கராத்தே பயிற்சி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆண், பெண் கிராம சேவகர்கள் !!
16 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததார்களெனக் கூறப்படும் சம்பவம் ஒன்று கட்டானை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றது. இது தொடர்பில் சந்தேகத்தில் கைதான ஆண், பெண் கிராம சேவகர்களை நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலகரட்ண பண்டார பிணையில் விடுதலை செய்ய உத்தர விட்டார். சந்தேக நபர்கள் இருவரும் தலா 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 30 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டதுடன் வழக்கின் முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தால் பிணை இரத்தச் செய்யப்படும் எனவும் நீதிபதியால் எச்சரிக்கப்பட்டனர்.
சந்தேக நபரான ஆண் கிராம சேவகர் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிப்பதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் அத்துடன் இன்னும் ஒரு பெண் கிராம சேவகரும் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோருக்கு தெரிய வரவே தகவல்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சீதுவை பொலிஸாரர் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 2012 ஆம் ஆண்டிலிருந்து சந்தேக நபர்கள் இருவரும் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
0 comments :
Post a Comment