தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது சிறுவனின் சடலம் மீட்பு !!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலத்தை வெல்லாவெளி பொலிஸார் மீட்டுள்ளனர். திக்கோடை, 50 வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த பேரின்பம் ஜீதன் (15) என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இவர் தூக்கில் தொங்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment