Saturday, July 26, 2014

பாராளுமன்றத்திற்கான காலத்தை 4 - 5 ஆண்டுகளுக்குள்ளாக்குமாறு கோருகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

பாராளுமன்றத்தின் காலப்பிரிவை 4 அல்லது 5 ஆக மட்டுப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, அவர் குறிப்பிடுகையில், பாராளுமன்றக் காலப்பிரிவை 4 - 5 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்பதை மக்கள் அபிப்பிராயத்திற்காக.விடுமாறு அவர் ஊடகங்களைக் கேட்டுள்ளார்.

பாராளுமன்றம் 4 ஆண்டுகளுக்குள் மட்டுப்படுத்தப்படும்போது, அதில் நன்மையிருப்பதாகவும் தேர்தலொன்று முகங்கொடுப்பதால் அதற்காக அரசியல்வாதிகள் பூரண ஆயத்தம் பெறமுடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com