Sunday, November 3, 2013

பெண் பிள்ளைகளே நீங்கள் இனி வெளிநாடு செல்ல வேண்டியதில்லை.. இங்கு விபச்சாரத்தின் மூலம் பணம் ஈட்டலாம்..(?)

புத்த பகவான் போதித்துள்ளபடி அரசாங்கம் ஒன்றை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் சூதாட்டத்தில் திருத்தங்களை செய்யும் அரசாங்கம் எதிர்காலத்தில் நாட்டை ஆட்சி செய்யும் முறையை போதிக்கும் போதனையிலும் திருத்தங்களை செய்யக் கூடும் என கோட்டே நாக விகாரையின் அதிபதி மதுளுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருத்தங்களுடனோ, திருத்தங்கள் இல்லாமலோ கசினோ வர்த்தகம் நாட்டுக்கு தேவையில்லை. நாட்டின் வளங்களை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். கசினோ சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்ட நேரத்தில் நாட்டில் நல்லொழுக்கதை நேசிக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சூதாட்டம் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டுக்கு இழைக்கப்படும் குற்றமாகும்.

இலங்கை என்பது ஆயிரக்கணக்கான வருடங்களாக நல்லொழுக்கத்தை பாதுகாத்து வந்த நாடு. நாட்டை அபிவிருத்தி செய்ய தேவையான வளங்கள் நாட்டில் ஏராளமாக இருக்கின்றன. அப்படி இருக்கும் போது கசினோ வர்த்தகத்தை கொண்டு வர வேண்டும் என்று ஏன் இப்படி துடிக்கின்றனர்?

தொழு நோய் ஏற்பட்டவர்களை ஒரு காலத்தில் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். கசினோ என்பது இந்த தொழு நோயை போன்றதுதான்.

இப்படி இருக்கும் போது கொழும்பில் இதயமாகவும் வழிப்பாட்டிடமாகவும் இருக்கும் கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனித் தெரு ஆகிய பகுதிகளில் கசினோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இது போதென்று கிறவுண் சிறிலங்கா என்று பெயரும் சூடியுள்ளனர்.

இலங்கை என்பது சட்டம் வீழ்ச்சியடைந்து போன நாடு. இவ்வாறான நாட்டில் கசினோ சூதாட்டங்களுக்கு சட்டம் இயற்றுவதால் பயன் ஏதும் இருக்குமா?

இனி வரும் காலங்களில் பெண் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. இலங்கையில் இருந்து கொண்டு கசினோ நிலையங்களில் விபச்சாரம் செய்து பணத்தை சம்பாதிக்க முடியும். மகிந்த சிந்தனையில் இவையா இருக்கின்றன என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com