மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் காணி அபகரிப்பு அடாவடித்தனமும் கையாலாக அதிகாரிகளின் பச்சோந்திதனமும்- பீமன்.
அடிமை விலங்கை உடைத்தெறிவோம் எனப் போராடப் புறப்பட்ட தமிழினம் இன்று அதிகார வர்க்கத்திடம் கை கட்டி, வாய்மூடி நிர்கதியாகி நிற்கவேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது. அதிகாரமமதை கொண்டோரால் மக்கள் ஆட்டிப்படைக்கப்படுகின்றனர். கேள்வி கேட்க முடியாது! ஜனநாயகமா? என்ன விலை ? யாருக்கு.. எங்கே உள்ளது? றாத்தலா? அவுண்ஸா? என அதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது.
யாரந்த அதிகாரவர்க்கம் என்றால், பெரும்பாண்மை மீது சாதுரியமாக கண்களை காட்டுவர் அல்லது நேரடியாக சுட்டுவிரலை நீட்டுவர். ஆனால் 1983 இலிருந்து வடகிழக்கின் அதிகாரவர்க்கம் யார்? தமிழர் விடுதலை போராட்ட இயக்கங்கள் எனத் தம்மைத்தாமே அழைத்துக்கொண்டோரும் அவர்களது அடிவருடிகளான தமிழ் அதிகாரிகளுமே தமிழ் மக்களை கொடுமைப்படுத்திய , கொடுமைப்படுகின்ற அதிகார வெறிபிடித்த பேய்கள் என்ற வார்த்தை பிரயோகம் சற்று வன்மமானதும் கசப்பானதுமாகவிருந்தாலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மையும் அதுவே.
முதலாளித்துவத்தின் முழுவடிவமான இவர்கள் பாமர மக்களின் குருதியை உறிச்சிக்குடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். அரச துறைகளில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகராத்தை துஷ்பிரயோகம் செய்து பாமர மக்களை வேதனைப்படுத்தி வாழ்வது இவர்களின் வாழ்வில் ஒன்றிணைந்ததாகிவிட்டது.
லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கிடைக்காதவிடத்து கருமங்களை திட்டமிட்டு தாமதப்படுத்துவதும் மலிந்து விட்டன. கடந்த 18.07.2013 அன்று மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 80 பேர்சர்ஸ் காணித்துண்டொன்றை உபபிரிகை இடுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரியிடமிருந்து ஒரு துண்டு காணியை மர்மமான முறையில் பெற்றுக்கொள்ள முயன்ற மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவநாதன், காரியம் கைகூடாதவிடத்து குறித்த உபபிரிகையிடலை 5 மாதங்கள் நிறைவுறுகின்ற நிலையிலும் போலிக்காரணங்களை கூறி தாமதித்து வருகின்ற சகிக்கமுடியாத சம்பவத்திற்கு ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாநகர சபையும் துணைபோகின்றது.
மேலே உள்ள கடிதம் விண்ணப்பதாரி கடந்த 18.07.2013 உபபிரிகையிடலுக்காக விண்ணப்பித்துள்ளார் என்பதை உறுதிசெய்வதுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரிகளின் தகைமையினையும் உணர்த்துகின்றது. கடிதத்தில் ஆணையாளர் சார்பாக பொறியியலாளர் கையொப்பமிட்டுள்ளார். ஆனால் குறித்த பொறியிலாளரினால் சாதாரண பிரஜைக்கு விளங்ககூடிய முறையில் பதிலினை எழுத முடியவில்லை. ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளையும் கலந்து எழுத்துப்பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன் பின்கதவால் கதிரைக்கு வந்தவர்கள் என்பதையும் உணர்த்துகின்றது.
கடிதத்தில் விண்ணப்பதாரியிடம் 3A காணி பிரிக்கப்பட்டள்ளது தொடர்பான உபபிரிகையிடலுக்கான அனுதிகளின் விபரம் கோரப்பட்டுள்ளது. எழுத்துமூலமாக இவ்வாறன ஒருகோரிக்கையை விடுத்த மாநகர சபை ஆணையாளர் சிவநாதன் , விண்ணப்பததாரியை அழைத்து தங்களிடம் 3 ஏக்கர் காணிகள் இருந்துள்ளது. அவ்வாறு 3 ஏக்கர் காணிகள் இருக்கின்றவர்கள் அதை பிரிக்கின்றபோது மாநகர சபைக்கு 10 வீதம் காணியை அல்லது அதற்கான பெறுமதியை வழங்கவேண்டும் என வாய்மூலம் கோரியுள்ளார். மாநகர ஆணையாளர் சிவநாதனால் சுற்றிவளைத்து லஞ்சம்கோரப்படுகின்றது என்பதை உணர்ந்த விண்ணப்பதாரி கடந்த 30.08.2013 அன்று முன்னாள் சட்டத்தரணி ஒருவரின் அத்தாட்சிப்படுத்தலுடன் தனது நிலையை கீழ்காணப்படும் கடிதத்தின் ஊடாக தயவாக தெளிவுறுத்தியுள்ளார்.
மேற்படி கடிதத்தினை கணக்கிலெடுக்காத மாநகர அணையாளர் உபபிரிகையிடலுக்கான அனுமதியை மாநகர சபைக்கான திட்டமிடல் குழுவே வழங்கவேண்டும் என்றும் அக்குழுவின் உறுப்பினர்களான பிரதேச செயலர் மற்றும் நகர அபிவிருத்தி சபை அதிகாரி ஆகியோர் உபபிரிகையிடலுக்கான தமது கருத்தினை தெருவிக்க காலம் கோரியிருக்கின்றார்கள் எனத் தெரிவித்து காலத்தை கடத்தி வந்துள்ளார். இவ்வாறு 5 மாத காலம் கடத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்ட விலைமதிப்பாளர் திணைக்களத்திடம் காணியின் பெறுமதி கோரப்பட்டள்ளதாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடிதத்திலும் ஆணையாளர் சார்பாக பொறியியலாளர் கையொப்பமிட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. கருமம் ஒன்றுக்காக ஆணையாளரால் கையொப்பம் இடமுடியாதவிடத்து, மாநகர சபையில் பிரதி மாநகர சபை ஆணையாளர் ஒருவர் இருக்கும்போது மாநகர சபை ஆணையாளர் சார்பாக குறித்த விடயம் சார்பான இரு கடிதங்களிலும் பொறியியலாளர் கையொப்பம் இட்டுள்ளமை அலுவலக விதிமுறைகளுக்கு அப்பால் ஆணையாளரின் கைப்பொம்மையாக பொறியிலாளர் செயற்படுவது புலனாகின்றது.
மேற்படி கடிதம் உண்மையில் காணியின் பெறுமதியினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியா அன்றில் திட்டமிட்ட தாமதற்திற்கு ஆவனங்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாட? ஒரு காணியை உபபிரிகையிடுவதற்கு அதன் பெறுமதி எதற்காக தேவைப்படுகின்றது.
காணியின் 10 வீதத்தினை அன்றில் அதன் பெறுமதியை மாநகர சபைக்கு வழங்கவேண்டுமென்ற ஆணையாளரின் வாய்மூல வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காணியின் பெறுமதி பெற்றுக்கொள்ளப்படுகின்றது எடுத்துக்கொள்ளலாமா?
குறித்த 80 பேர்சர் காணிக்குமான சோலை வரி இலக்கம் கடந்த ஆண்டில் வழங்கப்பட்டபோது முழுக்காணியிலுமிருந்து குறித்த 80 பேர்ச்சுக்கான உபபிரிகையிடல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அங்கீகாரம் வழங்கப்படும்போது கேட்கப்படாத 10 வீத காணியும் அதன் பெறுமதியும் இப்போது கேட்கப்படுவதன் நோக்கம் என்ன? குறித்த 80 பேர்ச்சுக்குமான புதிய அசெஸ்மென்ட் இலக்கம் வழங்கப்பட்டபோது இதே ஆணையாளரே பதவியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் மாகாண உள்ளுராட்சி சபைகள் ஆணையாளர் விசாரணைகளை மேற்கொண்டு பிரஜைகளுக்கு சிறந்த சேவையை வழங்க ஆவன செய்வாரா?
மேலும் அரச நிறுவனங்களை தமது கருமங்களுக்காக நாடுகின்ற பிரஜைகட்கு அக்கருமத்தினை எவ்வளவு காலத்தினுள் செய்து கொடுக்க முடியும் என்ற பொதுவான பிரஜைகள் பட்டியல் (citizen charter) ஒன்றை அறிவித்தல் பலகையில் பார்வைக்கு வைக்கவேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு இவ்விடயம் உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பட்டியல் பல அரச நிறுவனங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளபோதும் மட்டு மாநகர சபையில் இது வைக்கப்படாமைக்கான காரணம் என்ன?
ஆணையாளரின் மேற்படி செயற்பாடு தொடர்பாக அவரை தொடர்புகொண்டு தகவல் அறியமுற்பட்டபோது, நியாயமான பதிலளிக்கமுடியாது தடுமாறியதுடன் தொலைபேசி அழைப்பை துண்டித்துக்கொண்டது மாத்திரமல்லாது தன்னை தொலைபேசியில் யாரோ மிரட்டுகிறார்கள் என ஆயுததாரிகளின் உதவியை நாடியதாகவும் அறிய முடிகின்றது.
8 comments :
உண்மையில் அரசாங்க ஊழியர்கள் மக்களின் தேவைகளை செயற்படுத்துவதற்காகவே நியமிக்கப்படுகின்றனர் என்பதை இவர்கள் முற்றாக மறந்து விடுகின்றனர். அத்துடன் அரசாங்க அலுவலகங்களுக்கு தமது தேவைகளின் நிமித்தம் வரும் மக்களை பாடாய் படுத்துகின்றனர் என்பது மறைக்கமுடியாத உண்மை. அதிலும் மட்டக்களப்பு மாநகர சபை மிகவும் சிறப்பாக மக்களை பாடாய் படுத்துகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அடிக்கடி சொல்வார் அரசாங்க ஊழியர்கள் மக்களின் தேவைகளை செயற்படுத்துவதற்காகவே நியமிக்கப்படுகின்றனர் என. ஆனால் இவரைப் போன்ற அரச அதிகாரிகள் அதை ஏற்க மறுக்கின்றர் போலும். இது கட்டாயம் தண்டிக்கபட வேண்டிய குற்றமாகும்.
ஆங்கிலம் எழுத தொரியாத ஒருவரை ஒரு அரச அதிகாரியாக அதும் ஆணையாளராக நியமித்தது யார்? இதற்கு உடனடியாக அரச உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Municipal council commissioner is a number one criminal and pons. He does not know how to serve to public. He expert about how handle and manage the ladies.
As a government servant he must carry out his duty within considerable time period.
எலெக்றிக்கல் எஞ்சினியர், மெக்கானிக்கல் ஏஞ்சினியர், சிவில் எஞ்சினியர் என்றுதான் இலகையில் எஞ்சினியர் மார் இருக்கிறதாக கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் கிளறிக்கல் எஞ்சினியர் ஒருத்தரும் இருக்கிறார் என்பதை மட்டக்களப்பு மாநகரசபை எஞ்சினியர் நிருபித்துள்ளார். இந்த எஞ்சினியருக்கு வேலை இல்லை போல அதுதான் கிளறிக்கல் எஞ்சினியர் வேலை செய்து கொண்டிருக்கிறார். ஒருவேளை மாநகர சபையில் கிளறிக்கல் கிளார்மார் நாய் பிடிக்க போட்டினமோ தெரியல.
எஞ்சினியருக்கு வேலையில்லாட்டி மக்களின் வரிப்பணத்தில் இவருக்கு சும்மா சம்பளம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது. உடனடியாக மாநகர சபை ஒரு கோழிப்பண்ணையை அமைத்து அர்ச்சுனனை அந்த பண்ணையில் கோழிப்பீ அள்ள அனுப்பவேண்டும்.
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் ஒரு பொம்புள கள்ளன். இவனையெல்லாம் யார் ஆணையாளராக நியமித்தது. உண்மையில் மட்டக்;களப்பில் மாநகர சபை அலுவலகத்திற்கு செல்லும் மக்களை இவன் அலைக்கழிக்கின்றான் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது!
இந்த Commissioner என்ற பெயரில் தற்போது அரச சேவையில் இணைந்துள்ள இவன் இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன் ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு பயங்கரவாத போராளி. இந்தியாவில் ஆயத பயிற்சி பெற்றவன். இவ்வாறான ஒரு ஜனநாயகம் மக்கள் நலன் என்பன பற்றி தெரியாத இவனை மக்கள் சேவையில் Commissioner ஆக இணைத்தது பெரிய தவறு.
இது ஒரு முழுமையான பதிவி துஸ்பிரயோகம் அரசாங்க பதவியை துஸ்பிரயோகம் செய்வதற்கு இவன் யார்? இவனுக்கு என்ன அதிகாரம் உள்ளது பொது மக்களை இவ்வாறு ஏமாற்றுவதற்கு. உண்மையில் இவன் ஒரு படிதவவனாக இருந்திருந்தால் இவனுக்கு தெரியும் பொது மக்களை எவ்வாறு கையாள்வது என்று. இவன் அவ்வாறு இல்லைத்தானே.
ஜயா யாரந்த Engineer உடனடியாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அந்த Engineer என்று அழைக்கப்படுபவரின் பட்டச்சான்றுதலை உடனே பரிசோதிக்க வேண்டும் ஆங்கிலத்தில் Approved என எழுத தெரியாத Engineer என்றால் நிச்சயம் இவனுடைய பட்டச்சான்றுதலில் ஏதோ வில்லங்கம் உள்ளது
குறிப்பிட்ட தரப்பினரிடமிருந்து இந்த Commissioner இலஞ்சம் எதிர்பார்க்கின்றால் போல தெரிகின்றது. பதிவி துஸ்பிரயோக அடிப்டையில் உடனடியாக இவனை கைது செய்ய வேண்டும்
இவன் ஆயுதம் ஏந்திப் போராடினான் என்பது இந்தியாவில் பயிற்சி பெற்றான் என்பதும் முற்றிலும் பொய்யான தகவல். அதற்கெல்லாம் இவனிடம் தைரியம் கிடையாது.
இவன் கழுதாவளை பாடசாலை ஒன்றில் சாரணர் ஆசிரியராக இருந்து எஸ்எல்ஏஎஸ் பாஸ் பண்ணி இந்தக்கதிரைக்கு வந்துள்ளான்.
கதிரை நாற்றம் எடுக்கின்றது.
ஒரு சப்டிவிசனுக்கு 5 மாதம். இவருக்கு மேலதிகாரி ஒருவர் திருகோணமலையில் இருக்கிறார் எல்லோ அவர் என்ன நி்த்திரை கொள்றாரா?
மட்டக்களப்பில் உள்ள அரச நிறுவனங்களில் தற்போது மிகவும் ஒரு கேவலமான நிலையில் இயங்குகின்ற அலுவலகம் என்றால் அது மட்டக்களப்பு மாநகர சபைதான். அவ்வாறு ஒரு கேவலமான நிலையில் மட் மாநகர சபை இயங்குவதற்கு முழுக்காரணம் தற்போதுள்ள சிவநாதன் தான்
இந்த சிவநாதன் எந்த இடத்திற்கு வேலைக்கு செல்கின்றானோ அந்த இடத்தை நாற வைப்பபது தான் இவனுடைய கைவந்த கலை. அகத்தியின் அழகு முகத்தில் தெரியும் என சும்மாவா சென்னார்கள்.
நான் நினைக்கின்றேன் இந்த காணி உரிமையாளர் ஒரு ஆண்மகனாக இருக்க வேண்டும் என்று ஏனென்றால் சிவநாதனிடம் யாராவது பெண்கள் வேலைக்கு சென்றால் சிவநாதனுக்கு செம குசிதான்!
இது தொடர்பில் உடனே இவனுடைய மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு சிவநாதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இவனைப்போலுள்ள மற்றவர்களும் திருந்துவார்கள்
Post a Comment