Thursday, May 29, 2014

மலேசியாவிலிருந்து கொண்டு எல்.ரி.ரி.ஈ.யினருக்கு உயிரூட்டும் முயற்சி! மலேசியாவில் 4,000 தமிழ் அகதிகள் சோதனை!

மலேசியாவிலிருந்து கொண்டு இலங்கையில் மீண்டும் எல்.ரி.ரி.ஈ.யினருக்கு உயிரூட்ட முயற்சிக்கும் பயங்கரவாதிகளை தேடி மலேசிய பொலிஸார் வலை விரித்துள்ளனர். அந்நாட்டிலுள்ள 4 ஆயிரம் தமிழ் அகதிகளை சோதனைக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தில் பதிவு செய்து எல்ரிரிஈ செயற்பாடுகளில் ஈடுபட்ட 3 முக்கிய பயங்கரவாதிகள் மலேசிய பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எல்ரிரிஈ யினரின் பல இரகசியங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.

தற்போதைய நிலைமையில் மலேசியாவிலுள்ள சுமார் 4 ஆயிரம் தமிழ் அகதிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் காலித் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்ட 3 எல்.ரி.ரி.ஈ செயற்பாட்டாளர்களுள் முக்கிய தலைவரும் அடங்கியுள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் அவர் மலேசியாவில் தங்கியிருந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இம்மூவரும் ஐ.நா அகதிகளுக்கான அமைப்பில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com