முடிந்தால் அரசாங்கத்தில் இருந்து விலகவும்! வீரவன்சவிற்கு சவால்!
அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சிக்காது முடிந்தால் அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அண்மையில் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட ஊவா மாகாண சபை உறுப்பினர் மிஹிமல் முனசிங்க அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு சவால் விடுத்துள்ளார்.
பதுளை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் சரியான பாதையில் செல்லவில்லை எனவும் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த சில நாட்களாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment