Thursday, December 12, 2013

ஹம்பாந்தோட்டை பகுதியில் மணல் ஈயினால் பரவி வருவரும் நோய் ஒரு ஆட்கொல்லி நோயால்ல! ஊடகங்களின் கருத்து தவறானது!

மணல்ஈ யினால் பரவும் தோல் நோய் ஒரு ஆட்கொல்லி நோயால்ல என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மணல்ஈ யினால் பரவும் தோல் நோய் ஹம்பாந்தோ ட்டை பகுதியில் பரவி வருவதாகவும், இதுவொரு ஆட் கொல்லி நோய் என்றும் ஊடகங்கள் வெளியிடும் செய் தியில் எந்தவொரு உண்மையும் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது..

எனினும் எந்தவொரு வகையிலும் இதுவொரு ஆட்கொல்லி நோய் இல்லை யென்றும் இதுவொரு நுண்ணங்கியினால் பரவும் நோய் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

இந்த நுண்ணங்கி மணல்ஈ எனும் உயிரினங்களில் அடங்குகின்றன. இந்த மணல் ஈ கடிக்கும் இடத்தின் ஊடாக இந்த நுண்ணங்கிகள் நுழைந்து அவ்விடத்தில் காயங் களை ஏற்படுத்துகின்றன. உலகில் சுமார் 90 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ள தாகவும் இதனால் எவரும் உயிரிழக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நுண்ணங்கியை ஒழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மணல் ஈயினால் பரவும் நோய் ஒரு ஆட்கொல்லி நோய் இல்லாத போதிலும் சிகிச்சைகள் பெற வேண்டுமென்றும் நோயாளர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com