இலங்கை உதவி வழங்குவது உறுதி! ஐக்கிய அரபு இராச்சியம்!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளது என அந்நாட்டின் பிரதமரும் உதவித் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்தார்.
இலங்கையின் நிலைமைகளையும் கள யதார்த்தங்களை யும் தாம் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த ஷேக் முஹமட் இலங் கையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஷேக் முஹமட் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை பாராட்டிய பிரதமர் ஷேக் முஹமட், பல வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் சமாதானம் ஏற்பட் டுள்ள சூழ்நிலையில், இலங்கையில் தற்போது முதலீட்டுக்கான சிறந்த சூழல் ஏற்பட்டுள் ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஷேக் முஹமட் அவர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
0 comments :
Post a Comment