பொலிஸ் பிரிவை கலைக்காததால் ராவணா அமைப்பினர் புத்தசாசன அமைச்சு அமைந்துள்ள கட்டடத்தில் முகாமிட்டுள்ளனர்!
மத விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்த உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
மத விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்த உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு அமைந்துள்ள கட்டடத்தில் ராவணா பலய அமைப்பினர் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட பொலிஸ் பிரிவு மத அலுவல்கள் மற்றும் புத்தசாசன அமைச்சு அமைந்துள்ள கட்டடத்தில் உள்ளது.
மத விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்த உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு காரணமாக இலங்கை தொடர்பில் சர்வதேசத்திற்கு தவறான தகவல் வழங்கப்படுவதாக ராவணா பலய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வெசாக் போய தினத்தின் பின் குறித்த பொலிஸ் பிரிவு கலைக்கப்படா விட்டால் பிரிவு அமைந்துள்ள அலுவலகம் முற்றுகையிடப்படும் என ராவணா பல அமைப்பினர் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அதனை செயற்படுத்தியுள்ளனர்.
எச்சரிக்கை விடுக்கும் வகையில் தான் உள்ளிட்ட பிக்குகள் படுக்கை, தலையணை, விரிப்பு சகிதம் மத அலுவல்கள் மற்றும் புத்தசாசன அமைச்சு அமைந்துள்ள கட்டடத்தில் முகாமிட்டுள்ளதாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் அத தெரணவிடம் தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் பிரிவு அகற்றப்படும் வரை வெளியில் செல்லப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment