ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் கைது!
ஆவா குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஏழாலை வடக்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் ஜெயகிருஸ்ணா (வயது 33) ஈவினை கிழக்கைச் சேர்ந்த வரதராஜா அன்பரசன் (வயது 28) ஆகிய இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை (22.01.2014)அச்சுவேலி பொலிஸ் அதிகாரி கே.எம்.சி.பிரதீப் செனவரத்தின தலைமையிலான குழுவினர் கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆவா குழுவைச் சேர்ந்த ஏனையவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர் எனக்குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment