Wednesday, January 22, 2014

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கட்டிலின் கீழ் குறட்டை - கையும் மெய்யுமாக கணவரிடம் பிடிபட்டார் !!

குடிபோதையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மரக்கறி வியாபாரியொருவருக்கு கள் ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டு குறட்டை விட்டதால் கள்ளத் தொட ர்பு வைத்திருந்த பெண்ணின் கணவரிடம் கையும் மெய் யுமாக சிக்கிக் கொண்ட சம்பவமொன்று கிராந்துரு கோட்டே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கிராந்துருகோட்டே ரொட்டவெல பிரதேசத்தைச் சேர்ந்த 28வயதான மரக்கறி வியாபாரியே சிக்கிக் கொண்டவராவார். இந்த நபர் தமது நாளாந்தக் கடமைகளை முடித்துக்கொண்டு மது அருந்திக் கொண்டிருந்தபோது கள்ளத்தொடர்பு வைத்தி ருந்த பெண்ணின் ஞாபகம் வந்துள்ளது. இரவு 9.00 மணியளவில் இவர் அப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான அந்த அழகிய பெண்ணின் கணவர் வெளி மாவட்டமொன்றில் கடமையாற்றுகின்றார். அப்பெண்ணின் வீடு சென்ற மரக்கறி வியாபாரி, பிள்ளைகள் நித்திரை கொண்டபின் சல்லாபித்துவிட்டு பெண்ணின் வேண்டுகோளின் பேரில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டுள்ளார்.

களைப்பினாலும் போதையினாலும் மரக்கறி வியாபாரி அயர்ந்து குறட்டையிலே உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பெண்ணின் கணவர் வீடு வந்துள்ளார். குறட்டை சத்தத்தால் கணவன் கட்டிலுக்கு கீழிருந்த மரக்கறி வியாபா ரியை பிடித்து நையப்புடைத்து கிராந்துருகோட்டே பொலிஸ் நிலையத்தில் ஒப்ப டைத்துள்ளார்.

1 comments :

Anonymous ,  January 27, 2014 at 2:46 AM  

உறவுக்குப் பின் குறட்டையுடன் உறங்காதே
உரியவன் வந்ததால் உலக்கையடி நிச்சயம்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com