Wednesday, May 28, 2014

110 KMக்கு மேலான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் கவனம் !!

தெற்கு அதிவேக பாதை, கட்டு நாயக்க – கொழும்பு அதிவேக பாதை ஆகியவற்றில் மணித்தியாலத்துக்கு 110 கிலோமீற்றர் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் வாகனம் செலுத்து வோரை கண்காணிப்பு கமராக்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்கள் அப்பாதையிலிருந்து வெளியேறும் இடத்தில் அபராத பத்திரத்தை வழங்கும் செயன்முறையொன்றை ஆரம்பிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது குறித்தான நடவடிக்கை களுக்காக கமராக்கள் நவீன மயப்படுத்தப் பட்டுள்ளதுடன் பாதையிலிருந்து வெளியேறும் போதே இந்த அபராத பத்திரம் அவர்களுக்கு பொலிஸார் ஊடாக வழங்கப்படும் எனவும் கமரா பதிவுகள் உள்ளிட்ட தொழில் நுட்பம் பயன்படுத்த்ப்படுவதால் யாரும் பொய் கூற முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தெற்கு அதிவேக பாதையில் இதுவரை 999 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 11 உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் விபத்துக்களில் 15 பேர் பலியிடப் பட்டுள்ளனர்.2011 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி முதலான காலப்பகுதியிலிருந்தே இந்த விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் கட்டு நாயக்க அதிவேகப் பாதையை பொறுத்தவரை கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் 95 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. எனினும் உயிரிழப்புக்கள் இங்கு பதிவாகவில்லை. இந் நிலையில் இந்த விபத்துக்களில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் ஏற்பட்ட விபத்துக்களே அதிகம் என்பது தெளிவாகியுள் ளது. அதிவேகப்பாதையில் மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் என்ற வேகத்திலேயே செல்ல முடியும். இந் நிலையில் பலர் அதனை விட அதிக வேகத்தில் செல்கின்றனர்.

இந் நிலையில் அதிவேக பாதையூடாக பயணிக்கும் ஒருவர் மணித்தியாலத்துக்கு 110 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்டு பயணிக்கும் போது அதிவேக பாதையில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் மூலம் அவர்கள் உடனடியாகவே அடையாளம் காட்டப்படுவர். இந் நிலையில் அவர்கள் வெளியேறும் போது வெளியேறும் வாயிலில் இருக்கும் பொலிஸார் அவர்களுக்கு தண்டப்பண பத்திரம் ஒன்றை வழங்குவர். அதற்கான ஆதாரம் கமராக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com