கூட்டமைப்பின் கதையைக் கேட்டு வவுனியா அரச அதிபருக்கு டிமிக்கி கொடுத்தவர் வசமாக மாட்டினார்! ஓவியன்

கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அபிவிருத்திக்குழு என்பன இணைந்தே இவ் வீட்டுத்திட்ட பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இந் நிலையில் இவ் வீட்டுத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 29 ஆம் திகதி ஆர்பாட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இவ் ஆர்பாட்டக்காரர்களின் மகஜரைப் பெற்றுக் கொண்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடன் உரையாடிய போது, கூட்டமைப்பின் கைப்பிள்ளை ஒருவர் ஆட்களே இல்லாமல் இந்தியன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. பல வீடுகள் இன்றும் பூட்டப்பட்டு இருக்கின்றன. எங்களுக்கு தான் வீட்டுத்திட்டம் தரவில்லை என கூச்சலிட்டார்.
சுதாகரித்துக் கொண்ட மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர குறிப்பிட்ட கூட்டமைப்பின் கைப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு அவ் வீடுகளை காட்டுமாறு அன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு புறப்பட்டுள்ளார். வீடுகளை தேடி திரிந்தும் கைப்பிள்ளையால ஒரு வீட்டைக்கூட காட்ட முடியவில்லை. கைப்பிள்ளை அப்படியே வவுனியா அரசஅதிபரை மன்னாருக்க கூட்டிக்கொண்டு போட்டாராம். பாருங்க ஏரியாவை கூட கூட்டமைப்பு வடிவாக சொல்லிக் கொடுக்கல தன்ர கைப்புள்ளைக்கு.
மன்னாருக்கு நான் ஜீஜே இல்லை அது வேறையால் எனக் கூறிக் கொண்டு இரவு எட்டு மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனைக்கு வந்து சேர்ந்திட்டார். இதால கூட்டமைப்பு செய்த ஆர்பாட்டத்தின்ர வேசம் கலைஞ்சு போச்சு என்று ஊரல்லாம் ஒரே கதை என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதைவிட இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், வவுனியா நகரத்தில இருக்கிற மக்களுக்கு கிராமத்தில காணி இருக்காம். அவையள் கூட்டமைப்பு விசுவாசிகளாம். அவர்களுக்கு வீட்டுத்திட்டம் தரவில்லை என்று தானாம் பவுடர் செல்வத்திற்கும் மண்டயன் குழு சிவசக்தி ஆனந்தனுக்கும் கோவமாம்.
0 comments :
Post a Comment