்ப்பையும் சர்வாதிகார அரசியலையும் கொண்டிருந்தவையாகும். இன்று ஆசிய,ஆபிரிக்க எரிபொருள் வளம்களை காக்கும் இயக்கம்களாக உள்ளன. இந்த எழுச்சி தனி நாடுகளில் அல்ல ஒரு மில்லியாடனுக்கும் மேற்பட்ட மக்களின் இயக்கமாக உள்ளது. 3ம் உலக வளம்கள், தொழிற்துறை சார்ந்த போக்குகள் இதனால் பலமடைகின்றன. மேற்கு நாடுகள் எவ்வளவுக்கு கொடூரமான சக்திகளாகி மாறி யுத்தப் பயங்கரவாதம் செய்கின்றனவோ அந்த மட்டத்துக்கு இஸ்லாமிய இயக்கம்களும் கொடூரமாக மாறுகின்றன.

இஸ்லாமிய இயக்கம்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றைக் கண்டறியாத 3ம் உலக சமூகம்களில் இருந்து உருவானவை என்பதால் இனக்குழுத்தன்மை வாய்ந்த தீவிரமான குணாதிசயம்களை வெளிப்படுத்துகின்றன. இப்பிராந்தியம்களில் தொழிற்துறை முன்னேற்றம் வளரும்போது இஸ்லாமிய இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கும் மேற்குலக ஆதிக்கம்கள் முஸ்லிம் நாடுகள் மேல் குறையக் குறைய இந்த இயக்கம்கள் ஏனைய முதலாளிய ஜனநாயக அமைப்புக்கட்கும் தொழிலாளர் அமைப்புகட்கும் வழிவிடவேண்டிய வரும்.

இங்கு நம்மிற்பலர் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசுகிறாமே ஒழிய கிறீஸ்தவ, பௌத்த, யூத அடிப்படைவாதம்களைக் கிஞ்சித்தும் பேசவதில்லை. ஏகாதிபத்தியம்களை எதிர்க்கும் அமைப்புக்களை -அது தற்காலிகமாக இருப்பினும் கூட -நாம் ஏகாதிபத்தியம்களோடு ஒன்று சேர எதிர்க்கக்கூடாது. பலம் பொருந்திய பிரதான எதிரிக்கு எதிராய்ப் போராடும் எமது பலமற்ற எதிரிகளை எதிர்ப்பதென்பது மேற்குலக ஒடுக்குமுறையாளர்களை ஆதரிப்பதில் தான் கொண்டு போய் விடும். இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற கருதுகோளே மேற்குலக பிரச்சாரகர்களாக மாறுவது தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பேசும் நாம் திபேத்திலும் பர்மாவிலும் உள்ள பௌத்த அடிப்படைவாதத்தைப் பேசவதில்லை என்பது நமது சிந்தனையொழுங்கு பற்றிய பிரச்னையாகின்றது. தலாய்லாமா, பின்லாடன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை மத அடிப்படைவாதம் என்றால் பின்லாடனின் மதவாதம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடையது என்பதுடன் மேற்குலக கூலியான தலாய் லாமாவை விட உயர்வானது.

‘இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பு, வன்முறையால் அழிக்கப்பட்டது. தொழிற் புரட்சியின் ஆரம்பம் சிதைக்கப்பட்டது. அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது’என்று வரிசைப்படுத்துகின்றோமா நாம் ? இங்கு ,மிகவும் மேலோட்டமானதும் எளிமைப் படுத்தப்பட்ட சுலோகம்களில் நாம் சிக்கியுள்ளதைக் காண்கின்றோம்.

இந்தியா மிகவும் மந்தகதிபடைத்த உலகின் பழமையான விவசாயப் பண்புகளையும் உற்பத்தி வடிவம்களையும் கொண்ட நாடாகும். பிரிட்டனின் வரவு என்பது இந்திய நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பை முழுமையாக அழிக்கவில்லை. அது மன்னர்களையும் ஜமீன்தார்களையும் கொண்டு அதை நிர்வகித்தது மறுபுறம் பல நூறு மக்கள் பிரிவுகள், இனக்குழுக்கள், மொழி மற்றும் பிரதேசப் பிரிவுகள் உடைய மக்களை ஒரே இந்தியாவாக பிரிட்டிஸ் இணைத்தது. ஒரே விதமான சட்டம், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தெருக்கள், வாகனம், புகையிரதம் ஆகியவைகளைக் கொண்டு வந்தது. ஒரு மத்தியப்படுத்தப்பட்ட பலமான அரசை உருவாக்கியது. நாடு தழுவிய தொடர்பும் நாணயம், வரிமுறைகளையும் ஏற்படுத்தியது; ஒரு புறம் பிரிட்டன் இந்தியாவின் பழைமையை அழித்தது. மறுபுறம் , புதியதாக சமூக, பொருளியல் நிலைகளை உருவாக்க அது கட்டாயப்படுத்தப்பட்டது. ஆக்கலும் அழிவும் இணைந்தே நடந்தது. இந்தியாவில் பரவலாக நகரம்கள் உருவானது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி வர்த்தகம் என்பன அல்லாமல் ஏற்பட்டிருக்கமுடியாது. இந்தியா கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தமைக்கு சற்று முன்பாகவே பிரிட்டனில் தொழில்புரட்சி ஏற்பட்டு இருந்தன.

பிரிட்டனின் இளம் முதலாளியம் பெரும் பேராசையுடன் கொலனிகளைச் சூறையாடியது ; மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தது.பிரிட்டனில் இருந்து உற்பத்திப் பொருட்களை இறக்கி கொலனிகளில் விற்றது. இந்தியக் குடிசைக் கைத்தொழில் உட்பட சிறு தொழில்கள் இதனால் அழியத் தொடங்கியது. பிரிட்டனின் பெரும் துணி ஆலைகளைக் காக்க இந்தியாவில் பருத்தியைக் கொண்டு மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட மஸ்லின் துணிகளின் உற்பத்தியை அழிக்க இந்திய நெசவுத் தொழிலாளர்களின் பெருவிரல்கள் வெட்டுவது வரை பிரிட்டன் சென்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சியை பிரிட்டனால் தாமதிக்கச் செய்ய மட்டுமே முடிந்தது. ஒரு தொழிற்துறை வல்லமை பெற்ற நாடாக இந்தியா உருவாகத் தேவையான சமூகத் தயாரிப்பு, இந்தியர் என்ற தேசிய உருவாக்கம் என்பன பிரிட்டிஸ் காலத்திலேயே உருவாகின்றது.

இந்தியாவானது பிரிட்டிஸ் காலத்தில் அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது என்ற நம்மிற்பலரது விளக்கமானது எம்வரின் புரிதல் சார்ந்த குழப்பத்துக்கு அடையாளம், பிரிட்டன் இந்தியா உட்பட கொலனிகளைக் கொள்ளையிட்டே தனது சொந்த மூலதனத் திரட்டலையும் பிரிட்டிஸின் தேசியப் பொருளாதாரம், தொழிற்துறைகளைக் கட்டிக்கொண்டது. மறுபுறம் இந்தியாவானது பிரிட்டிஸ்காலத்தில் தான் தொழில் மயமாக்கலுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. பிரிட்டன் இந்தியாவைக் கைப்பற்றாமல் இருந்திருந்தால் இந்தியா தொழில்மயமாக இன்னமும் நீண்டகாலம் தனது சொந்த வழியில் வளரவேண்டி வந்திருக்கும். முதலாம் இரண்டாம் உலக யுத்த சமயத்தில் பிரிட்டனில் பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமையாலும் விலை அதிகமாக முடிந்தமையாலும் இந்தியாவிலும் பகுதியாக உற்பத்தி செய்தது. சில தொழிற்துறைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. பிற்காலத்தில் மேற்கத்திய மூலதனம்கள் தேசிய எல்லைகளை மீறி வளரத் தொடங்கியபோது அவை இந்தியா உட்பட நம் உலக நாடுகளில் நுழைந்தன. ஆனால் ,இன்றைய உலக மயமாதலில் இந்திய மூலதனம் தனது தேசிய எல்லைகளையும் தாண்டிக்கொண்டு 3ம் உலக நாடுகளில் மட்டுமல்ல மேற்கு ஐரோப்பாவிலும் நுழைவதைப் பலர் கவனிக்கவேயில்லை .

இந்தியா, சீனா இரண்டும் 21ம் நூற்றாண்டுக்கான நாடுகள் என்று "Die Zeit" என்ற ஜெர்மனியப் பத்திரிகை எழுதுகின்றது. உலக மக்கள் தொகையில் 35 வீதமானவர்கள் இப்பிராந்தியத்தில் வாழ்கின்றார்கள் என்பதுடன் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் நாடுகளாக இப்பிரதேசம்கள் மாறிவிட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியான "ADB" யின் தலைவர் Haruhiko Kuroda ஆசியாவுக்கான பொது நாணயம், வரித்தீர்வு என்பவை பற்றிப் பேசியுள்ளார். ஜப்பானிய Yen சீன Yuan தென்கொரிய Won , இந்திய ரூபாய் இவைகட்கு மாற்றான நாணயமொன்றைக் கொண்டு வரத்திட்டம் உள்ளது. உலகவங்கி, சர்வதேச நாணய வங்கி இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல முழு 3ம் உலக நாடுகளிலும் சக்தியிழந்துவிட்டது.

இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய பகுதிகளில் மட்டுப்பட்டுக் கிடந்த இந்தியா இப்போ இந்தியத்துணைக்கண்ட எல்லைகளைக் கடந்து வெளியேறி உலகு தழுவிய சந்தை, மூலதனமிடல், தொழிற்துறைகளில் மேற்குலக நாடுகளின் பிரதான போட்டி நாடாகிவிட்டது. இந்தியா, பிறேசில், தென் ஆபிரிக்கா என்பன கூட்டாக "IBSA" என்ற சுதந்திர வர்த்தக வலயத்திட்டத்தை உருவாக்கியுள்ளன. பிறேசிலுடன் கூட்டாக "Icone" என்ற ஆய்வுத்திட்டத்தை தொடங்கியுள்ளது. உயிரணுத் தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தயாரிப்பு தொழிநுட்பம், அணுத் தொழில்துறை, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் இவர்கள் ஆய்வு மற்றும் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளன. இந்திய மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனமான Ranbaxy பிறேசில் முதல் தென் ஆபிரிக்காக வரை நுழைந்துள்ளமையால் பாரம்பரியமான ஜெர்மனிய பிரிட்டிஸ் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனம்கள் தமது சந்தைகளைப் பறி கொடுத்துள்ளன. மேற்குலகின் உயர்ந்த உற்பத்திச் செலவு அதிகவிலைகளுடன் உலக சந்தைகளில் இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகளுடன் மேற்கு நாடுகள் போட்டியிட முடியவில்லை.

பிரிட்டனிடமிருந்து Ford நிறுவனத்தால் வாங்கப்பட்ட Jaguar ,land rover ஆகியவைகளை இந்திய Tata motors வாங்குகின்றது. இதேபோல் tata நிறுவனத்தின் துணை நிறுவனமான Tata steels பிரிட்டிஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உருக்கு இரும்புத் தயாரிப்பு நிறுவனமான Corus ஐ வாங்கியின் மூலம் உலகின் 5 வது பெரிய இரும்பு உருக்கு நிறுவனமாக மாறியுள்ளது. இதே நிறுவனம் சிங்கப்பூரின Natsteel தாய்லாந்தின் ; Millenium steel ஐ வாங்கியுள்ளது. இதன் மூலம் இத்தாலியின் Riva ஜெர்மனியின் Thyssen Krupp ஆகிய இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனங்களை முறையே 9 வது மற்றும் 10 வது இடத்துக்குத் தள்ளியுள்ளது. மற்றொரு இந்தியரின் நிறுவனமான Lakshmi Mittal தான் உலகின் மிகப் பெரும் இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனமாகும். இது அமெரிக்காவின் "Nucor"மற்றும் "USS" விடப் பெரியதாகும். லுக்சம்பேர்க்கின் "Arcelor" ஐ 2005 இல் 26 மில்லியாடன் டொலருக்கு வாங்கியதின் மூலம் இது சீனா முதல் மேற்கு நாடுகள் வரை ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் ஆகிவிட்டது. பிரிட்டன், இந்தோனேசியா,ரூமேனியா, கசகஸ்தான் உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

இந்த இந்து முதலாளி ரூமேனியத் தொழிலாளர்கட்கு கிறீஸ்தவ தேவாலயம் இலவசமாய்க் கட்டித் தருகின்றான். பிரிட்டிஸ் தொழிற் கட்சிக்கு நிதி தருகின்றான். Lakshmi Mittal க்குப் போட்டியாக வந்த மற்றைய இந்திய நிறுவனமான Tata இப்போ உலகில் 50 நாடுகளில் 96 நிறுவனம்களைக் கொண்டுள்ளது. இதில் 2,50,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரும்பு, இயந்திரத் தொழில், இரசாயனம், நுகர்பொருள், எரிபொருள், தொலைத்தொடர்பு, உட்பட பலதுறைகளில் இது உள்ளது. இத்தாலிய Fiat , ஸ்பெயினின் ; Hispano Carrocera ஆகிய வாகனத் தயாரிப்பு நிறுவனம்களில் Tata நிறுவனம் பங்குகளை வாங்கியுள்ளது. இது Tata Motors,Tata steel , Tata consultancy எனப் பல துணை நிறுவனம்களைக் கொண்டுள்ளது. Tata CTS தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய software தயாரிப்பு நிறுவனமாகும்.

இந்தியா தனது உற்பத்தியில் 40 வீதத்தை வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த 5 வருடத்தில் 12மடங்காக அதிகரித்துள்ளது. சீனாவின் Dong Fang, Changchun, FAW , போன்ற வாகனத் தயாரிப்பு போலவே இந்திய Ashok Leyland ,Tata பெரிய வாகனத் தயாரிப்பில் இறங்கிவிட்டது. இந்திய கைத்தொலைபேசி நிறுவனமான Bahatri தென் ஆபிரிக்க கைத் தொலைபேசி நிறுவனமான MTN ஐ 62 மில்லியன் வாடிக்கையாளருடன் வாங்கியுள்ளது.

இந்திய "HAL" நிறுவனம் அமெரிக்காவின் "Bell" கெலிகொப்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் "Bell Texto407 என்ற புதிய நவீன கெலிகளைத் தயாரிக்க உள்ளது. இதே சமயம் ஐரோப்பிய, "EADS"வுடன் இணைந்து இந்தியாவில் "Eurocopter" என்ற கெலிகொப்டர்களை தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. பிரான்சின் ; Renault வாகனத் தயாரிப்பு நிறுவனம் இந்திய, M&M நிறுவனத்துடன் கூட்டாக வாகனத் தயாரிப்புத் திட்டம். ஜெர்மனிய VW,BMW, கார்த் தயாரிப்பு நிறுவனம்கள் இந்தியாவுள் நுழைவு. இந்தியாவானது உலகில் சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய தொழிலாளர்களைக் கொண்ட நாடாக வளர்கின்றது. நவீன முதலாளியம் வளர்கின்றது என்றால் அதன் எதிர்விளைவாக தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் இந்தியாவுள் உருவாகி வருகின்றது.

2010 ஆம் ஆண்டில் சீனாவில் 109 மில்லியன் தொழிற்துறைப் பாட்டாளிகள் இருப்பர் என்றால் இந்தியாவில் அது 80 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்தியாவில் சிறு தொழில் சிறு உற்பத்தி அழிகின்றது என்றால் பெரும் தொழிற்துறைக்கு வழிவிடவே இது நடைபெறுகின்றது. சிறுவிவசாயி, சிறு உற்பத்தியாளன், சிறுவர்த்தகர், சிறுகைத்தொழில் என்பன அழிபட்டே தீரும். சிறுவிவசாயிகள் நெசவாளர்கள் தற்கொலை செய்வது நடைபெறுகின்றது. இது முதலாளிய வளர்ச்சிப் போக்கின் விதியாகும். முன்பு வளர்ந்த மேற்கு நாடுகளிலும் இத்தகையவை நடந்தன. இறுதியாகச் சோசலிசம் வந்து முழு மக்களையும் விடுதலை செய்யும் வரை வர்க்க சமுதாயக் கட்டமைப்பைத் தகர்க்கும் வரை இந்த மனித அநீதிகளை நிறுத்த மார்க்கமில்லை.

நாம் ஏனைய சமகால தமிழ்ப் பரப்பு சீர்திருத்தவாதப் போக்காளர்களைப் போலவே உலக மயமாக்கலுக்கு முந்திய மதிப்புக்களில் பின் தங்கிவிட்டோமா?

ஐரோப்பிய மையவாதப் போக்குகள் மேற்குலகே இன்னமும் 3ம் உலக நாடுகளைக் கட்டியவிழ்ப்பதான பழைய கருத்துக்களில் உறைந்து போயுள்ளனர். இன்றைய மேற்குலக வங்கி மற்றும் பெரு நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் 3ம் உலக நாடுகளையும் பின் தொடர்கின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பாவும் தமது உலகார்ந்த முதன்மையிடத்தை இழந்து விட்டன. இந்த நாடுகளில் தொழிலாளர்களின் எழுச்சி, மக்கள் கிளர்ச்சிகட்கான காலம் அரும்பத் தொடங்கிவிட்டது. அதைக் காண நாம் அனைவரும் கட்டாயம் உயிருடன் இருப்போம். தமிழ்த்தேசியம் தமிழ்ஈழம் சமஸ்டி என்ற சகல வரலாறு கைவிட்ட போக்குகளை முழுமையாகத் தலை முழுகவும் வாழும் புகலிட நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகள், சோசலிசத்துக்கான உழைக்கும் மக்களின் முழக்கம்களில் கலக்கவும் காலம் கட்டளையிடும். இது தவிர்க்கமுடியாமல் நடக்கும் தப்ப முடியாமல் நாம் முகம் கொடுப்போம்.

3ம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவக் கட்டம் இருந்தது என்ற தமிழ்ச் சூழற் கருத்தாவது, ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் கிட்டத்தட்ட நிலப் பிரபுத்துவம் நிலவவில்லை என்றே கொள்ளவேண்டும். ஆபிரிக்கா நிலப்பிரபுத்துவத்துக்கு முற்பட்ட இயற்கையுடன் இயைந்த வாழ்வு, வேட்டையாடல் சுயதேவைக்குப் பயிரிடல் என்பன நிலவியது. இங்கு நிலப்பிரபுத்துவம் இருக்கவில்லை. கொலனிக்காலத்திலேயே ஐரோப்பியர் பெரும் நிலப்பரப்பில் பயிர் செய்யத் தொடங்கினர். அரபு நாடுகளில் விவசாயம் பிரதான தொழிலாகவோ நிலம் அதிகாரத்துக்கானதாகவோ இருக்கவில்லை. அரபு மக்கள் மந்தை மேய்ப்பும் நாடோடிப் பண்புகளையும் கொண்டிருந்த மக்கள் நிலையான விவசாயம் செய்யத்தக்க நீர்வளமோ ஆறுகளோ அங்கு இல்லை. வாழக்கடினமான புவியியல் நிலையில் அவர்கள் இருந்தனர். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம்களைக் கொள்ளையிடுபவர்களாகவும் அதன் பின்பு அவர்கள் வர்த்தகம் புரிபவர்களாகவும் ஒரு பகுதி மாறுகின்றது. வர்த்தகம் வளர்ந்த பின்பே அரபுக்களின் நாகரீகம் வளர்கின்றது. இங்குபலர் எழுந்தபாட்டுக்கு நிலப்பிரபுத்துவம் என்பதை பிரயோகிக்கப் பார்க்கின்றார்களா?

செவ்விந்தியர்கட்கோ ஆபிரிக்க மக்களினம்கட்கோ இதைப் பொருத்தமுடியாது. அவர்கள் இக்கட்டத்தை வந்தடைய இன்னமும் காலம் இருந்தது. இவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு முந்திய இனக்குழுத்தன்மை படைத்தவர்களாக இருந்தனர். இந்த நாடுகளில் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் இவை அப்படியே கைப்பற்றி ஆளப்படவில்லை என்பதையும் புதிய சமூக பொருளியல் நிலைமைகட்கான அடித்தளம்கள் இடப்பட்டன என்பதையும் நாம் காணவேண்டும். நிர்வாக முறைகள், புதிய முதலாளிய பண்பாட்டின் தொடக்கம், சுதேசிய மொழிகள் பரவலாதல், எழுத்து வடிவம் பெறல், அச்சுக்கலை வளர்ச்சி என்பன தேசியம், முதலாளியம் என்பன வளர்வதற்கான தொடக்க நிலையாயின. மேற்கு நாடுகளின் மூலதன உருவாக்கம் என்பது அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டமை இந்தியா, சீனா, ஆபிரிக்கா கைப்பற்றப்பட்டமையூடாகவே நடந்தது. தம் சொந்த நாட்டுள் பெறப்பட்ட செல்வம் மூலப்பொருள், சந்தையுள் அவை தங்கியிருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம், சமமற்ற பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் நிலவின.

தொடரும்... தமிழரசன் (பேர்லின்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com