சமூக சமையலறையில் ஒபாமா குடும்பத்தினர் (படங்கள்) !!
அமெரிக்க கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தினம் நேற்று முன்தினம் அனு ஷ்டிக்கப்பட்டதை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அவரின் மனைவி மிஷெல் ஒபாமா மக்கள் மலியா, சஷா ஆகியோர் வொஷிங்டன் டிசி நகரிலுள்ள 'டி.சி. மத்திய சமையலறை' எனும் சமூக சமையலறைக்கு சென்று உணவு தயாரிப்பதற்கு உதவி புரிந்தனர்.
இந்த சமூக சமையலறை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான உணவுப்பொதிகளை தயாரித்து விநியோகித்து வருகிறது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1929 ஜனவரி 15 ஆம் திகதி பிறந்தார். எனினும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் 3 ஆவது திங்கட்கிழமை அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தினமாக பிரகட னப்படுத்தப்பட்டு விடுமுறை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment