Wednesday, May 28, 2014

பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த இலங்கை மெஹமட்டை கைதுசெய்ய பிடியானை!

மலேசியாவில் கோலாலம்பூரின் அருகே கைது செய்யப்பட்ட இலங்கையரான, பாகிஸ்தான் உள்ளக உளவு அமைப்பை சேர்ந்தவரென சந்தேகிக்கப்படும் மெஹமட் ஹூசைனி கைது செய்வதற்கான பிடியாணையை தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தமிழ்நாடு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையும் பாகிஸ்தான் உளவு அமைப்பின் உளவாளியுமான ஷாகிர் உசைன் என்பவர் ஹூசைனியின் நெருங்கிய உதவியாளர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் முதல் ஹூசைனியின் செயற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்த மலேசிய விஷேட பொலிஸ் பிரிவினர், சென்னை மற்றும் பெங்களுரிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்தும் ஹூசைனியின் திட்டம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வு பிரிவினருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

சென்னை மற்றும் பெங்களுரிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீதான தாக்குதலுக்கு உதவும்படி தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்டள்ள ஹூசைனி மலேசிய பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஹூசைனியை விரைவில் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி இந்திய புலனாய்வு துறையிடம் தமிழ்நாடு பொலிஸார் கோரியுள்ளனர்.

பாகிஸ்தான உளவு நிறுவனம, மாலைத்தீவிலிருந்து சென்னை மற்றும் பெங்களுருக்கு இருவரை அனுப்ப திட்டமிட்டது எனவும் அவர்களுக்கு தேவையான பயண ஆவணங்கள் மற்றும் மறைவிடங்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹூசைனி மலேசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

உசைன் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த போது அவரை கண்காணித்த தமிழ்நாடு பொலிஸார் கைது செய்தனர். தான் மனித கடத்தலில் ஈடுபட்டிருந்தமையால் தன்னை பாகிஸ்தான் உள்ளக உளவு அமைப்பினர் தெரிவு செய்ததாக உசைன் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com