Friday, January 31, 2014

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்களின் பிரித்தானிய குடியுரிமை பறிபோகும் நிலை!

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பிரித்தானிய குடியுரிமையை பறிப்பதற்கான திரு த்தம் ஒன்றை குடிவரவு சட்டமூலத்தில் அந்நாட்டு உள் துறை அமைச்சர் தெரேஸா மே கொண்டுவந்துள்ளார்.

பயங்கரவாத சந்தேக நபர்கள் நாடற்றவர்களாக இருந் தாலும் அவர்களது பிரித்தானியக் குடியுரிமையை பறிக்க இந்த சட்டத்திருத்தம் வழி செய்வதுடன் பிறப்பாலேயே பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றவர்களுக்கு இது பொருந்தாது எனவும் ஆனால், பிரித்தானியப் பிரஜைகளாக மாறிய வெளிநாட்டவர்களுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இரட்டைக்குடியுரிமை உடைய பயங்கரவாத சந்தேக நபர்கள் பிரித்தானிய கடவுச் சீட்டை இழக்கும் நிலையும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தால் பிரித்தானியாவில் உள்ள வெளிநாட்டுக் குற்றவாளிகள் தம்மை நாடு கடத்துவதற்கு எதிராக, அங்கு ஐரோப்பிய மனித உரிமைச் சட்டங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கு அழுத்தம் கொடுக்க விளையும் கன்சர்வேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் பிரதமர் டேவிட் கெமருன் சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com