விபச்சார விடுதி முற்றுகை மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது!
குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கம்பஹா பொலிஸ் பிரிவில் கண்டி வீதி பெலும்மஹர பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதில் விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற ஒருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் கம்பஹா, பிலியந்தல, எம்பிலிபிட்டிய மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த 23, 24, 31, 26 வயதுடையவர்கள் என கம்பஹா பொலிஸ் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதிபதி எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment