13 வயது சிறுவனுக்கு 50 ஆண்டு கால சிறைத்தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம்!
தனது தந்தையை கொலை முயன்ற நபரை நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டு கொன்ற 13 வயது சிறுவனுக்கு 50 ஆண்டு கால சிறைத்தண்டனையை பாகிஸ்தான் விதித்து ள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குர்ஜன்வாலா பகுதியை சேர்ந்த ஒரு நபரை ஹபிஸ் கியாஸ் என்பவர் கொல்ல முயற்சித்துள்ளதுடன் ஹபிஸ் தாக்கியதில் அந்த நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஹபிஸ் கொலை செய்ய முயற்சித்ததற்காக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஹபிஸ் தாக்கிய நபரின் 13 வயது மகன் கையில் துப்பாக்கியுடன் அங்கு வந்து, ஹபிசை சுட்டு கொன்றார்.
இந்த கொலை வழக்கு விசாரணை குர்ஜன்வாலா மாவட்டத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சௌத்ரி இமிடியாஸ் அலி, சிறுவன் கோஹர் நவாசுக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும விதித்து உத்தரவிட்டார்.இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment