பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்திற்கு உரிமை கோரி போராட்டம்!
கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சில தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன் கிளிநொச்சியியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்தற்கே இவ்வாறு உரிமை கோரி சில தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,
கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சில தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சாவக்கச்சேரியில் இருந்து வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 42 பேர் கலந்துகொண்டனர்.
இக்காணிகளுக்கு உரிமை கோரும் எவரிடமும் சட்டரீதியான காணி உறுதிகள் இல்லை. மேலும் ஒரு காணிக்காக பலர் உரிமை கோரும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சட்டரீதியான காணி உறுதிகளைச் சமர்ப்பித்தவர்களுக்கு கிளிநொச்சியில் 108 ஏக்கர் காணிகளை நாம் மீளக் கையளித்துள்ளோம் என்றும் பிரகேடியர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment